விரைவில் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று கூறி தம்மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்களை ஏற்றுக்கொள்ளுமாறு சிறையிலுள்ள நூற்றுக்கணக்கான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வற்புறுத்தப்படுவதாக கொழும்பிலுள்ள நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச அரசாங்கம் நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் ஆலோசனைப்படியே இந்த நகர்வு மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது. இந்திய அல்லது இலங்கையினால் ஆதரவளிக்கப்படும் சட்டவாளர்களால் தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுவதைத் தடுத்து அவர்களுக்கு சட்டரீதியான ஆதரவினை வழங்குவதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு புலம்பெயர்ந்த தமிழ் மக்களை தொடர்புடைய நீதித்துறை வட்டாரங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகள்மீது குற்றஞ் சுமத்தப்பட்டு சிறிலங்கா இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கும்படி சிறிலங்கா அதிகாரிகள் சட்டத்துறை நிறுவனங்களையும் அத்துறை சார் பணியாளர்களையும் அணுகிக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
இவ்வாறு சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகளுக்கு அரசியல் செல்வாக்கற்ற சுதந்திரமாகச் செயற்படும் முறையான சட்டத்தரணிகளின் ஆதரவு கிடைக்கவேண்டும். அவ்வாறு கிடைக்கும்பட்சத்தில் எந்தவிதமான வற்புறுத்தல்களும் அச்சுறுத்தல்களுமற்ற சூழ்நிலையை அவர்களுக்குத் தோற்றுவிக்கும்.
அதேவேளையில், 2009 ஓகஸ்ட் முதல் 2010 மார்ச் வரையான காலப்பகுதியில் பல முக்கியமான விடுதலைப்புலி உறுப்பினர்களைக் கைது செய்து அவர்களுள் பலரை சிறிலங்காவுக்கு நாடு கடத்தியதை முதல் தடவையாக கடந்த வெள்ளியன்று மலேசியா ஒப்புக்கொண்டுள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.