Saturday, April 24, 2010

வன்னியில் இலங்கை வான்படைத் தள அமைப்பு வேலைகளில் இந்தியாவா? இந்திய விமானப்படைத்தள அமைப்பா?

இலங்கை கடற்பரப்பில் சீனாவின் பிரசன்னம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்திய விமானப் படையினருக்கான தளம் ஒன்றை வன்னியில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கச்சதீவு இந்தியா தொடர்பான பிரச்சினையில் சீனாவின் தலையீடு தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வன்னியில் விடுதலைப் புலிகள் அப்பினால் அமைத்துப் பயன்படுத்தப்பட்டு வந்த இரணைமடு விமானத் தளத்தை இந்திய விமானப்படையினர் பயன்படுத்துவதற்காக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கமைவாக இந்திய உயரதிகாரிகள் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்குமிடையில் சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து தொலைத் தொடர்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இணைமடு உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் ஏ9 வீதியின் கிழக்குப் பகுதியில் சில கிராமங்களில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட உள்ளதாக அரச அதிபர் அறிவித்த போதும் இப்பகுதியில் மக்கள் குடியமர்த்தப்படாமைக்கு இதுவே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான தகவல்கள் வெளியாகி உள்ள போதும் குறிப்பாக வடக்கில் பலாலி விமான நிலையம் உட்பட வன்னியில் விமான ஓடுதளம் மற்றும் விமானப்படைத் தளம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் இந்தியாவுக்கு வழங்கியிருப்பதன் அடிப்படையிலேயே இந்திய வான்படை அதிகாரிகள் மற்றும் வான்படை நிர்மானத்துறைப் பிரிவினர் நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும் மற்றுமொரு தகவல் வெளியாகி உள்ளன.

இவ்வாறான தகவல்கள் வெளியாகி உள்ள போதும் இலங்கை இந்திய தரப்புகள் உத்தியோகபூர்வமாக எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. ஆயினும் பலாளி வான்படைத் தள அபிவிருத்திப் பணிகள் இந்தியாவிற்கு வழங்கியிருப்பதாக ஏற்கனவே அதிகார மட்டங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தடை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.