Monday, October 01, 2007

நாகர்கோவில் முன்னரங்க நிலைகளின் ஆக்கிரமிப்பு தாக்குதல் முறியடிப்பு விடுதலைப்புலிகளால் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன (படங்கள் உள்ளே)

[திங்கட்கிழமை, 1 ஒக்ரொபர் 2007]

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் நேற்று நள்ளிரவு சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.

பாரிய எறிகணை மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் மேற்கொண்ட இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு மணி நேரம் கடும் சமர் புரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் தங்களது நிலைகளுக்கு பின்வாங்கி ஓடினர். சிறிலங்கா இராணுவத்தினருக்கு பலத்த இழப்புகள் ஏற்படுத்தப்பட்டு சிறிலங்கா இராணுவத்தினரது பல ஆயுதத் தளபாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சமரில் தமிழீழ விடுதலை புலிகள் தரப்பில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கப்டன் ராகுலன் என்ற வீரன் செல்வராசா (முருகன் கோவில் வீதி, மல்லாவி)

வீரவேங்கை பொறி என்ற பாக்கியநாதன் நியித்தோபன் (பாரதிபுரம், கிழக்கு கிளிநொச்சி)

வீரவேங்கை கயலோவியன் என்ற சவுந்தரராஜன் சத்தியசீலன் (9 ஆம் கட்டை, அக்கராயன்)

ஆகியோர் வீரச்சாவடைந்துள்ளனர்.

இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.




கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்:

ஆர்.பி.ஜி - 01

ஏ.கே.எல்.எம்.ஜி. - 02

ரி-56 ரைபிள் - 02

ரி-56-02 ரக ரைபிள் - 02

ஆர்.பி.ஜி. எறிகணைகள் - 6

40 மி.மீ. மோர்ட்டார் எறிகணைகள் - 03

ஏ-கே மகசீன்கள்- 42

ஏ.கே. டிரம் மகசீன்கள் - 04

கைக்குண்டுகள் - 14 உள்ளிட்டவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

இச்சமரில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 7 பேர் படுகாயமடைந்ததாகவும் சிறிலங்கா இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.