Monday, January 31, 2011

தமிழீழ தேசிய தந்தை பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்; அவர் பாதுகாப்பாக உள்ளார்! – பழ.நெடுமாறன்

தமிழீழ தேசிய தந்தை பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அவர் பாதுகாப்பாக உள்ளார். எந்த நேரத்தில் வெளிப்பட்டு போராட்டத்தை நடத்த வேண்டுமோ அப்போது அவர் வெளிப்படுவார் என உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் பெங்களூரில் தெரிவித்தார்.

பெங்களூரில் நடந்த ஈழத் தமிழரும்- காலக்கடமையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள்,

’’தமிழீழ தேசிய தந்தை பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அவர் பாதுகாப்பாக உள்ளார். எந்த நேரத்தில் வெளிப்பட்டு போராட்டத்தை நடத்த வேண்டுமோ அப்போது அவர் வெளிப்படுவார்.

போர் முடிவுக்கு வந்தபிறகும் நாடு முழுவதும் தமிழர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். பிரபாகரன் இறந்து விட்டார் என்று செய்தி வெளியான பிறகும் தமிழர்களின் எழுச்சி அடங்கவில்லையே என்று நினைத்த இந்திய அரசின் `ரா’ உளவுத்துறை திட்டமிட்டு பிரபாகரன் பற்றி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறது.

அவர் அப்படி கொல்லப்பட்டார், இப்படி கொல்லப்பட்டார், சித்திரவதைப்படுத்தி கொல்லப்பட்டார் என்றெல்லாம் `ரா’ உளவுப்பிரிவு மூலம் செய்திகள் பரப்பட்டு தமிழர்களை சஞ்சலப்படுத்தவும், குழப்பவும் முயற்சிக்கப்படுகிறது.

நமது நெஞ்சங்களில் துளி அளவுக்கூட சஞ்சலங்கள் இருக்கக்கூடாது. பிரபாகரன் நன்றாக, பத்திரமாக இருக்கிறார் என்பதில் யாரும் சந்தேகப்பட தேவையில்லை. குழப்பி விடும் செய்திகளை தூக்கி எறிந்து விட வேண்டும். எதிரிகளை விட குழப்பங்களை பரப்புபவர்கள் தான் அபாயகரமானர்கள்.

எத்தனையோ தடவை பிரபாகரன் என்னும் சூரியனை மறைக்க பகை மேகங்கள் முயற்சித்தன. அத்தனை மேகங்களையும் அவர் கிழித்து கொண்டு வெளிவந்தாரே தவிர மறைந்து போகவில்லை’’ என்று பேசினார்.

1 comment:

  1. மிக்க மகிழ்ச்சி அய்யா .

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.