Monday, August 28, 2006
திருமலையில் படையினரின் மும்முனை வலிந்த தாக்குதல்கள் முறியடிப்பு.
திருமலை மூதூர் கிழக்குப் பகுதிகளை நோக்கி சிறீலங்காப் படையினர் மூன்று முனைகளில் பாரிய வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் பல்குழல் உந்துகணைத் தாக்குதல் மற்றும் ஆட்லறி எறிகணைத் தாக்குதல்கள் சகிதம் பாரிய முன்னேற்றத்தை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.
செல்வநகரில் இருந்து முன்னேற முற்பட்ட சிறீலங்காப் படையினரை முன்னரங்க எல்லைக் கோட்டில் வைத்து விடுதலைப் புலிகள் பாரிய முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டு படையினரை பழைய நிலைக்கு விரட்டியடித்துள்ளனர். இதேவேளை கொட்டியாரக் குடா நோக்கி சிறீலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலை விடுதலைப் புலிகள் எதிர்நோக்கி முறியடிப்பு தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
இன்றைய தாக்குதலில் 11 படையினர் கொல்லப்பட்டு 63 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் இதனை மறைக்கும் பயையினர் இன்றைய தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டதோடு 41 படையினர் காயங்களுக்கு உள்ளாகியதாக அறிவித்துள்ளது.விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பீரங்கிப் படையணிகள் எறிகணைச் சூட்டாதரவை வழங்கியிருந்தன
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete