Sunday, March 29, 2009

நோர்வேயில் சீனத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

[ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009] நோர்வேயிலுள்ள சீன தூதரம் முன்பாக நோர்வேவாழ் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா அரசின் போர் பற்றிய விவாதத்திற்கு சீனாவும், ரஸ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்து சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சீனா ஒரு பெளத்த நாடு என்ற அடிப்படையில் இந்தியாவிற்குப் போட்டியாக சிறீலங்கா அரசுக்கு படைத்துறை, மற்றும் பாரிய நிதியுதவிகளை வழங்கி வருகின்றமையும் ஏற்பாட்டாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு, அதிகளவில் தமிழ் மக்கள் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்பாட்டுக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் கீழே: நோர்வேயில் சீனத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல் காலம்: 31.03.2009 செவ்வாய் பிற்பகல் 2மணி முதல் 3மணி வரை இடம்: சீன தூதரகம் முன்பாக (Tuengen Alle 2B, 0244 Oslo) • ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபையில் (UN Security Council) தமிழீழ மக்களின் நிலைமை தொடர்பான விவாதங்களை புறக்கணிக்காது ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரியும், • சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரினைத் தடுத்திடுமாறும், • சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்துமாறும், சீன அரசிடம் வேண்டுகோள் விடுக்கும் முகமாக இக்கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பு: Tuengen Alle 2B எனும் முகவரியில் சீனத் தூதரகம் அமைந்துள்ளது. Frognerseteren ஐ நோக்கிக்செல்லும் 1ஆம் இலக்க நிலக்கீழ் தொடரூந்து (T-bane) மூலம் Vinderen தரிப்பிடத்தில் இறங்குவதன் மூலம் சீனத் தூதரகம் அமைந்துள்ள Tuengen Alle 2Bஐ சென்றடையலாம். (T-bane 1 mot [Frognerseteren ], Gå av på Vinderen stasjon. Gangvei fra Vinderen til Tuengen allé 2B ca . 4 minutter)

விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் சிக்கிய விஜயபா படையணி

[ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009] வன்னிப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிச்சூட்டுத் தாக்குதலில் சிக்கி 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சாலை பகுதியால் நகர்வில் ஈடுபட்டு வரும் 55 ஆவது படையணியின் 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி விடுதலைப் புலிகளின் 10 அடி உயரமான மணல் அணை ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. இந்த மணல் அணையில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலை இடங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நோக்கத்துடள் பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லெப். சந்திரஜித் தலைமையில் 4 பேர் கொண்ட இராணுவ அணி ஒன்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் நிலை இடங்களை அவர்கள் நோக்கி ஊர்ந்து சென்ற போது விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதல் அணியினர் அவர்களை அடையாளம் கண்டு தாக்குதலை நடத்தினர். இதில் லெப். இந்திரஜித் உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன், ஏனைய இருவரும் காயமடைந்திருந்தனர். இவர்களை காப்பாற்றும் முயற்சியில் 7 ஆவது விஜயபா படையணியைச் சேர்ந்த லெப். தாரங்க துசார தலைமையிலான குழுவினர் அங்கு சென்ற போது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அவர்களும் சிக்கி கொண்டனர். தாரங்கவின் தொலைத் தொடர்பினை கையாளும் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், தாரங்கவும் அதிக நீரிழப்பினால் பாதிக்கப்பட்டார். இவர்கள் அனைவரும் வான்குண்டுத் தாக்குதலில் ஏற்பட்ட குழி ஒன்றுக்குள் பதுங்கி கொண்டனர். அதன் பின்னர், அவர்களை காப்பாற்ற கப்டன் அசங்க அன்றூ மற்றும் கப்படன் பிரசன்ன ஆகியோரின் தலைமையில் இரு பிளட்டூன் படையினர் அனுப்பப்பட்டனர். ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அந்த அணியும் சிக்கி கொண்டதனால் கப்டன் அன்றூ உட்பட இரு படையினர் கொல்லப்பட்டனர். இம் மோதல்களில் 7 படையினர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் படுகாயமடைந்திருந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதியுடன் ஹோல்ம்ஸ் பேச்சு: சிறிலங்கா அரசு சீற்றம்

[ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009] தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியாக சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த உரையாடல் வன்னியில் தங்கியுள்ள மக்கள் தொடர்பானது எனவும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஊக்கிவிப்பதானது அல்ல எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போது அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடல் தொடர்பாக மேலதிக தகவல்களை நாம் பெற விரும்புகின்றோம். ஆனால், அது குறித்த உறுதியான தகவல் எதுவும் எம்மிடம் இல்லை என சிறிலங்காவின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாபனுக்கும் ஜோன் ஹோல்ம்சுக்கும் இடையிலான இந்த கலந்துரையாடலை நோர்வேயே ஏற்படுத்தி கொடுத்திருந்ததாக விமல் வீரசன்ச குற்றம் சுமத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 51 தமிழர்கள் படுகொலை: நோயாளர்களை ஏற்ற வந்த கப்பல் மீதும் துப்பாக்கிச் சூடு

[சனிக்கிழமை, 28 மார்ச் 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் உள்ள நோயாளர்களை ஏற்றிச்செல்ல வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மீது சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியதில் கப்பலுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மாத்தளன் கடற்கரைக்கு இன்று சனிக்கிழமை வந்த 'கிறீன் ஒசன்' கப்பல் மீதே சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியுள்ளன. இதில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்ரீன் உட்பட பணியாளர்கள் இருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். இதேவேளையில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 14 சிறுவர்களும் 5 மாத கர்ப்பிணிப் பெண்ணும் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் உட்பட 51 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான கமலநாதன் உதயராணி (வயது 35) கமலநாதன் கபில்ராஜ் (வயது 14) கமலநாதன் பிரியங்கா (வயது 10) கமலநாதன் பிரியதர்சினி (வயது 07) கமலநாதன் புகழவன் (வயது 07) மேற்குறிப்பிட்ட ஐந்து பேரும் மாத்தளன் கப்பல் வீதியில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலின் போது தூக்கத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 5 மாத கர்ப்பிணிப் பெண்ணான துஸ்யந்தன் அருள்மலர் (வயது 35) கமலச்சந்திரன் ரதன் (வயது 17) கமலச்சந்திரன் சரோஜினிதேவி (வயது 40) அன்ரன் (வயது 40) பரமு (வயது 45) நவரத்தினம் சுரேஸ் (வயது 26) ஆறுமுகம் உமாமகேஸ்வரன் (வயது 22) மயில்வாகனம் தங்கரத்தினம் (வயது 65) கனகரத்தினம் சுரேஸ்குமார் (வயது 30) மாடாசாமி முருகேசு (வயது 68) பெரியசாமி தமிழ்ச்செல்வன் (வயது 13) குமாரவேலு நாகலிங்கம் (வயது 38) சுரேந்திரன் கார்த்திகா (வயது 02) அழகன் சண்முகம் (வயது 58) கனகரத்தினம் சுரேஸ்குமார் (வயது 33) கமலநாதன் கபில்ராஜ்(வயது 13) பிரியங்கா (வயது 10) பிரியதர்சினி (வயது 07) புகழவன் (வயது 06 மாதங்கள்) துஸ்யந்தன் (வயது 28) தர்மலிங்கம் குமுதினி (வயது 27) தர்மலிங்கம் தர்சன் (வயது 17) கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 23) கணேசலிங்கம் யமுனாராணி (வயது 48) தர்மலிங்கம் தருமராசா (வயது 38) தர்மலிங்கம் தயாளினி (வயது 26) கேசவன் மகேஸ்வரி (வயது 58) குமாரவேல் நாகலிங்கம் (வயது 48) விசுவலிங்கம் சசிகலா (வயது 38) துஸ்யந்தன் அருள்மலர் (வயது 28) தர்மலிங்கம் தருமராசா (வயது 32) கமலநாதன் கதிராய் (வயது 58) செல்வலிங்கம் கிருசிகா (வயது 09) சுப்பிரமணியம் திருநாவுக்கரசு (வயது 08) வேலாயுதம் மகேஸ்வரி (வயது 04) செல்வரட்ணம் தியானேஸ்வரன் (வயது 43) வேலாயுதம் தாரணி (வயது 21) ம.கார்மேகன் (வயது 42) மாரி பன்னீர்ச்செல்வம் (வயது 26) சவரிமுத்து பிரதீபன் (வயது 26) கார்மேகம் கமலேஸ்வரன் (வயது 32) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

முன்னணி நிலையில் இருந்து தப்பியோடும் படையினர், டாங்கி ஒன்றும் புலிகளால் தாக்கியழிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009] புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது டாங்கி ஒன்று அழிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆனந்தபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் கவசப் போர் ஊர்திகள் சகிதம் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர தாக்குதலின் போது படையினருக்கு பெரும் எண்ணிக்கையிலான இழப்புக்கள் ஏற்பட்டுத்தப்பட்டு நகர்வும் முறியக்கப்பட்டது. இதில் படையினரின் டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிறு சிறு தாக்குதல்களில் மட்டும் 108 படையினர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுஇவ்வாறிருக்க, விடுதலைப் புலிகளின் மறிப்புச் சண்டைகள் மற்றும் மட்டுப்படுத்திய வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக சிங்களப் படைகளிடையே மனச்சோர்வும் அச்சமும் அதிகரித்து வருவதாகவும் வலிந்த தாக்குதல்கள் நடத்தும் மனநிலையில் இருந்த சிங்களப் படைகள் தற்போது தற்காப்பு நிலையை எடுக்கும் மனநிலையை நோக்கிச் செல்வதாகவும் தெரிய வருகின்றது. அதன் அறிகுறியாக, விடுதலைப் புலிகள் இரவு நேரத்தில் ஊடுருவித் தாக்கி விடலாம் என்ற அச்சத்தில் சிங்களப் படைகள் தங்கள் முன்னணி நிலைகளைச் சுற்றி மின் விளக்குகளை பொருத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது. அதேநேரத்தில் முல்லைத்தீவு நகர காப்பு நிலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் 59 டிவிசனின் துருப்புக்கள் பலர் தற்போது தப்பியோடுவதாகவும் கடந்த 27 ஆம் நாள் வரையுமான ஒரு மாதத்தில் மட்டும் அந்த டிவிசனில் இருந்து குறைந்தது 100 படையினர் வரை தப்பியோடியுள்ளதாகவும் நம்பகமான உள்ளகத் தகவல்கள் உறுதி செய்கின்றன. ஏனைய சிங்களப் படையினரின் டிவிசன்களில் இருந்து தப்பியோடுவோர் தொகையும் இந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் அது குறித்த சரியான தொகை விபரங்களைப் பெற முடியவில்லை.

புலிகளுக்கு மகிந்த விடுத்த சவாலுக்கு தமிழகத்தில் உணர்வுள்ள தமிழன் ஒருவரிடம் இருந்து சவால்!

[ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009] சமாதான உடன்படிக்கையை ஒரு தலைப்பட்சமாக கிழித்தெறிந்து விட்டு அடக்குமுறை யுத்தத்தை தமிழ்மக்கள் மீது ஏவி விட்ட மகிந்த ராஜபக்சே தற்போது புலிகளுக்கு சவால் விட்டிருக்கிறார். "தைரியமிருந்தால் புலிகள் மக்களை விட்டு வெளியே வந்து,இராணுவத்தை நேரடியாக சந்திக்க வேண்டும்!". மக்கள் புலிகளுடன் இல்லாவிட்டால் ஜெயித்து விடுவாராம். கடந்த 3 வார காலமாக இராணுவம் பெற்ற சேதத்தை சமாளிப்பதற்காக சப்பை கட்டு கட்டுகிறார். புலிகள் என்ன வானத்திலிருந்து குதித்தார்களா? மக்கள்தான் புலிகள். புலிகள்தான் மக்கள். போராளியாக இருக்கும் மகன், மகளை விட்டு அவர்களுடைய குடும்பத்தார் எப்படி வெளியே வருவார்கள்? அவர்கள் தங்களுடைய தாயக நிலத்தில் இருக்க விரும்புகிறார்கள். அது தீவிரவாதமாம்? இவருடைய இராணுவம் நடத்தும் தாக்குதல்கள் மனிதாபிமான நடவடிக்கையாம்? மருத்துவமனை, பள்ளிக்கூட வாகனத்தின் மீது தாக்குதல், பத்திரிக்கையாளர்கள் கொலை, தமிழ் எம்.பிக்கள் கொலை, வெள்ளை வேன் ஆட்கடத்தல்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், அப்பாவி பொது மக்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கும் மகிந்த இன்று உத்தமர் போல் யுத்த தர்மத்தைப் பற்றிப் பேசுகிறார். மகாபாரதப் போரில் வீர அபிமன்யுவை 7 மகா ரதிகர்கள் சூழ்ந்து நின்று தாக்கியதைப் போல இன்று இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஜப்பான், இஸ்ரேல், வியட்நாம் நாடுகளிடம் பிச்சையெடுத்துப் பெற்ற ஆயுதங்களுடன் போரை நடத்தும் ம்கிந்தவுக்கு போர் தர்மம் குறித்து பேச என்ன அருகதை இருக்கிறது? தர்மத்திற்கு கட்டுப்பட்டதால்தான் கொழும்பில் வான் தாக்குதலை நடத்திய வான் கரும்புலிகள் மக்களை குறி வைக்காமல் இராணுவ நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தினார்கள். மக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிடுவதற்கு பிரபாகரனுக்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. அப்படி நடத்தியிருந்தால் சிங்களவருடைய நிலைமை என்னவாகியிருக்கும்? கட்டுநாயகா, அனுராதாபுரம் விமானப்படைத்தளத்தை தகர்த்த கரும்புலிகள் ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினால் இலங்கை ஒரே நாளில் அழிந்து விடும். அப்படி செய்ய தூண்ட வேண்டாம். என்றைக்காவது புலிகள் சிங்கள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்களா? Youtube, Wikimapia, Metacafe போன்ற இணையதளங்களில் தமிழர்களையும், தேசியத்தலைவர் பிரபாகரனையும் கெட்ட வார்த்தைகளில் திட்டி எழுதுவது யார்? வெளிநாடுகளில் போராட்டம் செய்யும் தமிழ் மக்களின் மீது வன்முறையை ஏவி தேசியக் கொடியை பறித்தது யார்? தமிழ் மக்களாகிய நாங்கள் மகிந்தவிற்கு அறை கூவல் விடுக்கிறோம். 1. இந்திய, இஸ்ரேல், பாகிஸ்தான் இராணுவத்தின் உதவி இல்லாமல் எங்களோடு நேரடியாக மோதி ஜெயிக்க முடியுமா? 2. கீழே செல்லும் மனிதர்களை கூட அடையாளம் காணும் இந்திய செயற்கைக்கோள்களின் உதவியின்றி உன்னால் போர் நடத்த முடியுமா? 3. உளவு சொல்லி போட்டுக் கொடுக்கும் இந்திய உளவுத்துறையின் உதவியின்றி உன்னால் போரிட முடியுமா? 4. ஜப்பான், சீனாவிடம் பணம் பெறாமல் இலங்கையின் பொருளாதாரத்தைக் கொண்டு உன்னால் போரிட முடியுமா? 5. டென்சில் கொப்பேகடுவவை கொன்ற புலிகளின் போர்த்தந்திரத்தை காப்பியடித்து ஆழ ஊடுருவும் படையணியை உருவாக்கினாயே? ஏன் உனக்கு சொந்த மூளை கிடையாதா? 6. புலிகளின் ஓயாத அலைகள் தாககுதலை அப்படியே காப்பியடித்து இப்போது புதுக்குடியிருப்பில் இராணுவத்தை அலை அலையாக மோத விடுகிறாயே? ஏன் உன் சொந்த அறிவை வைத்து சண்டையிட முடியுமா? 7. தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்களை மிரட்டுவதற்காக அவர்களுடைய உறவினர்களை கடத்துகிறாயே? அது நீதியா? 8. பத்திரிக்கை அலுவலகங்களின் மீது குண்டுதாக்குதல் நடத்துகிறாயே? அது நியாயமா? 9. சென்னை தாம்பரத்தில் சென்று விமானிகளுக்கு பயிற்சி பெறுகிறாயே? இஸ்ரேலிடம் கெஞ்சி போர் விமானங்களை பெற்று வந்தாயே? 10. வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த சீனாவையும், ரஷ்யாவையும் காலைப் பிடித்து கெஞ்சுகிறாயே? 11. உலக வல்லரசுகளுடன் நீ கூட்டு சேர்ந்ததால் புலிகள் மக்களுடன் கூட்டு சேர்ந்திருகிறார்கள். வல்லரசுகளுடன் சேர்ந்து கொண்டு விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நீ சொந்த பலத்தில் மோதிப்பார்க்க தயாரா? இத்தனை பேருடன் கூட்டு சேர்ந்து போரிட்டும் ஏன் இதுவரை ஜெயிக்க முடியவில்லை? இந்திய இராணுவத்தையே தோற்கடித்தவர்கள் புலிகள். அவர்களை உங்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. பல தடவைகள் நிபந்தனையற்ற் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தாகிவிட்டது. அதை நீங்கள் உதறித் தள்ளிவிட்டீர்கள். இதை உலக நாடுகள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. இனிமேலும் தர்மம், நியாயம் பார்த்து போரை நடத்த புலிகள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இனிமேல் பொது மக்கள், இராணுவம் என்று பிரித்துப் பார்க்கப் போவதும் இல்லை. போரை வெல்ல இனிமேல் அனைத்து வழிகளும் கையாளப்படும். வன்னிப் பகுதியை விட்டு இராணுவம் மீளவும் திரும்பப் போவதும் இல்லை. 2001ல் ஆனையிறவில் மாட்டிக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்ற இந்தியா ஓடி வந்தது.அதை புலிகளும் நம்பினார்கள். தொலையட்டும் என்று பிழைத்துப் போக விட்டார்கள். இனிமேல் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். 3700 பேர் சாவதை கைகட்டி வேடிக்கை பார்த்த சர்வதேசத்திற்கு புலிகளை தடுக்க எந்த உரிமையும் இல்லை. போர்தான் வேண்டும் என்று மகிந்தவை ஆதரித்து ஓட்டு போட்ட சிங்களவர்களும், அரசும், இராணுவமும் அதற்குரிய விலையை கொடுத்தே ஆக வேண்டும். கொடுப்பார்கள்!.

Wednesday, March 11, 2009

விசுவமடுவில் ஆட்லெறி பீரங்கித் தளம் விடுதலைப் புலிகளால் அழிப்பு

[புதன்கிழமை, 11 மார்ச் 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று முன்நாள் திங்கட்கிழமை இரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்கிருந்து இயக்கி சிறிலங்கா படையினர் மீது செறிவான பீரங்கித் தாக்குதல்களை மறுநாள் அதிகாலை வரை நடத்திய பின்னர் அத்தளத்தினை அழித்துவிட்டு தளம் திரும்பினர். இதில் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடிமருந்துகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் சிறிலங்கா படையினர் தரப்பில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர் என வன்னி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கடந்த 10 நாட்களில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகாயம்; சிகிச்சையளிக்க மருந்து இல்லை: மருத்துவர் த.சத்தியமூர்த்தி

[புதன்கிழமை, 11 மார்ச் 2009] எறிகணைத் தாக்குதல்களால் கடந்த பத்து நாட்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேநேரம் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துப்பொருட்களும் இல்லாத அவலநிலை நிலவுவதாக கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு மாத்தளன் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான இவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் வருமாறு: தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் மக்களுக்கு எங்களிடமுள்ள வசதிகளை வைத்தே சிகிச்சை அளித்து வருகிறோம். எனினும் படுகாயமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எங்களால் இந்த சிகிச்சையை தொடர்ந்தும் வழங்க முடியாத நிலையே காணப்படுகிறது. காயமடையும் மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான அளவு மருந்துப் பொருட்கள் எங்களிடம் இல்லை. குறிப்பாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளத் தேவையான மயக்க மருந்துகள் எங்களிடம் கையிருப்பில் இல்லை. இது தொடர்பாக நாங்கள் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறியும் இதுவரை அந்த மருந்துப் பொருட்கள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியில் வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளாலேயே மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அதிகளவான எறிகணைகள் வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் வீழ்ந்து வெடித்திருக்கின்றன. பொக்கணை மற்றும் புதுமாத்தளன் பகுதிகளிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். கடந்த ஒருமாத காலமாக எறிகணைகளில் காயமடைந்தவர்கள் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். குறிப்பாக கடுமையான காயமடைந்தவர்கள் அல்லது உயிர் போகும் தருணத்தில் இருப்பவர்களை அவர்களுடைய உறவினர்கள் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரப்படும் போது சிலர் வழியிலேயே இறந்து விடுகின்றனர். சிலர் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர். மக்கள் இங்கு நெரிசலாக இருக்கின்ற காரணத்தால் எறிகணைத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் இறக்கின்ற சூழல் காணப்படுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அங்கிருங்கும் அயலவர்கள் அல்லது எஞ்சியிருப்போர் அந்தந்த இடங்களிலேயே அவர்களது உடலங்களை புதைத்து விடுகின்றனர். எனவே மருத்துவமனைக்கு குறைந்தளவிலான இறந்த உடலங்களே வந்து சேர்கின்றன. அதிகளவிலான மக்கள் படுகாயமடைந்த நிலையில் கொண்டு வரப்படுவதனால் அவர்களுக்கு இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையே நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். சிலருக்கான சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ச்சியாக 24 மணிநேரமும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டாலும் காயமடையும் மக்கள் அனைவருக்கும் எங்களால் சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாது. மிகக்கடுமையாக காயமடைந்து இரத்தப் போக்கு ஏற்பட்டவர்களுக்கு எங்களால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொதே அவர்கள் இறக்கும் ஒரு அவல நிலை காணப்படுகின்றது. சிகிச்சை பலனின்றி பலர் இறக்கும் நிலையே இங்குள்ளது. இது துரதிர்ஸ்டவசமானது. தற்போது காயமடைந்த நிலையில் 500-க்கும் அதிகமானவர்கள் இங்குள்ளனர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் வந்தால் இவர்களை நாங்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைப்போம். இல்லையேல் கடுமையான காயமடைந்தவர்களில் ஒரு சிலர் இறக்கக்கூடும். இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு நாங்கள் கேட்கும் உதவிகளை அரசாங்கம் உடனடியாக எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இல்லையேல் மேற்கூறிய நிலை ஏற்படுவதை தடுக்க முடியாது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இருதரப்புகளுடன் கலந்துரையாடி காயமடைந்த மக்களை ஏற்றிச் செல்லும் என்று நினைக்கிறேன். அதில் எதுவித சிக்கலும் இருக்கப் போவதில்லை. காலநிலை சீரின்மை காரணமாகவே அந்த கப்பல் சேவை இறுதியாக தடைப்பட்டிருந்தது. கடந்த முதலாம் நாள் முதல் 10 நாட்களுக்குள் 1,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையான மக்கள் காயமடைந்த நிலையில் கொண்டு வரப்படுவார்கள் என்பதை நாங்கள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. எனினும் நாங்கள் எமது சேவையை வழங்குகின்றோம். எங்களால் முடிந்தவரை எங்களிடமுள்ள வளங்களைப் பயன்படுத்தி நாங்கள் இவர்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றோம். இங்கு கடுமையாக மழை பெய்து கொண்டிருப்பதால் மருத்துவமனையின் தற்காலிகக் கட்டடங்களில் நீர் புகுந்துள்ளது. காயமடைந்த மக்கள் இதனால் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அதனைவிட இடம்பெயர்ந்துள்ள மக்களும் மழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான எறிகணைத் தாக்குதல்களுக்கும் மழை வெள்ளத்திற்கும் இடையிலான ஒரு சூழ்நிலையிலேயே நாங்கள் பணியாற்றுகின்றோம். மருத்துவமனைக்கு அருகாமையிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றது. பதற்றமான ஒரு நிலை. பல நூற்றுக்கணக்கில் காயமடைந்தவர்கள் இருப்பதால் சரியான சிகிச்சையை வழங்க முடியாதுள்ளது. கடந்த முதலாம் நாள் முதல் 7 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் காயமடைந்த 700-க்கும் அதிகமானோரில் 137 சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களில் 32 சிறுவர்கள் இறந்துள்ளனர். கடந்த பத்து நாட்களில் மட்டும் 50-க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமான சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இதைவிட மழை வெள்ளம், வயிற்றோட்டம், போசாக்கின்மை போன்றவற்றாலும் சிறுவர்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இப்படி பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மடியக்கக்கூடிய அவல நிலையை நாங்கள் அடைந்திருக்கின்றோம். 24 மணிநேரமும் மருத்துவமனையில் இறந்த உடலங்கள் இருந்த வண்ணமே இருக்கின்றன. உறவினர்கள் 24 மணிநேரமும் அங்கிருந்து அழுது குழறியபடியே உள்ளனர். 24 மணிநேரமும் அது மரண வீடாகவே காட்சி தருகிறது. மருத்துவமனையின் பிற பகுதிகளிலும் உறவினர்களின் ஒப்பாரியே கேட்கிறது. இத்தகைய சூழ்நிலையில் மருத்துவமனை பணியாளர்கள் கல் நெஞ்சம் படைத்தவர்களாகவே கடமையாற்ற வேண்டியுள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்னரே எங்களிடமிருந்த மருந்து கையிருப்புகள் முடிந்துவிட்டன. அதன் பின்னர் எங்களிடம் கையில் கிடைப்பதை வைத்தே சிகிச்சையளித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் உயரதிகாரிகளுக்கு இது குறித்த தெளிவாக கூறியிருக்கிறோம். இது மருத்துவமனை என்று கூறப்படினும் இங்கு மருத்துவமனைக்குரிய எந்த கட்டமைப்பும் இல்லை என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முன் உரிமைப்போர்

[புதன்கிழமை, 11 மார்ச் 2009,] ஐரோப்பா வாழ் தமிழ் மக்களால் பெல்ஜியத்தின் தலைநகர் பிறசல்சில் அமைந்துள்ள ஜரோப்பிய நாடாளுமன்றம் முன்பாக "உரிமைப் போர்" பேரணியும் பொதுக்கூட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐரோப்பா வாழ் தமிழ் இளையோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (16.03.09) முற்பகல் 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 5:00 மணி வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்திடம் தமிழீழ மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தன்னாட்சி உரிமையையும், தமிழீழ மக்களின் அரசியல் தலைமையான விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அங்கீகரிக்கக் கோரியும், பௌத்த சிங்கள பேரினவாத்தின் தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக் கோரியும் இப்போராட்டம் மூலம் வலியுறுத்தப்படவுள்ளது. அத்தோடு, வன்னியில் போர் முற்றுகைக்குள் அல்லற்படும் மக்களுக்கான உணவு, மருந்துப் பொருட்கள் உட்பட்ட உடனடி மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், தமிழர் தாயகப் பிரதேசங்களில் இருந்து சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகள் வெளியேற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்படவுள்ளன. இதே நாள் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் சுவிஸ் வாழ் மக்களால் "சாவிலும் எழுவோம்" பேரணி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tuesday, March 10, 2009

(2ம் இணைப்பு)வன்னியில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: இன்று 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை; 254 பேர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2009, 05:18] வன்னிப்பெரு நிலப்பரப்பில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோர்ட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 254 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட 254 பேரில் 45 பேர் மாத்தளன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் சிறுவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களின் 26 உடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடுமையான மழை பெய்து வருவதால் எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அப்புறப்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் காயப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுவர முடியாத நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளையில் இம்மாதம் முதலாம் நாளில் இருந்து ஏழாம் நாள் வரை காயமடைந்த நிலையில் 700 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் 137 பேர் சிறுவர்கள். இவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற எறிகணைத் தாக்குதல்களில் 50-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமான சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என புதுமாத்தளன் மருத்துவமனை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Sunday, March 01, 2009

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதும் கடிதம்

[ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2009] தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் "தமிழீழம் பணியாது" என்ற தலைப்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- தமிழீழம் பணியாது தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதுவது வணக்கம் தமிழீழத் தமிழரான நாங்கள் தாயகத்தில் படும் துயரம் சொல்லில் அடங்காதவை. என்பதை நீங்கள் அறியாதவை அல்ல. எமது துயரம் முழுஉலகமும் அறியும் எனினும் நாங்கள் தன்மானத்துடன் வாழ விரும்புகின்றோம் என்பதை நான் உங்களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகின்றேன். "மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததென்பர்" இம்மொழி எமக்கு சாலவும் பொருந்தும். ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன் நீங்கள் தெரிவித்த கருத்தாகும். தமிழீழ தேசிய தலைவரையும் தளபதிகளையும் நீங்கள் விமர்சித்த விதம் எமக்குப் பலத்த ஏமாற்றத்தையும் வேதனையையும் தந்தது. தமிழீழ தேசிய தலைவரை சர்வாதிகாரி என நீங்கள் குறிப்பிட்டது தமிழீழத் தமிழரான எம்மை மிகவும் ஏமாற்றமடையச் செய்துவிட்டது. தமிழினப் படுகொலை செய்யும் மஹிந்த ராஜபக்ச உங்களுக்கு சர்வாதிகாரியாகத் தெரியவில்லையா? நான் உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். எமது இன விடிவுக்காய் போராடும் புலிவீரர்களும் தமிழர்கள் என்பதை மறவாதீர்கள். அவர்கள் வேறு எவருக்காகவும் போராடவில்லை. எமக்காகவும் எமது சுதந்திரத்திற்காகவுமே போராடுகிறார்கள். அவர்கள் வேறு நாம வேறு என்ற எண்ணத்திற்கே இடமில்லை. ஆயிரமாயிரம் வேங்கைகள் உயிர்த்தியாகம் செய்தது எமது இன விடுதலை மூச்சுக்காகவேயன்றி எந்தவொரு தனிநபருடைய சுயநல அரசியலுக்காகவோ அல்லது சுயநலத்திற்காகவோ அல்ல. இப்படிப்பட்ட மாவீரச் செல்வங்களை இழிவுபடுத்தி எவர் பேசினாலும் பேசுபவர்கள்தான் இழிவானவர்களும் இழிகுலத்தைச் சேர்ந்தவர்களுமேயன்றி வேறெவருமல்லர். இவ்வகையான பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கதும் அருவருக்கத்தக்கதுமாகும். தயவுசெய்து தமிழீழ விடுதலைப்புலிகளை இவ்வாறு மானபங்கப்படுத்துவதை தவிர்க்கவும். இல்லாவிடில் எதிர்காலத்தில் தமிழர்களின் காவல் தெய்வம் என கூறிக்கொள்ளும் உங்களை உலகத் தமிழர்கள் தூற்றுவதை எவராலும் தவிர்க்க முடியாது. ஒன்றை நினைவில் வைத்திருங்கள் சிங்களத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தகுந்த பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை. நன்றி தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

ஈழத்தமிர்கள் பற்றி கவலைப்படவில்லை பிரபாகரனை பிடிப்பதில்தான் காங்கிரஸ் முனைப்பு - நாஞ்சில்

[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2009] ஈழத்தமிர்கள் பற்றி காங்கிரஸ்காரர்கள் கவலைப்படவில்லை பிரபாகரனை பிடிப்பதில்தான் முனைப்பு காட்டுவதாக ம.தி.மு.க. மாநில கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நாகர்கோவில் பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற அரசியல் விளக்கமளிக்கும் பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: உலக நாடுகள் அனைத்தும் போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் இந்தியா மட்டும் நேரடியாக போரை வலியுறுத்துமாறு சொல்லவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி தமிழ் ஈழத்தை தவிர வேறொன்றுமில்லை. இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசவே மறுக்கிறார். போரை நிறுத்துமாறு மத்திய அரசை நிர்பந்திக்க கருணாநிதியால் முடியவில்லை. ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அடிக்கடி புலம்புகிறார். மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த கோட்சே சுட்டுக் கொன்றவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒருவன் செய்த தவறுக்காக ஒரு இயக்கத்திற்கு தடை விதிப்பது சரியல்ல என நினைத்த அப்போதைய காங்கிரஸ் உள்துறை அமைச்சர் வல்லபாய்பட்டேல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்க அரும்பாடுபட்டார். அதே போல் விடுதலைபுலிகள் மீதான தடையை நீக்க இன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முயற்சி எடுப்பாரா? அங்கே ஒரு இனம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே இருப்பவர்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்கிறீர்கள். ஆயுதத்தை கீழே போட்டு விட்டால் அடுத்து விநாடியே அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுவிடுவார்கள். காங்கிரஸ்காரர்களின் ஒரே நோக்கம் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்பதுதான் தவிர இலங்கை தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை. பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும். அதில் சந்தேமே இல்லை.

வித்தியாதரன் கைது: மூத்த தமிழ் ஊடகவியலாளர்களிடமும் விசாரணை

[ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2009] 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான ந.வித்தியாதரன் மீதான விசாரணையின் தொடர்ச்சியாக மூத்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் மீதும் விசாரணைகள் நடைபெறுகின்றன. அதேவேளை, ஆங்கில ஊடகங்களில் பணியாற்றும் மூத்த தமிழ் ஊடகவியலாளார்கள் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் கைது விடயத்தில் ஏனைய மூத்த ஊடகவியலாளர்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை இதுவே முதற்தடவை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு தெமட்டகொடையில் உள்ள குற்றப் புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு மிகவும் சிநேகிதமான முறையில் தனித்தனி விசாரணைகள் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. வித்தியாதரனுடன் இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட தொலைபேசி தொடர்புகள் தொடர்பாகவும் மற்றும் சொந்த ஊர், நிரந்தர முகவரி தொலைபேசி இலக்கங்கள் பதியப்பட்டு சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்குமூலம் ஒன்றில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளே கூடுதலான விசாரணக்கு உட்படுத்தப்பட்டதாக சுதந்திர ஊடக இயக்கத்தை மேற்கோள் காட்டி கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அதிகளவான தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுகின்றனர்: அமெரிக்கா கவலை

[ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2009] இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. அங்கு 16 வீத மக்கள் தொகையைக்கொண்ட தமிழ் மக்களில் இளைஞர்கள் அதிகளவில் கொல்லப்படுவதுடன் காணாமலும் போய் உள்ளனர் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் துணை இரணுவக் குழுவினரும், அரசியல் கட்சிகளாக தம்மை பதிவு செய்து கொண்டுள்ள டக்ளசின் ஈ.பி.டி.பி. மற்றும் முரளிதரனின் ரி.எம்.வி.பி. போன்ற கட்சிகளும் அதிகளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளும் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போர் தீவிரமடைந்ததை தொடர்ந்து சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. அரசின் இந்த மனித உரிமை மீறல்களினால் அதிகளவில் தமிழ் மக்களே பாதிப்படைந்துள்ளனர். இலங்கையில் 16 வீதமான மக்கள் தொகையைக்கொண்ட தமிழ் மக்களில் இளைஞர்கள் அதிகளவில் கொல்லப்படுவதுடன் காணாமலும் போய் உள்ளனர். அரசுடன் இணைந்து செயற்படும் குழுவினரே நீதிக்குப் புறம்பான படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரசியல் படுகொலைகள், அரச படையினருடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர் சிறார்களை படையில் சேர்ப்பது காணாமல் போதல் எழுந்தமானமான கைதுகள் தடுத்து வைத்தல் தரமற்ற சிறைக்கூடங்கள் கைது செய்யப்படுபவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு மறுப்பு தெரிவித்தல் அரசின் ஊழல் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் என்பன இலங்கையில் அதிகரித்துள்ளன. சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர் பொதுமக்களுக்கு எதிரான ஆயுத தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், கடத்துதல், பணயக்கைதிகளாக மக்களை பிடித்தல், கப்பம் வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த குற்றங்களில் ஈடுபட்ட காவல்துறை, இராணுவம், மற்றும் துணை இராணுவக் குழுவினரை சேர்ந்த எவரும் கடந்த வருடத்தில் தண்டிக்கப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன?

[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2009] ஈழப் பிரச்சினையை முன் வைத்து தமிழக ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று கலைஞர் அறிக்கைகளை விடுகிறார். இதே கலைஞர் 1985 ஆம் ஆண்டுகளில், ‘ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு’ (டெசோ) ஒன்றை உருவாக்கி நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தை நடத்தியவர்தான். அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மீது ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்று கலைஞர் குற்றம் சாட்டினார். ஈழத்தில் - சிங்கள ராணுவம்தான் இந்தியாவின் பேருதவியோடு போரை நடத்துகிறது. விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று அறிவித்து விட்டார்கள். போரை நிறுத்த மாட் டோம் என்கிறது சிங்களம். புலிகள் ராணுவத்தைக் கலைத்துவிட வேண்டும் என்று சிங்களர் விதிக்கும் நிபந்தனையை தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க.வும் ஏற்று ‘இருதரப்பு போர் நிறுத்தம்’ என்ற கருத்தை முன் வைத்து மனித சங்கிலியை நடத்தியுள்ளது. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதாலும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாலும் ஈழத் தமிழின உரிமைப் போராட்டத்தை நசுக்கிடும் இந்திய அரசை எதிர்க்காமல் சமரசம் செய்து கொள்ளத் துடிக்கிறது. ஈழப் பிரச்சினையை முன் வைத்து தமிழக ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கலைஞர் அறிக்கைகளை விடுகிறார். இதே கலைஞர் ‘ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு’ (டெசோ) ஒன்றை உருவாக்கி நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தை நடத்திய பொழுது தாங்கள், இப்பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தவில்லை என்றார். தமிழனுக்கு என்று நாடு வேண்டும் என்றார். தமிழக இளைஞர்களும் ஆயுதம் ஏந்திப் போராடும் காலம் வரும் என்றார். அதே கருத்தினை இப்போது சீமான் பேசினால், மற்றவர்கள் பேசினால், ஒருமைபாட்டுக்கு எதிராக பேசியதாக வழக்குப் போட்டு அதே கலைஞர் சிறையில் தள்ளுகிறார். ஆனால், அன்று எம்.ஜி.ஆர். ஆட்சியோ, இத்தகைய நடவடிக்கைகளை கலைஞர் எடுத்ததில்லை என்பதே உண்மை. கடந்த காலங்களில் கலைஞர் எதிர்கட்சியாக இருந்தபோது மக்களிடம் பேசிய கருத்துகளையே இப்போது தமிழின உணர்வாளர்கள் பேசினால் - கலைஞர் ஆட்சியில் சட்டம் பாய்கிறது. இப்போது மூன்றாவது முறையாக இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு, புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அன்று கலைஞர் பேசிய “வீர முழக்கத்தில்” கால்பங்கைக் கூட பேசிடாத சீமான் - இப்போது சிறையில்! இளம் தலைமுறையினருக்கு கலைஞரின் அந்த உரைகளை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஈழத் தமிழர் களுக்காக தமது கடந்தகால தியாகங்களை கலைஞர் பட்டிய லிடும்போது நாம் அவரது கடந்த கால உரைகளையும் இளம் தலைமுறையினருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். 1985 அக்டோபர் 3, 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கலைஞர் ஆற்றிய உரையைத் தொகுத்து தி.மு.க. தலைமையகமே ஒரு நூலை 1985 ஆம் ஆண்டில் வெளியிட்டது. ‘தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழ நாடு’ எனும் தலைப்பில் தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் மறைந்த சி.டி.தண்டபாடி முன்னுரையோடு வெளி யிடப்பட்ட அந்த சிறு வெளியீட்டிலிருந்து கலைஞர் உரையின் சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்: தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு குற்றமென்ன? மொராக்கோ நாட்டில் நடை பெறும் கொரில்லாப் போராட்டத்திற்கு இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக் கிறது. இதனால் மொராக்கோ கோபம் கொண்டு இந்திய அரசுடன் தனது உறவுகளை துண்டித்துக் கொண்டது. அதேபோல பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது. பாலஸ்தீன இயக்கத்தின் விடுதலை முகாமை இஸ்ரேல் விமானங்கள் டுனீஷியா நாட்டில் தாக்கின; அராபத்தைக் கொல்ல முயன்றது - நல்லவேளை அராபத் காப்பாற்றப்பட்டு விட்டார் - அந்த விடுதலை முகாம் அழிக்கப் பட்டது. உடனடியாக இந்திய அரசு “இது மனித நாகரிக வளர்ச்சிக்கு விடப்பட்ட சவால். இதை இந்தியா கண்டிக்கிறது” என்று அழுத்தம் திருத்தமாக - ஆவேச மாக தன்னுடைய மனப்பாதிப்பை வெளியிடுகிறது. நான் கேட்பதெல்லாம், மொராக் கோவில் போராடுகின்ற கெரில்லாக்களுக்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - இலங்கையிலே போராடுகின்ற தமிழர் களுக்கு ஏன் தரவில்லை? நாங்கள் தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு என்ன குற்றம் செய்தோம்? தமிழனாகப் பிறந்தது குற்றமா? கேவலமா? அப்படியென்றால் தமிழ் நாட்டை இணைத்து ஆள்வது உங்களுக்குக் கேவலமல்லவா? அனுப்பி விடுங்களேன். வெளியே எங்களை என்று கேட்க மாட்டோமா? இப்படிக் கேட்பதால் கருணாநிதி பிரிவினைவாதம் பேசுகிறார் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால் நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இன்றைக்கு பிரிவினைக் கொடியை - பிரிவினை கீதத்தை காஷ்மீரில் பாடிக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் மத்தியிலே உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் “காஷ்மீரில் நடைபெறுகின்ற ஷா அரசு (காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் துணையோடு நடை பெறுகின்ற அரசு) பிரிவினை வாதத் திற்கு துணை போகிறது; உதாரணம் தேவை என்றால், ஆகஸ்டு 14 ஆம் நாள் பாகி°தான் சுதந்திரம் அடைந்த நாள்! ஆகஸ்டு 14 ஆம் நாள் காஷ்மீர் மாநிலத்தில் 50 இடங்களில் பாகி°தான் கொடி ஏற்றப்பட்டது. பாகி°தான் சுதந்திரம் அடைந்ததை காஷ்மீரில் உள்ளவர்கள் கொண்டாடினார்கள். இது மாநிலத்தில் உள்ள ஷா அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று எழுதியுள்ளார். அப்படிப்பட்ட அரசை அங்கே முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தி பரூக் அப்துல்லாவுக்கு எதிராக அதை உருவாக்கியவர்கள் யார்?” காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மத்தியிலே உள்ள இந்திரா காங்கிரசு தலைமையும்தான். இவர்களுக்கு பிரிவினையைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது? என்ன யோக்கியதை இருக்கிறது? காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏற்றுவதைத் தடுக்க வகையில்லை, வக்கு இல்லை; தெம்பில்லை; திராணியில்லை. முன்கூட்டி தெரிந்திருந்தும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுபற்றி கவர்னர் மத்திய அரசுக்கு எழுதியிருந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்கிக் கொண் டிருக்கிறது. எனவேதான் இவர் களுடைய தேசியம், வேறு யார் எதிர்த் தாலும் அங்கெல்லாம் விசுவரூபம் எடுக்காது. இந்தப் பாவப்பட்ட தமிழன் இருக்கிறானே - தமிழன் என்று சொன்னால் - தமிழ் இனம் என்று சொன்னால் - தமிழனுடைய உரிமை என்று சொன் னால் - அங்கே தான் அந்த தேசியம் வேகமாக வந்து பாய்ந்து குதறும். தமிழனுடைய உரிமையை நிலை நாட்ட பக்கத்து நாட்டிலே அழிந்து கொண்டிருக்கின்ற தமிழினத்தை காப்பாற்று என்று சொல்வது தேசியத் திற்கு விரோதம் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால், இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற நானோ பேராசிரியரோ, வீரமணியோ, நெடுமாறனோ, அய்யணன் அம்பலமோ ஆதீனகர்த்தரோ மற்றவர்களோ, பாடு படுவது இராஜ துரோகம் என்று சொன்னால், நாங்கள் அந்தக் குற்றத்தை செய்து கொண்டேயிருக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். நாங்கள் மாத்திரம் அல்ல - தமிழ்ச் சமுதாயமே தயாராயிருக்கிறது என் பதை தெரிவிக்கத்தான் நாம் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். - இப்படி அன்று ஒருமைப் பாட்டுக்கு தேசியத்துக்கு சவால்விட்ட கலைஞர், அதே உணர்வை இப்போது வெளிப்படுத்தும் சீமான்களை சிறையில் அடைப்பது ஏன்? நன்றி - பெரியார் முழக்கம்