ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை வன்னிக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு சென்ற ஜனாதிபதி இராணுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவுடன், அவரின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, வான்டைத் தளபதி ஏயார் சீவ் மாஸ்டர் றொசான் குணதிலக, காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய ஆகியோர் சென்றிருந்தனர்.
துணுக்காயில் அமைந்துள்ள 65 வது டிவிசன் தலைமையகத்தில் மகிந்தவுக்கான வரவேற்று அளிக்கப்பட்டுள்ளது.
அத்துன் துணுக்காயில் பாடசாலை மற்றும் கோயில்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த 1200 மக்களையும் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
அத்துடன் துணுக்காய், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கும் சென்றும் அங்கு படையினருடனும் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்


0 Responses to ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை வன்னிக்கு விஜயம் செய்துள்ளார்