[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009]
இலங்கையர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் சட்டவிரோத படகு ஒன்று, அவுஸ்திரேலிய வடமேற்கு கடற்பரப்பில் கடலில் இன்று மூழ்கியுள்ளது. படகில் இருந்து காணாமல் போன குறைந்தது 11 இலங்கையர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
இதன்போது,20 பேர் வரை,பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது, இந்தப் படகில், சுமார் 40 பேர் வரை பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 17 பேர் அவுஸ்திரேலிய கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தப் படகில் நேற்று பின்னிரவு பிரச்சினை ஏற்பட்டதன் பின்னரே இன்று அது மூழ்கியுள்ளது.
அவுஸ்திரேலிய கரையோர கண்காணிப்பு விமானம் இந்தப்படகை அவதானித்தன் பின்னரே அவுஸ்திரேலிய மீட்புக்கப்பல், விரைந்துள்ளது.
ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து 78 இலங்கையர்களை காப்பாற்றிய பின்னர், அது இந்தோனிசியாவுடன் இராஜதந்திர முறுகலை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே 17 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பிந்திய செய்தி
அவுஸ்திரேலிய கடலில் மூழ்கிய படகில் இருந்த குறைந்தது 11 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர். அவுஸ்திரேலிய பிரதமர், இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு
அவுஸ்திரேலிய கடற்பரப்பில்,மூழ்கியதாக கூறப்படும், படகில் இருந்து காணாமல் போன குறைந்தது 11 இலங்கையர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் டைம்ஸ், செய்திதாளின் தகவல்படி,இந்த தேடுதல் நடவடிக்கையில் விமானங்களும்,கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் போது நேற்று 27 பேர் காப்பாற்றப்பட்டதுடன் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது
காப்பாற்றப்பட்டவர்களின் பாரிய அழுகை சத்தத்தை கேட்கக்கூடியதாக இருந்ததாக மீட்பு கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளார்.
காப்பாற்றப்பட்டவர்கள், கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தமது நாடு எதிர்கொள்ளும் நிலைமைகள் தொடர்பாக ஆராய அதிகாரியான ஜோன் மெக்கத்தியை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ரூட் தெரிவித்துள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.