சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள ஏழு குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சரத்பொன்சேகா நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத் தளபதி லெப்டினன் ஐகத் ஐயசூரியாவின் பணிப்பின் பேரில் பொன்சேகாவிற்கு எதிராக 7 குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் எனினும் இராணுவ நீதிமன்றில் இக்குற்றப்பத்திரிகையை ஒப்படைக்கும் நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விசாரணையை மேற்கொள்ள மூவர் அடங்கிய நீதிபதி குழு அமைக்கப்பட்டுள்ள அதேவேளை இக்குற்றப்பத்திரிகையை சரத்பொன்சேகா ஏற்றுக்கொண்டாரா அல்லது இல்லையா என்பது தொடர்பில் கருத்து கூறமுடியாது என இராணுவப்பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளர்.
பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகள் கொழும்பு கடற்படைத்தளத்தில் எதிர்வரும் செவ்வாய் , புதன்கிழமைகளில் நடைபெறும் எனவும் சரத்பொன்சேகாவின் சட்டத்தரணி தயா பீரிஸ் உட்பட்ட சிலர் ஆஐராகவுள்ளதாகவும் தயா பீரிஸ் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக பதவிவகித்தவர் எனவும் இராணுவ சட்டங்களில் புலமை மிக்கவர் எனவும் தெரியவருகிறது.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.