Saturday, November 10, 2007

"எல்லோரையுமே தன்னுடைய புன்சிரிப்பாலே வயப்படுத்திய ஒரு அரசியல் மேதை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

[சனிக்கிழமை, 10 நவம்பர் 2007] "எல்லோரையுமே தன்னுடைய புன்சிரிப்பாலே வயப்படுத்திய ஒரு அரசியல் மேதை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்" என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார். சேது சமுத்திர கால்வாய் திட்ட விழிப்புணர்வு பரப்புரையின் நிறைவு விழாப் பொதுக்கூட்டம் 6-11-2007 அன்று வேலூரில் நடைபெற்றது. அந்நிகழ்வின் தொடக்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியதாவது: என்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன்னாலே தமிழர்களுக்கெல்லாம் இன்றைக்கு மிக முக்கியமான ஒரு மனித நேயக் கடமை இருக்கிறது. 30 கல் தொலைவிலே இருக்கக்கூடிய நம் முடைய தமிழ் ஈழத்திலே அந்த மக்களுடைய வாழ்வுரிமைக்காக அவர்கள் களத்தில் நின்று கொண்டிருக்கின்றார்கள். அங்கே வாழக்கூடிய மக்களுக்கெல்லாம் மிகப்பெரிய அளவிற்கு வான்வெளி தாக்குதல், கடல் வழி தாக்குதல், தரை வழித் தாக்குதல் என்றெல்லாம் தாக்குதல்கள் வந்து அந்த இனம் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துவிடுமோ என்று மனித நேயம் உள்ள அத்துணைபேரும் இனவுணர்வு மிக்கவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஈழத்தில் முப்படைகளையும் தயாரித்து யாருடைய ஆதரவும் இல்லாமல் எங்களாலேயே போரை சந்தித்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று காட்டிய பெருமை உடைய விடுதலைப்புலிகளினுடைய அரசியல் பிரிவின் தலைவராக இருந்து உலக நாட்டிற்கு ஒரு சமாதானப் புறாவாக பறந்து, திரிந்த மனித நேயத்திற்கு அடிப்படையான சுப. தமிழ்ச் செல்வன் அவர்களும், அவருடைய உற்ற படைத்தளபதிகள் அய்வரையும் இலங்கை இராணுவத்தால் அவர்கள் சொன்னதைப்போல, சமாதானப் புறாவை சிங்கள இராணுவம் கொன்றது. இந்தக் கொடுமையான செயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாலே நடந்தது. மிகப்பெரிய சோகச் செயல். உலகம் தழுவிய மிகப் பெரிய இழப்பு. மிகப் பெரிய கொடுமை. மனித நேயத்தில் நம்பிக்கை உள்ள அத்துணை பேரும் அதற்காக சங்கடப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையிலே ஒரு போரின் மத்தியிலே நின்று கொண்டு கடும் இழப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு மனப்பக்குவம் உள்ளவர்களாக தமிழர்களுடைய வாழ்வுரிமைக்காகப் போரா டிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தி லே, ஒரு இழப்பை அவர்கள் பெற்றிருக்கிறார் கள் என்பதற்காக ஈழத் தமிழ் மக்கள் பல்லா யிரக்கணக்கிலே திரண்டு இறுதி மரியாதை வீர வணக்கம் செலுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி மாலையிலே கூட தொலைக்காட்சியில் நான் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். உள்ளத்தை உருக்கக் கூடிய நம் உள்ளத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கக் கூடிய அவ்வளவு துன்பமான, துயரமான ஒரு செய்தியாகும். அந்த மாவீரன் அரசியலில் தெளிவான கருத்துள்ள வனாகவும், எல்லோரையுமே தன்னுடைய புன்சிரிப்பாலே வயப்படுத்திய ஒரு அரசியல் மேதை யாகத் திகழ்ந்த சுப. தமிழ்ச் செல்வன் மற்றும் அவருடைய சகத் தோழர்கள் மறைவிற்கு நாம் வீர வணக்கம் செலுத்துவது கடமையாகும். ஆகவே அருள்கூர்ந்து அனைவரும் ஒரு மணித் துளி எழுந்து நின்று வீரவணக்கம் செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள் கின்றோம் என்றார் வீரமணி. இதனைத் தொடர்ந்து அனைத்து பொதுமக்களும் எழுந்து நின்று வீரவணக்கம் செலுத்தினர். நன்றி:புதினம்

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.