[திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007]
சிறீலங்கா இராணுவத்தினர் வடபோர்முனை முன்னரங்க நிலைகளை நோக்கி இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட படையினர் கனரக வாகனங்கள், மற்றும் படை ஆளணிகளை கடந்த மூன்று நாட்களாக முன்னகர்த்தியுள்ளதாக தென்மராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சிறீலங்கா இராணுவத்தினருக்கு இரவு நேரத்தில் தாக்குவதற்குரிய பயிற்சிகளை பலாலி, தொண்டமனாறு, வல்லை பகுதிகளில் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ் இராணுவத்தினர் எந்தநேரமும் தாக்குதல் மேற்கொள்வதற்காக தென்மராட்சி கிராமங்களான கற்பூது, மந்துவில், சரசாலைப் பகுதிகளுக்கு முன்னகர்த்தியுள்ளதாக அறியமுடிகிறது. சிறீலங்கா படைகளின் உலங்கு வானூர்திகள் இடைவிடாமல் பலாலிக்கும் முன்னரங்க நிலைகளுக்கும் பறப்புக்களை மேற்கொள்வதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.