Monday, October 01, 2007
லெப். கேணல் நிசாந்தன் நடுகல் திரைநீக்கம்
[திங்கட்கிழமை, 1 ஒக்ரொபர் 2007]
புல்மோட்டைக் கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை (27.09.07) சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நிசாந்தனின் வீரவணக்கக்கூட்டம் நேற்று புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு மாவீரர் வணக்க மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வுக்கு கடற்புலிகளின் முல்லைத்தீவு மாவட்ட அரசியலதுறைப் பொறுப்பாளர் வேங்கைத்தமிழ் தலைமை வகித்தார்.
பொதுச்சுடரினை கடற்புலிகளின் தளபதி விநாயகம் ஏற்றினார்.
ஈகைச்சுடரினை மாவீரரின் துணைவியார் ஏற்றினார்.
லெப். கேணல் நிசாந்தனின் பிள்ளைகள், உறவினர், துணைவியார் ஆகியோர் மலர்மாலைகளை சூட்டினர்.
புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி, கடற்புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான சிறீராம் ஆகியோர் வீரவணக்க உரைகளை ஆற்றினர்.
அதன் பின்னர் அம் மாவீரரின் நடுகல், விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் முழுப்படைய மதிப்புடன் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.