Saturday, January 02, 2010

புலிகளின் சொத்துகளை முடக்குவதில் ஊடக அறிக்கைகளால் பெரும் சிக்கல்: வெளிவிவகார அமைச்சர் றோஹித

சில ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகளின் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சொத்துக்களை முடக்குவதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சில விமானங்கள் வெளிநாடுகளில் காணப்படுகின்றன என வெளியான செய்தி காரணமாக அரசின் முயற்சிகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பவை வருமாறு:-

அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் முடக்கப்படும் வரையில் எதிர்க்கட்சி பொறுமை காக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியானதன் பின்னர் சகல தகவல்களும் எதிர்க்கட்சியுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு வலுவான ஓர் சர்வதேச வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. எனவே, இரகசியமான முறையில் விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவற்றைப் பகிரங்கப்படுத்துதன் மூலம் சரியான முறையில் சொத்துக்களை முடக்க முடியாது.

விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களின் முன்கூட்டிய பிரசாரம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும் என்றார் அமைச்சர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.