Monday, November 09, 2009

ஐரோப்பிய ஒன்றியத்தின் 48 பக்க அறிக்கைக்கு சிறீலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது


ஐரோப்பிய ஒன்றியத்தின் 48 பக்க அறிக்கைக்கு சிறீலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் நீதிக்கு முரனாக அரசியல் நலன் கருதி ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைக் இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது சிறீலங்கா அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திலிருந்து 6 மாதங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதிக்கான வரிச்சலுகை நீடிக்கபடவுள்ளது நிலையில் இதற்கான முடிவை ஐரோப்பிய பாராளுமன்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் எடுக்கவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இடைநிறுதினாலும், 2010ம் ஆண்டு நடுப்பகுதி வரை வரிச்சலுகையை தொடர்ந்து பெறமுடியும். அதன் பின்னரே வரிச்சலுகை தொடர்பிலான பாதிப்பை சிறீலங்கா உணரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை சிறீலங்கா அரசாங்கம் எந்தவித பாதிப்புக்குள்ளாகது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 48 பக்க அறிக்கையில் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், மக்களின் சுதந்திரமான நடமாட்டம், நீதிக்கு முரணான படுகொலை, வதைகளுக்கு உள்ளாகுதல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கைக்கு சிறீலங்கா அரசாங்கம் வரிக்கு வரி விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.