Monday, October 22, 2007

சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதலில் 8 வானூர்திகள் முற்றாக தாக்கியழிப்பு: விடுதலைப் புலிகள்.!!

[திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2007]

அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கரும்புலி அணியினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 8 வானூர்திகள் முற்றாக தகர்த்து எரியூட்டி அழிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்தியறிக்கை:

இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:20 மணியளவில் 21 பேர் கொண்ட சிறப்புக் கரும்புலி அணியினர் அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்திற்குள் உள்நுழைத்து தாக்குதல் தொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாலை 4:30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினர் தளத்தின் மீது குண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர்.
இன்றைய தாக்குதலில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான

பயிற்சி வானூர்தி - 01

எம்.ஐ - 24 ரக உலங்கு வானூர்திகள் - 02

PT6 ரக - 01

பெல் 212 - 01

வேவு வானூர்தி - 01

CTH - 748 - 01

மேலும் வானூர்தி - 01

ஆகியன முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

தற்போது வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி அணியினர் அணுராதபுரம் வான்படைத் தளத்திற்குள் தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளள்ளனர். கரும்புலி அணியினரின் தாக்குதலுக்கு உதவியாக தமிழீழ வான்படையினரும் அனுராதபுரம் தளம் மீது தாக்குதல் நடத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பியிருப்பதாக வான் புலிகளின் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் வவுனியாவிலிருந்து உதவிக்குச் சென்ற பெல் - 212 ரக உலங்கு வானூர்தியொன்றும் வீழ்ந்து நெருங்கியுள்ளது என்று அச்செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.