எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்கும் இந்த நாட்டின் தேசத் துரோகிகளுக்கு காட்டிக் கொடுக்கும் செயற்பாடு என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர், 27ம் திகதியும் ஐக்கிய இலங்கையாக காணப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசத்தின் பெயரில் ஒற்றுமையை கட்டியெழுப்ப சகலரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமக்கு வாக்களிக்காமல் எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்கும், தேச துரோகிகளுக்கு வழங்கப்படுகின்ற வாக்குகளாகவே அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை காட்டிக் கொடுப்பதற்கு இணங்குகின்றவர்களே எதிர்கட்சிக்கு வாக்களிப்பர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோரிடம் பணத்தை பெற்று தேர்தல் நடத்த தயாராகுபவர்களுக்கு, நாட்டை காட்டிக் கொடுத்து சுயலாபம் தேடுவது ஒன்றும் கஷ்ட்டமான காரியம் இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனைத்து தேசத் துரோக சூழ்ச்சிகளையும் தகர்த்த, நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தமது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வாக்குகள் குறித்து சிந்தித்து, நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி இதன் போது நினைவுபடுத்தியுள்ளார்.
வாக்குகளை விட நாடே தமக்கு முக்கியமாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.