Monday, November 02, 2009

யுத்தக்குற்றம் தொடர்பில் அமெரிக்கா, தம்மிடம் விளக்கம் கோரலாம் என ஜனாதிபதி ராஜபக்ச தெரிவிப்பு


[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009]

சரத் பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப் போவதாக வெளியான தகவல், தொடர்பில், யுத்தக்குற்றம் தொடர்பாக அமெரிக்கா எதனையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதனை தம்மிடம் கேட்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது:-

கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப்போவதாக வெளியான தகவல், இலங்கையின் அரசியல் தரப்பில், முக்கிய பிரச்சினையாக, எழுந்துள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி நேற்று முக்கிய அமைச்சர்களுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

இதன் போது யுத்தக்குற்றம் தொடர்பாக எவராவது குறிப்பாக அமெரிக்கா, எதனையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதனை தம்மிடம் கேட்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகளினதும் தளபதி என்ற அடிப்படையில் தாமே அதற்கு பதில் சொல்ல முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தக்கலந்துரையாடலின் போது, சரத்பொன்சேகாவை அமெரிக்க விசாரணைகளுக்கு உட்படுத்தவிடாமல் இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இராஜதந்திரி மட்டத்தில் இது தொடர்பான முனைப்புகளை மேற்கொள்வதற்கும் இதன் போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரத் பொன்சேகாவை தமது தரப்புக்கு மாற்றுவதற்கும் ஜனாதிபதியின் தரப்பு முயற்சிகளை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.