Sunday, November 11, 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் படுகொலையை, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

[ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2007]

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் படுகொலையை, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும், பிரித்தானியா ஆளும் தொழிற்கட்சி, எதிர்க்கட்சிகளான மரபுவாதக் கட்சி, தாராண்மைத்துவ சனநாயகக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளையும் உள்ளடக்கிய, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, சமாதானப் பேச்சுவார்த்தையாளனாக அங்கீகரிக்கப்பட்ட பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் படுகொலை, சமாதானத்திற்கான மற்றுமொரு கதவை மூடியிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது.

ஒரு மிதவாத தமிழ் தலைவராக திகழ்ந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் படுகொலையை, சகல சமூகங்களிலும் உள்ள சமாதான விரும்புகளுடன் இணைந்து, தாமும் வன்மையாகக் கண்டிப்பதாகவும், பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 2002ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை மதித்து, சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புமாறு, சகல தரப்பினரையும் கோருவதாகவும், பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.