Tuesday, March 16, 2010

இலங்கை விவகாரம் குறித்து பான் கீ மூனுக்கும் நவனீதம் பிள்ளைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது:

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளைக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நிர்புணர் குழு நியமனம் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

நிபுணர்கள் குழு இதுவரையில் பெயரிடப்படவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் பலரிடமும் பான் கீ மூன் ஆலோசனை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நவனீதம்பிள்ளை உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் பான் கீ மூன் கலந்தாலோசித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழு விரைவில் அமைக்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாதென தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.