சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அநுராதபுரத்திற்குச் சென்ற பின்னரே விடுதலைப் புலிகளின் தற்கொடைப் போராளிகளின் உடல்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, மக்களிற்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் சிறீலங்கா அரசின் இந்தக் கொரூரத்தனமான செயல் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் நிகழ்த்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளது.
போரில் இறப்பவர்களின் உடலங்கள் உரிய இராணுவ மரியாதையும் கையளிக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையினரால் நிறுவப்பட்ட போரியல் மரபாக இருக்கும்போது, சிறீலங்கா அரசு அப்பட்டமான போரியல்க் குற்றத்தினைப் புரிந்துள்ளது.
சிங்கள இராணுவ வீரர்களின் உடலை சிறீலங்கா இராணுவம் வாங்க மறுத்த நிலையில் அவர்களின் உடலை தகுந்த இராணுவ மரியாதையுடன் புலிகள் அடக்கம் செய்தனர்.
ReplyDeleteஅது தமிழனின் பன்பாடு, தமிழனின் மனிதாபிமானம்.
இது போரியல் மரபை மீறிய செயல். இந்த நிகழ்ச்சி எம்மை சிங்கள பேரினவாதத்தின் மீது ஆத்திரமும்,கோபமும் கொள்ளச் செய்கின்றது.
ReplyDeleteபுறமுதுகிட்டு ஓடும் எதிரியை கொன்றலே அவமானம் எனக் கருதும் தம்ழின மாவீரர்களுக்கா இந்நிலை!!! எம் மாவீரர்களுக்கு நேர்த இச்செயல் எமக்கு அதிர்சியையும், மிகுந்த மனவருத்தையும் அளிக்கின்றது.
சிங்கள பேரினவாத அரசு துட்சாதனனைவிட கேவலம்மாக நடந்து கொள்கின்றது.