Friday, December 07, 2007
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தால்தான் புலிகளை உடைத்து கருணாவை உருவாக்க முடிந்தது: ஐ.தே.க.
[வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2007]
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளை உடைத்து கருணாவை உருவாக்க முடிந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:
ஐக்கிய தேசியக் கட்சியானது பயங்கரவாதத்தை எப்போதும் எதிர்க்கிறது. பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
யுத்த நிறுத்த ஓப்பந்தத்தை நாம் விமர்சித்தாலும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளை உடைத்து கருணாவை உருவாக்க முடிந்தது.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் நிறைய குறைபாடுகள் உள்ளன. ஆனால் அந்த ஒப்பந்தத்தினால் கருணா உருவாக்கப்பட்டதும் அதனால் தற்போதைய அரசாங்கம் பயனடைந்து வருகிறது.
நாங்கள் எதிர்க்கின்ற போதும் ஏன் மகிந்த அரசாங்கம் கடந்த 2 ஆண்டுகளாக யுத்த நிறுத்த ஓப்பந்தத்தைக் கைவிடவில்லை?
டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த இடைக்கால நிர்வாக சபை குறித்து அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பதிலைத் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.
அனுராதபுரத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த ஊர்காவல் படையினர் யால வனச்சரணாலயப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.