சம்பூரிலிருந்து 500 குடும்பங்கள் இடப்பெயர்வு.
திருகோணமலை சம்பூரில் மக்கள் குடியிருப்புகள் மீது இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் எறிகணை தாக்குதல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான கதிரவெளி மற்றும் பால்சேனை பகுதிக்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயாந்தவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பால்சேனை பாடசாலையில் தங்கவைக்கப் பட்டுள்ளார்கள். இவர்க்கான சமைத்த உணவு வாகரை தமிழர் புனர்வாழ்வு கழகம் வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இடம்பெயர்ந்து வரும் மக்களை தங்கவைப்பதற்கான போதுமான இடவசதியும் இல்லை. அத்துடன் உணவுப் பொருள்கள் கையிருப்பில் இல்லாத நிலையில் சாப்பாட்டுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.