[வெள்ளிக்கிழமை, 4 மே 2007]சிறீலங்கா அரசிற்கான நிதி உதவியை பிரித்தானிய அரசு நிறுத்தியதைக் கண்டித்து, பிரித்தானிய அரசிற்கு எதிராக இன்று போராட்டம் நடத்தப்பட இருப்பதாக, அரசும், இனவாதக் கட்சிகளும் அறிவித்துள்ளன.
இந்தத் தகவலை ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ள போதிலும், அரசு போராட்டம் எதனையும் நடத்தவில்லை என, தோட்டத்துறை அமைச்சர் டி.எம். ஜயரத்ன மறுத்திருக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசிற்கு தாவிய உறுப்பினர்களில் 6 பேரும் இன்றைய பிரித்தானிய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக, விமல் வீரவன்ஸ கூறியிருக்கின்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.