Saturday, November 17, 2007

சட்டவிரோத குழுக்களின் ஆயுதங்களைக் களைய முஸ்லிம்கள் வலியுறுத்தல்கள்: கண்காணிப்புக் குழு

[சனிக்கிழமை, 17 நவம்பர் 2007] மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சட்டவிரோதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கடந்த வார நிலைமைகள் தொடர்பாக கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முஸ்லிம்களின் நிலைமைகள் தொடர்பாக காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா பிரதேச முஸ்லிம் கூட்டமைப்புக்கள் 7 தீர்மானங்களை கடந்த நவம்பர் 6ஆம் நாள் நிறைவேற்றியிருந்தன. அப்பிரதேசங்களில் தொடர்ந்தும் கடத்தல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதேபோல் இணக்கமானதொரு சூழ்நிலையில் வாழ்வதற்கு திரும்பாது போயின் எதிர்விளைவுகள் நேரிடும் என்றும் நவம்பர் 6 ஆம் நாள் முஸ்லிம் அமைப்பு துண்டுப் பிரசுரம் மூலம் எச்ச்சரித்தது. கடந்த ஒக்ரோபர் 30 ஆம் நாள் முஸ்லிம் ஒருவர் கடத்தப்பட்டமைக்கு அந்தத் துண்டுப் பிரசுரம் உரிமை கோரியது. இருப்பினும் அத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை. அதே நாள் காத்தான்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி முஸ்லிம் கிராமங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.