Monday, November 30, 2009

இளங்கோவனுக்கு நெடுமாறன் கடும் எச்சரிக்கை

இலங்கையில் நடைபெற்ற போரில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் சுவரொட்டிகளையும் கிழித்தெறிந்து ஈரோட்டில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பகிரங்கமாக நடத்திய காலித்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட இளங்கோவனைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட வேண்டிய முதலமைச்சர் கருணாநிதி அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்திருப்பது காலித்தனத்தை ஊக்குவிப்பதாகும்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது சட்டப்படிக் குற்றமல்ல என மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை பல தீர்ப்புகள் வழங்கிய பிறகும் அவற்றைச் சிறிதும் மதிக்காமல் நடந்து கொண்ட இளங்கோவன் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தைச் செய்தவர் ஆவார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவன் உட்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்டதற்கு ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் தலைமை செய்த தவறும் அதன் விளைவாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கோபமுமே காரணமாகும். இதைக் கொஞ்சமும் உணராது இளங்கோவன் போன்றவர்களின் காலித்தனமான செயற்பாடு தமிழகத்தில் காங்கிரசை ஆழக் குழி தோண்டிப் புதைத்துவிடும் என எச்சரிக்கிறேன்.

பெருமைமிக்க பெரியாரின் பாரம்பரியத்திற்கும் தமிழ்நாட்டில் அரசியல் பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்ந்த ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் நற்பெயருக்கும் இளங்கோவனின் செயல் பெரும் இழுக்கைத் தேடித் தந்துவிட்டது.

இத்தகைய செயல்களை அடக்காமல் கருணாநிதி வேடிக்கைப் பார்ப்பாரானால் மக்கள் முன் வந்து காலித்தனங்களை அடக்கும் நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்.

ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் போட்டி? ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிடக் கூடுமென பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனநயாக மக்கள் முன்னணியுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து தீர்மானம் எடுக்கப்படும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர் தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னும் ஒரு சில தினங்களில் ஜனாதிபதித் தேர்தலில் தமது தீர்மானத்தை அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கத்திடம் கேட்ட போது, ஜனாதிபதித் தேர்தலில் இரா. சம்பந்தன் போட்டியிடுவது குறித்த தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

அடுத்த பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த எடுத்த முயற்சி தோல்வி-அவுஸ்திரேலியாவில் நடத்துவதற்கு தீர்மானம்


பொதுநலவாய நாடுகளின் அரசாங்கங்களின் தலைவர்கள் கலந்து கொள்ளும் 2011 ஆம் வருட உச்சி மாநாடு அவுஸ்திரேலியாவில் நடைபெற முடிவாகியுள்ளது. ட்ரினாட் அன்ட் டுபாக்கோவில் பிரஸ்தாப தலைவர்கள் கூடி இதற்கான தீர்மாத்தை எடுத்துள்ளார்கள். 2011ஆம் வருட உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த இலங்கை அரசு முயற்சி மேற்கொண்ட போதிலும் அது பயனளிக்காததால் அடுத்து 2013ஆம் வருட மாநாடு இலங்கையில் நடைபெறலாமென நம்பப்படுகிறது.

பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளின் அரசாங்க தலைவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடத்தும் உச்சி மாநாட்டில் பொதுநலவாய அமைப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து ஆராயப்படுவது வழக்கம். ஒரு காலத்தில் சக்தி வாய்ந்ததாக இருந்த இந்த அமைப்பு தற்போது மந்த நிலையை அடைந்துள்ளது என்று பிரிட்டனில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள றோயல் பொதுநலவாய சங்கம் கடந்த வாரம் கண்டன அறிக்கை வெளியிட்டது மட்டுமின்றி பொதுநலவாய அமைப்பின் விமர்சகர்கள் பலர் இந்த உச்சி மகாநாட்டின் உபயோகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள்ளார்கள்.

ஆனால் இந்த வருடம் இடம்பெற்ற நிகழ்வுகளின் முக்கியத்துவம் முன்னாள் பிரிட்டிஷ் சக்கராதிபத்தியத்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. தாய்லாந்து பிரதம மந்திரி பறிக் மெனிங் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கொ லாஸ் சர்கோஸயையும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனையும் டென்மார்க் பிரதம மந்திரி லார்ஸ் றஸ்முஸனையும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்..

ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் மகாநாடு இதற்கு முன்னதாக டிசம்பர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை டென்மார்க் தலைநகரான கொப்பன் ஹேகனில் நடைபெற இருப்பதே இந்த வருட பொதுநலவாய நாடுகள் உச்சி மகாநாட்டில் உலக கவனம் திரும்பியுள்ளமைக்கு காரணமாகும். இரண்டாவது எலிஸபெத் மஹாராணியார் ஆரம்பித்து வைக்கவிருக்கும் பொதுநலவாய உச்சி மகாநாட்டு உலக நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசாங்க அதிகாரிகளினதும் ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்துள்ளது..

அவுஸ்திரேலியா பொதுநலவாய உச்சி மகாநாட்டை இதற்கு முன்னர் இரு தடவைகள் நடத்தியுள்ளது. கடைசியாக 2002ஆம் ஆண்டில் குயூன்ஸ்லடன் நகரிலுள்ள கூலம் என்ற இடத்தில் அவுஸ்திரேலியா இந்த உச்சி மகாநாட்டை நடத்தியது. (இந்த மகாநாடு 2001ஆம் ஆண்டு நடைபெறவிருந்து பின்போடப்பட்டிருந்தது) இதற்கு முன்னர் 1981ஆம் ஆண்டில் இந்த உச்சி மகாநாடு அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநிலத்தில் நடத்தப்பட்டது. முதலாவது பொதுநலவாய உச்சி மகாநாடு சிங்கப்பூரில் 1971ஆம் ஆண்டில் நடைபெற்றது. இதற்கு முன்னர் பொதுநலவாய பிரதம மந்திரிகளின் மகாநாட்டு மற்றும் சாம்ராஜ்ய மகாநாட்டு கொடிகளின் கீழ் கூட்டங்கள் நடைபெற்றன

சுதந்திரமாகக் கற்கும் சூழலை மாணவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : கி.மா. முதலமைச்சர்


"நாட்டின் சகல பாகங்களிலும் மாணவர்கள் சென்று சுதந்திரமாகக் கல்வி கற்கக் கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதை மாணவர் சமூகம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என கிழக்கு மாகாண முதலமைச்சர்ச சிவனேசதுரை சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாழைச்சேனை இந்துக் கல்லூரி வெளியீடான 'செவ்வாழை' சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சஞ்சிகையை வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே இந்த வேண்டுகோளை மாணவர்களிடம் அவர் முன் வைத்தார்.

பாடசாலை அதிபர் கே.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

"பாடசாலையில் கல்வி பயில்கின்றபோது பரீட்சையில் சித்தியடைவதை மட்டும் மாணவர்கள் இலக்காக கொள்ளாமல் இணைப் பாடவிதானங்களான விளையாட்டு, கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, தலைமைத்துவப்பயிற்சி விவாதங்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும்,

ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரையும் பரீட்சைக்குத் தயார்படுத்துவதோடு அவர்கள் தமது சொந்த வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களையும் கற்பிக்க வேண்டும்.

மாணவர்களைச் சமூகத்தில் மதிக்கப்படுபவர்களாக மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதற்கு ஆசிரியர்களே வழிகாட்டியாக இருக்கவேண்டும்" என்றார்.

இவ்விழாவில் மாணவர்களின் வரவேற்பு நடனம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், எனப்பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதோடு 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

முதலமைச்சரைக் கெளரவிக்கும் வகையில் பாடசாலை அபிவிருத்தி சங்கம் வாழ்த்து மடல் ஒன்றை வழங்கியது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்குடா வலையக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தியும் விசேட அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். தங்கராஜா, உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.ஞானராஜா, கோரளைப்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சின்னத்தம்பி ஆகியோர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் பிரசார வேலைகள் ஆரம்பம்


எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதன் மூலம் ஆதரவு தேடுகின்ற பிரசார வேலைகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வவுனியாவில் ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து, அந்தக் கட்சியின் வன்னிப் பிரதேச அமைப்பாளர் பி.சுமதிபாலா தலைமையில் தேர்தல் பிரசாரத்திற்கான வைபவம் நடைபெற்றது.

இதில் கட்சியின் பிரதேச தலைவர்கள், முக்கியஸ்தர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவினத்தையும் சேர்ந்த பலதரப்பட்டோரும் கலந்துகொண்டனர்.

"வட பிரதேசத்திற்கே வசந்தம். நாட்டுக்கே விடுதலை"
"எமது அரசனுக்கும் இராணுவ வீரர்களுக்கும் வடபிரதேசத்தின் மக்களின் கௌரவம்"
போன்ற தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தைத் தாங்கிய கட்அவுட் கட்டப்பட்ட ஊர்தி முன்செல்ல பி.சுமதிபாலா தலைமையில் கட்சியினரும், ஆதரவாளர்களும் பேரணியாக வவுனியா மன்னார் வீதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.

இந்த பிரசாரப் பணிகளின் ஆரம்ப வைபவத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னிப்பிரதேச அமைப்பாளர் பி.சுமதிபால உரையாற்றுகையில்,

"வடக்கில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி வேலைகளை வடக்கில் முன்னெடுத்திருக்கின்றார்.

வீதிகள் அமைக்கப்படுகின்றன. பாலங்கள் கட்டப்படுகின்றன. மின்சாரமில்லாத இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றது. பாழடைந்து கிடந்த நீர்ப்பாசனக் குளங்கள் புனரமைக்கப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் காரண கர்த்தாவாகிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி என்பதை இங்குள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் முடிவாகத் தீர்மானித்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் அமோக வெற்றி அவருக்கே கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

அவருடைய வெற்றியை உறுதி செய்வதற்காகவே இந்தப் பிரசார வேலைத்திட்டத்தை நாங்கள் இன்று ஆரம்பித்திருக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.

நாம் புலம் பெயர்ந்தது அகதியாக வாழ்ந்து மடிவதற்காக இல்லை, மனதில் உறுதி வேண்டும்; தேசப் பணியாற்ற விரைந்துவா: மணிவண்ணன்

சில சந்தர்ப்பங்களில் குழப்பமான சூழலில் சிக்குண்டு வாழும் நிலை எமக்கு விதிக்கப் பட்டு விடுகின்றது. எம்மை மீறிய செயல்ப்பாடுகள்... எம்மால் சுமக்க முடியாத சுமைகள் எம் மீது சுமத்தப்படும் போது அவை எம்மை திக்குமுக்காடச் செய்து விடுகின்றுது. எதையும் சமாளிக்க முடியாது என்ற ஒரு சூழலில் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றோம்.

இங்குதான் முடிவுகள் எடுப்பதில் சிக்கல்கள் உருவாகின்றது. சில சமயங்களில் வாழ்வதை விட இறப்பது சிறப்பானது என்ற முடிவுக்கு வருபவர்களும் உண்டு. ஏன்டா இந்த இனத்தில் வந்து பிறந்தோம் என்று எண்ணவும் தோன்றும.

நான் தமிழனாக பிறந்ததனால்தான் என் தலைவனை தலைவனாக பெறும் பாக்கியம் கிடைத்தது. வரலாற்று நாயகர்களுடன் பழகும் பெரும் பாக்கியம் கிட்டியது. தமிழின் தொன்மையான சிறப்பு ஒரு புறம். ஆழகிய மொழியை வளர்க்கப் பாடுபடும் வாய்ப்பும் கிடைத்தது என்ற மகிழ்ச்சி இன்னொருபுறம். பிற மொழிகளும் பல சோக வரலாற்றை கண்டுதான் வளர்ந்துள்ளது.

எனவே தமிழானாக பிறந்து தமிழனாக வாழ்வதில் எனக்கு பெருமைதான். உழைப்பில் ஆசையுள்ளவன் தொழிலை வெறுக்கமாட்டான். தாய் மீது அன்பு கொண்டவன் தாய்மொழியை சிறுமையடைய விடமாட்டான்.

நோக்கம் தெளிவானதாக இருக்குமானால் முடிவுகள் சுலபமானதாக இருக்கும். பிரிவை வகுத்த பின்பு பயந்தென்ன இலாபம்.. என்ற கண்ணதாசன் வரிகள் நடைமுறைச் சிக்கல்கல்களை கண்டு பயப்படாது உங்கள் இலட்சிய பயணத்தை தொடருங்கள் என்று சொல்லுகின்றது.. இதுபோன்று எத்தனை பாடல் வரிகள் உள்ளன.

நடைமுறைச் சிக்கல் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது. நாம் அதை சரியாக பகுத்து அறியாமல் விடை காண அவதிப்படுகின்றோம். உதாரணமாக சிறிய வயதில் சில பிரச்சனைகள் எங்களை பயமுறுத்தியுள்ளன. அவற்றை இலகுவாக வெல்லும் ஆற்றல் அப்பொழுது எம்மிடம் இருக்கவில்லை. அன்றைய சூழலில் எமது அறிவும் வசதியும் அச் சிக்கலைக் கையாள போதுமானதாக இருக்கவில்லை எனலாம்.

மிகவும் சுலபமாக கையாளக் கூடிய விடயங்கள் அன்று பூதாகாரமான தோற்றத்தை கொண்டு பயமுறுத்தியுள்ளது. இன்று அதை நினைக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையின் குறைகளை விளங்க இவ்வளவு ஆண்டுகள் சென்றுள்ளது என எண்ணத் தோன்றுகின்றது. காலம் பதில் சொல்லும் என்பதை நாம் புரிந்துகொள்ள இது நல்ல உதாரணமாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன். ஒரு காலத்தில் முடியாத விடயம் இன்னொரு காலத்தில் இலகுவானதாகி விடுகிறது

நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் இருந்துகொண்டு சிலவற்றை சிந்திக்கின்றேம். எங்கள் ஊருக்குள் மட்டும் நாங்கள் வாழ்ந்தபோது நாங்கள் பெற்ற அறிவும் வாய்ப்புக்களும் போதுமானதாக இருந்ததில்லை. இந்த உலக ஊரெல்லாம் திரிந்து நாம் பெற்ற அறிவும் வளமும் எவ்வளவு வேறுபாடானது என்பதை இன்று உணருகின்றோம்.

சிந்திக்கும் வளம் கற்றலினால் தோன்றுகின்றது. அனுபவக் கல்வியை மிஞ்சிய கல்வி ஏதும் இல்லை என்பார் கற்றவர்.. எமது அனுபவமின்மை எப்பொழுதும் சில முடிவுகளை எடுக்கத் தடையாக உள்ளது. சில சமயங்களில் மற்றவருடன் முரண்படவும் வழிவகுத்து விடுகின்றது. நோக்கம் ஒன்றாக இருப்பினும் அடைவதற்கான வழிகளில் வேறுபாடுகள் உருவாகின்றது. நோக்கம் ஒன்றாக இருப்பினும் பல மார்க்கங்களான சமயங்கள் தோன்றுவதற்கு வெவ்வேறு அனுபவங்கள்தான் காரணமாகின்றன.

மற்றவருடைய அனுபவத்துக்கும் மதிப்புக் கொடுக்கும்போது இலகுவாக புரிந்துணர்வு ஏற்பட்டு விடுகின்றது. இஸ்லாமியரின் கலாச்சாரம் பாலைவன சூழலில் உருவாகியது. கொடும் மணல் புயலிலிருந்து தம்மையும் குழந்தைகளையும் பாதுகாக்க பெண்கள் முழவதும் மூடிய ஆடைகளை அணியவேண்டிய அவசியம் தோன்றியது. ஆதுவே காலப் போக்கில் இஸ்லாமிய பண்படாக வலுவடைந்து விட்டது

இறைவனை நம்புகின்றவருக்குள் எத்தனை பிரிவுகள் என்றாலும் நோக்கம் இறைபதம் அடைவதுதான். இந்த நடைமுறை வேறுபாடுகள் தோன்றக் காரணமான மொழி சமய பழக்கவழக்கங்கள் புவியியல் அமைப்பு பிராந்திய சமூக பொருளாதார அமைப்பு என்று பல்வேறுவிதமான சூழல் குழம்பு காரணிகளாக அமைந்துவிடுகின்றன. பன்னெடுங்காலம் சில பழக்க வழக்கங்களோடு வாழ்ந்தவரிடம் புதிய மாற்றங்களை இலகுவாக கண்டுவிட முடியாது. எனவேதான் உன்னைப்போல் உன் அயலவனையும் நேசி என்று யேசுபிதா சொன்னார்.

எமது தமிழ்ச் சமுதாயத்தின் சிக்கலான பழக்க வழக்கங்களை நாம் நன்றாக அறிந்திருந்தாலும் இச் சமுதாயத்தின் சிறப்பான குணங்கள் அதைவிட அதிகமானதாக
காணப்படுகின்றது. தோல்லியைக் கண்டு துவண்டு விழும் தமிழன் ஒரு வெற்றிச் செய்தியை கேட்டதும் துணிந்து எழுந்துவிடுவான்.

சில சமயங்களில் வெற்றிகரமான பின்வாங்கல் எதிர்கால வெற்றியை வலுப்படுத்த அத்தியாவசியமாகின்றது. இச் செயல் எதிரிக்கு இன அழிப்பு செய்ய வழிவகுத்து விடுகின்றது. பாரதூரமன விளைவுகளை ஏற்படுத்தி அழிவுகளைச் செய்ய எதிரிக்கு வாய்ப்பாகி விடுகின்றது.

விடுதலைப் போரை நசுக்குவதற்கு எதிரி போராடும் இனத்தை கொடுமையான சித்திரவதைக்குள் உட்படுத்துவான். இக் கொடுஞ் செயலுக்கு காரணம் போராடும் குணம் என்று அடிமைப் படுத்துவான். இங்குதான் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். பொறுமையாக விடயங்களை அலசிப்பார்க்க வேண்டும்.. நிதானமாக எமது இலக்கு நோக்கிய பயணத்தை வலுப்படுத்த தேவையான வழிவகைகளை ஆராய்ந்து செயல்படவேண்டும். என்று மாசேதுங் கூறியுள்ளார்

தன் பலம் பிறர் பலம் அறிந்து செயல்பட வள்ளுவனார் போதித்த திருக்குறள் தமிழனை ஈராயிரம் ஆண்டுகளாக வழிமுறை செய்து வருகின்றது. சின்ன பாம்பை அடிப்பதானாலும் பெரிய தடியால் அடிக்கவேண்டும் என்றும் தேசிய தலைவர் கூறுவதும் நாம் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும்.

எமது தேசிய விடுதலை பல முட்டுக்கட்டைகளை கொண்டிருந்தமை 1977க்கு முன்னதாகவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்தியாவின் கொடும் பிடிக்குள் எமது தாயகம் இருப்பதை தேசியத் தலைவர் தெளிவாக புரிந்து வைத்திருந்தார். இலங்கை பேரினவாதிகளுடன் போரிட்டு வெல்வது மட்டுமன்றி இந்திய கூட்டு மாநில ஆட்சியாளரையும் வெல்ல வேண்டும் என்றும் அவர்களை வெல்வதுதான் சிரமமானது என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த அடிப்படையில்தான் இந்திய சதித்திட்டத்துககுள் அகப்படாமல் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும் வழிநடத்தி எமது போராட்டத்ததை உலக அரங்குவரை கொண்டு வந்துள்ளார் எமது தேசியத் தலைவர்.

ஓரு மிகப் பெரிய நாடு என தன்னைச் சொல்லிக் கொள்ளும் இந்தியாவின் கூட்டு மாநில ஆட்சி முறைக்கு அசாமின் காஸ்மீரின் விடுதலைப் போராட்டங்கள் எவ்வளவு அச்சுறுத்தலோ அவ்வளவு அச்சுறத்தலாக எமது போராட்டமும் அமைந்து விடும் என்ற கருத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மிக உறுதியாக கையிலெடுத்துளளார்கள்.
எந்த விலைகொடுத்தும் தமிழீழம் அமைவதைத் தடுப்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.

ஈழ மக்கள் பாமரர் என்ற வகையில் இந்தியா தனது திட்டத்தை 1983க்கு முற்பட்ட காலங்களில் கையாண்டது. தேசிய தலைவர் தவிர்ந்த ஏனைய போராட்டக் குழு தலைவர்கள் இந்தியாவின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு தாம் இழைத்த பிழையை தேசிய தலைவர் மீது சுமத்தி தம்மை நியாயப்படுத்த முனைந்து தோல்வி கண்டனர்.

தமிழீழ மக்களின் விவேகத்தின் மிது நம்பிக்கை கொண்டு தேசியத் தலைவர் போராட்டத்தை விரைவுபடுத்த தொடங்கிய காலத்தில் 1987 ல் சிங்கள இராணுவம் மாபெரும் பின்னடைவை சந்திக்கும் போது தமிழீழம் விடுதலை அடையும் சூழலும் உருவாகிக் கொண்டிருந்தது.

தமிழீழத்தின் பொது நிர்வாக அலகுகள் தமிழரின் கைக்கு வரத் தொடங்கியிருப்பதை கண்டு டெல்லி அரசு அதிர்ந்தது. நாம் வேண்டாத போது தனது படையை எம்மண்ணில் நேரடியாக இறக்கி. புல சூழ்ச்சிகளை செய்து எமது தேசிய விடுதலைப் போரை நசுக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொல்லணா கொடுமைகளை எம்மீது திணித்து பயனற்று இழப்புடன் நாடு மீண்டது.

தனது திட்டம் சிறு பயனைக் கொடுத்தது என்ற நிறைவு இந்தியாவுக்கு இருந்தாலும் அது பூரணமான விளைவை ஏற்படுத்த வில்லை. அதி உயர் விலையை கொடுத்தாயினும் தமிழீழ விடுதைலப் புலிகளின் சர்வதேச செல்வாக்கை குலைத்துவிடும் திட்டங்கள் 1990ல் இந்தியாவினால் வகுக்கப்பட்டன.

புலம் பெயர் நாடுகளில் பல கூலித்தமிழரும் இந்தியாவின் திட்டத்தை வழிநடத்த தயாராக இருந்தனர். இவர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இலங்கை இ.ந்திய கூட்டுச் சதியாக போதைவஸ்து கடத்தும் நாடகம் அரங்கேறியது. பிடிபடும் அனைவரும் தம்மை விடுதலைப் புலிகள் என்று சொல்வதனூடாக அனுதாபத்தை பெற்று வெளிநாடடு சுங்கப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்கும் அளவுக்கு விடுதலைப் புலிகள் மீதான அனுதாபமும் பிரமிப்பும் வெளிநாட்டவரிடையே பரவி இருந்தது.

தொடர்ச்சியான இச்சதியால் விடுதலைப் புலிகளின் நற்பெயர் பாதிப்புக்குள்ளானது. தமது முயற்சியில் ஓரளவு வெற்றியை கண்ட இந்திய இலங்கை கூட்டுச் சதியாளர். துமது அடுத்த கட்ட நடவடிக்கையாக சிறர்களை படையில் இணைக்கும் விடையத்தை கையிலெடுத்தனர்.

தமது அதிகாரத்தையும் அரசியல் செல்வாக்கு நிதி வசதி என்பவற்றை பயன்படுத்தி பல செய்தி நிறுவனங்களை தம் வசமாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளை மிக இலகுவாக பரப்பினர்.

ராஜீவ் காந்தி முதல் கதிர்காமர் வரை பல கொலைகள் மிக இலகுவாக நடத்தப்பட்டன. இவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு நடத்தியதாக மின்னல் வேக பரப்புரைகள் நடந்தேறின.

சிங்கள கிரமங்கள் மீதான பல தாக்குதல்களும் பள்ளிவாசலகள் மீதான தாக்குதல்களும் கூட விடுதலைப் புலிகளின் பெயரில் நடத்தப்பட்டன. இவை உலக அரங்கில் மிக கொடுமையாக எடுத்துக் காட்டப்பட்ட போது பலரும் அதை நம்ப வேண்டிய சூழல் உருவாகியது.

இதுவே விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலுக்குள் சில நாடுகள் சேர்த்துக் கொள்ள போதுமானதாக இருந்தது.

தேசியத் தலைவரை நன்கு தெரிந்திருந்த இந்திய ஆட்சியாளா தலைவரின் தன்நலமற்ற சமூக நலத்திட்டங்களைக் கண்டு மிரண்டு போயினர். மகாத்மா காந்தியை நாவளவில் வைத்துக் கொண்டு மிக மோசமான ஆட்சியை நடத்துபவர் மத்தியில் மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு ஒரு அழகான நாட்டை கட்டிய பெருமை தேசியத்தலைவருக்கு உரியது.

தெற்காசியாவின் புரையோடிப் போன வறுமையும் பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறையும் சாதிக் கொடுமையும் தமிழீழத்தில் துடைத்து ஒழிக்கப்பட்டது. இந்த பிராந்தியத்தின் ஆட்சியாளர்களிடையே தங்களை தங்கள் நாட்டு மக்கள் இழிவுபடுத்த தமிழீழம் வழி வகுத்துவிடும் என்ற பயமும் இருக்கின்றது.

ஏறக் குறைய மூன்றில் ஒரு பங்கு தமிழீழ மக்கள் வெளிநாடுகளில் வசதியாக வாழ்வதால் தமிழீழம் மேற்குலகின் கொள்கையை தனது கொள்கை வகுப்புக்குள் செல்வாக்கானதாக ஆக்கிவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு.

சாக்கடைப் பெருச்சாளிகள் போன்று குப்பத்து மக்கள் இல்லாத வளமான நாடாக தமிழீழம் அமைந்து விடுவது இந்திய அரசியலில் பல குழப்பங்களளை உருவாக்கிவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு.

இதை விட சிங்கள தேசமும் தனது கையை விட்டு சென்றுவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு. ஈழப் பிரச்சினை ஒன்றுதான் சிங்கள தேசத்தை இந்தியாவின் கைக்குள் வைத்திருக்க உதவுகின்றது. ஈழப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்த இந்தியா எப்பொழுதும் முயற்சி செய்யும்.

வுலுவுள்ள ஒரு நாடாக பாகிஸ்தான் போன்று சிங்கள தேசம் வளரும்போது வங்காளதேசம் அமைந்ததுபோல் ஈழம் அமையலாம். ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. தமிழ் நாடு பிரிந்து விடும் என்ற பயம் இந்தியாவுக்கு நிறையவே உண்டு. அதனால்தான் சிங்கள தேசத்துடனாக சீனாவின் பாகிஸ்தானின் சிநேகத்தையும் இந்தியா விரும்புவதில்லை.

தமிழர்களாகிய எங்கள்மீது பல அவதூறான பொய்யான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. தெரிந்தோ தெரியாமலோ உங்கள் செயல்கள் எம் இனத்தின் நற்பெயரைக் கெடுக்காமல் பார்த்துக் கொண்டாலே அது நீங்கள் எம் இனத்துக்கு செய்யும் பெரும் நற்செயலாகும்.

அதை விட ஒரு படிமேலாக எங்கள் போராட்டம் பற்றிய விளக்கத்தையும் உண்மை நிலையையும் உலகத்தாருக்கு எடுத்துச் சொல்வதனூடாக நீங்களும் தேசிய உணர்வாளராக தேசிய தலைவரால் தமிழீழத்தில் மதிப்பளிக்கப்படுவீர்கள்

அன்புத் தமிழ் மக்களே நாம் எத்தகைய சிக்கலில் உள்ளோம் என்பதை தலைவர் மிகத் தெளிவாக உங்களுக்கு பல கோணங்களில் தெளிவு படுத்தியுள்ளார். எம்மைச் சூழ பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டடாலும் போராடும் தன்மையை இழக்காமல் காய் நகர்த்தலை மேற் கொள்ள தலைவர் படும் துயரம் நெருப்புள் வாழ்வதை விடக் கொடியது.

எங்கள் இனத்துக்காக முப்பதாயிரத்துக்கும் அதிகமான மாவீரரும் நூற்றைம்பது ஆயிரத்துக்கும் அதிகமான தன்மானத் தமிழரும் தற்கொடை ஆகியுள்ளனர். இவர்களின் தியாகம் எமது மன உறுதியை வளர்த்துள்ளது. உலக நாடுகளிடம் எங்கள் நியாயங்களை இடை விடாது எடுத்துச் சொல்வதனூடாக எங்கள் தாயகத்தை மீடகும் தார்மீக கடமை புலம் பெயர்ந்து வாழும் எம்மிடம் தேசியத் தலைவரால் ஓப்படைக்கப்பட்டுள்ளது..

யார் எதைச் சொன்னாலும் சொல்லிவிடடுப் போகட்டும்.. எவர் வேண்டுமானாலும் அறிக்கைளை விடட்டும். எமது தலைவரின் சிந்தனை எது என்று உங்களுக்கு தெரியும். தலைவர் வெளிப்படும்வரை பொறுமையாக நிதானமாக உறுதியோடு செயல்ப்படுங்கள்.

இந்திய வல்லாதிக்கம் இலங்கை இனவாதிகளின் சதி வலைக்குள் தானாக சிக்கித் தவிக்கின்றது. இலங்கை இனவாதமும் சீர்குலைந்து நாசவழியை தேடிக்கொண்டு தவிக்கிறது. நீங்கள் புத்திஜீவிகளாக வாழ்கின்றீர்கள். எதையும் பகுத்தறிந்து செயற்படக் கூடியவர்களாக இருக்கின்றீர்கள்;.

இன்றும் உங்கள் இதயத்துள் ஆறாத வடுக்களாக பல துயரங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் எப்படி நடந்தேறின என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்துள்ளீர்கள். நாங்கள் நீதியின் பக்கம் நின்று இவ் உலகிடம் நீதி கேட்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எமது பாதை எது என்பதும் தேசியத்தலைவரின் வழிநடத்தலும் எம்மிடம் நிலைத்திருக்கும்.

தமிழ் தேசத்தின் சிற்பம் செதுக்கப்பட்டு பாதி வேலை முடிந்த நிலையில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சகல சர்வதேச தடைகளையும் தகர்த்து எம் இனிவரும் சந்ததிக்கு நல்லதொரு வாழ்வைக் காட்ட இப்புலம் பெயர் நாட்டின் வாழ்க்கை வாய்ப்பபை பயன் படுத்துவோம்.

நாம் புலம் பெயர்ந்தது அகதியாக வாழ்ந்து மடிவதற்காக இல்லை
நம் நாடு காணும் இறுதிப் பணி ஏற்று விடிவு காண்பதற்காக. காலம் இட்ட கட்டளை
உன்னையும் என்னையும் புலம்பெயரச் செய்துள்ளது. தேசப் பணியாற்ற விரைந்துவா.

பாரதியின் காலத்தால் அழியாத கவிதை வரிகள் உங்களைiயும் என்னையும் சீரான பாதையில் செல்ல உளவியல் பலம் தந்து வழிகாட்டுகின்றது என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்பதில் எனக்கு நிறைந்த நம்பிக்கை உள்ளது. எனவே இக்கட்டுரையின் தலைப்பை பாரதியிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.

மனதில் உறுதி வேண்டும்
தலைவரின் வழி செல்வோம்
மலரட்டும் தமிழீழம்

மணிவண்ணன்

எந்தச் சதியாலும் சிதைக்கப்பட முடியாத புலம்பெயர் தமிழர் பலம்! ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை


முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் முடிந்து விட்டது ஈழத் தமிழர் பலம் என்றே சிங்கள இனவாதமும் அதன் துணை சக்திகளும் வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்தி மகிழ்ந்தன.

வன்னிப் பேரவலத்திலிருந்து தமது உறவுகளைக் காப்பாற்றத் திரண்டு எழுந்த தமிழர்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும அகிம்சைப் போரைத் தொடுத்தனர். விடுதலைப் புலிகளை களத்தில் தோற்கடித்த்துவிட்டால் புலம்பெயர் தமிழர்கள் செயலிழந்து விடுவார்கள் என்ற சிங்களத்தின் கணிப்பு புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களால் பொய்யாகிப் போனது. சிங்கள தேசம் அடுத்த திட்டத்தினுள் நுழைந்தது. தேசியத் தலைவர் அவர்கள் கொல்லப்பட்டு விட்டார் என்று படம் போட்டுக் காட்டி வித்தை செய்தது. அதை நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் ஒட்டுக் குழுக்கள் மட்டுமே. ஈழத் தமிழர்களின் இதய நம்பிக்கையை எந்த சக்தியினாலும் நொருக்கிவிட முடியவில்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரும் முள்வேலி முகாம்களுக்குள் சிறைப்படுத்தப்பட்ட மூன்று இலட்சம் உறவுகளையும் விடுவிக்கத் தமது போராட்டத்தைப் புலம்பெயர் தமிழர்கள் தீவிரப்படுத்தினார்கள். சிங்கள தேசம் அரங்கேற்றிய அத்தனை சதிகளையும் முறியடித்து புலம்பெயர் தமிழர்கள் வெகுண்டெழுந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளை இருபத்தொரு நாடுகளின் உதவியுடன் அழித்துவிட முடிந்த மகிந்த ராஜபக்ஷவால் புலம்பெயர் தேசங்களில் போர்க் கோலம் பூண்டு திரண்டு எழுந்த தமிழர் படையை நெருங்க முடியவில்லை. அசைக்க முடியாத பெரும் சக்தியாக எழுந்த தமிழர் படையைக் கண்டு சிங்களம் அச்சம் கொண்டது. சதிகாரர் கூட்டத்தால் புலம்பெயர் தமிழர்கள் குறி வைக்கப்பட்டார்கள். பல சதித் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டன.

தப்பிச் சிறைப்பட்ட போராளிகளையும் தளபதிகளையும் ஆயுதக் கருவிகளாக்கியது சிங்கள அரசு. கிழக்கில் கருணா போலவே வடக்கிலும் ஒரு கருணா தயாராக்கப்பட்டார்.

சும்மா சொன்னால் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் காலம் கனியும்வரை காத்திருந்தார்கள். அதற்காக மாவீரர் தினத்தைக் குறி வைத்து வேகமாகச் செயற்பட்டார்கள். மௌனிக்க வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தமது மாவீரச் செல்வங்களுக்கு விளக்கேற்றவோ அவர்கள் கல்லறைகளில் மலர் தூவி அழவோ முடியாமல் தவித்து நிற்க... புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தேசியக் கடமைக்காகத் திரண்டனர். உலகம் முழுவதும் மாவீரர் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அந்த நிகழ்வுகள் நடந்தேறிய மண்டபங்கள் எல்லாம் வரலாறு காணாத தமிழர் கூட்டங்களால் நிறைந்து வழிந்ததனால் அதன் ஏற்பாட்டாளர்களே திக்குமுக்காடிப் போய்விட்டார்கள்.

புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியைத் தடுக்கத் தயாராகியிருந்த சதிக் கரங்களை உசுப்பிவிட்டது சிங்கள தேசம். விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தபால் தலையில் சிங்களத்தால் சிறை பிடிக்கப்பட்ட தளபதி ஒருவரின் பெயரில் அறிக்கை ஒன்றும்இ ஒளித்தட்டு ஒன்றும் உருவாக்கப்பட்டு இணையத் தளங்களுக்கும் ஒரு சில தமிழர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. தளபதி ராம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் சிங்கள அரசின் கொடூரங்கள் பற்றி ஒற்றைவரிச் செய்தி கூட எழுதப்பட்டிருக்கவில்லை. தமிழீழம் - சிறிலங்கா என்ற தேசங்களைக் குறிக்கும் சொற்கள் தவிர்க்கப்பட்டு இலங்கை அரசு என்றும் இலங்கைத் தீவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவினால் தயாரிக்கப்பட்ட இந்த மாவீரர் தின அறிக்கை பாரிஸ் லாசப்பல் கடைத் தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத வேளையில் விரைந்து விநியோகம் செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்கள். பாவம்... அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை இது. சிங்களத்தின் சதியாளர்களின் வழக்கமான பாணியாக விநியோகிக்கப்பட்ட இந்த துண்டுப்பிரசுர அறிக்கையும் ஒளித் தட்டும் வர்த்தகர்களால் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இத்தனை காலமும் ஈழத் தமிழர்களை சுட்டெரிக்க ஏவப்பட்ட அத்தனை துரோகங்களும் அவர்களைப் புடம் போட்டதே தவிர பொசுக்கிவிடவில்லை. தமிழ்த் தேசிய உணர்வு கொண்டு... விடுதலை வேட்கையோடு விடுதலைப் புலிகளுடன் இணைந்து தாய்நாட்டை மீட்கப் புறப்பட்ட ஈழத் தமிழர்களது வைராக்கியத்தை இந்தத் துரோக நெருப்புக்களால் சுட்டெரிக்க முடியவில்லை. மாறாக... விடுதலை வேண்டும் அந்த இதயங்களில் கோபக் கனலை மூட்டி வேகப்படுத்தியதே தவிர சோர்வுக்குள் தள்ளவில்லை.

சிங்களஅரசின் ஏவல் பிசாசுகளாக்கப்பட்ட இந்தத் துரோகக் கூட்டங்கள் தம் சொந்தத் தமிழர்களின் துயரங்கள் தீர என்ன செய்தார்கள்? டக்ளசாலும் கருணாவாலும்... ஆனந்தசங்கரியாலும்... பிற ஒட்டுக் குழுக்களாலும் ஈழத் தமிழர்களுக்காக எதைச் சாதிக்க முடிந்தது? தப்புத் தாளங்கள் போடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் எதைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது? மனிதாபிமானம் மிக்க உலக நாடுகளே கண்டிக்கும் தமிழின அழிப்பைத் தடுக்க முடிந்ததா? முள்வேலி முகாம் மக்களின் அவலங்களைப் போக்க முடிந்ததா? மீள் குடியேற்றம் என்ற பெயரில் அந்த மக்கள் அநாதைகளாக்கப்பட்டு... அடையாள அட்டைகளில் குறிக்கப்பட்டுள்ள வெகுகாலமாகத் தொடர்பே இல்லாத பிறந்த கிராமங்களில் நிர்க்கதியாய் விடப்படும் கொடுமைகளை எதிர்க்க முடிந்ததா? மனித இனமே வெட்கப்படும் இழிநிலை வாழ்க்கை வாழ்ந்து... சிங்கள அரசு வீசி எறிவதைப் பொறுக்கும் இவர்களால் ஈழத் தமிழர்கள் எதையும் பெறப் போவதில்லை.

சிங்கள தேசத்தால் அடிமைப்படுத்தப்பட்டு மௌனிக்க வைக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் ஒற்றைப் பலமாக புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து போராடுவதை எந்த சக்தியினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை நடைபெற்று முடிந்த மாவீரர் தின எழுச்சி உலகிற்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளது.

எங்கள் தேசம் விடியும்வரை... எங்கள் மக்கள் விடுதலை பெறும்வரை நாங்கள் ஒன்றாக... எங்கள் தேசியக் கொடியின்கீழ்... எங்கள் தேசியத் தலைவரின் ஆணையை ஏற்றுப் போராடுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது. அதற்காக இணைந்த எங்கள் கரங்களைப் பிரித்து விடவும் முடியாது என்பதை மாவீரர் தின அணிவகுப்பின் மூலம் சிங்கள அரசுக்கும் அதன் எடுபிடித் துரோகிகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது என்று நான் சொல்லவில்லை: திடீரென குத்துக்கரணம் அடிக்கும் கருணாநிதி


தமிழினத்தின் துரோகி கருணாநிதி செய்வதெல்லாம் செய்து விட்டு இப்போது திடிரென ஒரு கேள்வி பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். உலக தமிழினத்தின் தலைவராக வேண்டும் என்ற இரட்டை வேட முயற்சியில் தமிழின துரோகி என்ற பட்டத்தால் வெந்து போயுள்ள ஐயாவின் கேள்வி பதில்.


முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,

கேள்வி: ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள ஒரு பேட்டியில் “இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது. நான் மவுனமாக அழுவது யாருக்கு தெரியும்?” என்கிறாரே கருணாநிதி? என்ற கேள்வி கேட்கப்பட்டு அதற்கு வேக வேகமாக பதில் சொல்லப்பட்டிருக்கிறதே?

பதில்: நான் எனது கடிதத்தில், “இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது” என்று எந்த இடத்திலும் எழுதவே இல்லை. ஆனால் நான் எழுதாததை, நான் கூறாததை கூறியதாக ஒரு கேள்வியைக் கேட்கச் செய்து, அதற்கு என்னைத் தாக்கி பதில் கூறப்பட்டுள்ளது. நான் என்னுடைய கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறேன். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை.

இப்படி சகோதர யுத்தம் காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டோம். முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறினோம்.

இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக்கொண்டு போய்விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை நான் எழுத நேரிட்டது.

இப்படியெல்லாம் பொதுவாக என்னுடைய வேதனையை வெளிப்படுத்தினேன். அதையெல்லாம் மறைத்துவிட்டு இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது என்று நான் சொன்னதாக கற்பனையாக ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அதற்காக என்மீது பாய்ந்து விழுந்து குதறி பதில் சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்த இதழ் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது! அந்த இதழின் சிறப்பு செய்தியாளர் ஒருவர் நான் எழுதாததை எழுதியதாகச் சொல்லி கேள்வி கேட்டு அப்படி நான் எழுதினேனா இல்லையா என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஒருவர் என்னைத் தாக்கி பதில் சொல்லியிருப்பது; என் மீது வசை பாடுவதற்காகவே இருவரும் சேர்ந்து ஜோடித்த நாடகமேயாகும்.

கேள்வி: ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள ஒரு பேட்டியில் “சகோதர யுத்தம் நடத்தியதால் தான் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக கருணாநிதி சொல்கிறாரே?” என்று ஒரு கேள்வியும் அந்த இதழில் கேட்கப்பட்டு, அதற்கும் உங்களைத் தாக்கி பதில் கூறப்பட்டுள்ளதே?

பதில்: இதுவும் நான் சொல்லாததுதான். சகோதர யுத்தம் நடந்தது என்று சொல்லியிருக்கிறேன். அதனால் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் சொல்லவில்லை. சகோதர யுத்தம் காரணமாக ஒட்டுமொத்தமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதிலே என்ன தவறு என்று தெரியவில்லை.

கேள்வி: “மாவீரன் மாத்தையா” என்று நீங்கள் ஒரு துரோகியை அழைத்து விட்டதாக அந்த இதழுக்கு பேட்டி அளித்தவர் சொல்லியிருக்கிறாரே?

பதில்: மாத்தையாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரே அவர்தான்! அப்போது அவரை மாவீரன் மாத்தையா என்று தான் அறிமுகம் செய்துவைத்தார்.

கேள்வி: அந்த இதழில் வந்த பேட்டியில் “வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னதெல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டது என்று வேதனைப்படுகிறாரே கருணாநிதி?” என்ற ஒரு கேள்வியும் இடம் பெற்று, அதற்கும் பேட்டி அளித்தவர் எந்த அளவிற்கு உங்களைத் தாக்க முடியுமோ அந்த அளவிற்கு தாக்கி பதில் அளித்திருக்கிறாரே?

பதில்: இந்த கருத்து நான் எழுதியது தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதிலே என்ன தவறு? “விடுதலைப்படை முகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு தளபதிகளுக்கு தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக்கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு; இது போன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்” என்று நான் எழுதியது உண்மைதான். இதிலே எந்தப் பிழையும் இருப்பதாக நான் இப்போதும் உணரவில்லை. நாம் கூறியதை அலட்சியப்படுத்தி இப்போது நம்மைத் தாக்கி மிக வேகமாக பதில் சொல்லியிருப்பவர்கள் சொன்ன யோசனைகளையெல்லாம் கேட்ட காரணத்தினால்தான் இன்று இலங்கை தமிழினம் அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாகி தவிக்கின்றது என்பதுதான் ஆதாரபூர்வமான உண்மை!

வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு என்று நான் கூறியிருப்பதில் இருந்தே, அவர்களின் வீரத்தைப் பாராட்டியிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு நம்மைத் தாக்க வேண்டுமென்ற வெறி கொண்டவர்களுக்கு அப்படித்தான் பதிலளிக்கத் தோன்றும். வீரத்தையும், விவேகத்தையும் பற்றி நான் இப்போது கூறவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய “சாக்ரடீஸ்” ஓரங்க நாடகத்திலேயே “வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! அறிவாயுதம்! அறிவாயுதம்!” என எழுதியிருக்கிறேன். அந்த வசனத்தை பல மேடைகளில் பேசிக் காட்டியவர்கள்தான் இப்போது அதனை இழித்துரைக்கிறார்கள். எனக்கு அப்போது பேசியதுதான் மனதிலே நிற்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்..

அக்கட்சியின் ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தனர்..

இவர்களுடன் கிழக்கு மாகாணத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கடந்த 3 வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்த அக் கட்சியின் பொதுச் செயலாளரான பிரசன்னா இந்திரகுமாரும் தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ளார்.

தமது கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கட்சி உறுப்பினர்களுடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டனர்..

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்களையும் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளரொருவரை நிறுத்துவது தொடர்பாகவும் கருத்துக்களை பரிமாறியதாகவும் தெரியவருகின்றது. .

தற்போது மட்டக்களப்பில் தங்கியுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிர்காமர் மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிய பின்பு அன்றிரவே கொழும்பு திரும்பினர்.

Sunday, November 29, 2009

மாவீரர்நாள் நிகழ்வுகளில், பல்லாயிரக்கணக்கான மக்களால் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” உறுதிமொழி எடுக்கப்பட்டது

உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களால், மாவீரர்நாள் நிகழ்வுகள் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இந்நிழ்வில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களால் இறுதியில்:

தமிழீழ தாய் நாட்டிற்க்காக


தமது இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை


நினைவு கூரும் இப்புனித நாளில்.


நான்மேற் கொள்ளும் உறுதிமொழியாவது


ஈழத்தமிழனாகிய நான்


உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும்


தமிழீழமே எனது இலட்சியம்!


இந்த இலட்சியத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதுடன்


சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழ தனியரசான


எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்பேன் என


இந்நாளில்உறுதி மொழி எடுத்துக்கொள்கிறேன்!


‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

எனும் உறதி மொழி எடுக்கப்பட்டு பின் தமிழீழ தேசியக்கொடி இறக்கப்பட்டு “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் எம் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.



விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாக சிங்கள அரசு நாடகம்

இந்தியாவை நம்ப வைக்க பிரபாகரனை கொன்று விட்டதாக சிங்கள அரசு நாடகம் ஆடுகிறது என்று ஈழ தமிழ் எம்.பி. ஜெயானந்தமூர்த்தி கூறியுள்ளளார்.

விடுதலைப்புலி தலைவர் 1989 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை உரையாற்றிய மாவீரர் தின உரைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்துக்கு பழ. நெடுமாறன் அணிந்துரை எழுதியுள்ளார். கவிஞர்கள் காசிஆனந்தன், பெருஞ்சித்திரனார் கவிதை எழுதி உள்ளனர்.இந்த புத்தக வெளியீட்டு விழா இலங்கையில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ்.ஜெயானந்தமூர்த்தி,

பிரபாகரனின் மாவீரர் தின உரைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிடுவது இந்த காலக் கட்டத்தில் மிகவும் அவசியம். இந்த உரைகளை படித்துப்பார்த்தால் பிரபாகரன் தன் கொள்கையில் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளார் என்பது தெளிவாகப் புரியும்.

ஈழம் நாட்டை உருவாக்க அவர் எத்தனையோ விஷயங்களில் விட்டுக் கொடுத்துள்ளார். சர்வதேச சக்திகளிடம் பேச்சு நடத்தி உள்ளார்.

ஆனால் சர்வதேச சமூகம் அவருக்கு துரோகம் செய்து விட்டன. இப்போதும் பல நாடுகள் அவருக்கு எதிராக செயல்படுகின்றன.

ஈழத் தமிழர்களின் விடுதலையே இறுதி மூச்சு என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இந்த உண்மையை தற்போதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போதைய சூழ்நிலையில் என்னால் பல விஷயங்களை வெளியில் சொல்ல இயலாது. ஈழத்தமிழர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். காலம் வரும்போது அனைத்தும் வெளியில் வரும்.

எமது தலைவர் பிரபாகரன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் தன் உடல் எதிரிகளின் கைகளில் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தவர். இதற்காகவே தன் அருகில் போராளிகளை வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் உடலை முள்ளி வாய்க்காலில் கண்டெடுத்தோம் என்று சிங்கள அரசு கூறும் கதையை சிறுபிள்ளை கூட நம்பாது.

இந்தியாவை நம்ப வைக்க இப்படி ஒரு நாடகத்தை இலங்கை அரசு நடத்தியது. எனவே நம் லட்சியத்தை அடையும் வரை அரசியல் ரீதியிலான போராட்டங்களை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றார்.

மக்களைக் கொல்லும்படி ஆணையிட்டது கோத்தபாய தான்: பொ‌ன்சேகா


இறுதிக் கட்ட போ‌ரி‌ன்போது வன்னியிலுள்ள தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலர் கோத்தபாயதான் ஆணையிட்டதாக மு‌ன்னா‌ள் இராணுவ‌த் தளப‌தி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இல‌ங்கை‌யி‌ல் அ‌தி‌ப‌ர் தேர்தல் ஜனவரி 26 ஆம் தே‌தி என அறிவி‌ப்பு வெளிவிடப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகா தனது அரசியல் முடிவு குறித்து இன்று அ‌திகார‌ப்பூ‌ர்வமாக அறிவித்துள்ளார்.

ஆனால் அவர் இராணுவ தளபதியாக இருந்தபோது அணுகிய விதத்துக்கும் இப்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக இலங்கை வாராந்த ஆங்கில இதழின் செய்தியாளர் கூறியுள்ளார்.

இச்செய்தியாளரை தமது அலுவலகத்துக்கு அழைத்த சரத் பொ‌ன்சேகா அவருடன் பேசியுள்ளதாக த ஏஷியா ட்ரிபூன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூறப்பட்டுள்ள குற்றச்சா‌ற்றுக்கள் குறித்து பத்திரிகையாளரும் கேட்டுள்ளார். அதற்கு, வன்னியிலுள்ள தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலர் கோத்தபாயதான் ஆணையிட்டதாக கூறியுள்ளார் சரத் பொன்சேகா.

கொளத்தூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சி (வீடியோ இணைப்பு)


தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற தொடங்கிய காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தமிழீழத்தில் சிங்கள பேரினவாதிகளின் கொடூரங்கள் அதிகரிக்க தொடங்கிய காலமான 1983 இல் தமிழீழ விடுதலைப்போராளிகளுக்கு அடைக்கலம் தந்து அனைத்து உதவிகளை புரிந்த சேலம் மாவட்ட கொளத்தூர் மக்கள் மாவீரர் நாளான 2009 நவம்பர் 27 அன்று தமிழீழ விடுதலைபோராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுகு பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் வீரவணக்கம் செலுத்தினர்.

நேற்று மாலை சரியாக 6.05 மணியளவில் கொளத்தூர் அருகில் 1983 இலிருந்து 1989 வரை விடுதலைப்புலிகள் பயிற்சி எடுத்த இடத்தில் தளபதி பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட “புலியூர் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில்” பெரியார் திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்டத்தலைவர் செ.மார்ட்டீன் தலைமையேற்க மாவீரர் பாடல்கள் ஒலிக்க வீரவணக்க நிகழ்வு ஆரம்பமானது.

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயர் கொண்ட இரு மாணவர்களும் , பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியின் சகோதர் தா.செ.பழனிச்சாமியும் தீபம் ஏற்றி வீரவணக்க நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.

கொளத்தூர் பொதுமக்கள் பெண்கள், முதியவர்கள் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் திரளாக திரண்டு வந்து வரிசையில் நின்று அமைதியாக தீபம் ஏற்றி மலர் தூவி தங்கள் வீரவணக்கத்தினை செலுத்தினர்.

இந்நிகழ்வினை பெரியார் திராவிடர் கழகத்தின் டைகர் பாலன் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார். ஒன்றியத்தலைவர் சூரியகுமார், ஒன்றிய அமைப்பாளர் காவை ஈசுவரன், ஒன்றியச்செயலாளர் காவை இளவரசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் விசயக்குமார், நகரச்செயலாளர் இளஞ்செழியன், காவை சசிக்குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை கவனித்தனர்.

முன்னதாக சேலம் கோவிந்தப்பாடி அருகில் “பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நகர்” பெயர்ப்பலகையை தோழர்கள் காவை ஈசுவரன் சேலம் டேவிட் ஆகியோர் திறந்து வைத்தனர்.











இத்தாலியில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு


2009ம் ஆண்டிற்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி வணக்க நிகழ்வுகளும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இத்தாலி பலெர்மோ நகரில் 27.11.2009 வெள்ளிக்கிழமை மாலை 4மணிக்கு teatro Don Orione மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொது சுடரினை மாவீரர் கப்டன் வண்ணன் அவர்களின் சகோதரன் ஏற்றி வைத்தார். சிறப்பு அழைப்பாளர் திரு. சத்தியதாசன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மணியொலி எழுப்பப்பட்டு அகவணக்கம், சுடர்வணக்கம், மலர் வணக்கம் ஆகியன இடம்பெற்றது. தொடர்ந்து பலெர்மோ கலைபண்பாடடுக்கழகத்தினர் வழங்கிய மாவீர எழுச்சி கானங்களும் இடம்பெற்றது.

அடுத்து மாவீரர் பற்றிய விவரணம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் விடுத்த கொள்ளை விளக்க அறிக்கை ஆகியவையின் தொகுப்பும் வெண்திரையில் காண்பிக்கப்பட்டது.தொடர் நிகழ்வாக மாவீரர் நினைவு நடனங்கள், மாவீரர் நினைவுப் பேச்சுக்கள்இ எழுச்சி நடனங்கள்இ நாடகம் என்பன இடம்பெற்றன.

வணபிதா திரு. பீற்றர் அவர்களின் உரையும். சிறப்பு விருந்தினர் திரு. சத்தியதாசன் சிறப்புரையும் இடம்பெற்றது. அதனை அடுத்து மக்கள் அனைவரும் எமது லட்சியத்தை அடையும் வரை அதற்காக தொடர்ந்து உழைப்போம் என இவ்வீரர்களை நினைக்கும் புனித நாளில் உறுதி எடுத்து கொண்டனர்.

இறுதி நிகழ்வாக தேசியக் கொடி. இறக்களுடன் நம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலிக்க எமது தாரகமந்திரம் உச்சரித்து எழுச்சியுடன் இரவு 9:30 மணிக்கு நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றது.









கனடாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு


கனடா டொரோண்டோவில் வெகு சிறப்பாக மாவீரர் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இன் நிகள்வு, மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. அகவணக்கம், நாட்டிய நாடகங்கள், இசை உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றது.

கனடா டொரோண்டோவில்














பேரினவாதத்தின் கைப்பொம்மை; தமிழ் - சிங்களப் புரோக்கர்; மத்தியில் கிழிந்த ஆட்சி, மாநிலத்தில் நைந்த ஆட்சி புரியும் தோழருக்கு சனீஸ்வரனின் இரண்டாவது மடல்

"நவம்பர் 27 கொலைகாரர்கள் தினம்" என்று நேற்றைய தினம் மன்னாரில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய இலங்கையின் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அறிக்கையை வாபஸ் வாங்குமாறு கோரி யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார்.

சனீஸ்வரனின் அறிக்கையின் முழுவடிவம்:-

வார்த்தைகளால் வரிக்க முடியாக ஈகத்தைப் புரிந்த மகத்தான அந்த மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி “கொலைகாரர்கள் தினம்” என்று வர்ணித்து உன் சுயரூபத்தையே காட்டிவிட்டாயேடா நீயா தமிழரின் பிரதிநிதி - நீயா மக்கள் தொண்டன் - நீயா ஈழத்தின் விடிவெள்ளி – உன்பின்னால் கோஷம் போட்டுத் திரியும் கூட்டம் கூட உன்னை மன்னிக்காதடா மாபாவி – நடந்து முடிந்தவற்றை எண்ணி மனதுக்குள் மௌமாக அழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் உணர்வு புரியாது கொலைகாரர்கள் தினம் என்று கொக்கரித்தாயே நாசமாய்த்தான் போவாயடா…

வேலை கேட்டுத்திரியும் யாழ்ப்பாணத்து இளஞ்சமூகமே சிந்தியுங்கள். உங்கள் வீடுகளிலும் ஒரு மாவீரன் இருப்பான் - அவனும் கொலைகாரனா - இந்த இரக்கமற்றவனிடம் கையேந்துவதை விடுத்து சிங்களவனிடம் கையேந்துங்கள். அவன் வேலை தருவான். துரோகியிடம் செல்வதை விடுத்து விரோதியிடம் செல்லுங்கள். இவனின் வேலைப்பிச்சையால் சோறு தின்பதை விட மலத்தை உண்ணலாம்.

முப்பத்தையாயிரம் இளம் பிஞ்சுகளின் தியாகத்தை ஒரு வார்த்தையால் மிதித்துவிட்டான் பாவி. உன்னை தாய் மண்ணை, தாயை நேசிக்கும் எங்கள் வீட்டு சொறி நாய் கூட மன்னிக்காதடா? பிரேமதாசாவின் வேட்டிக்குள்ளும் சந்திரிக்காவின் பாவாடைக்குள்ளும் இன்று மகிந்தனின் வேட்டிக்குள்ளும் ஒளித்திருந்து அரசியல் செய்யும் உனக்கு தியாகம் என்ற ஒற்றைச் சொல் புரியாது தானடா பாவி. மக்களையும் மாவீரரையும் பிரித்து பார்க்காதேடா பாவி.

நீ ஒரு தமிழ் தலைவனாக இருக்க ஏன் ஒரு மனிதனாக இருக்க கூட தகுதியில்லாதவன். தான் கொண்ட இலட்சியத்திற்காக தன்னையே ஆகுதியாக்கிய எங்கள் குழந்தைகளை கொலைகாரர்கள் என்று சொன்னால் நீ யாரடா படுபாவி. யாழில் வாழும் ம(h)க்களே இவன் பேச்சை மன்னிக்கப் போகின்றீர்களா.

இவனது வேலை வாய்ப்பை நம்பி இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடப் போகின்றீர்களா? இவனின் காசு வாங்கி கோயில் கட்டினால் பாவம்தானடா மிஞ்சும். இவனது காசில் வாசிகசாலை திருத்தினால் அறியாமைதானடா எஞ்சும். இவனிடம் திரிந்து ஊர்வலம் சென்று போஸ்டர் ஒட்டி காசு லஞ்சம் கொடுத்து கேவலம் ஒரு வேலை வாங்குவதைவிட நாக்கை பிடுங்கிக் கொண்டு கொண்டு சாவதே மேலடா.

கேடு கெட்ட இனமல்லடா எங்கள் இனம். கங்கை கொண்டு கடாரம் வென்று கோலோச்சிய இனமடா எங்கள் இனம். மஞ்சள் துண்டுக்கு கழுத்தறுத்த சிங்களவனிடம் மடியேந்திப் பிச்சை கேட்பதா? ஏனடா இவனும் இவனது தலைவன் பத்மநாபாவும் போராடப் போனாங்கள். மதகு திருத்தவும், தார் ஊற்றவுமாடா போனவங்கள்.

யாழ்ப்பாணத்து இளைஞர்களே எல்லோரும் ஒரு கணம் சிந்தியுங்கள்.

மாவீரர்களின் தொகை முப்பத்தையாயிரத்தை தாண்டிவிட்டது. ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு மாவீரனோ போராளியோ இருக்கும் நிலை தமிழீழத்தில் இன்று காணப்படுகின்றது. இவர்களனைவரையும் கொலைகாரர்கள் என்று கூறி கொச்சைப்படுத்தும் ஒரு கூட்டத்தின் பின்னால் திரிந்து போஸ்டர் ஒட்டி கோஷம் போட்டு, ஊர்வலம் சென்று, சங்கு ஊதி பிழைப்பதை விடுத்து சுய தொழில் ஒன்றை தேடிக் கொள்ளுங்கள்.

வேலையில்லாப் பட்டதாரிகளே! இவனுக்கு பின்னால் சென்று ஊம்பித்தான் வேலை எடுக்க வேண்டும் என்றில்லை. உங்களுக்கு கட்டாயம் சிங்கள அரசு வேலை தரவேண்டும். அவன் தாறதை இவன் ஏதோ தான் தாறதாக நடிக்கிறான் அவ்வளவும்தான்.

நீங்கள் அன்று பல்கலைக்கழகத்தில் இருந்து செய்யத பொங்கு தமிழை நினைத்து பாருங்கள். இப்போது வேலை கேட்டு அவன் வாசலில் போய் நிற்க வெட்கமாயில்லை.

உயர்ந்தவர்கள் நாமெல்லாரும்
உலகத்தாய் வயிற்று மைந்தர்
நசிந்து இனி கிடக்க மாட்டோம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்

உங்களது கோஷத்தை சனீஸ்வரன் உங்களுக்கு சொல்லி தர வேண்டியதில்லை. புரிந்து கொள்ளுங்கள்.

தோழரே! நீர் திருந்துவீர் மக்கள் தொண்டனாய் மாறுவீர் என்று எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் மாவீரச் செல்வங்களை கொலைகாரர் என்று கூறியதன் மூலம் பேரினவாதத்தின் பிச்சைக்காரன் நீர் என்பதை மீண்டும் ஒருமுறை அறியத்தந்துவிட்டீர்.

உமது மனதில் இன்னும் கொஞ்சம் ஈரம் ஒட்டியிருந்தால் உமது அறிக்கையை வாபஸ் வாங்கி எங்கள் வயிற்றெரிச்சலை சம்பாதிக்காமல் இரும்.

மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும் வரை
யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

தமிழ்வின்

Saturday, November 28, 2009

சுவிஸ் நாட்டில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2009!


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமதின்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து சுவிஸ் ஃபிறிபுர்க் ஃபோரம் பிரம்மாண்ட மண்டபத்தில் மாவீரர் நாள் 2009 நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாக நினைவுகூரப்பட்டது.

நண்பகல் 12.45 மணியளவில் மாவீரர்களைப் பெற்றெடுத்த தந்தை ஒருவரினால் பொதுச்சடர் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து திமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கொள்கைவிளக்க உரை தொடர்ந்து வெண்திரையில் ஒளிபரப்பப்பட்டது. இன்றைய இடர்மிக்க காலகட்டத்தில் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது உரையினை தரமுடியவில்லை என்று முன்னுரை வழங்கியபோது மண்டபத்தில் கரகோசம் எழுப்பி தலைவர் வருவார் நம்பணி தொடர்வோம் என்று மக்கள் ஆர்ப்பரித்ததை குறிப்பிட்டாக வேண்டும்.

மக்கள் மனதில் நம்பிக்கையையும் சுயவழிப்புணர்வையும் வளர்த்தெடுத்த தேசியத்தலைவர் தமிழீழத்தை நோக்கி மக்களை வழிநடாத்துவார் என்பது திண்ணம். தமிழர்களின் தேசியத் தலைவரது பாதையில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்றும் பயணிப்போம்! தடைகள் பெரும் இடர்களைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதை கருப்பொருளாகக் கொண்டு தலைமைச் செயலகத்தின் உரை அமைந்தது. தமிழின விடுதலைக்காய் தலைவரும் போராளிகளும் உறுதியுடன் தம்மை வழிநடாத்த வேண்டும் என்று அவாவி நின்ற மக்களுக்கு அப்பணிகளைத் தொடர்ந்து செய்வோம் என்ற உறுதிமொழியானது மக்கள் தமக்கான பணிகளை விரைவுபடுத்திச்செல்ல ஆர்வத்தையம் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கும் என்பது திண்ணம்.

உரையின் முடிவில் மணியோசை மண்டபம் நிறைக்க பறைமேளம் வான்வரை ஓசை எழுப்ப மாவீரர்களுக்கான ஈகைச்சுடர் மாவீரரைப் பெற்றெடுத்த தாயார் ஒருவாரால் ஏற்றிவைக்கப்பட்டது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி மாவீரர் துயிலும் இல்லமும் குறிப்பாக கரும்புலிகளுக்கான தூபிகளும் மின்விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு உத்தமர்களின் உறைவிடம் ஒளிப்பிரகாசமானது. நெய் விளக்கேந்தி மாவிரர் குடும்பத்தவர் வரிசையாக நிற்க தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே என்கின்ற கல்லறைப்பாடல் மக்களின் மனங்களையெல்லாம் ஆக்கிரமித்துக்கொண்டது. மலர்வளயமும் திபங்களும் மாவீர் நினைவுத்தூபி நோக்கி எடுத்துவரப்பட்டு சிறப்பு விருந்தினர் திரு. தணி குமார் சேரன் அவர்களால் மலர்வளயம் சாற்றப்பட மாவீரர்களது குடும்ப உறினரால் சுடர்வணக்கமும் தேசிய மலராம் கார்த்திகைப்பூக்கொண்டு மாவீரர்களுக்கான மலர்வணக்கமும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் கலைபண்பாட்டுக்களக இசைக் குழுவினரால் மாவீரர் கானங்கள் இசைக்கப்பட மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் நிகழ்ந்துகொண்டிருந்தன. எமக்காய் வாழ்ந்து எமக்காய் மடிந்த ஈகைச் செல்வங்களே உங்களைப் போற்றுவதால் நாம் புனிதமடைகின்றோம்! உங்கள் கல்லறை மீதுமே சத்தியம் செய்துமெம் பணி தொடர்வோம் என்று வரிசையாக மக்கள் மாவீரர்தூபி நோக்கி அணிவகுத்து மலர் தூவி சுடர் ஏற்றி தமது வணக்கத்தைச் செலுத்தினர். எங்கிருந்து என்பது புரியாது. எவர் பிள்ளைகள் என்று பாராது. என்பிள்ளைதான் நீயோ என்று எல்லோரும் தமது பிள்ளைகளாய்எண்ணி மாவீர்களை பூசித்த காட்சியானது தமிழினத்தையும் ஈழவிடுதலையையும் எந்தத் துரோகமும் எந்த சதித் தந்திரங்களுக்கும் வென்றுவிடமுடியாது அவை தூர விரட்டியடிக்கப்படும் என்பதை உணர்த்திநின்றது.

என்றுமில்லாதவறு மண்டபம் நிறைந்த மக்கள். ஒவ்வொருவரும் பொறுப்புடன்கூடிய சிந்தனை. நான் என்பது தொலைந்து நாமாக வளர்ந்து தேசியம் அங்கே திடகாத்திரத்தோடு நின்றது. மண்டபமேடையில் இவ் ஆண்டின் சிறப்பு வெளியீடுகளாக எழுச்சிகானங்களை உள்ளடக்கிய 3 இறுவெட்டுக்கள் மாவீரர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மொழிப்பற்றாளரும் தமிழீழ தேச விடுதலைக்காய் குரல்கொடுத்துவருபவருமான திரு. தணி குமார் சேரன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டன. தொடர்ந்த சிறப்புவிருந்தினரின் சிறப்புரை இடம்பெற்றது. மக்களின் உறுதியான போராட்டம் தொடரவேண்டிய அவசியத்தையும் இனவிடுதலை என்பது ஈழவிடுதலையைத் தவிர வேறெந்த வழியிலும் சாத்தியமாகப்போவதில்லை என்பதையம் விலியுறுத்தி அவரது பேச்சு அமைந்தது.

நிகழ்வின் தொடர்ச்சியாக சுவிஸ் கிளையின் தமிழீழ கல்விச் சேவையினரால் நடாத்தப்பட்ட மாவீரர் நாள் பேச்சுப் போட்டியில் பங்குகொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் பல்கலைக்களக பேராசிரியரும் தமிழர்களின் உரிமைக்காய் நீண்டகாலமாய் குரல் கொடுத்துவருபவருமான மதிப்பிற்குரிய திரு. பீற்றர் சால்க் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தார். அனைத்து மாணவர்களும் மேடையில் வீற்றிருக்க 13 வயதுப் பிரிவில் முதலாம் இடத்தை தனதாக்கிய மாணவன் ‘தமிழீழ விடுதலைப் போரில் பால்ராஜ் அண்ணா’ என்ற தலைப்பில் உரையாற்றி மக்களின் பாராட்டினைப் பெற்றார்.

தொடர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை கலைபண்பாட்டுக் களகத்தினரால் வழங்கப்பட்ட ‘வித்துக்கள்’ என்கின்ற நாட்டிய நாடகம் தமிழ் மக்களின் இன்றைய அவலம் நிறைந்த வாழ்வுக்கு காரணமாயிருந்த முள்ளிவாய்க்கால்வரைக்குமான யுத்தம் எவ்வாறு நடைபெற்றுது? உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு உன்னதமான விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக எப்படித் திருப்பிவிடப்பட்டது என்பதையெல்லாம் ஆதாங்களோடு விளக்கியது. அத்தோடு போராட்டத்தின் ஒரு அங்கமான பலம்பெயர் தமிழர்களின் போராட்ட எல்லை எது அதன் தொடர்ச்சி என்ன தொடர்ச்சியான போராட்டங்களினூடாக இன்று வதைமுகாம்களில் உள்ள மக்கள் உட்பட ஈழத்தாயின் அனைத்து மக்களுக்கமான பாதுகாப்பான வாழ்வை மீட்கவேண்டும் போன்ற கருத்துக்களை தத்ரூபமாக வெளிப்படுத்தியது.

இறுதி நிகழ்வாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளையின் அறிக்கை வாசிக்கப்பட்டது. தமிழீழ விடுதலையை வென்றெடுக்க தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வழிநடாத்துதலில் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்டுமானங்களையும் பலப்படுத்தி தொடர்ந்து போராடுவோம் என்றும் தலைவனுக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் எந்நாளும் பக்கபலமாய் உள்ள மக்கள் தமக்கான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இப்பணிகளை உறுதியுடனும் ஒற்றமையுடனும் முன்நின்று எமது கிளை முன்னெடுத்துச் செல்லும் என்றும் உறுதிகூறப்பட்டது.

இவ் ஆண்டின் மாவீரர் நிகழ்வின் சிறப்பம்சமாக பல்வேறு விடயங்கள் தென்பட்டாலும் மக்கள் முழுமனதோடு அனைத்து விடயங்களிலும் ஈடுபட்டமையானது சிறப்பிலும் சிறப்பாகும். உரிய நேரத்திற்கு வருகைதந்து உணர்வுகளால் ஒன்றுபட்டு கிளைச் செயற்பாட்டாளர்களோடு கரம்கோர்த்து அனைத்துப் பணிகளையும் முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய மக்களை பாராட்டியாகவேண்டும்.

மாலை 5 மணிக்கு தேசியக்கொடி இறக்கத்தோடு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. வீடு திரம்பம் மக்கள் முகங்களில் புத்துணர்ர்சி புரையோடி இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மாவீரர்கள் எதிரிக்கு சிம்மாசொப்பனமாகவும் தமிழர்க்கு ஆன்மபலமாகவும் இன்றுமட்டுமல்ல என்றும் விளங்குவார்கள் என்பதை ஒவ்வொரு தமிழர்களின்தும் வார்த்தைகளும் உணர்த்திநின்றது.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் மாவீரர் குடும்ப மதிப்பளிப்புக் குழுவின் ஏற்பாட்டில் முற்பகல் 11 மணியளவில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு அதே மண்டபத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது.

எமக்காய் தமைத் தந்த மாவீரர்களை ஈன்றெடுத்தவர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் கிளைச் செயற்பாட்டாளர்களோடு கூடிநின்று மாவீரராகிய பிள்ளைகளையும் அவர்தம் வாழ்வையம் பகிர்ந்துகொண்டதோடு அப் பிள்ளைகளின் செயலை எண்ணிப்பெருமை பாராட்டினர்.

அவர்களது இலட்சியத்தில் தமிழினம் விடிவுபெறவேண்டும் என்றும் மனதாரப் பிரார்தித்தனர். இந் நிகழ்வின் இறுதியில் எம் தேசியப் பூவாம் கார்த்திகைப் பூக்களை வழங்கி மதிப்பளிப்புக்குழுவினரால் மாவீரர்களின் பெற்றோர் மதிக்கப்பளிக்கப்பட்டனர்.