Monday, February 01, 2010

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட ஐதேக தீர்மானம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி யானைச் சின்னத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, இன்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யானைச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து நடைபெற்ற ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநயாக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு ஆகியன இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.

அதேவேளை, பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. தனது கட்சிச் சின்னத்தில் போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.