Wednesday, November 04, 2009

அணு குண்டு தயாரிப்பதற்கான புளுட்டோனியம் தயார் : வட கொரியா

அணு குண்டு தயாரிப்பதற்கான முக்கிய எரிபொருளாக கருதப்படும் புளுட்டோனியத்தை தாங்கள் மிக அதிக அளவில் உற்பத்தி செய்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியிலேயே தனது யாங்பான் அணு வளாகத்தில் 8,000 பயன்படுத்தப்பட்ட எரிபொருள் ( புளுட்டோனியம் ) கம்பிகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கான பணிகள் முடிவடைந்துவிட்டதாக கொரிய அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

அணு ஆயுத பிரச்னை தொடர்பாக அமெரிக்கா தங்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற வடகொரியவின் கோரிக்கையை ஏற்பதில் அமெரிக்கா காலதாமதப்படுத்தி வந்ததால்,தாங்கள் பொறுமையை இழந்துவிட்டதாகவும்,அமெரிக்கா நேரடி பேச்சுவர்த்தைக்கு வராதப்ட்சத்தில் தாங்கள் தங்கள் வழியில் செல்லப்போவதாகவும் வட கொரியா நேற்று மிரட்டல் விடுத்திருந்த நிலையில், இன்று மேற்கூறிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.