கடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்குபற்ற அமெரிக்கா சென்றிருந்த கோத் தபாய ராஜபக்ஷ அங்கு குடிவரவு அதிகாரிகளினால் இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டார். என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
அவர் அங்கு கூறியவை வருமாறு:
கோத்தபாய ராஜபக்ஷ சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை அமெரிக்க அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். ஆனால் மனித உரிமைகள் குறித்து அவரை விசாரிக்க அமெரிக்கர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியீட்டி தந்த இராணுவ தலைவர்கள், அரசியல் தலைவர்களை அமெரிக்கா வேண்டு மென்றே சீண்டுகின்றது. அந்த வகையிலேயே தற்போது ஜெனரல் சரத் பொன் சேகாவை விசாரணைக்கு உட்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளருக்கு எதிரான குற்றங்களை திரட்டுவதற்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் தகவல்களை பெற முயற்சிக்கின்றது. சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் எதனையாவது பெற்றுக்கொண்டு அதனைப் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக பயன்படுத்த அவர்கள் முனைகிறார்கள்.அவ்வாறு பெற்றுக் கொண்டால் அதன்மூலம் ஏதாவது நடவடிக்கைக்கு செல்ல முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட மேற் குலகச் சக்திகள் இலங்கையில் பிரிவினை வாத பயங்கரவாதத்தை தோற்கடிக்க காரணமாக இருந்த, பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட தளபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திட்டமிடுகின்றன என்பது தெளிவாகின்றது.
யுத்த காலத்தின் போது சரத் பொன் சேகா ஆற்றிய கடமைகள் தொடர்பில் அவர்கள் கேள்விகேட்கவில்லை. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆற்றிய கடமைகள் தொடர்பாகவே அவர்கள் சரத் பொன்சேகாவிடம் கேள்வி கேட்பதற்கு தயாராகி வருகின்றனர். பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சூழலை சரத் பொன்சேகாவிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றே அவர்கள் அதன் மூலம் முயற்சி செய்கின்றனர் என்பதை அறியக்கூடியதாக உள்ளது என்றார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.