[திங்கட்கிழமை, 17 மார்ச் 2008]
பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து கொண்டுள்ள அரசாங்கம் சர்வதேசத்தினை விமர்சிப்பதில் எந்தவித பயனும் இல்லை. இராணுவத்தினரால் மீட்கப்பட்ட கிழக்கு மாகாணம் புலிகளிடமிருந்து பிரிந்த பிள்ளையானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாவது வரதராஜப்பெருமாளை மஹிந்த அரசாங்கம் கிழக்கில் உருவாக்கியுள் ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மீட்கப்பட்ட கிழக்கை மீண்டுமொரு முறை மீட்க வேண்டிய நிலை முப்படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இராணுவத்தினர் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். கொழும்பு கேம்பிரிஜ் ரெரசில் உள்ள அலுவலகத்தில் நேற்று செய்தியாளர் மாநாடொன்றினை நடத்தியபோதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஐக்கிய தேசியக் கட்சி மீதும் என் மீதும் குற்றம் சுமத்திய அல்லது வசைபாடிய மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இன்று ஆயுதம் தாங்கிய பிள்ளையான் குழுவுடன் இணைந்திருக்கின்றது.
பிள்ளையான் என்பவர் புலி உறுப்பினர் அவரது குழுவினரும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட கிழக்கு நிர்வாகம் புலிகளில் இருந்து பிரிந்த பிள்ளையானிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
யுனிசெப் மற்றும் சர்வதேச அறிக்கைகளின்படி பிள்ளையான் குழு என்ற அமைப்பு கடந்த 2007 ஆம் ஆண்டில் 251 சிறுவர்களை தமது படையில் இணைத்துள்ளது. இதனாலேயே புலிகளுடனான யுத்தத்திற்கு வெளிநாடுகளிடமிருந்து ஆயுத தளபாடங்களையும் ஏனைய உதவிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை தோன்றியிருக்கின்றது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.