Monday, February 04, 2008
அம்பாறையில் அதிரடிப்படையினரின் முகாம் மீது தாக்குதல்: 2 காவலரண்கள் தாக்கியழிப்பு
[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2008]
அம்பாறை மாவட்டம் வக்குமுட்டியா சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றுகையிட்டு தாக்கப்பட்டு அங்கிருந்த 2 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்டுள்ளன.
வக்குமுட்டியா சிறப்பு அதிரடிப்படை முகாமை இன்று திங்கட்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு விடுதலைப் புலிகளின் அணி முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் செறிவான கனரக சுடுகலங்களின் சூட்டாதரவுடன் நடத்தினர்.
இதில் முகாமின் 2 காவலரண்கள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டன. அழிவினை ஏற்படுத்திவிட்டு அப்பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் அணிகள் விலக, விடுதலைப் புலிகளின் மோர்ட்டார் படை அணியினர் முகாமின் மீது செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
இந்த எறிகணைத் தாக்குதல் காலை 6:00 மணி முதல் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.