Wednesday, November 14, 2007

பாதீட்டுக்கு ஜே.வி.பியின் ஆதரவு கிடைக்காவிட்டால் அரசாங்கம் கலைக்கப்படும் - மகிந்த எச்சரிக்கை

[புதன்கிழமை, 14 நவம்பர் 2007]

சிறீலங்காவின் வரவு செலவுக்கான பாதீட்டில் ஜே.வி.பி ஆதரவு கிடைக்காவிட்டால் அரசாங்கத்தைக் கலைக்கப் போவதாக, சிறீலங்கா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது நெருங்கிய நண்பர் டலஸ் அழகப்பெரும ஊடாக, ஜே.வி.பியின் பரப்புரை செயலர் விமல் வீரவன்சவிற்கு செய்தி ஒன்றை அனுப்பி வைத்திருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அரசியல் கட்சியாக மாறிய பின்னரும் கிளர்ச்சி அமைப்புக்கான பண்புகளுடன் ஜே.வி.பி இயங்கக் கூடாது என, அறிவுரை வழங்கியுள்ளார்.

ஏற்கனவே ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்ட பல நிபந்தனைகளை தனது அரசாங்கம் நிறைவேற்றியிருப்பதாகவும், இவ்வாறான சூழலில்

நடைமுறைச் சாத்தியமற்ற புதிய நிபந்தனைகளை ஜே.வி.பி விதிப்பது ஏற்புடையது அல்ல என்றும், சிறீலங்கா அதிபர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், 2008ஆம் ஆண்டிற்கான பாதீட்டிற்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கத் தவறினால், அரசாங்கத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதை தவிர, தனக்கு வேறு தெரிவுகள் இல்லையென்றும், சிறீலங்கா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.