ஈராக்கில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட அமெரிக்க ராணுவம், வருகிற ஆகஸ்டு மாதம் அங்கு இருந்து வெளியேறுகிறது. ராணுவத்தை திரும்பப்பெறுவது என்ற முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எடுத்து இருக்கிறார்.
ஒபாமா அறிவிப்பு
ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை களைவதற்காக அந்த நாட்டுக்கு அமெரிக்க ராணுவம் அனுப்பப்பட்டது. அமெரிக்க ராணுவம் அந்த நாட்டில் தொடர்ந்து நீடித்து வருகிறது. அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை ஈராக்கில் எழுந்து உள்ளது. சமீப காலமாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், ஈராக்கில் பொதுத்தேர்தல் மூலம் பிரதமர் தேர்ந்து எடுக்கப்பட்டதும் அமெரிக்க ராணுவம் படிப்படியாக திரும்பப்பெறப்படும் என்று ஒபாமா அறிவித்து இருந்தார்.
ராணுவ வாபஸ்
இதற்கிடையே அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. தீவிரவாதிகள் இந்த தேர்தலை நடத்த விடமாட்டோம் என்று அறிவித்து இருந்தனர். அவர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்த வன்முறையை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதை தொடர்ந்து அமெரிக்கா தன் ராணுவத்தை அங்கு இருந்து திரும்பப்பெற முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியதாவது-
ஆகஸ்டு மாதம் 31-ந்தேதிக்குள் வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே ஈராக்கில் தேர்தல் நடந்தது ஒரு மைல் கல் ஆகும். தற்போது தேர்தல் நடந்து உள்ளதால், ஈராக் மக்களின் தேவைகள் முழுவதும் நிறைவேறி விடும் என்று நான் கருதுகிறேன். எனவே அங்கு யுத்த களத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க ராணுவ வீரர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் திரும்பப் பெறப்படுவார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள அமெரிக்க வீரர்கள் அடுத்த ஆண்டில் முற்றிலும் திரும்பப் பெறப்படுவார்கள். எனினும் ஈராக்கில் அமைதி முழுமையாக திரும்பும் வரை அமெரிக்கா தொடர்ந்து உதவும். இவ்வாறு ஒபாமா கூறினார்.
50 ஆயிரம் வீரர்கள்
இது குறித்து ஈராக்குக்கான அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் ராய் ஒடியர்னோ டி.வி.சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் மட்டும் அடுத்த ஆண்டுவரை ஈராக்கில் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.