Tuesday, November 03, 2009

அரசியல் பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்கள் நவீன தொடர்பு முறைகளால் ஒற்றுக் கேட்கப்படுகின்றனவாம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய அமைச்சர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஐ.தே.க. பிரமுகர்கள்,

எதிர்க்கட்சிப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களை நவீன தொலைத்தொடர்பு முறைகளைப்பயன் படுத்தி அரசுத் தலைமை ஒற்றுக்கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியன வெகு விரைவில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையிலேயே அரச உயர்பீடம் இந்த ஒற்றுக் கேட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மைத்திரிபால சிறிசேன, ஏ.எச். எம்.பௌஸி, ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, ராஜித சேனாரட்ன, மனோ விஜேரட்ன மற்றும் ஐ.தே.க. பிரமுகர்களான ரணில் விக்கிரமசிங்க, திஸ்ஸ அத்தநாயக்க, தயாசிறி விஜேசே கர, எஸ்.பி. திஸநாயக்க, பாலித ரங்க பண்டார மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் இவ்வாறு ஒற்றுக்கேட்கப்படுகின்றன என்று தெரிய வருகிறது.

சில எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்கள் ஒவ்வொருநாளும் 24 மணித்தியாலங்களும் இடைவிடாமல் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்றும் தெரி விக்கப்படுகிறது. அரசில் அதிருப்தி அடைந்திருக்கும் அமைச்சர்கள் கட்சித் தாவல்களை மேற்கொள்ளக்கூடும் என்பதாலேயே அமைச்சர்களும் இவ்வாறு கண் காணிக்கப்படுகின்றனர் என்று சொல்லப்படுகின்றது.

ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க தமது தொலைபேசி உரையாடல்கள் அரசினால் ஒற்றுக் கேட்கப்படுகின்றது என்று ஊடகங்களுக்கு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.