Thursday, April 12, 2007
தமிழ்நாடு கடற்றொழிலாளர்களைச் சுட்டுக் கொன்ற சிங்களவர்கள் கைது - விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரம் முறியடிப்பு.!!
[வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2007]
தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை அண்மைக் காலமாக கடலில் சுட்டுப் படுகெலை செய்துவந்த 12 சிங்களவர்களை இந்தியக் கடற் படையினர் நேற்று மதியம் கைது செய்துள்ளனர்.
இந்தியக் கடல் எல்லைக்குள் கைது செய்யப்பட்ட இந்த சிங்களவர்கள் பயணித்த படகில் இருந்து பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தூதுத்துக்குடி துறைமுகத்திற்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்ட சிங்களவர்களை, கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியைச் சேர்ந்த 5 கடற்றொழிலாளர்களை இதே படகில் சென்றவர்களே சுட்டுக் கொன்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதனால் விடுதலைப் புலிகளே தமிழ்நாடு கடற்றொழிலாளர்களைச் சுட்டுக் கொல்வதாக இந்திய, சிறீலங்கா அரச அதிகாரிகள் மேற்கொண்டுவந்த பிரசாரம் முறியடிக்கப்பட்டு, உண்மை வெளிவந்துள்ளது.
ஆம் நான்கூட இப்போதுதான் தினகரனில் படித்தேன். சிங்களர்களின் குட்டு வெளிப்பட்டுவிட்டது. இது சதித்திட்டமே. விசாரணையில் என்னென்ன செய்திகள் புறப்படும் என பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
ReplyDelete