மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான இருமுனை நகர்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தீவிரமான எதிர்த்தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலம், சுடுகருவிகள், வெடிபொருட்கள் ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மன்னாரின் உயிலங்குளம், பாலைக்குழி மற்றும் கட்டுரைக்குளம் ஆகிய இருமுனைகளில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5:15 மணியளவில் சிறிலங்காப் படையினர் பாரிய அளவில் முன்னகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இரு முனைகளில் இருந்து சிறிலங்காப் படையினர் செறிவான ஆட்டிலெறி- பல்குழல்- மோட்டார் தாக்குதலை செறிவாக நடத்தியவாறு பாரிய எடுப்பில் இம் முன்னகர்வுகளை மேற்கொண்டனர். பெரும் எண்ணிக்கையிலான படையினர் இந்நகர்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.
படையினரின் இம் முன்னகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தீவிரமாக மேற்கொண்டனர்.
இரு முனைகளில் இருந்து சிறிலங்காப் படையினர் செறிவான ஆட்டிலெறி- பல்குழல்- மோட்டார் தாக்குதலை செறிவாக நடத்தியவாறு பாரிய எடுப்பில் இம் முன்னகர்வுகளை மேற்கொண்டனர். பெரும் எண்ணிக்கையிலான படையினர் இந்நகர்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.
படையினரின் இம் முன்னகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தீவிரமாக மேற்கொண்டனர்.
இன்று பிற்பகல் 12 மணிவரை நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் தீவிர முறியடிப்புத்தாக்குதலில் படைத்தரப்பின் முன்னகர்வுகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன.
இதில் படைத்தரப்புக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 25-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 60 படையினர் காயமடைந்த நிலையில் அநுராதபுர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மன்னார் தள்ளாடிப் படைத்தளத்திலிருந்து உலங்குவானூர்திகள் மூலம் அநுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
படையினரின் இந்த நகர்த்தலுக்காக மன்னார்- வவுனியா போக்குவரத்து, மன்னார்- வங்காலைப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் ஆகியன சிறிலங்காப் படையினரால் தடை செய்யப்பட்டன.
சிறிலங்காப் படையினர் மன்னாரில் மேற்கொண்ட பாரியளவிலான நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட படையினரில் ஒருவரின் சடலம் மற்றும் சுடுகலன்கள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரி-56 - 02 ரக துப்பாக்கிகள் - 04
அவற்றுக்குரிய ரவைக்கூடுகள் - 32
ஆர்பிஜி எறிகணைகள் - 04
ஆர்பிஜி புறப்லர்கள் - 04
பிகே ரவைகள் இணைப்பிகளுடன் - 2,595
ஏகே எல்எம்ஜி ரவைப் பெட்டிகள் - 04
ரம் ரவைக்கூடுகள் - 04
ரவைத்தடுப்பு அணிகள் - 09
ரவைக்கூடு தாங்கி அணிகள் - 08
தலைக்கவசங்கள் - 09
குண்டுகள் - 02 ஆகியவற்றினை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.
இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
அநுராதபுர மருத்துவமனைத் தகவல்களின் படி மருத்துவமனை கடும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த படையினாரால் மருத்துவமனை பரபரப்பாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனையில் குடிமக்கள் சிகிச்சைக்காக தங்கியிருக்கும் நிலையில் அவர்களில் குறைந்த பாதிப்புக்கொண்டோரை பிற மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு படைத்தரப்பால் பணிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை விடுதிகளில் அதிகளவில் படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இம் மோதலின் போது முருங்கனில் வீட்டு முற்றத்தில் நின்ற ஆத்திக்குளியைச் சேர்ந்த இமானுவேல் சுரேந்தினி (வயது 33) மீது முற்பகல் 9:00 மணிக்கு துப்பாக்கிக்குண்டு பாய்ந்துள்ளது.
முருங்கன் மருத்துவமனையிலிருந்து மன்னார் மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். அவரது சடலம் மன்னார் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.