[வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008]
யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத நிலையில் 6 உடலங்களை நேற்று புதன்கிழமை இரவு சிறிலங்கா காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
மூன்று ஆண்களினதும் மூன்று பெண்களினதும் உடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ். மருத்துவமனை வட்டாரங்கள், பெண்களின் உடலங்களில் ஆடைகள் களையப்பட்டிருப்பதாகவும் சில உடலங்கள் எரிகாயங்களுடன் காணப்படுவதாகவும் தெரிவித்தன.
அந்த உடலங்கள் மருத்துவமனையின் பிரேத அறையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை வரை எவரும் அந்த உடலங்களை அடையாளம் காணவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.