Saturday, November 03, 2007

கட்டுக்கரைக்குளம் கைப்பற்றப்பட்டதாக வெளிவந்த செய்திக்கு இளந்திரையன் மறுப்பு

[சனிக்கிழமை, 03 நவம்பர் 2007]

மன்னார் கட்டுக்கரைக்குளத்தினை நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய செய்திக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை 6:30 மணிக்கு ஒலிபரப்பாகிய அச்செய்தி தொடர்பில் "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:

எமது அரசியல்துறைப் பொறுப்பாளர் வீரச்சாவு அடைந்ததனைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கம் மன்னார் கட்டுக்கரைக்குளம் பகுதியை தாம் கைப்பற்றிவிட்டதாக இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியறிக்கை மூலமாக அறிவித்துள்ளது.

இது முற்று முழுதான பொய்ச் செய்தி என்பதுடன் நேற்று மதியம் வரை நான் அப்பகுதியில் நின்று பணிபுரிந்துவிட்டு வந்துள்ளேன்.

போர் நிறுத்த காலத்துக்கு முன்னர் இருந்த அதே நிலைகளிலேயே தொடர்ந்தும் எமது போராளிகள் நிலை கொண்டுள்ளனர். ஆகவே இது போன்ற சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ச் செய்திகளைக் கேட்டு மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.