Saturday, January 30, 2010

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் தீர்ப்பை அடுத்து பதவி விலகப்போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தமது கட்சிக்கு மக்கள் வாக்களிக்காமையை அடுத்து அமைச்சுப்பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் விலகப்போவதாக ஜனாதிபதியிடம் ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி இது தொடர்பில் எவ்வித பதில்களையும் இதுவரை வழங்கவில்லை. இந்தநிலையில் இன்று யாழ்ப்பாணம் வலிகாமத்தில் உள்ள ஒரு அமைப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் வியாபாரத்தளங்கள் இன்று காலை மூடப்பட்டிருந்ததுடன் போக்குவரத்துகளும் ஸ்தம்பித்தன.

எனினும் இதனை தடுத்து மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக அமைச்சர் தேவானந்தா, நகரின் வியாபார நிலையங்களுக்கு சென்று வியாபார தளங்களை திறக்கக்கோரி வருவதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.