சரத்பொன்சேகாவின் பதவி விலகலின் பின்னர் இந்தியாவின் பிரணப்முகர்ஜி சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.சிறீலங்காவின் கூட்டுப்படை தலைமை அதிகாரியாக செயற்பட்ட சரத்பொன்சோக பதவி விலகியதை இந்தியா உன்னிப்பாக அவதானித்துள்ளது. பிரணாப் முகர்ஜியின் சிறீலங்காவிற்கான திடீர் பயணமானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டது என்றே கூறவேண்டும்.
சிறீலங்காவில் சரத்பொன்சேகா தலைமையானல் இந்தியாவிற்கு சிறீலங்கா ஆபத்தாக மாறக்கூடும். பாக்கிஸ்தான், சீனா நாடுகளின் கைப்பொம்மையாக சரத்பொன்சேகா செயற்படுவார் என்ற அச்சத்தினால் இந்திய மத்திய நிதி அமைச்சர் இன்று சிறீலங்காவிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
டில்லியில் இருந்து சென்னை செல்லும் மத்திய நிதிமைச்சர் பிரணப்முகர்ஜி சென்னையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியினை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அதன் பின்வு அவரசமாக சிறீலங்காவிற்கு செல்லவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.