Tuesday, November 13, 2007
6 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள்
[செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2007]
மன்னார் தம்பனைப் பகுதியில் 11.11.2007 அன்று சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முறியடிப்புச் சமரில் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
வீரச்சாவடைந்த போராளிகளின் விபரம் வருமாறு:
கப்டன் தேசப்பிரியா என்று அழைக்கப்படும் இராசரத்தினம் தனலட்சுமி (சூடுவெந்தான், நெடுங்கேணி)
வீரவேங்கை பாமதி என்று அழைக்கப்படும் செல்வேந்திரன் கிரிசாந்தி (நிலையான முகவரி: யாழ். மாவட்டம், இடைக்கால முகவரி: மயில்குஞ்சன் குடியிருப்பு, கைவேலி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
வீரவேங்கை ஈழமதி என்று அழைக்கப்படும் சவரி மரியதர்சினி (தேவன்பிட்டி, வெள்ளாங்குளம், மன்னார்)
வீரவேங்கை மணிமேகலை அல்லது எழில்மதி என்று அழைக்கப்படும் ஜேசுமுத்து ஜெயராஜினி (தேவன்பிட்டி, புதுக்காடு, வெள்ளாங்குளம், மன்னார்)
வீரவேங்கை திலகரசி என்று அழைக்கப்டும் சுப்பன் வசந்தகுமாரி (தேராங்கண்டல், துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு)
2 ஆம் லெப். மணியிழை என்று அழைக்கப்படும் மகேஸ்வரன் யசோதா (திருகோணமலை மாவட்டம்) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்கள் ஆவர்.
தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.