Wednesday, December 05, 2007
"புலிகளின் குரல்" மீதான தாக்குதலுக்கு யுனெஸ்கோவின் கண்டனம்: சிறிலங்கா கடும் எதிர்ப்பு
[புதன்கிழமை, 05 டிசெம்பர் 2007]
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் வானொலி நிலையம் மீதான சிறிலங்கா வான்படையின் வான்குண்டுத் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோ கண்டனம் தெரிவித்தமைக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றில் இது தொடர்பிலான ஆட்சேபத்தை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
முன்னதாக சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்புக் கடிதத்தை யுனெஸ்கோவின் செயலாளர் நாயகத்திடம் யுனெஸ்கோவுக்கான சிறிலங்காவின் நிரந்த தொடர்பாளரும் பிரான்சிற்கான சிறிலங்காத் தூதுவருமான சித்ராங்கி வஜிஸ்வர வழங்கினார். அதில் யுனெஸ்கோவின் கண்டன அறிக்கையானது ஆச்சரியமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.