Thursday, April 29, 2010

நாம் பயங்கரவாதிகளா??? தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவோர் மனச்சாட்சியுடன் எம்முன்னால் வரட்டும்!!!

தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டம் பல பரிமாணங்களைச் சந்தித்து, இன்று அது வித்தியாசமான ஒரு பரிமாண நிலையில் வந்து நிற்கின்றது. முதல் 30 வருடகால அகிம்சைவழிப் போராட்டங்களோடு தொடர்ந்த தமிழர்களின் போராட்டம் பயனற்றுப்போக பொறுமையிழந்த நிலையில் அடுத்தகட்டமாக ஆயுதப்போராட்டம் உருப்பெற்றது.உலகமே வியக்கும் வகையில் எழுச்சிபெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டம் புலிகளின் தலைமையில் கடந்த வருடம் 2009 மே 18 வரை தொடர்ந்தது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் “பயங்கரவாதம்” என்ற போர்வையில் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் கூடிய மேற்பார்வையில் சிதைக்கப்பட்டது. இதனால், கண்முன்னே தெரிந்த தமிழர்களின் தேசவிடுதலை இன்று கேள்விக்குறியாக கண்ணுக்கெட்டாத தொலைவில் எங்கேயோபோய் நிற்கின்றது.

இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்த்தியாகங்கள், பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் விலைமதிப்பில்லாத உன்னத உயிர்க்கொடைகள் அனைத்தையும் “பயங்கரவாதம்” என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கி, கேவலப்படுத்தி சிதைத்து நிற்கின்றது சர்வதேசம். சிங்கள வல்லாதிக்கம் தமிழர்களின் எதிரி. அது எப்பொழுதுமே எம்மை எதிரியாகவே பார்க்கும். அது தமிழர்களை பயங்கரவாதி எனும்… தீவிரவாதி எனும்… அதற்கு மேலேயும் சொல்லும். கொல்பவனுக்கு சொல்வதெல்லாம் சாதாரணம்!!! ஆனால் சர்வதேசம் எமக்கு செய்தது அநீதியிலும் அநீதி. இன்னமும் தமிழர் விடயத்தில் அதையே செய்துகொண்டிருக்கின்றது.

நடுநிலை, மனிதநேயம், மனித உரிமைகள் என வார்த்தைக்கு வார்த்தை தவறாமல் உச்சரிக்கும் சர்வதேசத் தலைவர்களும், மனித உரிமைகளைக் கட்டிக்காக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்பாளர்களும் ஈழத் தமிழர்களின் அவலங்களை மட்டும் கண்டுகொள்ளாமல் தவறவிட்டதேன்???

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்களின் தலைமையில் நடக்கும் தமிழர்களின் போராட்டமும் பயங்கரவாதம். இது…. சிங்களதேசம் ஓதிய மந்திரம். ஆனால் அவர்களே மறந்தாலும் சர்வதேசம் அதை தாரகமந்திரமாக வரித்துக் கொண்டது. 2002 ஆம் ஆண்டிற்குப் பிற்பாடான சமாதான காலத்தில் இலங்கையில் புலிகளுக்கான தடை அகற்றப்பட்டிருந்த போதிலும், சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பு மீது பல சர்வதேச நாடுகளில் புதிதாக தடைகள் விதிக்கப்பட்டன என்பது இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

தமிழர்கள் சர்வதேசத்திற்கு என்னதான் பாவம் செய்தார்கள்? ஏன் இவ்வாறு தமிழர்களை சர்வதேசம் தண்டிக்கவேண்டும்?? தமிழர்களை தண்டிக்க சர்வதேசத்திற்கு அருகதை இருக்கின்றதா???

உலகெங்கும் வாழும் தமிழர்களே!

ஒன்றைமட்டும் நன்கு விளங்கிக் கொள்ளுங்கள்! “தமிழனுக்கென்று இன்று ஒரு தேசம் இல்லை” என ஏங்குகின்றீர்களே!? இந்த இழிநிலையை உருவாக்கியதே இந்த சர்வதேசந்தான்! வரலாற்றின் முன் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன் இலங்கையில் தமிழ் இராச்சியம், சிங்கள இராச்சியம் என தனித்தனியான தேசங்களே இருந்துள்ளன. அன்று தமிழர்களுக்கான தனியான தேசம் என இருந்துள்ளது.அதற்கு வரலாற்று ரீதியிலான ஆதாரங்களும் உள்ளன. இதே நிலைதான் இந்தியாவிலும். சோழ நாடு, பாண்டிய நாடு என தமிழருக்கான தனித்தனியான நாடுகள் இருந்துள்ளன. ஆனால், வெள்ளையர்களின் வருகைக்கு பின்னர்… குறிப்பாக பிரித்தானியரின் ஆட்சியில் தமது நிர்வாக இலகுத்தன்மைக்காக அனைத்துப் பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடாக உருவாக்கப்பட்டன. தனித்தேசத்தில் தமது சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்களின் சுதந்திர வாழ்வுரிமைக்கான அத்தியாயம் அத்தோடு நிறைவுக்கு வந்தது.

இறுதியில், சுதந்திரம் கொடுக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு சென்றவர்கள் தமிழர்களின் சுதந்திரத்தினை மட்டும் பறித்துவிட்டுச் சென்றனர்.அன்று வெள்ளைக்காரப் பாட்டன்மார்கள் சொல்லிவிட்டு, செய்துவிட்டுப் போனதை இன்று சர்வதேசத்தில் நீதியினை நிலைநாட்ட முனைவதாய் காட்டிக்கொள்ளும் வெள்ளைக்காரப் பேரன்மார்களும் பின்பற்றி… அதையே தொடர முனைகின்றார்கள். வரலாற்று ரீதியிலான இந்தக் காரணங்களோடு தற்போதைய பிராந்திய வல்லாதிக்கம்,பொருளாதாரப் போட்டிகளும் முண்டியடித்து ஒட்டிக்கொண்டன. இவர்களின் சுயநலன்களுக்கு தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். தமிழர்களின் வாழ்வுரிமை, சுதந்திரம் என்பவை பறிபோயுள்ளது.

உண்மையிலே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு மூலகாரணமே சர்வதேசம் தான். இவர்கள் தமிழர்கள் விடயத்தில் இழைத்த தவறினை இவர்களேதான் திருத்திக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெள்ளை இனத்தவர்களை உள்ளடக்கிய சர்வதேச தலைவர்களுக்கு தமிழர்களுக்கான நீதியினை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் இருக்கின்றது. ஆனால் இவர்களோ தமிழர்களின் நீதியான விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாதச் சாயம் பூசுவதிலேயே குறியாய் இருக்கின்றார்கள்.
நாம் மாற்றான் மண்ணில் பங்கு கேட்கவில்லை! நாம் காலங்காலமாக வாழ்ந்து வந்த நமது பூர்வீக நிலத்தினையே நாம் கேட்கின்றோம்? எமது சுதந்திரமான வாழ்வுரிமையையே எதிர்பார்க்கின்றோம்! எமது தேவையெல்லாம் எமது சொந்த மண்ணில் அமைதியான சுதந்திரமான வாழ்க்கை என்பதுதான். அதைக் கொடுப்பதில் சிங்களவரைவிட இவர்களுக்கு அப்படியென்ன கஷ்டம்?

எமது சுதந்திரத்துக்காக நாம் இழந்தவை மிகமிக அதிகம். இன்றும் இழந்துகொண்டே இருக்கின்றோம். எமது நியாயமான விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சொல்லும் சர்வதேசமே! உனக்கு மனச்சாட்சி என்று ஒன்றிருந்தால், எம்முன்னே வா! ஒரு நாளைக்கு மட்டும் தமிழனாய் வாழ்ந்துபார்! எமது வலிகளை ஒரேயொருநாள் மட்டும் அனுபவித்துப் பார்! அப்போது தெரியும்! அதன்பின் நீயே சொல்!… நாம் பயங்கரவாதிகளா என்று…?!

எத்தனை தியாகங்கள்! எத்தனை உயிர்க்கொடைகள்! எத்தனை இழப்புக்கள்! எத்தனை வலிகள்! எத்தனை வீரம்! வெற்றியிலும் தோல்வியிலும் நழுவாத போர்நெறி! எதிரியும் பாராட்டும் ஒழுக்கம்! எத்தனை தன்னம்பிக்கை! எத்தனை கோடி மக்களின் நம்பிக்கை! அத்தனையும் வீணானதே….! ஏன்….?

“பயங்கரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே எம்மை பயங்கரமாய் அழித்தீர்கள்!

ஒட்டுமொத்தமாய் அழிக்க சிங்களத்தோடு கூட்டுச் சேர்ந்து வந்தீர்கள்!

அன்று நாம் அழிக்கப்பட்டோம்! ஒட்டுமொத்த உலகத்தாலும் ஒதுக்கப்பட்டு சிதைக்கப்பட்டோம்!!

தமது சுதந்திர வாழ்வுக்கான விடுதலைக்காக வேற்றுவழியின்றி ஆயுத மேந்தியது பயங்கரவாதம் என சொல்லிச் சொல்லி ஒட்டுமொத்த இனத்தையுமே சிதைத்தீர்கள்.

அன்று களத்தில் எம்மை சிதைத்தீர்கள்… இன்று நீங்களே எம்மை உங்கள் மடியில் விதைத்திருக்கின்றீர்கள். பெரு விருட்சமாய் மீண்டும் எழுவோம்! உலகமே திரண்டாலும் நம் விடுதலை உணர்வை அடக்கமுடியாது. இப்போது நீங்கள் எம்மை பயங்கரவாதிகள் என்று சொல்லமுடியாது. உங்கள் கைகளில் உள்ள ஜனநாயக ஆயுதத்தினையே நாங்களும் இப்போது தாங்கி நிற்கின்றோம். அகிம்சை வழி நின்றோம்… பலனில்லை. மறவழி நின்றோம் … கூடிவந்து சிதைத்தீர்கள். இப்பொழுது உங்கள் வழியில் நீங்கள் குறை கண்டுபிடிக்கமுடியாத அறவழியில் ஜனநாயக நெறியில் நாம் நின்று நம் உரிமையைக் கேட்கின்றோம். இப்பொழுது சர்வதேசம் பதில் சொல்லியே ஆகவேண்டும். எம்மை பயங்கரவாதிகள் என்று ஒதுக்கிவிட முடியாது. தமிழர்களுக்கு நீதியான பதில் சொல்லாமல் ஒதுங்கவும் முடியாது!

தமிழ் மக்களே! நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் வரும் மே மாதம் 2ஆம் திகதி நடந்தேற இருக்கின்றது. இவ்வாறான கட்டமைப்பென்பது நமக்கு நிச்சயம் அவசியமானது. கருத்துக் கொள்கை வேறுபாடுகள் பல இருந்தாலும் அவற்றினைத் திருத்தி தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்திற்காக பயணிக்க வேண்டியது தமிழர்களாகிய நம் அனைவரினதும் வரலாற்றுக் கடமை என்பது மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும் கூட. இதனை விமர்ச்சிப்பவர்களுக்கு சின்னச் சின்னதாய் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இதனை ஆதரிப்பவர்களுக்கு நம் மாவீரர்கள் சுமந்த “தமிழீழ விடுதலை” என்ற ஒரேயொரு காரணம் மட்டுமே போதும். நமது மண்ணில் நிர்மாணிக்கப்பட்ட தமிழீழ அரசு இன்று சிதைக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் புலத்தில் நாம் அமைக்கப்போகும் தமிழீழ அரசினை சிதையவிடாமல் ஒற்றுமையோடு காப்போமானால் இது கடல் கடந்து தாயகமண் திரும்பி தமிழீழ தனியரசினை உருவாக்கும் என்பது நிச்சயம்!

எனவே, வருகின்ற மே 2 இல் நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்துத் தமிழர்களும் சேர்ந்து செயற்திறன்மிக்க, என்றுமே தமிழருக்காகவும் தாயக மண்ணுக்காகவும் பாடுபடக்கூடிய தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம்! நாம் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் அறவழியில் தொடர்ந்து போராடி நம் உரிமைகளை வென்றெடுப்போம்!

நாம் பயங்கரவாதிகளா???
தமிழர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவோரே! எம்முன்னே வாருங்கள்!!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

- பருத்தியன்

அரசுடன் ஒட்டிக் கொண்டு கூட்டுப் பற்றிப் பேசுவது எப்படி? – செல்வம் அடைக்கலநாதன்

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது அவசியமானதாகும். ஆனாலும், அரசுடன் ஒட்டிக் கொண்டு தமிழ்க் கட்சிகளுடன் கூட்டு என்பது இரண்டு வள்ளங்களில் பயணிக்க முயற்சிப்பதற்கு ஒப்பானது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என ஈ..பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழர் பிரச்சினை என்னும் போது நாம் கட்சிகளாக வேறுபட்டு நிற்பது அனுகூலமானதல்ல என்ற போதிலும் அரசுடன் ஒட்டிக் கொண்டுள்ள கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது சாத்தியமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

எமக்கிருக்கின்ற பிரச்சினைகளைப் பெரும்பான்மைச் சமூகம் புரிந்து கொள்வதாகவும் இல்லை. அவ்வாறு புரிந்து கொண்டாலும் அதனைத் தீர்க்கும் எண்ணம் அவர்களுக்குக் கிடையாது எனத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்தில் ஒருகாலும் தமிழர் பிரச்சினை தொடர்பில் இன்னொரு காலும் பதித்து, இரண்டு வள்ளங்களில் பயணிக்க முயற்சிப்பது அரசியல் தீர்விற்குத் தடையாகவே இருக்கும் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ருத்ரகுமாரன் வழங்கியிருக்கும் செய்தி, நாடு கடந்த தமிழீழ அரசு சரியான பாதையில் நடைபோடுவதற்கான நல்லடையாளம் – தமிழருவி மணியன்

உலகின் பிற பகுதிகளில் நாகரிகம் மெள்ள எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலகச் சகோ தரத்துவம் பற்றிய உயர்வான கருத்தோவியத்தை மனிதநேயம் மாறாத நிறத்துடன் தீட்டிக்காட்டிய முதல் இனம் தமிழினம்.

பசியின்றி வாழ்தல், பிணி நீங்கி வாழ்தல், யாரோடும் பகையின்றி வாழ்தல், அறம் சிறக்க வாழ்தல் என்ற மேலான நோக்கங்களே சங்கத் தமிழரின் வாழ்வியல் பண்பு களாகும். அறவுணர்வும், அருளுணர்வுமே பழந்தமிழர் பண்பாட்டின் அடித் தளங்களாகும்.

சங்கத் தமிழன் தோகை விரித்த மயிலுக்கும் இரங்கினான்; துவண்டு விழுந்த மலர்க்கொடிக்கும் இரங்கினான்; வண்ண மலரில் வாசம் செய்த வண்டுக்கும் இரங்கினான் என்பதுதான் நமது இலக்கியம் காட்டும் வரலாறு. அவர்களுடைய வாரிசுகளாகிய நாமோ, சக மனிதரின் துயர் கண்டும் இரங்காத சமூக மனிதர்கள்.

தமிழனத்துக்கே உரிய மரபார்ந்த மனிதநேயம், முற்றாக வற்றிவிட்ட தற்கு நம் வாழ்காலச் சாட்சியம்தான் வீரத் திருமகன் பிரபாகரனைப் பெற்றெடுத்த பெருமைக்குரிய அன்னை பார்வதி அம்மையார் விமானத்தில் இருந்து இறங்க அனுமதி இன்றி, மீண்டும் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட அவலம். 80 வயது கடந்து, ரத்த அழுத்தம் அதிகரித்து, நினைவு தடுமாறும் நிலையில் மருத்துவச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட மூதாட்டியைத் திருப்பி அனுப்பிய இந்திய அரசு, காந்தியின் பெயரை உச்சரிக்கும் அருகதையை அறவே இழந்துவிட்டது. இந்திய அரசின் ஈரமற்ற நடவடிக்கையை எதிர்க்கத் துணிவின்றி நம் தமிழக முதல்வர் வழக்கம்போல், கடிதம் வரைவதற்கு எழுது கோல் எடுத்துவிட்டார். சுயநலத்தில் சுருங்கிப்போய்விட்ட எம் தமிழினமோ தொலைக்காட்சிக் கிளுகிளுப்பில் தொலைந்துவிட்டது. எங்கே இருந்து, எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் நாம்? தள்ளாத வயதுப் பெண்மணியைத் தரை இறங்கவிடாமல் திருப்பி அனுப் பிய மனிதநேயமற்ற நிகழ்வு குறித்துச் சட்டப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட சூழலில்… முதல்வர் கலைஞர் என்ன சொன்னார் என்பதுதான் நம் தமிழி னம் சிந்திக்க வேண்டிய செய்தி.

‘… அதைப் பரிசீலனைசெய்து மத்திய அரசுக்கு அதுபற்றி எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். மத்திய அரசின் பதிலைப்பற்றி, அது என்ன கூறுகிறது என்பதைப்பற்றி, அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால், அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன் என்று கூறி இந்த அளவில் இந்தப் பிரச்னையை முடிக் குமாறு கேட்டுக்கொள்கிறேன்!’ என்றார் நம் முதல்வர். ஆக, எந்தப் பிரச்னையானாலும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது ஒன்றுதான் நம் கலைஞர் கண்டெடுத்த தீர்வு. ஆயிரம் ராகங்கள் பிறந்தாலும் ஸ்வரங்கள் ஏழுதான். எத்தனை சிக்கல்கள் வந்தாலும் கலைஞரின் தீர்வு ஒன்றே ஒன்றுதான். கடிதம்… கடிதம்… கடிதம்!
‘தமிழ்நாட்டு அரசியல் பீடம் டெல்லிக்குத் தபால் பெட்டி அந்தஸ்துடன்தான் நடத்தப்பட்டது. எதற்கெடுத் தாலும் ஆணையிடுகின்ற உரிமை, ஆயிரம் மைலுக்கு அப்பாலுள்ள டெல்லிப் பட்டணத்தில்தான் தேங்கி வழிந்தது. இங்கு காமராஜரின் அரசியலும் காங்கிரஸ் ஆட்சியின் பிடிவாதங்களும் நினைத்தாலே நெஞ்சத்துக்குச் சோர்வை அளித்தது’ (கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ பக்.279 தினமணி கதிர் வெளியீடு) என்று எழுதிய கலைஞரின் இன்றைய நிலையை நினைத்தால், நமக்குச் சொல்லில் அடங்காத சோர்வு எழுகிறதே! காமராஜர் தபால் பெட்டியாக இருந்தார் என்று, அன்று குற்றம் சாட்டிய கலைஞர்… இன்று தபால் பெட்டிகளின் தலைமை நிலையமாக மாறிவிட்டது நியாயந்தானா? ‘தேர்தலில் ஈடுபட்டுத்தான் அந்தஸ்து தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல தி.மு.கழகத்தில் இருப்பவர்கள். நாட்டுக்குப் புதியதோர் அந்தஸ்து தேடித் தருவதற்காகவே தி.மு.கழகம் தேர்தலில் ஈடுபடுகிறது!’ என்று அண்ணா சொன்னதாக அதே ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் குறிப்பிட்டிருக்கும் கலைஞரின் கழக ஆட்சியால், தமிழ்நாட்டுக்கு எந்தப் புதிய அந்தஸ்து பூத்துச் சொரிகின்றது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மூன்று பட்டியல்கள் உள்ளன. மத்திய அரசின் சட்டம் இயற்றும் பட்டியலில் 97 அதிகாரங்களும், மாநில அதிகாரப் பட்டியலில் 66 இனங்களும், மத்திய – மாநில அரசுகள் செயற்படக்கூடிய பொதுப் பட்டியலில் 47 அதிகாரங்களும் இடம்பெற்றன. பல்வேறு திருத்தங்களால் மாநில அரசுகளின் அதிகாரப் பதிவுகள், 19 ஆகச் சுருங்கிவிட்டன. மைய அரசின் அதிகாரங்கள், 144 ஆகப் பெருகிவிட்டன. ‘மாநிலப் பட்டியலில் கண்ட அதிகாரங்களை மாநிலங்களவைத் தீர்மானத்தின் மூலமாகப் பறித்துக்கொள்வதற்குரிய வழிவகை, நாடாளுமன்றம் சில சூழ்நிலைகளில் மாநில ஆட்சி அதிகாரங்களில் ஊடுருவும் இயல்பு, இன்னோரன்ன மொழி, இன மக்களின் தன்னாட்சியை முறியடிக்கும் வேறு பல ஏற்பாடுகளும் இன்றைய நமது அரசமைப்பில் இடம்பெற்றுள்ளன. எனவே, அது மாநிலங்களின் உரிமைப் பட்டயம் அன்று; மாறாக மாநிலங்களின் அடிமை முறி’ என்கிறார் கு.ச.ஆனந்தன். எந்த விதமான குறைந்தபட்சத் தியாகத்துக்கும் தயாராக இல்லாத இன்றைய கலைஞர், ‘மாநிலச் சுயாட்சி’ என்று வாய் வலிக்காமல் குரல் கொடுப்பதோடு நின்றுவிட்டார். தேர்தல் கூட்டணிக்குச் சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக… காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மனம் சிறிதளவும் வருத்தமுறாமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருக்கும் கலைஞரால், பார்வதி அம்மையார் விவகாரத்தில் பட்டும் படாமல் பக்குவமாக மன்மோகன் அரசுக்குக் கடிதம் எழுதுவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்? இலவசங்களுக்குப் பல்லை இளிக்கும் இனமாக நாம் இருக்கும் வரை, கலைஞர் வேலனாகவும் வருவார்; விருத்தனாகவும் காட்சி தருவார். வேடம் புனைவதில் நம் அரசியல்வாதிகளை யாரால் வெல்ல முடியும்?

‘மாநிலங்கள் விரும்பி விட்டுக்கொடுத்த அதிகாரங்கள் மட்டுமே மத்தியக் கூட்டாட்சி அரசிடம் இருக்க வேண்டும். மற்ற வகையில் ஒவ்வொரு மாநிலமும் சுதந்திரமாக இயங்க வேண்டும்!’ என்று மகாத்மா அறிவுறுத்தினார். இன்று ஒரு தமிழர் தலைவரின் நோயுற்ற அன்னைக்கு மருத்துவச் சிகிச்சை தரும் சுதந்திரம்கூட மன்மோகன் அரசிடம் அடகுவைக்கப்பட்டுவிட்டது. பிறப்பால் தமிழரான ப.சிதம்பரத்தால், உணர்வால் தமிழராக இயங்க முடியவில்லை. நாட்டு நலன் சார்ந்த ஒவ்வொரு நடவடிக்கையிலும் கலைஞரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பதாக நம் பிரதமரும் சோனியாவும் சென்னை வந்து சட்டமன்றத் திறப்பு விழாவில் சொன்னார்கள். பார்வதி அம்மையார் தமிழகம் வந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டுமென்று கலைஞர் கேட்பாரா? அப்படி கலைஞர் கேட்ட அடுத்த கணமே மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிட்டுமா? பொறுத்துப் பார்ப்போம். தன் மீதே தனக்கு உரிமை இல்லை என்ற அடிமை நிலைதான் தமிழருக்கு வாய்த்த வரமா? பொறுத்த பின் கேட்போம்.

‘தமிழன் சுதந்திர ஆட்சிக்கு வரும் வரை… தமிழன், தமிழ்நாடு ஒரு நாளும் சூத்திரத்தன்மையில் இருந்து, அடிமைக் குடியாய் இருப்பதில் இருந்து கடுகளவும் மாற்ற மடைய முடியாது!’ என்றார் பெரியார். சூத்திரர்கள் ஆட்சி வந்த பின்பும் அடிமைக் குடியாய் இருப்பதில் இருந்து விடுபடவில்லையே ‘வாய் வேதாந்தம்’ பேசும் தமிழினம். ‘வெள்ளம்போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம்; அன்னார் உள்ளத்தால் ஒருவரே; மற்று உடலினால் பலராய்க் காண்பார்’ என்று பாவேந்தர் பாடியபடி தமிழினம் இன்று வரை எந்தப் பிரச்னையிலும் ஒன்றாக இணைந்து நிற்கவில்லையே. ஒன்றுக்கொன்று வேறுபட்ட மொழிகளையும், மாறுபட்ட பழக்க வழக்கங் களையும்கொண்ட 14 மலை வாழ் மக்கள் நாகாலாந்தில் ஒன்றிணைந்து உரிமைக் குரல் கொடுக்கின்றனர். ஆனால், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே பண்பாடுகொண்ட தமிழினம் ஒன்று சேர முடியாமல் கட்சி அரசியல் பிரித்துவைத்திருக்கிறது. கிருஷ்ணா நதியில் அலமாதி அணையை 1,720 அடியாக கர்நாடகம் உயர்த்தியபோது, ஆந்திராவின் நலன் பாதிக்கப்படுவதாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொங்கி எழுந்ததுபோல், முல்லை பெரியாறு விவ காரத்தில் நாம் ஒன்றாக நின்றோமா? காவிரி நீர்ப் பிரச்னையில் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் கட்சி கடந்த ஒற்றுமை, நம்மிடம் உண்டா? ‘தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அதற்கோர் குணமுண்டு’ என்றாரே நாமக்கல் கவிஞர்… அது என்ன குணம்? எந்த நிலையிலும் ஒன்றுபட்டு நிற்பதில்லை என்ற நீச குணமா?

இங்குள்ள தமிழர் ஒன்றாக இல்லை. ஈழத் தமிழர்கள் ஒன்றாக நின்றார்களா? எட்டப்பன் வாரிசுகளாக டக்ளஸ் தேவானந்தாவும், கருணா வும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு வியூகம் அமைக்கவில்லையா? புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் யூத இனத்தின் ஒற்றுமையுணர்வைக் காண முடிகிறதா? உலக நாடுகளும், இந்திய அரசும் செய்த சதியால் விடுதலைப் புலிகள் வீழ்ந்த பின்பு, தமிழீழம் வென்றெடுக்க ஒன்றிணைந்த அரசியல் உத்தி இன்று வரை வடிவமைக்கப்பட்டதா? நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்குப் புலம் பெயர்ந்த ஈழ அறிவுஜீவிகள் இணைந்திருக்கின்றனர். இதுவரை ஈழ நிலத்தில் இருந்த தமிழர்கள் போராடி இன்னல்களை அனுபவித்தனர். இனிமேல் ஈழப் போராட்டத்தைப் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் முதலில் உலக நாடுகளின் மனோபாவத்தை, சந்தைப் பொருளாதாரம் சார்ந்த சுயநலப்போக்கைக் கணக்கில்கொண்டு, காரியத்தில் இறங்க வேண்டும். ‘அக்கா வந்து அள்ளிக் கொடுக்க, சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே’ என்றார் பாவேந்தர். இன்னல்கள் இன்னும் தொடரத்தான் செய்யும். அறிவின் பிரகாசமும், உண்மையின் ஒளியும், பரிசுத்தமான எண்ணங்களும், தணியாத லட்சிய வேட்கையும் சேர்ந்து செயற்பட்டால், தமிழீழம் ஒரு நாள் நிச்சயம் மலரும். அதற்கு முதல் தேவை ஒன்றிணைந்த போர்க் குரல்.

‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாட்டின் வழி நின்று தமிழக, இந்திய, அனைத்துலக சமூக ஆதரவுடன் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு, தமிழீழ விடுதலையை வென்றெடுக்கப்போவதாக விசுவநாதன் ருத்ரகுமாரன் வழங்கியிருக்கும் செய்தி, நாடு கடந்த தமிழீழ அரசு சரியான பாதையில் நடைபோடுவதற்கான நல்லடையாளம். ஆனால், ‘ஆயுதப் போராட்டம் என்பதோ, வன்முறை வழியோ இனி எங்கள் அகராதியில் கிடையாது!’ என்று அவர் சொன்ன தாக வந்த செய்தியை மறுத்திருப்பது கவலையைத் தருகிறது. ஈழத் தமிழர் போராட்ட அகராதியில் இனி ஆயுதங்களுக்கும், வன்முறைக்கும் இடமில்லாத நிலை கனிந்தால்தான், உலக நாடுகளின் ஆதரவு பெருகும். ஆயுதப் புரட்சிக்கான சூழல் அடியோடு மாறிவிட்டது. எல்லாக் காலங்களிலும் பொருந்தக்கூடியது காந்தியப் போர் முறை ஒன்றுதான். வன்முறைக்கு இடம் இல்லை என்று அறிவிப்பது மாவீரன் பிரபாகரனின் அணுகுமுறையைக் களங்கப்படுத்தும் காரியம் என்று எண்ணத் தேவை இல்லை.

காலச்சூழலுக்கேற்ப போராட்ட உத்திகளை மாற்றியமைப்பதுதான் விவேகமானது. தமிழ்நாட்டில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் அறவழியில் இந்திய அரசை நிர்ப்பந்திக்க ஆயிரம் வழிகள் உண்டு. உணர்ச்சியைத் தூண்டி வன்முறையை வளர்ப்பவர்கள், ஈழ நலனுக்கு எதிரானவர்கள். ஆயுதப் போர் தொடர்ந்தால், எஞ்சியுள்ள ஈழ நில மக்களையும் நாம் இழந்துவிடுவோம். ருத்ரகுமாரனும், அவருடைய தோழர்களும் ஆழச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

இறுதியாக, பிரபாகரன் தாயார் பார்வதி அம்மையார் மனிதநேயத்துக்குமாறாகத் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து கலைஞரி டம் கேட்கவேண்டிய நியாயமான கேள்வி ஒன்று இருக்கிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வேலுப்பிள்ளையும், பார்வதி அம்மையாரும் தமிழகத்தில் கால்வைக்க முடியாதபடி கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றதாக நம் முதல்வர் தெளிவுபடுத்தியிருக்கிறார். பார்வதி அம்மையாருக்கு நேர்ந்த அவமானத்துக்கு ஜெயலலிதாவே காரணம் என்று கலைஞரின் அன்பு மழையில் நனையும் சில மனிதர்கள் சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போன்று சத்தமிடுகின்றனர். ஜெயலலிதா மத்திய அரசுக்கு பிப்ரவரி 5, 2003 அன்று கடிதம் எழுதியதாக முதல்வர் தெரிவித்தார். வாஜ்பாய் அரசு அக்டோபர் 13, 1999 முதல் மே 13, 2004 வரை மத்தியில் ஆட்சி செய்தது. அந்த அமைச்சரவையில் தி.மு.கழகத்தின் சார்பில் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகிய மூவரும் இடம்பெற்றிருந்தனர். விசா விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது உண்மை. மத்திய அரசுக்கு மட்டுமே அதில் அதிகாரம் உண்டு என்பதும் மறுக்க முடியாத உண்மை. மாநில முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு புறக் கணித்திருக்க முடியுமே. கேபினட் அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் பிரதமர் வாஜ்பாயிடம் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி அம்மையார் ஆகியோருக்கு எதிராக விசா விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று எதிர்த்துக் கிளர்ந்தார்களா? இதற்குக் கலைஞர்தான் விளக்கம் தர வேண்டும். ‘ஆரிய மாயை’ எழுதிய அண்ணா, ‘பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி!’ என்றார். பார்வதி அம்மையார் விவகாரத்தில் பலரும் இரண்டு நாவால் பேசுவதுதான் வருத்தம் தருகிறது.

உலகில் எத்தனை இனங்கள் ஒன்றுபட்டாலும், ஒரேயரு இனம் மட்டும் எங்கிருந்தாலும் இரண்டுபட்டே நிற்கும். அந்த இனம்தான் நம் பெருமைக்குரிய தமிழினம். ஒன்றுபடாமையே தமிழரின் தனிக் குணம். கட்சி அரசியலும், சாதி வெறியும் நம்மை ஒருபோதும் ஒன்றாகச் சேரவிடாது. விவேகம் உள்ளவர்க்கு எதில் வேறுபடுவது, எதில் ஒன்றுபடுவது என்று தெரியும். அறிவார்ந்த (!) நம் இனத்துக்குக் காரணங்களோடு வேறுபடவும் தெரியாது; ஒன்றுபடவும் தெரியாது!

– தமிழருவி மணியன், ஜீனியர் விகடன்

மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈன்று தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்திய தியாகி முத்துக்குமரனுக்கு இளந்தமிழர் இயக்கத்தினர் தஞ்சையில் மே 16 ஆம் திகதி சிலை திறக்கவுள்ளனர். தமிழீழ மக்கள் மீது, சிங்கள – இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.

இனவெறியின் கோரப் பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது. முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது.

இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும். முள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவு+ர் – திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது.

சிலை திறப்பு நிகழ்வுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் திரு. ச.குமரேசன் கலந்து கொள்ள இசைவு தந்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட முத்துக்குமார் சிலையை அன்பளிப்பாக வழங்கி, இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. ம.செந்தமிழன், சிறப்புரையாற்றுகிறார்.

சிலை திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிற்பகல் 2 மணிளவில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மாணவர்கள் – இளைஞர்கள் சுடரேந்தி வரும் வகையில், சுடரோட்டம நிகழ்வு நடைபெறுகின்றது. பு+தலூர், ஆவாராம்பட்டி, நந்தவனப்பட்டி வழியாக சாணுரப்பட்டிக்கு இச்சுடரோட்டம் வந்தடைகிறது. மாலையில், ‘முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்’ என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா; ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல, புதியதொரு தொடக்கம் என்பதை இவ்வுலகிற்கு நாம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழகத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது. தாய்த் தமிழகத்தில் எழுகின்ற எழுச்சியே தமிழீழ மக்களின் நலன் காக்கும் என்பதை உறுதியாக நம்பிக் களம் இறங்க வேண்டிய சூழல் இது என்பதை முன்வைத்தும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழகமெங்கும் உள்ள இன உணர்வாளர்கள், கட்சி வேலிகளைக் கடந்து ஒன்று கூட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன விடுதலைக்கான சூளுரை தினமாக நெஞ்சிலேந்தி, விடுதலைப் பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.

நோர்வேயில் ஈழத்தமிழ் இளைஞனின் சாதனை

உலகின் எப்பகுதியில் ஈழத்தமிழர்களாகிய நாம் வாழ்ந்தாலும், தாய் நாட்டுக்கும் வாழ்கின்ற நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது.

அந்த வகையில் தாயகத்தில் உரும்பராயைச் சேர்ந்த சிவகுமார், பிருந்தா தம்பதிகளின் புதல்வன் ஜனகன் சிவகுமார் (வயது 16) அவர்கள் ரக்வொண்Nடா (Taekwondo) என்னும் தற்காப்புக் கலையில் சர்வதேச தரத்தில் திகழ்ந்து நோர்வே நாட்டுக்காகப் பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொடுத்து வருகின்றார்.

நோர்வே நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் 12 தடவைகள் முதலாவது இடத்தையும், 3 தடவைகள் இரண்டாம் இடத்தையும் பெற்ற பெருமை செல்வன் ஜனகன் அவர்களுக்குண்டு.

கடந்த மூன்று ஆண்டுகளாக (16 வயதுக்குட்பட்டோர் 48 கிலோ) நோர்வேயின் அதிசிறந்த வீரராகத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டு வரும் இவரே இப்பிரிவில் வெற்றி பெற்றவர்களில் குறைந்த வயதுடையவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இருதடவைகள் அதிசிறந்த ஸ்கன்டினேவிய வீரராகவும், கடந்த இருவருடங்களாக அதி சிறந்த நோர்டிக் வீரராகவும் தெரிவாகியது மட்டுமன்றிப் பல நாடுகளுக்கும் சென்று விளையாடிப் பெருமெண்ணிக்கையில் வெற்றிக் கிண்ணங்களைத் தனதாக்கிவரும் இவர் 2009ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய வெற்றிக்கிண்ணப் போட்டியில் குறைந்த வயதில் பங்குபற்றிய சிறப்பையும் கொண்டவர்.

இவ்வாண்டு மெக்சிக்கோவில் நடைபெற்ற உலக வெற்றிக்கிண்ணப் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர் 48 கிலோ) பங்கெடுத்துச் செனகல், கனடா ஆகிய நாடுகளுடன் முறையே 7 - 2, 4 - 2 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குத் தெரிவாகியிருந்தார்.


மூன்றாவது சுற்றில் டொமினிக்கன் குடியரசுடன் மிகத்திறமையாக விளையாடி இறுதிக்கணத்தில் துரதிர்ஷ்டவசமாக வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டிருந்த போதிலும் நோர்வே நாட்டின் சார்பாக இவ்வுலக வெற்றிக்கிண்ணப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் சர்வதேச ரக்வொண்டோ வீரர்கள் பலரை வென்று மூன்றாவது சுற்று வரைக்கும் முன்னேறியிந்த நோர்வேயிய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றிருந்தார்.

இவர் தொடர்ந்து இத்துறையில் முன்னேறித் தாம் வாழும் நாடான நோர்வேக்கும், தாய்நாட்டுக்கும் புகழ்சேர்க்க வாழ்த்துகின்றோம்.

புலம் பெயர் மக்கள் தேசியத் தலைமையின் பணியை ஏற்கும் காலம் இது

உலகத்தில் இரண்டாம் உலக யுத்த முடிவுக்கு பிற்பாடு ஐக்கிய நாடுகள் மன்று தோற்றம் பெற்றது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தோற்றப்பாட்டிற்கு பிற்பாடு உலகத்தில் உள்ள தேசங்கள் ஒரு குடைக்கு கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிற்பாடும், ஐக்கிய நாடுகள் மன்றின் தோற்றப்பாட்டிற்கு பிற்பாடும் உலக அரங்கில் பல புதிய தேசங்கள் உருவாகியுள்ளன. இப்புதிய தேசங்களின் தோற்றத்திற்கு உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளின் நலன் சார் அரசியலே காத்திரமான காரணியாக அமைந்திருந்தது.

எடுத்துக்காட்டாக அண்மையில் தனிநாடாக பிரிந்த கொசுவா தேசம், அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் பிராந்திய நலன் சார் அடிப்படையில் உருவாகக்கம் பெற்றிருக்கின்றது. இப்பின்புலச் அரசியல் சிந்தனைக் கோட்பாடானது அதாவது புவிசார் அரசியல் கொள்கை வகுப்பானது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பல பின்னடைவுகளையும் தடங்கல்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய களம் மற்றும் புலத்தின் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டில், தமிழீழ விடுதலையை நோக்கிய பாதைக்கான அரசியல் அணுகுமுறையில் சிறு பிளவை ஏற்படுத்தியுள்ளது. இவ் அணுகுமுறை வேறுபாட்டை குழுமோதலாக பார்ப்பதை தவிர்த்து அவற்றின் பின்புலதில் உள்ள அரசியல் சிந்தனைக் கோட்பாட்டின் வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ளல் அவசியம்.

இச்சிந்தனைக் கோட்பாட்டின் வேறுபாட்டை மேலும் விளக்கும் வகையில் நமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முப்பது வருட கால அகிம்சை அதாவது அறவழிப் போராட்ட காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. தந்தை செல்வா அவர்களுடைய அறவழியிலான தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் இரண்டுவிதமான சிந்தனைப் பள்ளிக்கூடங்கள் அமைந்திருந்தன.

1. தந்தை செல்வா அவர்களுடைய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை நோக்கிய சிந்தனையை கொண்ட பள்ளிக்கூடம்


2. எம்.பி நவரத்தினம் அவர்களுடைய சுயாட்சி கழகத்தினுடைய சிந்தனைப் பள்ளிக்கூடம்

எம்.பி நவரத்தினம் அவர்கள் சிங்கள பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கப்போவதில்லை எனக் கருதி சுயாட்சியே அதவாது தமிழீழம் தனியாப் பிரிந்து செல்வதே பொருத்தமான அரசியல் தீர்வெனக் கருதி பிரிந்து சென்றவர்.

தந்தை செல்வா அவர்களைப் பொருத்தவரையில் ஏனையவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஓர் அரசியல்வாதி அல்ல. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வுக்காக மறவழியில் போராடியதோடு மட்டுமன்றி, 1972ம் ஆண்டு குடியரசு யாப்பு நிறைவேற்றப்பட்டதை அடுத்து (தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைக்கப்பட்ட யாப்பு) சிங்களப் பேரினவாதிகளுடனான பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வி கண்டதையடுத்து தமிழீழ தனியரசு அமைப்பதே ஒரே ஒரு தீர்வு என தனது ஆழ்ந்த அரசியல் புரிதலின் ஊடாக முடிவை மேற்கொண்டவர்.

நம்முடைய தேசியத்தலைமையானது எம்.பி நவரத்தினம் அவர்களுடைய சிந்தனைப் பள்ளிக்கூடத்திலிருந்து உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவகையிலான அரசியல் கோட்பாட்டை கொண்ட இரு வகையான அரசியல் சிந்தனைப் பள்ளிக்கூடங்கள் உலகில் காணப்படுகின்றன.

1. பயங்கரவாதத்திற்க எதிரான போர் என்ற அடிப்படைச் அரசியல் மற்றும் இராணுவ மூலோபாயத்தை கொண்ட ஓர் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்கள்.


2. தேசிய விடுதலைப் போராட்டத்தை சுயநிர்ணய உரிமையை அடிப்டையிலான தீர்வை கொண்டு நிறைவுக்கு கொண்டுவரல் என்ற சிந்தனையை கொண்ட ஓர் பள்ளிக்கூடம்.

இவ்விரு சிந்தனைப் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்களும் தேசிய விடுதலைப் போராட்டக் குழுக்களிடம் தமது சிந்தனைகளை வலுப்படுத்துவதற்காக அவர்களது சிந்தனைகளை விதைக்க முற்படுவார்கள். தற்போதைய உலக ஒழுங்கில் தேசிய விடுதலைப் போராட்டத்தை சுயநிர்ண உரிமை அடிப்படையிலான தீர்வைக் காண வேண்டும் என்று சிந்தனைப் பள்ளிக் கூடத்தைச் சார்ந்தவர்களின் சிந்தனையே வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.

இப்பயங்கரவாதத்திற்கு எதிராக அரசியல் மற்றும் இராணுவ மூலோபாயங்கள் ஊடாக செயற்படும் சிந்தனைப் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்கள் நமது தமிழீழப் போராட்டத்திலும் பல சிந்தனைகளை நமக்குத் தெரிவிப்பார்கள். தமது கோட்பாடுகளை வலுப்படுத்துவதற்காகவும் தமது சிந்தனைகளை நமக்குள் விதைக்க முற்படுவார்கள்.

இச்சிந்தனைப் பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்கள் திட்டமிட்டு செயற்படும் வல்லமை பெற்றவர்கள். இடதுசாரிப் போக்குடைய மாற்றுக் கட்சிகளின் ஒத்தாசையை நாடுவதன் மூலம் தமிழீழக் எண்ணக்கருவை தமிழ் மக்களிடம் இருந்து அழித்துவிடமுடியாது என்பதில் உலக மற்றும் பிராந்திய வல்லரசுகள் தெளிவு பெற்றுள்ளன.

ஆகவே தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புக்களில் மிதவாதப் போக்குடையவர்கள் எனத் தாம் கருதுபவர்களை நாடிச் செல்ல இப்பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்கள் தலைப்பட்டுள்ளனர். மிதவாதப் போக்குடையவர்களிடம் சொல்லப்படும் கருத்துக்கள் கீழ்வரும் அடிப்படையில் அமைந்திருக்கும்.

தமிழீழம் என்ற கோரிக்கையை முதலில் கைவிடுங்கள். படிபடிப்படியாக உங்கள் கோரிக்கைகளை வையுங்கள் என ஆலோசனை வழங்கப்படும். இது ஏறிபடி அணுகுமுறை எனச் சொல்லப்படும்.

ஆனால் அது இறங்குபடி அணுகுமுறை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது போய்விடும். இந்நிலையில் தமிழ் மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன என்றொரு மிகப்பெரிய கேள்வி எம்முன் எழுந்துள்ளது. தமிழர்கள் பெறுமளவில் புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்படும் மற்றும் செயற்படவிருக்கம் சனநாயக அமைப்புக்களை வலுப்படுத்துவதோடு, கொள்கை பற்றுருதி கொண்ட செயற்பாட்டாளர்களை அல்லது வேட்பாளர்களை முதலில் அடையாளம் காண வேண்டும்.

அவர்களுக்கு நாம் ஆதரவு அளிப்பதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது பள்ளிக்கூடத்தை சார்ந்தவர்களின் கவனத்தை நாம் ஈர்க்கலாம். அதாவது ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை சுயநிர்ணய உரிமை அடிப்டையில் தீர்வைக் காண விளையும் சிந்தனைப் பள்ளிக் கூடத்தை சார்ந்தவர்களையாகும்.

கொசுவா போராட்டம் சிதைக்கப்பட்டு ஒன்பது வருடத்திற்கு பிற்பாடு அதாவது அம்மக்கள் கொள்கை பற்றுருதியுடன் இருந்தமையால் தமது நாட்டுக்கான சுதந்திரத்தை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட நீரோட்டத்தில் சரியான திசையில் தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கான பாதையில் ஏற்பட்ட தடங்கல்களை விலக்கியும், களையெடுப்புக்களும், இடைநிறுத்தல்களும் தமிழீழ தேசியத் தலைமையால் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்களாகிய நாம் தமிழீழத் தேசியத் தலைமை கவனித்துக் கொள்வர் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாம் வாளாவிருந்தோம். ஆனால் தற்போது தமிழீழத் தேசியத்தலைமை நேரடியாக வழிப்படுத்தலுக்கான வேலையைசெய்ய முடியாதுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்களாகிய நாம் தேசியத் தலைமையின் செயற்பாட்டை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். இவற்றை கருத்திற் கொண்டு வரும் தேர்தலில் கொள்கை பற்றுருதியுடன் உள்ளவர்களை தெரிவு செய்வது எமது கடமை என்பதை புரிந்து கொள்வோம்.

வெற்றித்திருமகள்

Wednesday, April 28, 2010

இலங்கை அரசியலில் தமிழர் தலை விதியை எதிர்வு கூறிய சிவராமின் தீர்க்க தரிசனம்:

உலகின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி எவ்வளவு தூரம் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றதோ அதேயளவு பங்கினை தனிமனித ஊடகவியலாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனித சமூகத்தின் அரசியல், பொருளியல், சமூகவியல் வளர்ச்சிக்கு ஊடகவியலாளர்களின் பங்கு அபரிமிதமானது.நம் சமூக மாற்றத்திற்கும், அரசியற்சிந்தனை மாற்றத்தினை சமூகத்திற்கு எடுத்துச் செல்லுகின்ற அல்லது சொல்லுகின்ற பேராசான்களாக ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர்.

சமூகமாற்றத்தினை வேண்டி நிற்கின்ற சமுதாயங்களுக்கும் இனக்குழுமங்களுக்கும் புதிய அறிவியல், அரசியற் சிந்தனைகளை வழங்குகின்ற ஊடகவியலாளர்களை அரசியல் மாற்றத்தை விரும்பாத எதேச்ச அதிகார அரசுகள் அடக்குகின்றன, அடக்கி ஒடுக்க முனைகின்றன. அல்லது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடக்குகின்றன. உலகின் அரசியற், சமூக பொருளாதார மாற்றத்தினை வேண்டிநிற்கின்ற நாடுகளில், அல்லது சமூகங்களில் ஊடக அடக்குமுறையில் முன்னணியில் திகழும் பர்மா, கெயிற்றி, ஈரான், ரஷ்யா சீனா. நேபாளம். இந்தியா. வங்காளதேசம். சேமாலியா போன்ற 16 நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தை வகிக்கின்றது.

இலங்கையில் கடந்த ஐம்பது வருடகால வரலாற்றில் இன முரண்பாட்டையும், சமூகவியல் மாற்றத்தினையும் ஏற்படுத்த முனைந்த பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டனர். அல்லது கொலைமிரட்டல் விடுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்குள் 40 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதிலிருந்து ஊடக அடக்குமுறையின் குரூரம் புரியும். இவ்வாறான ஒரு நெருக்கடி மிகுந்த இனவிடுதலைக்கான சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் உண்மையின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நீண்ட வரிசையில் டி.சிவராம் தனித்துவமானவர்.

தமிழரின் நோக்குநிலையில் இருந்து இலங்கையின் அரசியல். சமூக விவகாரங்களையும். அன்றாடச் செய்திகளையும். ஆங்கில மொழிமூலம் வழங்கும் 'தமிழ்நெற்' இணையத்தளம் உலகப்பிரசித்தமானது. இலங்கையுடன் தொடர்புடைய வெளிநாட்டு இராசதந்திரிகளின் அலுவலக மேசைகளில் அதன் நாளாந்த கணனிப் பிரதிகள் எப்போதும் இருக்குமளவிற்கு செய்திகளின் உண்மைத்தன்மையும் நேர்த்தியும் செய்தி ஆய்வுகளும் தரம்வாய்ந்தவை இத்தகைய சர்வதேச தரத்திற்கும் கீர்த்திக்கும் காரணம் அவ் இணையத்தளத்திரனை உருவாக்கி வழிநடத்தியது டி.சிவராம் தான்.

சிவராம் பத்திரிகைத்துறை ஜாம்பவான். இனப்பற்றும், நேர்மையும், துணிச்சலும் மிக்க ஊடகவாதி ஆங்கிலம் தமிழ் இரு மொழிகனிலும் அறிவுசார் புலமையுள்ள ஒரு அரசியல். இராணுவ ஆய்வாளன். புத்திஜீவிகள் வியக்கும் வண்ணம் இலாவகமான பொருட்செறிவுடைய சொல்லாடல்களை பயன்படுத்தி அலாதியாக அவருடைய பேனா ஆய்வுக்கட்டுரைகளை வரையும் தர்கரீதியானதும், வாசிப்போரின் அறிவியல் தேடலுக்கு நல்ல தீனியாகவும் அதேநேரம் மனதைக்கவர்ந்து பதியும் வண்ணம் மாக்சீயக் கருத்துக்கள் அவருடைய ஆய்வுக்கட்டுரைகளில் பலமாகவும், ஆழமாகவும் பொதிந்து கிடக்கும். தமிழர் தாயகத்தின் புவியியல் கேந்திரத்தன்மை பிராந்திய வல்லாதிக்க புவிசார் அரசியல் நிலைப்பாடு என்பவற்றை போரியல் இராணுவ நோக்கில் தர்க்கீகமாகவும் ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அவர் எழுதும் இராணுவ ஆய்வுக்கட்டுரைகளை பாமரமக்கள் முதல் சிங்கள புத்திஜீவிகள் வரை ஏன் இராணுவத்தளபதிகளும் ஆர்வமாகப் படித்தனர். அவரது நடுநிலமையானதும் ஜதார்த்த பூர்வமானதுமான இராணுவ ஆய்வுகளிலிருந்து படைத்தரப்பு தமது போரியல் வியூகங்களை வகுக்க முற்பட்டது.

டி.சிவராம் என்ற சொல்லின் பின்னால் உண்மை, நேர்மை, நட்பு, துல்லியம், தர்க்கீகம் மாக்சீசம் தீர்க்கதரிசனம் எனப்பல்வகைப் பண்பும் பல்துறை ஆற்றலும் விரிந்துகிடக்கின்றது. ஒப்பாரும் மிக்காருமில்லாத தனித்துவமான, உலகமே வியந்து அந்த ஊடகப் போராளியை, அரசியற் சிந்தனையாளனை, மானிட நேயவாதியை நாட்டுப்பற்றளனை விடுதலைவிரும்பியை எல்லாவற்றிற்கும் மேலாக எனது மானசீகக் குருவை காலனிடம் பறிகொடுத்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையிலும் அந்த மாமனிதனின் வெற்றிடத்தை நிறப்புவதற்கு ஈழத்தாய் இன்னொரு பிரசவம் செய்யவேண்டும். இந்த நூற்றாண்டிலாவது முடியுமா என்றால் இல்லவே இல்லை. சிவராமுக்கு நிகர் சிவராம் தான் வேறு யாராலும் முடியாது.

ஆகவே இவ்வகைப்பட்ட கிடைத்தற்கரிய ஊடகவியலாளனின் வாழ்வும் வளமும் பற்றி என் சிறிய மனக்கண்ணில் விரிந்தவைகள். தர்மரட்ணம் சிவராம் 11.08.1959 இல் தமிழர் தாயகத்தில் கிழக்கில் உதித்த சூரியன். சென்.மிசேல் கல்லூரியில் கல்விகற்று பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வானவர். 1982 இல் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது அன்றைய நாளில் வடகிழக்கில் இளைஞர் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி, இன முரண்பாட்டின் தீவிரம், கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறையின் கொடூரம் என்பனவற்றினால் தமிழ் இளைஞர்கள் போராட்ட இயக்கங்களின் பால் சென்றபோது டி.சிவராமும் அந்த இளைஞர்களில் ஒருவராக இருந்தார். காந்தீயம் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைந்திருந்த டி.சிவராம். பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடியாமல் தமிழர் சுய நிர்ணயத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் அமைப்புக்களில் தமிழீழ விடுதலைக்கழக அமைப்பில் (புளொட்) இணைந்து தனது தாயகத்திற்கான பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். வடக்குக் கிழக்கின் மூலை முடுக்குக் கிராமங்கள் முதல் காடுகள், மலைகள் ஈறாக கால்நடையாகவும், உந்துருளியிலும், ஈருருளியிலும் அலைந்து திரிந்து மக்களைச் சந்தித்தவர். அவர் சென்ற இடமெல்லாம் அப்பிரதேசத்தின் சமூகப் பண்பாட்டு விழுமியங்கள், பொருளாதார வளங்கள், புவியியல் நிலமைகள், இராணுவக் கேந்திரத்தன்மை என்பவற்றினை மிக ஆழமாக்க் கிரகித்துக் கொண்டவர். இதனால் தான் பின்நாளில் அவரால் பத்திரிகைத்துறையில் ஜாம்பவானாக விளங்கமுடிந்தது.

1980களின் நடுப்பகுதியில் விடுதலைக்காகப் போராடிய விடுதலை அமைப்புக்கள் வழி தவறிப்போக விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்த முனைந்த விடுதலைப்புலிகள் இயக்கம். அவ்வாறு வழிதவறிப் போனவர்களை தமிழர் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தடைசெய்தனர். எஞ்சியவர்களை தம்முள் உள்வாங்கிக் கொண்டனர். இவ்வாறு தடைசெய்யப்பட்ட புளொட் அமைப்பில் யாழ்ப்பாணத்தின் முக்கியமான பொறுப்பாளர்களில் ஒருவராகவிருந்த டி.சிவராம். அதிகார பூர்வமாக புளொட் இயக்கம் தனது அரசியற் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் நிறுத்துவதாக பிரகடணப்படுத்தும் அறிவித்தலை ஈழநாடு பத்திரிகைமூலம் வழங்கிவிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் தனது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நண்பர்களின் உதவியோடு கொழும்பில் வசித்துவந்தாலும் புளொட் இயக்கத்திலிருந்து விலகாமலும், அதே நேரம் இலங்கையின் முக்கிய சிங்கள அரசியல் வாதிகளுடனும், கல்வி மான்களுடனும் தொடர்புகளைப் பேணி வந்ததார்.

1987 இல் நடந்த இந்திய - இலங்கை ஒப்பந்த காலத்தில் அப்போது புளொட்டின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் அவர்களால் புளொட் அமைப்பின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட போதும் புளொட் அமைப்பு மேற்கொண்ட மாலைதீவு ஆட்சிக்கவிட்பு, ஜே.வி.பி உடனான தொடர்பு, புளொட் அமைப்பின் கொள்கை விலகல், அமைப்பின் நிர்வாக ஒழுக்கச் சீர்கேடுகள் காரணமாக முற்றுமுழுதாக புளொட் அமைப்பிலிருந்து வெளியேறினார். உண்மையான ஒரு விடுதலை இயக்கம் அயல் நாடொன்றின் ஆட்சிக்கவிழ்பு சதி புரட்சிக்கு கூலிப்படையாகச் செல்லாது. அவ்வாறு செல்லின் அதை ஒரு விடுதலை இயக்கமாக்க் கொள்ளமுடியாது. என்பது அவருடைய கருத்து. செப்டெம்பர் 8 1988 இல் ஜோகரஞ்சினி என்ற பெண்ணை திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதோடு மானிட விடுதலை பற்றிய சிந்தனையோட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். இதிலிருந்து அவருடைய ஊடகப்பயணம் ஆரம்பமாயிற்று. இவருடைய பல்துறை அறிவியல் ஆற்றலைக்கண்டு வியந்த. இலங்கையின் மூத்த ஊடகவியலாளரான ரிச்சட். டி. சொய்சா. இவரை காமினி வீரக்கோனுடைய ஆங்கிலப்பத்திரிகையான ஐலண்ட பத்திரிகைக்கு கட்டுரைகளை எழுதும்படி வேண்ட தராக்கி என்ற பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். இவ்வாறு பத்திரிகைத் துறையுள் நுழைந்த சிவராம் குஞ்சி, சிவா, SR, தராக்கி, பொன்னம்பலம். ஞானசோதி எனப் பலபெயர்களில் ஊடகங்களில் வலம்வந்தார்.

இவருடைய அரசியல், இராணுவ ஆய்வுக்கட்டுரைகள் ஐலண்ட் பத்திரிகையிலும், வீரகேசரி வார இதழிலும், ஈழநாடு, ரைம்ஸ் போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்தன. இவருடைய தர்க்க ரீதியானதும். அறிவியல் சார்ந்த்தும், விஞ்ஞான பூர்வமுமான ஆய்வுக்கட்டுரைகள் இலங்கையில் புத்திஜீவிகளை மாத்திரமல்ல உலகின் ஊடகத்துறை சார்ந்தவர்களையும், கல்விமான்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இவ்வாறு பரிணமித்த சிவராம் என்ற பத்திரிகையாளன் 1990 களில் மனித உரிமை அமைப்புக்களினதும், அரசுசார்பற்ற நிறுவனங்களினதும் திட்டமிடல்களுக்கும், செயற்பாடுகளுக்கும் ஆலோசனை வழங்கும் அளவிற்று அறிவியல் ரீதியாக வளர்ச்சியடைந்திருந்தார். இவருடைய ஆங்கிலப்பத்திரிகை ஆய்வுக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து தேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு என்ற பெயரில் நூலுருவில் வெளியிடப்பட்டு வடகிழக்கெங்கும் ஆர்வமாகப் படிக்கப்பட்டது. இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொள்ளும் போதெல்லாம் அந்நாடுகளின் இராஜதந்திரிகளையும், ஊடகவியலாளர்களையும் சந்தித்து தமிழர் தரப்பு நியாயங்களை அறிவுபூர்வமாகவும், யதார்த்தபூர்வமாகவும் நிறுவி புதிய கருத்துருவாக்கத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியவர். இதன்மூலம் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளின் நம்பிக்கைக்குரியவரானார். இவருடைய கருத்துக்கள் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு வெறுமதி வாய்ந்தவை.

சிங்களத் தலைவர்கள் மத்தியிலும், சிங்களப் பத்திரிகைக் குழாம், சிங்களப் புத்தி ஜீவிகளுடனும் மிக நெருங்கிய தொடர்பைப் பேணியதோடு அவர்களுடன் அன்னியோன்னியமாகப் பழகி கருத்துப் போர்களில் ஈடுபட்டு அவர்கள் யாவர் மத்தியிலும் புரையோடிக்கிடந்த பேரினவாத உணர்வுகளை கண்டு அவர்களுடன் விவாதித்து புதிய கருத்துப் பரிமாறலை ஏற்படுத்தும் கருத்தியல்ப் போர் புரிந்தும் அவர்கள் கேளாச் செவியர்களாகவும், அறிவுக்குருடர்களாகவும் இருப்பதையும் மாறாத உளப்பாங்குடைய இன வெறியர்களாக வளர்க்கப்பட்ட பௌத்தமத பீடங்களின் போக்கினை கண்டு மனம் நொந்ததன் வெளிப்பாடுதான் போர்நிறுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழர் பிரச்சனையை சிங்கள மக்களுக்குப் புரிய வைக்க சிங்கள வானொலிச் சேவையை ஆரம்பித்தபோது 3.10 2004 இல் இதே வீரகேசரி வார வெளியீட்டில் "தமிழர் பிரச்சினையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயன்ற்ற செயல்" என்ற தலைப்பில் தனது 15 வருடகால தென்னிலங்கை கல்விமான்களோடும், கருத்தியலாளர்களோடும் கொண்டிருந்த உறவின் மூலம் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை சிங்கள தேசம் தாம் விரும்பியதை மட்டுமே கேட்கத் தயாராக இருக்கின்றது என்பதை மிகச்சலிப்புடனேயே வெளிப்படுத்தியிருந்தார்.

சிவராமின் அரசியற் பார்வையில் ஏற்பட்ட இந்த மாற்றம் பேரினவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது அவருக்குத் தொல்லைகள் அதிகரித்தன. கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இருந்தும் அஞ்சா நெஞ்சுடன் அவருடைய ஆக்கங்களில் தமிழர் அரசியலின் அடிநாதமாக தமிழ்த்தேசியம் இருக்கவேண்டும் என உறுதிபட எழுதுவார். தமிழ்மக்கள் தேசிய விழிப்புணர்வுடன் இருந்து தென்னிலங்கை அரசியற் காய்நகர்த்தல்களை விளங்கிக் கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறுவார். தமிழர் மத்தியில் பிரதேசவாத்த்தினை தூசுதட்டி எடுத்த கிழக்கு பிரிவிணை வாதிகளுக்கு எதிராக வீரகேசரி இதழிலேயே "கருணாவுக்கு ஒரு பகிரங்க மடல்" என்ற சிறந்த கடித்த்தின்மூலம் வரலாற்று ரீதியாக பிரதேசவாதம் பேசியவர்களின் வீழ்ச்சியும், அன்றைய அரசியல், புவியியல், இராணுவச் சூழலுக்கு கிழக்குப் பிராந்ந்தியம் எவ்வகையில் ஈடுகொடுக்க முடியும் என்றவகையிலான அவருடைய ஆழமான கருத்தியல் பிரதேச வாதத்திற்கு ஆப்புவைத்து சில வாரங்களிலேயே பிரதேசவாதிகளை சிங்களத்தின் கால்களில் தஞ்சமடைய வைத்தது. இது தமிழர் தாயகத்தின் கருத்தியலில் அவருடைய மேலாண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

டி.சிவராம் அவர்களின் ஆக்கங்களிலே என்றும் அழியாப்புகழைத் தேடித்தந்த ஆக்கங்களாக "இந்தியக் கடற்பாதுகாப்பு வலையத்தில் இலங்கை", "இந்து சமுத்திர வல்லாதிக்கப்போட்டியில் தமிழீழம்", "தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முயல்வது பயன்ற்ற செயல்" "கருணாவுக்கு ஓர் திறந்த மடல்" என்பவை அவருடைய பத்திரிகைத்துறை முதிர்ச்சியின் சிறந்த வெளிப்பாடுகள். சிங்களத்தின் அரசியல் நாடகங்களை அம்பலப்படுத்தி டி.சிவராம் பயன்படுத்தும் கடும் தொனி நிறைந்த சொல்லாடல்கள் இனவாத முகத்திரையை கிழித்தெறிவதுடன் தமிழ் மக்களிடம் விளிப்புணர்வை வேண்டிநிற்கும். தமிழரின் இனப்பிரச்சனைக்கு சிங்கள தேசம் ஒருபோதும் அரசியற்தீர்வை வழங்க முன்வர மாட்டாது என்பதை அவரது இறுதிக்காலத்தில் அழுத்திம் திருத்தமாக எழுதிவந்தார். அவருடைய தீர்க்கதரிசணக் கருத்துக்கள் தற்போதும் பொருந்தி நிற்கின்றன. முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் நடந்து ஒரு வருடமாகியும் தீர்வுத்திட்டமென்ற பொதி மாயமாக மறைந்திருக்க உலகிற்கு அரசியல் நாடக சித்துவிளையாட்டுத் தொடர்கிறது.

தற்போதைய அரசியற் சூழலில் விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவுக்குப் பின்பும் உருப்படியான அரசியற்தீர்வு யோசனைகள் கூட முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு தமிழர் தரப்பு அரசியற் தீர்வுத்திட்டம் கேட்பினும் அதனைச் செவிமடுக்க சிங்களதேசம் தயாரில்லை. இதனை ஆறு வருடங்களுக்கு முன்பே டி.சிவராமால் அனுமானிக்க முடிந்ததென்றால் அது அவருடைய ஆளுமை வீச்சின் கனதியை உலகுக்குப் புரியவைக்கும்.

இவ்வாறு பத்திரிகைத்துறையில் பல்வகைத்தன்மை கொண்டவராக விளங்கிய சிவராம் இலங்கையில் இனப்படுகொலை நிகழ்கின்றது என்பதனை வரலாற்று, அறிவியல், புள்ளிவிபரவியல்த் தரவுகளோடு வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த வேளை அவருக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்களையும் பொருட்கடுத்தாது அசாத்தியத் துணிவுடன் "இந்த மண்ணை விட்டு நான் எங்கே போவது. சாவு வருவதெனில் இந்த மண்ணிலேயே எனக்கு நிகழட்டும்" என்று உறுதிபடக்கூறி சாவின் விளிம்பில் நின்றுகொண்டும் தனது பேனாவினால் புதிய சரித்திரமொன்றை படைத்துக் கொண்டிந்த அந்த மானிட நேயவாதியை பேரினவாத்த்தின் கொலைக்கரங்களும், தமிழினத்தின் கோடாரிக்காம்புகளும் சேர்ந்து கோழைத்தனமாக கடத்திச் சென்று கொடூரமாகக் கொன்று அவரது உடலை தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க ஆணையிடும் அந்த அதிகாரச்சின்னமான பாராளுமன்றத்தின் அருகே போட்டுவிட்டுச் சென்றனர்.

தமிழரின் விடுதலைப்போராட்ட கருத்தியல் வரலாற்றில் சிவராமுக்கு தனியிடமுண்டு. அவரின் மகத்தான ஊடகப்பணியைக் கௌரவித்து தமிழர் தேசம் மாமனிதராக போற்றுகின்றது. இவ்வாறே அமெரிக்காவின் கிளாக் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி யூட் பெர்ணாண்டோ அவர்கள் "சிவராமின் இழப்பு மனித நேய அமைப்புக்களுக்கும், கல்விசார் துறையினருக்கும், ஊடகத்துறையினருக்கும், பதிலீடு செய்யமுடியாத இழப்பு" எனக்குறிப்பிட்டதிலிருந்து அந்த மாமனிதனின் கருத்தியல் பரிமானத்தை உலகமே வியந்து நின்றது எனலாம்.

சிவராம் எனப்படுகின்ற அந்த ஊடகப் போராளி கொல்லப்பட்டு ஐந்து வருடங்கள் கழிந்தும் அவருடைய ஆளுமை உலகின் பல்வேறு தரப்பினரது மனப்பதிவிலும் அழியாத தாக்கத்தை ஏற்படுத்திற்று இதன் வெளிப்பாடுதான் லண்டனில் எதிர்வரும் 29.04.2010 வியாழக்கிழமை லண்டன் கொல்பேணில் அமைந்துள்ள கொன்வே மண்டபத்தில் (Conway Hall, 25 Red Lion Square, Holborn London WC1R 4RL)),மாலை 6.30 மணியளவில் சிவராம் ஞாபகார்த்த நினைவுக் கூட்டமும் அவருடைய ஊடகத்துறை பணிசார்ந்த புத்தவெளியீடும் இடம் பெறவிருக்கின்றது. இதில் தெற்குக் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் விக்டேகர் Professor. Mark Whitaker, அவர்கள் கலந்துகொண்டு பிரதம உரையை நிகழ்தவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மனித உரிமைகள் அமைப்பின் சட்டத்தரணி, லீ கரூ கியூசி, மற்றும் பிபிசி தமிழின் முன்னாள் அறிவிப்பாளர் ஆனந்தி, தமிழ் காடியன் பத்திரிகையின் ஆசிரியர் வினோ கணபதிப்பிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

தி.திபாகரன்

கற்குவியலாக காட்சியளிக்கும் தேசியத்தலைவரின் இல்லம்: சிவாஜிலிங்கம் ஆதங்கம்.

தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த சிங்கள மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாக விளங்கிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வல்வெட்டித்துறை பிறந்த இல்லம் தற்போது ஒரு கற்குவியலாகவே காட்சியளிக்கின்றது. என முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கே.சிவாஜிலிங்கம் கனடா உதயன் இதழுக்கு தெரிவித்துள்ளதாவது:

தலைவர் பிரபாகரன் அவர்களின் வல்வெட்டித்துறை பிறந்த இல்லம் சில மாதங்களுக்கு முன்னர் தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த சிங்கள மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாகவும் உல்லாசப் பயணத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒரு இடமாகவும் அமைந்திருந்தது.

ஆனால் தற்போது அந்த இடம் ஒரு கற்குவியலாகவே காட்சியளிக்கின்றது. தற்போது என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. இவ்வாறு முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது தனது பிறந்த பூமியான வல்வெட்டித்துறையில் வாழ்ந்து வருபவருமான திரு சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரன் அவரது தாயார் பார்வதி அம்மாள் பற்றி கேட்டபோது இலங்கையில் வல்வெட்டித்துறையில் பார்வதி அம்மாளை கவனித்து அவரை பராமரிப்பதற்கு பலர் தயாராக இருந்தாலும் வெளிநாட்டில் உள்ள அவரது பிள்ளைகளும் அதை விரும்புகின்றார்கள் என்றும், எனினும் கனடா போன்ற நாடுகள் அனுமதிக்காத வேளையில் இது சாத்தியமாக வாய்ப்பு இல்லை என்றார் சிவாஜிலிங்கம்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த வீடு பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அந்த புனிதமான வீடு இராணுவத்தினரால் உடைக்கப்படுவது குறித்து தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் வடபிராந்திய இராணுவ உயர் அதிகாரிக்கும் உடனடியாக அறிவித்ததாகவும் ஆனாலும் அவர்களின் அசமந்தப் போக்கு அந்த நினைவுச் சின்னத்தை நாசமாக்கி தற்போது அந்த இடம் ஒரு கற்குவியலாகவே காணப்படுவதாகவும் திரு சிவாஜிலிங்கம் கவலையுடன் தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பெண் புரோக்கரின் தொலைபேசி ஒட்டு கேட்பு:- ராசாவுக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கின?

தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் 2ஜி ஸ்பெட்க்ரம் விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதாரத்தை சிபிஐ திரட்டியுள்ளதாகத் தெரிகிறது. பல மக்கள் தொடர்பு ஏஜென்சிகள் நடத்தி வரும் நிரா ரேடியா என்ற பெண்ணின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதன் மூலம் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதரங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வைஷ்ணவி கார்பரேட் கன்சல்டன்ட்ஸ், நோயெசிஸ் ஸ்ட்ராடிஜிக் கன்சல்டிங் சர்வீஸஸ், விட்காம் கன்சல்டிங், நியூகாம் கன்சல்டிங் என பல மக்கள் தொடர்பு ஏஜென்சிகளை நடத்தி வரும் இந்தப் பெண், மாபெரும் நிறுவனங்களுக்கு புரோக்கராக செயல்பட்டு அரசு, அமைச்சர்களுடன் பல டீல்களை முடித்துக் கொடுத்து வருபவர் என்று தெரிகிறது.

இதற்காக தனது கன்சல்டிங் நிறுவனங்களில் ஓய்வு பெற்ற மூத்த மத்திய அரசு அதிகாரிகளைத் தான் பெருமாபாலும் பணியில் அமர்த்தியுள்ளார். அவர்கள் மூலம் அரசு திட்டங்களின் நெளிவு சுளிவுகளை அறிந்து, காய்களை நகர்த்தி காரியத்தை சாதிப்பவர் என்கிறார்கள்.

என்ஆர்ஐயான இந்த ரேடியா கடந்த 2000ம் ஆண்டில் தான் இந்தியாவுக்குத் திரும்பினார். வந்தவுடன் சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களுக்கு தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். ராசாவால் 2ஜி தொலைபேசி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட 9 நிறுவனங்களில் 4 நிறுவனங்களுடன் ரேடியாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விவரங்கள் தெரியவந்ததையடுத்து ரேடியாவின் தொலைபேசியை சிபிஐ சில காலமாக ஒட்டு கேட்டு வந்தது. இதன்மூலம் அவரது தில்லாலங்கடி வேலைகள் குறித்த விவரங்களும் ஆதாரங்களும் சிபிஐக்கு சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. ரேடியா விவகாரத்தில் வருமான வரித்துறையின் உதவியையும் சிபிஐ பெற்றுள்ளது. ரேடியாவின் 9 தொலைபேசிகளை வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 120 நாட்கள் ஒட்டு கேட்டுள்ளது.

இதையடுத்து 2009ம் ஆண்டு மே 11ம் தேதி முதல் 180 நாட்கள் இந்த தொலைபேசிகளை வருமான வரித்துறையினர் ஒட்டு கேட்டுள்ளனர். அதே போல மேலும் பல தொழிலதிபர்கள, அரசியல்வாதிகள், விளம்பர நிறுவன அதிகாரிகளின் தொலைபேசிகளும் சிபிஐ, வருமான வரித்துறையால் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இதில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறி்த்து ஏராளமான ஆதாரங்கள் சி்க்கியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் கிடைத்த ஏராளமான பணம் ரியல் எஸ்டேட், நிறுவனங்கள், மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளி்ல் முதலீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களும் இந்த ஒட்டு கேட்பு மூலம் வருமான வரித்துறைக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் மிலாப் ஜெயினுக்கு சிபிஐ டிஐஜி வினீத் அகர்வால் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஒட்டுக் கேட்பு மூலம் கிடைத்த முழுத் தகவல்களையும் வழங்குமாறு கோரியுள்ளார்.

இதையடுத்து ஜெயினின் உத்தரவுப்படி, நவம்பர் 20ம் தேதி வருமான வரித்துறையின் இணை இயக்குனர் அஷிஷ் அப்ரோல், சிபிஐ டைரக்டர் ஜெனரலுக்கு அனுப்பிய பதிலில், நிரா ரேடியாவுக்கும் அமைச்சர் ராசா உள்ளிட்டோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் முழு விவரத்தையும் விளக்கியுள்ளார். அதில், நிரா ரேடியா தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசும்போது, தான் எப்படி பல நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வாங்கித் தந்தேன் என்பதை விளக்கியுள்ளார்.

மேலும் அமைச்சர் ராசாவுடனும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது அவரது தனிச் செயலாளரராக இருந்த ஆர்.கே.சந்தோலியாவுடனும் பல முறை தொலைபேசியில் பேசியுள்ளார். இதையடுத்து சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறையின் ஆலோசகராக பதவி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் வாங்க பெருமளவில் பணத்தை தயார் செய்து தந்ததாகவும் ரேடியா ஒருவரிடம் கூறியதாகவும் வருமான வரித்துறை சிபிஐயிடம் தெரிவித்துள்ளது. உள்துறைச் செயலாளரின் அனுமதியோடு தான் இந்த தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டன என்பதையும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

ஆனாலும் ரேடியாவை விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசின் மிக மூத்த அதிகாரிகள் அனுமதி தரவில்லை. மேலும் தன்னை சிபிஐ கண்காணிப்பதை தனது தொடர்புகள் மூலம் உணர்ந்துவிட்ட நிரா ரேடியா, கடந்த பிப்ரவரி மாதம் ரகசியமாக லண்டனுக்குச் சென்றுவிட்டார். கைதாவோம் என்ற அச்சத்தில் இதுவரை நாடு திரும்பவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டுத் தீர்மானம் தோற்றது:- மத்திய அரசுக்கு ஆபத்து நீங்கியது; ஆதரவு 201 எதிர்ப்பு 289.

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த 2 வெட்டுத் தீர்மானங்களும் தோல்வியடைந்தன. இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்துக்கு ஆதரவாக 201 வாக்குகளும், எதிராக 289 வாக்குகளும் பதிவாகின. 88 வாக்குகள் வித்தியாசத்தில் வெட்டுத் தீர்மானம் முறியடிக்கப்பட்டது. இதில் அதிமுக, வெட்டுத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

இதுபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்துக்கு ஆதரவாக 162 வாக்குகளும் எதிராக 246 வாக்குகளும் பதிவாகின. இந்தத் தீர்மானம் 84 வாக்குகள் வித்தியாசத்தில் முறியடிக்கப்பட்டது.

மத்திய அரசை ஆதரித்தும் வெட்டுத் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களிக்கப் போவதாக வாக்கெடுப்புக்கு முன்பே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துவிட்டதால் மத்திய அரசு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. மேலும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாகவே முலாயம் தலைமையிலான சமாஜவாதி, லாலு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டன. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான ஆபத்து முற்றிலும் நீங்கிவிட்டது.

மதவாத சக்திகள் மீண்டும் தலைதூக்க அனுமதிக்க கூடாது என்பதற்காகவே வெட்டுத் தீர்மான வாக்கெடுப்பில் அரசை ஆதரிக்க முடிவு எடுத்ததாக மாயாவதி கூறினார். அதுபோல் சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளும் இதே காரணத்தைத்தான் கூறியுள்ளன. வகுப்பு வாத கட்சியுடன் கைகோர்க்க நாங்கள் விரும்பவில்லை என்று வாக்கெடுப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங், லாலு பிரசாத் ஆகியோர் தெரிவித்தனர். அரசுக்கு எதிராக வாக்களிக்காமல் இருக்க காங்கிரஸ�டன் என்ன ஒப்பந்தம் ஏற்பட்டது என்று கேட்டபோது, நாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. ஐபிஎல் விவகாரத்தில் காங்கிரஸ�ம் பாஜகவும்தான் ஒப்பந்தம் செய்துள்ளன என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

சிபிஐ அமைப்பை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் பணிய வைப்பதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு எதிராக சிபிஐ விசாரணை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதாக பாஜகவினர் மறைமுகமாக குற்றம்சாட்டி உள்ளனர்.

பாஜக மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்களின் மொத்த பலம் 222. ஆனால் அவர்களுக்கு கிடைத்த வாக்குகளோ 201. வெட்டுத் தீர்மானத்தைக் கொண்டு வந்து அவர்கள் என்ன சாதித்துவிட்டார்கள் எனத் தெரியவில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே. பன்சால் கூறினார்.

வாக்கெடுப்பின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியும் அவையில் இருந்தார். வாக்கெடுப்பு 90 நிமிஷங்கள் நடைபெற்றன. விவாதம் இல்லாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட மானிய கோரிக்கைகள் மீதும் வெட்டுத் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

வெட்டுத் தீர்மானம் தோல்வியடைந்த பின்னர் துறை வாரியாக மானிய கோரிக்கைகளுக்கான செலவு அனுமதி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 60 அமைச்சகங்களுக்கான மானிய கோரிக்கைகளுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. நிதி மசோதா மீது புதன்கிழமை பொது விவாதம் நடைபெறும். வியாழக்கிழமை நிதி மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறும்.

இமாச்சலில் பதுங்கியபோது 174 தடவை பேசினார் ; நித்யானந்தா-ரஞ்சிதா செல்போன் உரையாடல்:-போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்.

நித்யானந்தாவை தொடர்ந்து நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கர்நாடக சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதற்கான முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக நித்யானந்தா கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் இருக்கிறார். போலீசார் அவரிடம் கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்போது ஆசிரமத்துக்கு வரும் பெண்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டது அதற்கான பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது, வெளிநாட்டில் நன்கொடை திரட்டியது, சொத்துக்கள் வாங்கி குவித்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து விசாரணை நடத்தினார் கள்.

இதற்கிடையே நித்யானந்தா சம்பந்தப்பட்ட ஆபாச காட்சிகள் வெளியாக முக்கிய காரணமாக இருந்த அவரது முன்னாள் கார் டிரைவர் லெனின் கருப்பனை பெங்களூருக்கு வரவழைத்து போலீசார் வாக்குமூலத்தை பெற்று இருக்கிறார்கள்.

அடுத்ததாக நித்யானந்தாவுடன் ஆபாச காட்சியில் இருந்ததாக கூறப்படும் நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கர்நாடக சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆபாச காட்சிகள் வெளியான பிறகு நடிகை ரஞ்சிதாவின் சென்னை வீடு பூட்டப்பட்ட நிலையில் இருக்கிறது.

இதையடுத்து கர்நாடக போலீசார் அவரை தேடிப்பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால் பல முக்கிய தகவல்கள் கிடைக் கும் என்று போலீசார் எதிர் பார்க்கிறார்கள். ரஞ்சிதாவுக்கு ஆசிரமத்தில் அதிக செல்வாக்கு இருந்துள்ளது. நித்யானந்தா அறைக்கு எப்போது வேண்டுமானாலும் அவர் சென்று வர விசேஷ அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பண விவகாரங்கள் மற்றும் ஆசிரமத்தில் மர்மமாக நடந்த அத்தனை விஷயங்களும் ரஞ்சிதாவுக்கு முழுமையாக தெரியுமாம். நித்யானந்தாவுக்கு எதிராக எதுவும் சொல்லவேண்டாம் என்று ஆசிரமத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் அதற்காக பேரம் பேசப்பட்டு இருக்கலாம் என்றும் கர்நாடக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால்தான் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

ரஞ்சிதாவை பிடித்து விசாரித்தால் நித்யானந்தா பற்றி மேலும் பல திடுக் கிடும் உண்மைகள் வெளி வரும் என்று போலீசார் நம்புகின்றனர். நித்யானந்தா உண்மைகளை மறுத்தால் அவரைப் பற்றிய மர்மங் களை ரஞ்சிதா மூலம் வெளிக் கொண்டு வருவோம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இமாசலப்பிரதேசத்தில் நித்யானந்தா தங்கி இருந்த போது ரஞ்சிதாவுடன் 175 தடவை செல்போனில் பேசியுள்ளார் என்றும் அவர் கூறினார். 7 செல் போன்களில் இருந்து மாறி மாறி பேசினாராம். ரஞ்சிதா வை தேடும் வேட்டை நடக்கிறது. அவர் பதுங்கி உள்ள இடத்தை நெருங்கி விட்டோம். ஓரிரு தினங்களில் பிடித்து விடுவோம் என்று போலீஸ் அதிகாரி கூறனார். தனிப்படை அமைத்து அவரை தேடுகிறார்கள்.

பிரபாகரன் தாயார் விவகாரம்: பதில் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் சிகிச்சை பெற வந்த விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தர்மராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வழக்கறிஞர் ஜெயசிங் ஆஜராகி வாதாடியதாவது:

இந்த வழக்கில் மத்திய அரசையும், மாநில அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்கள். பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. வெளிநாட்டவர்கள் வருகையும், அனுமதி வழங்குவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது என்று கூறினார்.

இதை நீதிபதிகள் ஏற்று கொண்டு வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.

பின்னர் நடந்த வாதத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி நாளை பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tuesday, April 27, 2010

விடுதலைப் புலிகளின் கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கு துடிக்கும் பலர் பல நாடுகளிலும் இன்னும் செயற்படுகின்றனர்

இலங்கையில் ஒழிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கு துடிக்கும் பலர் பல நாடுகளிலும் இன்னும் செயற்படுவதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரமஜயந்த குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய விருது வழங்கும் விழாவை நடத்தும் அந்த அமைப்பின் தலைவரும் நடிகருமான அமிதாப் பச்சானின் வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் இதன் ஒரு கட்டமாகவே பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் மகாவலி கேந்திர நிலையித்தில் இன்று மாலை இடம்பெறற் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பெரிய நபர்கள் அல்ல எனவும், இவ்வாறான ஆர்ப்பாட்டங்களினால் இலங்கையில் நடைபெறவுள்ள அந்த நிகழ்விற்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் கூறினார்.

ஆர்ப்பாடம், போராட்டங்களை யாரும் மேற்கொள்ளலாம் என குறிப்பிடும் அவர், எமக்கும் பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முடியும் எனவும் கூறினார்.

இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி, விடுதலைப் புலிகளின் கனவுகளை நனவாக்கத் துடிக்கும் பலர் இன்னும் செயற்படுவதை உணரமுடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தம்மை அர்ப்பணித்தோரது குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலை!

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் நாளாந்த உணவிற்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர் என மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தலைவர்களில் பெருமளவானோர் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான குடும்பத்தலைவர்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர்.

இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

கணவன்மார்கள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான கணவன்மார்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாமலும், குழந்தைகளுக்கு பால்மா, உணவுகளுக்காக வீடுவீடாகச் சென்று கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பேரவலம் நிலவிவருகின்றது.

தமக்கு உதவி வழங்குமாறு கிழக்கு மாகாண சபையினர், அரச அதிபர், பிரதேச செயலர்கள் உட்பட்ட அதிகாரத்தில் உள்ள அனைவரிடமும் தொடர்பு கொண்ட போதிலும் தமக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என சம்பத்தில் பாதிக்கப்படுகின்ற பெண்கள் கண்ணீர்விட்டு கதறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பங்களே வன்னியில் வாழ்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறிப்பிட்ட குடும்பங்களுக்காவது யாராவது புலம்பெயர் அமைப்புக்கள் உதவ முன்வருவார்களா?

நெதர்லாந்து நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 7 பேர் கைது - பி.பி.சி

நெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட கவனமான மற்றும் விரிவான புலனாய்வுகளை அடுத்து, அந்நாட்டின் தேசிய குற்றப் புலனாய்வு சேவைகள் அமைப்பினர் சந்தேகத்துக்குரிய ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.

இது தவிர 16 வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் போது கணினிகள், காகித ஆவணங்கள், தொலைபேசிகள், புகைப்படங்கள், டிவிடிக்கள் ஆகியவை சோதனைக்கு உள்ளாயின.

மேலும் இந்த நடவடிக்கையின் போது 40,000 யூரோக்கள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.

நெதர்லாந்து நாட்டின் தேசிய குற்றப் புலானாய்வு போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் விடுதலைப் புலிகளுக்காக நிதிகள் சேகரிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2002 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி, அப்படியான அமைப்புகளுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதரவு வழங்குவது சட்டப்படி பொருளாதாரக் குற்றமாக கருதப்படும்.

மேலும் இந்த விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் ஆராயப்படுகின்றது.

Monday, April 26, 2010

கருணாநிதிக்கு கருப்புக் கொடி‐ ஆறு பேர் கைது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் பதட்டம்

இந்தியாவின் சட்ட மாமேதை அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால் அந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து இன்று கலைஞர் கருணாநிதி உயர்நீதிமன்ற விழாவில் கலந்து கொண்டார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் கருணாநிதி பேசத் துவங்கியதும் சில வழக்கறிஞர்கள் கருப்புக் கொடியை எடுத்துக் காட்டி எதிர் கோஷங்கள் இட்டனர். ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி போராடிய வழக்கறிஞர்கள் போலீசால் தாக்கப்பட்ட நிகழ்வில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து இந்த கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடந்தது.

இந்நிலையில் திமுக தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டதோடு. அதைப் படம் பிடித்த ஜெயா டி.வி ,லைவ் இந்தியா, என்.டி.டி.வி தொலைக்காட்சி போன்றவற்றின் நிருபர்களை தாக்கியதோடு அவர்களின் ஒளிப்பட கேமிராக்களும் உடைத்தெறியப்பட்டன. கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டியதாக ஆறு வழக்கறிஞர்களைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

ஆனால் பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரையோ ஊடக நிருபர்கள் கொடுத்த புகாரையோ இது வரை போலீஸ் பெற்றுக் கொள்ளவும் இல்லை. யார் மீதும் வழக்குப் பதிவும் செய்யவில்லை. இந்நிலைக்கு தமிழகத்தின் பல் வேறு ஊடக சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

புலிகள் அமைப்பு இயங்குகிறது, முன்னிலும் பலமாக இயங்குகிறது, அடுத்த தாக்குதலை அவர்கள் ஆரம்பித்தால் அது பலமானதாக இருக்கும் என்பது ராஜபக்ஷேவுக்குத் தெரியும்!”

மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன! நெஞ்சில் கொஞ்சம் இரக்கத்தையும் ஈரத்தையும் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரையும் ரத்தக் கண்ணீர் வடிக்கவைத்த ஈழத்துக் கொடூரங்கள் அரங்கேறி ஓராண்டு முடியப்போகிறது. இறந்து மண்ணுக்குப் போனவர் எண்ணிக்கைகூட முழுமையாக இன்னமும் எடுக்கப்படவில்லை. மனரீதியாக இறந்துபோய் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போர் நிலை குறித்தும் முழுமையாக அறிய முடியவில்லை.

ஆனால், அவர்கள் இரண்டு தேர்தலை நடத்தி முடித்துவிட்டார்கள். கோமா நிலையில் கிடக்கும் ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் குறித்து அறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்தித்தோம்…

”ஈழத்துக் கொடூரங்கள் நடந்து முடிந்து ஓராண்டு ஆகப்போகிறது. என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டுஉள்ளன?”

”கொடூரங்கள் நடந்து முடியவில்லை. இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஈழத் தமிழர் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஏமாற்றமே இன்னமும் தொடர்கிறது. மேலும் மேலும் துன்பம் அதிகமாகி வருகிறது. முள்வேலி முகாமில் இருந்த மக்களை உலக நிர்பந்தத்துக்குப் பயந்து விடுவிப்பதாக ராஜபக்ஷே கூறினார். முழுமையாக விடுவிக்கவில்லை. ஒரு பகுதி மக்களையே விடுவித்துள்ளார். விடுவிக்கப்பட்டவர்களும் தங்களது ஊருக்குப் போனால் அவர்கள் வீடுகள் எல்லாம் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. எனவே, இருப்பதற்கு இடம் இல்லாமல் பள்ளி, கோயில்களில் அடைக்கலம் புகுந்தார்கள். அவர்கள் தங்களது சாப்பாட்டுக்காக விவசாயம் பார்க்கவோ மீன் பிடிக்கப் போகவோ சிங்கள ராணுவம் அனுமதிக்க மறுக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், ‘வன்னிப் பகுதியில் ஏராளமான ராணுவ முகாம்கள் இருப்பதால் தமிழ்ப் பெண்கள் வெளியே நடமாட அஞ்சுவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

முகாம்களில் இருப்பவர் களுக்கும் அளிக்கப்பட்டு வந்த உதவிகள் அரைகுறையாகவே கிடைக்கின்றன. சுதந்திரமாக நடமாடலாம் என்று இவர் களுக்கு சொல்லப்பட்டு இருந் தாலும், எங்கு போவது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறான் தமிழன். முகாம்களில் இல்லாத தமிழர்கள், சிங்கள ராணுவம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற குழுக்களால் அதிகமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இதைவிடக் கொடுமையான செய்தி என்னவென்றால், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காகக் கொடுத்த 1,000 கோடி ரூபாய் பணத்தில் கட்டப்பட்ட வீடுகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகிறார்கள். அவர்களுக்காக புத்தக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன. சிங்களப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்க் குழந்தைகள் சிங்களம் படித் தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. தமிழ்ப் பெயர் தாங்கிய ஊரின் பெயர் கள் சிங்களமாக மாற்றப் படுகின்றன. அதாவது, தமிழ்ப் பகுதிகள் என்று இலங்கையில் எதையும் சுட்டிக் காட்டிவிடக் கூடாது என்பதற்கான வேலைகள்தான் இந்த ஓராண்டு காலத்தில் நடந்து முடிந்திருக்கின்றன!”

”ஜனாதிபதி தேர்தலில் வென்றது மாதிரியே நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்ஷே வென்றிருக்கிறார். இந்தத் தொடர் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

”தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 70 சதவிகிதத் தமிழர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள். அதாவது, சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் எமது நலன்களைத் தேட நாங்கள் விரும்பவில்லை என்பதைத்தான் இந்தப் புறக்கணிப்பின் மூலம் தமிழர்கள் உலகத்துக்கு அறிவித்திருக்கிறார்கள். பொதுவாகவே, இலங்கையில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் 75 சதவிகித வாக்குகள் பதிவாகும். ஆனால், வரலாற்றில் முதன்முறையாக 55 சதவிகித வாக்குகள்தான் பதிவாகி உள்ளன. தமிழ் மக்கள் மட்டுமல்ல; சிங்கள மக்களும் இந்தக் கேலிக்கூத்தான நடைமுறைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன!”

”ஃபொன்சேகா, தனது தொகுதியில் வெற்றிபெற்றுள்ளாரே?”

”ராஜபக்ஷே, ஃபொன்சேகா மோதலின் விளைவாக சிங்கள மக்கள் பிளவுபட்டு உள்ளார்களே தவிர, தமிழர்களுக்கு இதனால் எந்த ஆதாயமும் கிடைக்கப்போவது இல்லை. கடந்த ஆண்டின் இதே ஏப்ரல் மாதங்களில் நடந்த கொடுமைகளுக்கு அவர்கள் இருவரும்தானே காரணம். இவர்களின் மோதல் என்பது தேர்தல் மோதலாக மட்டும் நின்றுவிடாது. ராணுவத்துக்கும் மோதல் வெடிக்கும் அபாயம் இருக் கிறது. ஃபொன்சேகாவுக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகள் பதவியில் இருந்து விலக்கப்பட்டு உள்ளனர். இது ராணுவத்தினர் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஃபொன்சேகா ஒரு உறுப்பினராக வென்றிருந்தாலும் அவரை நாடாளு மன்றத்துக்குள் வர அனுமதிக்க மாட்டார்கள். 1980-களின் முதற் பகுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த டெலோ தலைவர் குட்டிமணி, சிறையில் இருந்தபோதே வட்டுக்கோட்டை தொகுதி உறுப்பி னராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், அவரை நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதிக்காமல் கொலை செய்துவிட்டார்கள். இந்தக் கதி ஃபொன்சேகாவுக்கும் ஏற்படலாம்!”

”இதையெல்லாம் உலக நாடுகள் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருக்கக் காரணம்?”

”வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை, சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது என்பதுதான் உண்மை. போர்க் குற்றவாளியாக ராஜபக்ஷேவை மேற்கு நாடுகளும் ஐ.நா-வும் குற்றம் சாட்டி வருகின்றன. அதில் இருந்து தப்புவதற்கு அவர் பெருமுயற்சி செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையின் இறுதியில் வழங்கப் பட்ட தீர்ப்பில் ‘ராஜபக்ஷே போர்க் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டியவர்’ என்று தெளிவாகத் தீர்ப்பளித்து உள்ளது. இந்தத் தீர்ப்புக்கு பிறகு, பிரிட்டிஷ் அரசாங் கம், ‘நாங்கள் இலங்கைக்கு இதுவரை ஆயுதம் வழங்கியதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இனி வழங்க மாட்டோம்’ என்று மன்னிப்பு கேட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் ஆயத்த ஆடைகளுக்கு இதுவரை கிடைத்து வந்த வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்துள்ளது. உலக நாடுகள் இந்தக் கொடூரத்தை உணர்ந்துள்ளன. ஆனால், இந்தியாதான் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் ராணுவரீதியாகவும் உதவி செய்துவருகிறது. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் திரிகோணமலைக்குச் சென்று சிங்கள கடற்படைக்கு பயிற்சி அளித்து வருகிறது. தமிழ் மீனவர்களைக் காப்பாற்ற வக்கற்ற இந்தியக் கடற்படைக்கு ஏன் இந்த வீண் வேலை? இந்திய அரசும் கருணாநிதி அனுப்பிய தூதுக் குழுவும் தவிர, உணர வேண்டியவர்கள் அனைவரும் ஈழத்துக் கொடுமையை உணர ஆரம்பித்துஇருக்கிறார்கள்!”

”சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இந்த ஓராண்டு காலத்தில் அதிகமாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

”இலங்கையில் சீனா அதிகமாகக் காலூன்றுவது இந்துமாக் கடல் மார்க்கம் அவர்களது கட்டுப்பாட்டில் போவதற்குத்தான் வழிவகுக்கும். இதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. அவர்களைவிட இது இந்தியாவுக்குத்தான் பெரும் ஆபத்தாக முடியும். ஏற்கெனவே, இந்தியா வைச் சுற்றி உள்ள நேபாளம், மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சீனா பலமாக வேரூன்றிவிட்டது. பாகிஸ்தானும் நெருங்கிய கூட்டாளி ஆகி விட்டது. எஞ்சியிருந்த இலங்கை யும் சீனாவின் பக்கம் சாய்ந்து விட்டது. இந்தியாவைச் சுற்றி சீனா உருவாக்கி வரும் பேராபத்தை டெல்லியில் உள்ளவர்கள் உணரவில்லை. ‘சீனாவைவிட நான் அதிகமாக உதவிகள் செய்கிறேன்’ என்று இந்தியா கையாளும் தந்திரம் தற்கொலைக்குச் சமம். இந்தியாவைத் தனது நேசநாடாக ராஜபக்ஷே எப்போ தும் நினைக்க மாட்டார். அதை டெல்லி எவ்வளவு விரைவாக உணர்கிறதோ அது நம்முடைய நாட்டுக்கு நல்லது!”

”விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று இயங்குகிறதா?”

”ஈழத் தமிழர் பிரச்னை இன்று உலகளாவிய பிரச்னையாக இருப்பதற்கு பிரபாகரனும் விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்துள்ள தியாகம்தான் காரணம். 30 ஆண்டுகாலம் புலி கள் நடத்திய போராட்டத்தால் தான் தமிழர்கள் பாதுகாக்கப் பட்டனர். 2 லட்சம் தமிழர்கள் உயிர் இழந்தும், 45 ஆயிரம் புலிகள் வீர மரணத்தைத் தழுவியும், 10 லட்சம் தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ முடியாமல் அகதிகளாக வெளி ஏறியும், 5 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே எல்லா வற்றையும் இழந்து தவித்த ஈழத்து சோகம் சொல்லி மாளாது. ஆனாலும், தங்கள் துன்பத்துக்குத் தமிழீழமே தீர்வு என்பதைத் தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இப்போது நடந்திருப்பது தற்காலிகப் பின்னடைவு என்றுதான் கருதுகிறார்களே தவிர, எல்லாம் முடிந்துவிட்டது என்று எவரும் நினைக்கவில்லை. புலிகளை அழித்துவிட்டோம் என்று கொக்கரிக்கிற ராஜபக்ஷே, கூடுத லாக ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்கிறார். ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறார். புலிகள் அமைப்பு இயங்குகிறது, முன்னிலும் பலமாக இயங்குகிறது, அடுத்த தாக்குதலை அவர்கள் ஆரம்பித்தால் அது பலமானதாக இருக்கும் என்பது ராஜபக்ஷேவுக்குத் தெரியும்!”

”ஏற்கெனவே கேட்கப்பட்டதுதான்… பிரபாகரன் இருக்கிறார் என்று இன்னமும் எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

”பிரபாகரனின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கிடைத்து வந்த தகவலை வைத்துதான் நான் உறுதியாகக் கூறுகிறேன்.

பிரபாகரன் உள்பட முக்கியத் தளபதிகளை ஒழித்துவிட்டதாக ராஜபக்ஷே சொல்வதை சிங்கள மக்களே நம்பவில்லை. இன்னமும் அவர்களுக்கு அச்சம் இருக்கிறது. பிரபாகரன் தலைமையில் அந்தப் போராட்டம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம். எப்போது எந்தக் காலகட்டத்தில் என்பதை பிரபாகரன் மட்டுமே முடிவு செய்ய முடியும். உற்ற தருணம் நோக்கி அவர் காத்திருக்கிறார். அந்தக் காத்திருப்பு வீண் போகாது!”

சலனமின்றிச் சொல்லி முடிக்கிறார் பழ.நெடுமாறன்!

– ஜீனியர் விகடன்

சிறையிலுள்ள மூத்த விடுதலைப்புலி உறுப்பினர்களை குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தல்:

விரைவில் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று கூறி தம்மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்களை ஏற்றுக்கொள்ளுமாறு சிறையிலுள்ள நூற்றுக்கணக்கான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வற்புறுத்தப்படுவதாக கொழும்பிலுள்ள நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச அரசாங்கம் நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் ஆலோசனைப்படியே இந்த நகர்வு மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது. இந்திய அல்லது இலங்கையினால் ஆதரவளிக்கப்படும் சட்டவாளர்களால் தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுவதைத் தடுத்து அவர்களுக்கு சட்டரீதியான ஆதரவினை வழங்குவதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு புலம்பெயர்ந்த தமிழ் மக்களை தொடர்புடைய நீதித்துறை வட்டாரங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகள்மீது குற்றஞ் சுமத்தப்பட்டு சிறிலங்கா இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கும்படி சிறிலங்கா அதிகாரிகள் சட்டத்துறை நிறுவனங்களையும் அத்துறை சார் பணியாளர்களையும் அணுகிக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

இவ்வாறு சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகளுக்கு அரசியல் செல்வாக்கற்ற சுதந்திரமாகச் செயற்படும் முறையான சட்டத்தரணிகளின் ஆதரவு கிடைக்கவேண்டும். அவ்வாறு கிடைக்கும்பட்சத்தில் எந்தவிதமான வற்புறுத்தல்களும் அச்சுறுத்தல்களுமற்ற சூழ்நிலையை அவர்களுக்குத் தோற்றுவிக்கும்.

அதேவேளையில், 2009 ஓகஸ்ட் முதல் 2010 மார்ச் வரையான காலப்பகுதியில் பல முக்கியமான விடுதலைப்புலி உறுப்பினர்களைக் கைது செய்து அவர்களுள் பலரை சிறிலங்காவுக்கு நாடு கடத்தியதை முதல் தடவையாக கடந்த வெள்ளியன்று மலேசியா ஒப்புக்கொண்டுள்ளது.

வன்னியின் கடைசி மாதம் 23,24,25 ஏப்ரல் 2009 முள்ளிவாய்க்காலில்

பாதுகாப்பு வலையத்தில் தொடர் விமான தாக்குதல்

23 ஆம் திகதி காலை தொடக்கம் இலங்கை விமானப்படை, தரைப்படை மற்றும் கடற்படையினர் தமது கனரக தாக்குதல்களை நிறுத்தவில்லை மக்கள் வெளியேறாமல் தடுப்பதற்காகவும் கணிசமான மக்களை கொன்று காயப்படுத்திலிற்கு உள்ளாக்குவதற்காகவும் தொடர்ந்து தாக்குதலினை மேற்கொ|ண்டவண்ணம் இருந்தனர்.

50 பொதுமக்களை கொன்றாலும் பரவாயில்லை ஒரு புலியை காயபடுத்துவோம் அல்லது கொல்வோம் என்ற இலக்கில் அரச படைகள் செயற்பட்டன. கூடவே வன்னி மக்கள் நீண்டகாலமாக ஆயுத போராட்டத்தின் தூண்களாக இருந்தவர்கள் என்பதனால் அவர்களில் கணிசமான அளவினை முடித்தே ஆகவேண்டும் என்பதிலும் சிங்கள அரசு உறுதியாக இருந்தது.

இன்றைய (23.04.2009)இந்திய அதிகாரிகளின் அறிக்கை

இந்த நிலையில் வழமையான பாணியில் இந்தியாவின் கூலிகளான எம்.கே நாராயணனும் (பாதுகாப்பு ஆலோசகர்), சிவசங்கர் மேனன்( வெளிவிவகார செயலர்) ஆகியோர் முதலை கண்ணீர் வடித்து ஓர் அறிக்கை விட்டனர். அதாவது தமிழ் நாட்டு தமிழர்களை ஏமாற்றுவதற்காகவே இந்த அறிக்கை.

இந்த அறிக்கையில் பாதுகாப்பு வலையத்தில் தாக்குதல் நடப்பதும் அங்கு மக்கள் கொல்லப்படுவதும் கவலை அளிப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் ஓமோம் நாங்கள் கொஞ்சம் கவனமாக அடிக்குமாறு எங்கள் படைகளுக்கு அறிவிக்கின்றம் என கூறியது. வேடிக்கை என்னவெனில் இதனை தமிழ் நாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொண்டதே.
பான் கி மூனின் மனிதாபிமான குழு திட்ட முன்மொழிவு

இதே வேளை பான் கி மூன் அவர்கள் உடனடியாக பாதுகாப்பு வலையத்திற்குள் சிக்கியுள்ள மக்களை மீட்க இலங்கைக்கு மனிதாபிமான குழு ஒன்றினை அனுப்ப போவதாக கூறி இருந்தார். ஆனால் அதனை எப்படி எவ்வாறு செய்வது என்பதனை கூறவில்லை. அதனால் இதுவும் ஓர் இழுத்தடிப்பாகவே இருந்தது. அதாவது திட்டங்களை கூறுவதன் மூலம் பிறர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தாமதமாக்குவதே இதன் நோக்கம். உண்மையிலேயே பான்கி மூன் சொன்ன உடனேயே மனிதாபிமான குழுவினை முள்ளிவாய்க்காலிற்கு அனுப்பி இருந்தால் நாளை (25.04.2009) நடைபெறவிருந்த மிக கொடூரமான தாக்குதலினை நிறுத்தி இருக்க முடியும் ஏன் முள்ளிவாய்க்காலில் இறுதியில் நடந்தேறிய படுகொலைகளும் நிறுத்தப்பட்டிருக்கும்.

பிரித்தானியாவின் பிரயோசனமில்லா அறிக்கையும் பிரித்தானிய தமிழர்களும்

இதே வேளை பிரித்தானியாவின் வெளியுறவு செயலர் டேவிட் மில்லிபாண்ட் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக கூறி முன்னைய அறிக்கை ஒன்றினை திகதிமாற்றம் செய்து விட்டிருந்தார். அதாவது பிரிட்டன் இலங்கை அரசினை ; மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு தாம் அழுத்தம் கொடுப்பதாக அந்த அறிக்கை இருந்தது. இறுதிவரை இலங்கை அரசு எதற்கும் தலை சாய்க்காது என தெரிந்தும் கூட மீண்டும் மீண்டும் இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டு கொண்டிருந்தமை பிரித்தானிய தமிழர்களை ஏமாற்றி தமக்கு ஆதரவு தேடும் முயற்சியே தவிர வேறெதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அடுத்ததாக பிரித்தானிய பாராளுமன்றம் ஏப்ரல் 29, 2009 அன்று பராளுமன்றில் இலங்கை நிலவரம் தொடர்பில் விவாதம் நடத்துவதாக இன்று அறிவித்தது. பிரித்தானிய தமிழர்கள் அந்த விவாதத்தில் ஏதாவது முன்னேற்றம் கிடைக்குமா என ஏங்கி எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இளையோர்கள் இவற்றை எதிர்பார்க்காது வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையும் நம்பியாரும்

இன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை ( 15 நாடுகள்) கூடியது. இதில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு இலங்கை சென்றிருந்த நம்பியார் தனது அறிக்கயினை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர் மூடிய அறைக்குள் தான் தனது அறிக்கயினை வாசிப்பார் அதாவது அவரது அறிக்கை பகிரங்கமாக இருக்காது என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நம்பியாரின் அசைவில் நம்பிக்கையற்று இருந்த தமிழர்களும் மனித உரிமை அமைப்புக்களும் மூடிய அறையில் அறிக்கை வாசிக்கப்படும் என்று கேள்விப்பட்டதும் இருந்த சிறிது நம்பிக்கையும் போய்விட்டது.

நம்பியார் மூடிய அறையில் தனது அறிக்கையினை தாக்கல் செய்தார். அதன் பின்னர் பாதுகாப்பு சபை கூடி ஓர் அறிக்கை விட்டது. அந்த அறிக்கையினை (23.ஏப்ரல் 2009) பாதுகாப்பு சபைக்கு தலைவராக இருக்கும் மெக்சிக்கோ நாட்டவரான கிளவுட் ஹெல்லெர் வாசித்தார்.

அந்த அறிக்கையில் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான மீட்பு பணிகளுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கூடவே இலங்கை அரசும் சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கவேண்டும் என்றும் கூறியது. ஆனால் போரை நிறுத்துமாறு அரசாங்கத்தினை கேட்கவில்லை.

இதே வேளை போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்து மக்களை வெளியேற்ற தாம் தயாராக இருப்பதாக புலிகள் அறிவித்தனர். ஆனால் அனைத்துலகம் போரை நிறுத்தாமல் மக்களை வெளியேறுமாறு கேட்டது. பல தடவை மக்கள் வெளியேறியபோது அந்த மக்கள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. கூடவே புலிபோராளிகளும் மக்களை தாக்கியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மக்களை வெளியேற்ற வேண்டுமாயின் போர் நிறுத்தம் அவசியம் என்பதனை அனைத்துலகம் விளங்கவில்லையா அல்லது வேணும் என்றே விட்டார்களா?
24 ஏப்ரல் 2009

இன்றும் விமானத்தாக்குதல்கள் கடற்கரையோரங்களில் நடந்தன கூடவே கடலாலும் தரையாலும் மக்கள் மற்றும் போராளிகள் தப்பி செல்லலாம் என்றும் அத்துடன் உணவு மருந்து வினியோகங்களை தடுப்பதற்காகவும் பாதுகாப்பு வலையத்தினை சூழ தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருந்தது. கடந்த நான்கு நாட்களாக உணவோ, நல்ல குடினீரோ இன்றி மக்கள் பலர் மயக்கமுற்ற நிலையில் இருந்தனர். பலர் பதுங்கு குழிக்குள்ளேயே தமது விதி இதுதான் என படுத்துறங்கிய வண்ணம் உயிரை விட்டனர். காயப்பட்டோரை மருத்துவ அதிகாரிகள் மட்டுமன்றி காயப்பட்டோரின் உறவினர்கள் கூட கைவிட்டு விட்டனர். அவர்களால் கடவுளை மறாடுவதனை விட வேறு எதனையும் செய்ய முடியவில்லை. அவரவர் தமக்கு வேண்டிய கடவுளரை மன்றாடிய வண்ணம் இருந்தனர்.

இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் அறிக்கை

இந்திய அமைச்சர் சிதம்பரம் இன்று ஓர் இணைய தளத்திற்கு பேசுகையில் இலங்கை அரசாங்கம் புலிகளை விட கொஞ்சம் மோசமாகவே செயற்படுவதாக கூறினார். இலங்கை அரசும் புலிகளும் போரை நிறுத்துவதில் அக்கறை காட்டவில்லை; இந்தியாவின் சொல்லை கேட்கவில்லை என்று கூறினார். கூடவே கொழும்பு இராணுவ தீர்வினையே முன் நிறுத்தி இருப்பதாகவும் கூறினார். ஆனால் சிதம்பரம் அவர்களுக்கு புலிகள் எப்போதே போர் நிறுத்தம் செய்ய தயார் என அறிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிவசிதம்பரத்தின் இந்த பேச்சு அவர் தேர்தலில் நிற்கப்போகும் சிவ கங்கை தொகுதியில் வேட்பு மனு தாக்குதல் செய்ய வந்த போதே பேசினார். ஆகவே அவரும் எவ்வாறு தமிழ் நாட்டு தமிழர்களை ஏமாற்றி வாக்கு பெறலாம் என்ற வகையில் தான் கொழும்பை சாதுவாக சாடி பேசிவிட்டு சென்றார்.

மஹிந்த - நாராயணன் - சிவசங்கர் மேனன் சந்திப்பு

இந்திய தேர்தல் நெருங்கும் வேளை இந்திய வெளிவிவகார செயலர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் கொழும்பில் இன்றைய தினம் மஹிந்தவுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். 90 நிமிடம் நடைபெற்ற சந்திப்பில் என்ன கதைத்தார்கள் என்பதனை இந்திய அதிகாரிகள் இருவரும் கூற மறுத்துவிட்டனர். ஆனால் இலங்கை அரசு கூறியது என்னவெனில் பேச்சு வார்த்தை நன்றாக இடம்பெற்றது. கூடவே போர் நிறுத்தம் பற்றியோ பேச்சுவார்த்தைபற்றியோ எதுவும் கலந்துரையாடப்படவில்லை என்றும் தகவல் வெளியானது. ஆனால் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு பாதிப்பு இல்லாமல் தாக்குதலை செய்யுமாறு தான் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல் கசிந்தது.

ஆனால், இதே வேளை இந்திய வெளி நாட்டமைச்சர் பிரணாப் முகர்ஜீ பத்திரிகையாளர்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் தொடரும் வன்முறைகளும் பொதுமக்கள் கொல்லப்படுவதும் தமக்கு சந்தோசத்தினை தருவதாக இருக்காது என்றும். ஆகவே உடனடியாக போர் நிறுத்தத்தினை கொண்டுவரவேண்டும் என்றும் பேச்சளவில் கூறினார்.

இன்னர் சிற்றி பிறஸ் கேள்வி கணைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

இன்று நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பத்திரிகையாளர் கேள்வி நேரத்தில் இன்னர் சிற்றி பிறெஸ் பல கேள்விகளை கேட்டது. அதில் முக்கியமாக அவர்கள் கேட்டது என்னவெனில்

நம்பியார் இலங்கை சென்று திரும்புகையில் இந்தியா சென்று வந்துள்ளார். அவர் அங்கே யாரை சந்தித்தார்? எந்த தலைவரை சந்தித்தார்?
டாபூரில் பல என்.ஜி.ஓ க்கள் வெளியேறியமைக்கு ஐக்கி நாடுகள் சபை நடவடிக்கை எடுத்தது. ஆனால் முள்ளிவாய்க்காலிற்குள் இருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட பலர் வெளியேற்றப்பட்ட நிலையில் ஏன் ஐக்கிய நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை?
முள்ளி வாய்க்காலிற்குள் இருந்து அரச வைத்தியர்களை வெளியேறுமாறு அரசாங்கம் பணித்துள்ளது. ஆகவே இதனை ஏன் ஐ. நா கேட்கவில்லை?

இவ்வாறு பல கேள்விகளை ஐக்கிய நாடுகள் சபை துணை பேச்சாளர்களான மேரி ஒகாபே மற்றும் மிஸ் பிக் ஆகியோரை கேட்டனர்.

ஆனால் இந்த பேச்சாளர்கள் பான் கி மூன் பல தடவை அறிக்கைகள் விட்டிருக்கின்றார் என்று கூறி மழுப்பினரே தவிர சரியான விடைகளை கொடுக்க முடியவில்லை.

இதே வேளை ஐக்கிய நாடுகள் சபை இன்று வரை 6500 சிவிலியன்கள் கொல்லப்பட்டும் 14,000 பேர் காயப்பட்டும் உள்ளதாக கூறியுள்ளது.
25 ஏப்ரல் 2009

இன்று வலைஞன் மடம் பகுதியில் கஞ்சி பெறுவதற்காக கூடி இருந்த மக்கள் மீதும் கடற்கரை பகுதியில் கூடாரத்தினுல் இருந்த காயப்பட்ட மக்கள் மீதும் இலங்கை விமானப்படை கோரமாக குண்டுகளை வீசியது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு சவாலாகவோ அல்லது அவற்றை புறக்கணிப்பதற்காகவே தான் இந்த தாக்குதல் அமைந்திருக்கவேண்டும்.

மிக், கிபிர் விமானங்களின் இந்த தாக்குதலில் 341 அப்பாவின் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 400 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பகுதியில் காலை தொடக்கம் மாலை வரை முறையே காலை 10.15 மதியம் 2.15 , 2.30, பின்னேரம் 5.15 ஆகிய நேரங்களில் விமானத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 184 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2.15 அளவில் முள்ளிவாய்கால் மேற்குபகுதியில் மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் 126 பேர் கொல்லப்பட்டனர் இந்த நடவடிக்கை சுமார் 15 நிமிடம் மேற்கொள்ளப்பட்டது 16 இற்கு மெற்பட்ட 250 இறாத்தல் குண்டுகள் போடப்பட்டதாக கள படப்பிடிப்பாளர் பதிவாக்கியுள்ளார்.

இதே வேளை மாலை 5.15 இற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டனர். இன்று மாலை புனர்வாழ்வுக்கழகத்தால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் கூடவே உலர் பருப்பும் குழந்தைகள் உள்ள குடும்பங்களிற்கு நிவாரணமாக வழங்கப்பட்டது.