Friday, December 18, 2009

மக்களுக்கும் தேசத்துக்குமாக மீண்டும் நானே வெல்வேன் - ஜனாதிபதி


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நானே மீண்டும் வெல்வேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் நேற்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டைப் போல் மக்களுக்கும், தேசத்திற்குமாக மீண்டும் வெற்றி பெறுவேன் என ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி தனது முதலாவது வெற்றி பயங்கரவாதத்திற்கு எதிராகப் பெறப்பட்டதை சுட்டிக்காட்டியதுடன், அடுத்த வெற்றி தேசத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதாக அமையும் எனக் குறிப்பிட்டார். பிளவுபட்டுள்ள நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்துவேன் என 2005 இல் தாம் உறுதியளித்தமையையும் நினைவுகூர்ந்த ஜனாதிபதி, "பிரிவினைக் கோரிக்கைகளை முன்வைத்த ஈவிரக்கமற்ற விடுதலைப் புலிகளை அழித்து, எனது வாக்குறுதிகளை நிறைவேற்றினேன் '' என்றார். முன்னதாகத் தேர்தல் செயலகத்திற்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ வந்த ஜனாதிபதியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வரவேற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் ஜனாதிபதி கைகுலுக்கி உரையாடினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.