Saturday, December 01, 2007

இன்னொரு இலங்கையாக மலேசியா மாறும்: தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர் வேதமூர்த்தி

[சனிக்கிழமை, 01 டிசெம்பர் 2007] மலேசியா இன்னொரு இலங்கையாக மாறும் என்று மலேசிய தமிழர் உரிமைச் செயற்பாட்டாளரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சென்றுள்ள வேதமூர்த்தி சென்னையிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான "இந்தியன் எக்ஸ்பிரஸ்"க்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: மலேசியாவில் நாங்கள் தற்போது இலங்கையில் உள்ள மலையகத் தமிழர்கள் போல் நடத்தப்படவில்லைதான். ஆனால் எதிர்காலத்தில் அப்படியானதொரு நிலைமை திரும்பும் என்கிற பாரிய கவலை எமக்கு உள்ளது. நாங்கள் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியை சந்திக்க விரும்புகிறோம். அவரின் மூலமாக மலேசியத் தமிழர்களின் நிலைமை குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கை வெளியிட வேண்டும். நாங்கள் போராட்ட நடத்த தீர்மானித்திருந்த நிலையில் போராட்டத்துக்கு முன்னைய் நாளான நவம்பர் 24 ஆம் நாள் கோலாலம்பூர் மற்றும் கிளாங் கடைகளில் மகாத்மா காந்தியின் படங்கள் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்து விட்டன. போராட்டம் நடைபெற்ற 25 ஆம் நாள் கோலாலம்பூரின் கேஎல்சிசியின் நுழைவுப் பாதையை காவல்துறையினர் தடுத்துவிட்டனர். கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் நீர் பாய்ச்சி எம்மைத் தாக்கினர். அடுத்து என்ன நடக்கும் என்பது எமக்குத் தெரியாது என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.