Tuesday, November 03, 2009

அகதிகள் விடயத்தில் அரசு திடீர் அக்கறை ஜி.எஸ்.பி. சலுகைக்கு "ஐஸ்" வைக்கிறதா?

03-11-2009

அரசின் நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான இலங்கை அரசின் திடீர் அக்கறையும் கரிசனையும்

கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களில் மிகுந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் "ஜி.எஸ்.பி." வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதை நோக்கமாகக்கொண்டு, இந்த வருடத்துக்குள் அகதிகள் மீள் குடியேற்றத்தைப் பூர்த்தி செய்யும் அதிரடி நடவடிக்கை யில் தான் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச சமூகத்துக்கு காட்ட, இலங்கை அரசு முயல்கின்றது என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் நம்புகின்றனர்.

நாளாந்தம் சுமார் மூவாயிரம் பேர் வரை சமீபத்திய நாள்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் என்று மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அறிவித்துள்ளமையைக் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜ தந்திரிகள் மிகவும் கவனத்தில் கொண்டுள்ளதுடன் மீள் குடியேற்ற நட வடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்தும் வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.