Saturday, November 03, 2007

சமாதான முன்னெடுப்பாளரை படுகொலை செய்த காட்டுமிராண்டி சிறிலங்கா அரசு: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம்

[சனிக்கிழமை, 03 நவம்பர் 2007] இலங்கைத் தீவில் சமாதான முன்னெடுப்பாளராக செயற்பட்ட தமிழீழ இராஜதந்திரி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை காட்டுமிராண்டித்தனமாக சிறிலங்கா அரசு படுகொலை செய்துள்ளது என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழீழத்தின் இராஜதந்திரியும், அரசியல்துறைப் பொறுப்பாளாரும், சமதான முன்னெடுப்பாளருமான பிரிகேடியுருமான சு.ப.தமிழ்செல்வன் மற்றும் அவருடைய சகாக்கள் ஐவரும் நவம்பர் 2 ஆம் நாள் கிளிநோச்சியில், சிறிலங்காவின் வான்படையால் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து நாம் மிக அதிர்ச்சியும் வேதனையும் கவலையும் அடைகிறோம். மிக நீண்ட காலமாக, தமிழீழ மக்களுக்கு ஒரு சுபீட்சமான வாழ்வையும், நிராந்தரமான அரசியல் தீர்வையும் இலங்கை தீவில் ஏற்படுத்திட பல சிறிலங்கா அரசுகளுடன் அரசியல் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்செல்வன் ஈடுபட்டிருந்ததை நாம் யாவரும் அறிந்ததே. அண்மைக் காலங்களில் தாய்லாந்து, நோர்வே, ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற அரசியல் பேச்சுவார்தையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைப் பேச்சாளராக கலந்து கொண்டு, பல சகாப்த காலமாக அரசியல் உரிமைகள் அற்று கோடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு வாழ் மக்களின் உண்மை நிலைகளை பேச்சுவார்த்தை மேசைகளில் எடுத்து உரைத்து வந்தார். தமிழீழ மக்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் மீண்டும் ஏமாற்றத் திட்டமிட்ட வேளையில் தமிழீழ மக்களுக்கான ஓர் இடைகாலத் தீர்வை சரியான முறையில் தமிழ் வல்லுநர்கள் கொண்டு உருவாகுவதற்கான முக்கிய ஓருங்கிணைப்பாளராகவும் விளங்கினார். தமிழ் மக்களினால் உருவாக்கப்பட்ட இந்த இடைகாலத் தீர்வை, 2003 ஓக்ரோபர் 30 ஆம் நாள் நோர்வே அரசு மூலமாக சிறிலங்கா அரசிடம் கையளித்தார். அந்த இடைகாலத் தீர்வை சர்வதேச சமுதாயம் நன்கு வரவேற்றிருந்தது. தமிழீழ விடுதலை புலிகள், நவம்பர் 1 ஆம் நாள் பத்திரிகையாளர் மாநாட்டை கிளிநொச்சியில் கூட்டி, இத்தீர்வின் உள்ளடக்கத்தை பத்திரிகையாளருக்கு வெளியிட்ட போது தமிழ்செல்வன் கூறியதவாது: ".......... எமது தாயாகத்தில் சட்ட விரோதமாக எம்மை ஆக்கிரமித்த இராணுவத்திற்கு எதிராக ஓர் தற்பாதுகாப்பிற்காக நாம் ஆயுதம் ஏந்துகிறோம். சமாதானத்திலும் அரசியல் பேச்சு வார்த்தையிலும் நம்பிக்கை கொண்ட நிலையில் அவற்றில் நாம் முழு விசுவாசமாக கலந்து கொள்கிறோம். "....... தற்போதைய சமாதான முன்னேடுப்புக் காலங்களில் தெற்கில் உள்ள மக்களே வடக்கு - கிழக்கு மக்களைவிட மேலாக பயன் பெற்றுள்ளார்கள். ஆயிரக்காணக்கான மக்கள் வடக்கு - கிழக்கில் இடம்பெயர்ந்தும், வீடுகளை இழந்தும், வேலைகள் அற்றும் வாழ்க்கை சீர்குலைந்துள்ளார்கள். பேச்சுவார்த்தை காலங்களில் இதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட, சிரான் என்ற குழுவும் செயலிழந்து உள்ளது. இந்நிலையில், பேச்சுவார்தை மூலம் ஓர் நிரந்தர தீர்வை அடைய மாதங்கள், வருடங்கள் செல்லாலம். அதன் முன் எமது மக்களின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய நாம் ஆவணசெய்ய வேண்டியுள்ளது. "......இந்த வகையில் நாம், இந்த இடைகாலத் தீர்வை நோர்வே அரசு மூலமாக சிறிலங்க அரசிடம் கையாழிக்கும் வேளை, இத்தீர்வு பற்றி சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஓழுங்கு செய்யுமாறு நோர்வே அரசிடம் வேண்டுகிறோம் என தனது உரையில் கூறினார். 2003 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்செல்வனினால் மேலே கூறப்பட்ட வாக்கியங்களை, சிறிலங்கா அரசு அலட்சியம் செய்துள்ளது என்பதை சர்வதேச சமூதாயம் கவனத்தில் கொண்டிருக்கும் என்று நாம் நம்புகிறோம். இராஜதந்திரியும், அரசியல் பொறுப்பாளாருமான தமிழ்ச்செல்வன் உலகின் பல பகங்களிலும் உள்ள பல நாட்டு இராஜதந்திரிகள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்களை சந்தித்து, வடக்கு - கிழக்கு மக்களின் உண்மை நிலை பற்றி உரையாடியுள்ளார். சிறிலங்கா வான்படையின் காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மற்றைய ஐவர்களுக்கும் எமது ஆழ்ந்த கவலையை தெரிவித்து கொள்கிறோம். "தேசப்பற்றாளர் என்றும் தமது உயிரை தமது தேசத்திற்காக இழப்பதைப் பற்றியே சிந்தனை கொள்வார்கள், மாறாக கொலை செய்வதை தமது நாட்டிற்காக கொள்ளமாட்டார்கள்." - பிரித்தனியாவின் தத்துவஞானி திரு பேட்றன் றசில்ஸ் என்று அதில் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.