Thursday, January 10, 2008
09.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு,[Video]
Thursday, January 10, 2008
No comments
சுயநிர்ணய உரிமையுடன் தமிழர்கள் வாழ்வதற்கு சர்வதேச சமூகம் அங்கீகாரம் வழங்க வேண்டும்: விடுதலைப் புலிகள்
Thursday, January 10, 2008
No comments
[வியாழக்கிழமை, 10 சனவரி 2008]இலங்கையில் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைபட்சமாக வெளியேறிய நிலையில் சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கினை புரிந்துகொண்டு தமிழர் தேசத்தின் நியாயமான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வியாழக்கிழமை (10.01.08) வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கினை புரிந்துகொண்டு தமிழர் தேசத்தின் நியாயமான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்
2002 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தின் ஆதரவுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையினை சிறிலங்கா அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக முறித்துக் கொண்டதையிட்டு நாம் மிகவும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய இராணுவ வெற்றிகளைக் குவித்து படை வலுச்சமநிலையில் மேலோங்கியிருந்த நிலையில், 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கமானது போரில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாதென்பதை உணர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்வந்தது.
இதனடிப்படையில் போர்நிறுத்த ஒப்பந்தமானது 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி இருதரப்புக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.
சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைகள் காரணமாக அழிவுக்குள்ளாகியிருந்த தமிழீழ தாயகத்தில் போர் அமைதியை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையினை எமது மக்கள் அனுபவிப்பதற்கு வழிகோலுவதற்கும் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் அத்திவாரமாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் இது கைச்சாத்திடப்பட்டது.
தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள ஆக்கிரமிப்புப் படையினரால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இராணுவ வலயங்கள் அகற்றப்பட்டு,
அங்கு தமிழ் மக்கள் மீளக்குடியமர்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு,
தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரால் மூடப்பட்டிருந்த மக்கள் போக்குவரத்துப் பிரதான பாதைகளான ஏ-9 யாழ்-கண்டி, செங்கலடி-பதுளை வீதிகள் திறக்கப்பட்டு,
பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், மக்கள் குடியிருப்புக்கள் ஆகியனவற்றிலிருந்து சிறிலங்காப் படையினர் வெளியேறி மற்றும் மீன்பிடித் தடைகளை முழுமையாக நீக்கி இயல்பு வாழ்க்கையை மீண்டும் தமிழர் பிரதேசத்தில் நிலைநாட்டுவதற்கான ஏற்பாடுகள் இந்த ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த ஒப்பந்தத்தினை நூறு வீதம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசைகளிலும், சர்வதேச பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போதும் மற்றும் தமது பல்வேறு அறிக்கைகளிலும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்ததுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தம்மால் இயன்றவரை ஆக்கபூர்வமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சிறிலங்கா அரசோ அல்லது சிறிலங்காப் படையினரோ போர்நிறுத்த உடன்படிக்கையினை முழுமையாக செயற்படுத்தி இயல்பு வாழ்க்கையை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கால வரையறைகளுக்கு அமைய மேற்கொள்ளாது தொடர்ந்தும் தனது போர்நிறுத்த மீறல் நடவடிக்கைகளைத் தொடர்ந்த வண்ணமிருந்தன. அவ்வாறிருந்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசுடன் 2002 செப்ரெம்பர் முதல் 2003 மார்ச் வரை ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இதய சுத்தியுடன் கலந்துகொண்டு சிறிலங்கா அரசாங்கமும் அதனது படைகளும் போர்நிறுத்த உடன்படிக்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய சரத்துகளை தொடர்ச்சியாக மீறிவருவது தொடர்பாக அனுசரணையாளர்கள், கண்காணிப்புக்குழுவினர் மற்றும் சர்வதேச சமூகத்தினர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
சிறிலங்கா அரசானது போர்நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களை மீறியது மட்டுமன்றி, பேச்சுவார்த்தை மேசைகளில் இணக்கம் காணப்பட்ட உடனடி மனிதாபிமானத் தேவைகளுக்கான உப குழு, பகைமைத் தணிப்பு மற்றும் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கான உப குழு போன்ற குழுக்கள் செயற்பட முடியாதவாறு பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு அமைதி முயற்சிகளைப் பலவீனப்படுத்தியது.
போர் நிறுத்த உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமை, பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாமை, போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் சமாதான முயற்சிகளின் ஒரு தரப்பாகிய விடுதலைப் புலிகளை சம தரப்பாக நடாத்துவதற்குத் தவறியமை ஆகிய காரணங்களால் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இருந்தபோதிலும், விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்தோ அல்லது சமாதான முயற்சிகளிலிருந்தோ முற்றிலுமாக வெளியேறாது, தொடர்ந்தும் நோர்வே அரசின் அநுசரணையுடன் சமாதான வழிகளிலே ஒரு நிரந்தரமான அமைதித் தீர்வை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வகையில், பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்காகவும் தமிழர் தாயகப் பகுதியில் இடைக்கால நிர்வாகத்தைக் கொண்டுவந்து போரினால் பேரழிவுக்குட்பட்டிருந்த தமிழர் தாயகப் பகுதிகளில் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு இயல்பு வாழ்க்கையினை ஏற்படுத்துவதற்காகவும் சிறிலங்கா அரசாங்கம் ஓரு முன்மொழிவினை முன்வைக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தினார்கள்.
சிறிலங்கா அரசு முன்வைத்த இடைக்கால நிர்வாகத்திற்கான முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக்கூடத் தீர்ப்பதற்குத் தேவையான அதிகாரங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. இதனால், விடுதலைப் புலிகள் நோர்வேயின் அனுசரணையுடன், பல நாடுகளிலுமுள்ள சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையினை முன்வைத்தனர். சிறிலங்கா அரசானது பேச்சுவார்த்தைக்கான ஓர் அடிப்படையாகக்கூட இதனை ஏற்கமறுத்தது. இதன் காரணமாக, பேச்சுவார்த்தைக்குப் புத்துயிர் கொடுப்பதற்கு ஏதுவாக, விடுதலைப் புலிகள் நோர்வே மற்றும் சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைய எடுத்த முயற்சிகள் எந்தவிதப் பலனையும் தந்துவிடவில்லை.
இதேபோலவே ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் மீள்கட்டுமானப்பணிகளை மேற்கொள்வற்கெனக் கைச்சாத்திடப்பட்ட பொதுக்கட்டமைப்பினையும் சிறிலங்கா அரசானது வழமைபோலவே குப்பைக்கூடைக்குள் வீசியது.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் எள்ளளவும் கருத்தில் எடுக்காது, சிறிலங்கா அரசானது தமிழர் தாயப் பகுதியில் பாரிய இராணுவ நடவடிக்கைகளைத் தொடராக மேற்கொண்டு மனித அவலத்தினை ஏற்படுத்திநின்ற வேளையில், மீண்டும் நோர்வே அனுசரணையாளர்களும் சர்வதேச சமூகமும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று வேண்டிக்கொண்டதற்கமைய விடுதலைப்புலிகள் ஜெனிவாவில் 2006 ஆம் ஆண்டு இரு தடவைகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்கள்.
இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளின்போதும் விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். அத்துடன், விடுதலைப் புலிகள் தாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நூறு வீதம் நடைமுறைப்படுத்தத் தயாராகவுள்ள அதேவேளை, சிறிலங்கா அரசாங்கமானது போர் நிறுத்த உடன்படிக்கையின் ஒரு சரத்தான ஏ-9 வீதியினைத் திறந்து யாழ். குடாநாட்டில்; போக்குவரத்துப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு திறந்தவெளிச் சிறச்சாலையில் அடைபட்டதுபோன்று அவலப்படும் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் அவலங்களை நீக்குவதற்கு முன்வரவேண்டும் என மனிதாபிமான ரீதியில் வேண்டுகோள் விடுத்த போதிலும் சிறிலங்கா அரசாங்கமானது இக்கோரிக்கையினை நிராகரித்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தை முயற்சிகள் மீண்டும் தொடரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவராகவும் அரசியல்துறைப் பொறுப்பாளராகவும் விளங்கிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சிறிலங்கா அரசானது படுகொலை செய்தபோதிலும் கூட விடுதலைப் புலிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான முடிவு எதனையும் எடுக்கவில்லை.
சிறிலங்கா அரசானது தற்போது போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து எதுவிதமான நியாயங்களுமின்றி ஒருதலைப்பட்சமாக விலகிவிட்டது.
இந்நிலையிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையினை வரிக்கு வரி அமுல்படுத்தி அதனை நூறு வீதம் கடைப்பிடிப்பதற்குத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
அத்துடன், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சமாதான முயற்சிகளுக்கான அனுசரணைப் பணியினை நோர்வே அனுசரணையாளர்களே தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
சிங்கள இனவாத அரசுகள் காலத்திற்குக் காலம் தமிழ் மக்களின் நிரந்தர அமைதிக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒப்பந்தங்கள் அனைத்தையுமே நடைமுறைப்படுத்தாது உதாசீனப்படுத்தியதே வரலாறாகும்.
தமிழ் மக்கள் நிரந்தரமான அமைதியுடன் தமது தாயக பூமியிலே சுதந்திரமாக, கௌரவமாக வாழ்வதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதுமே இடமளிக்கமாட்டார்கள் என்பதை தற்போது முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அண்ணளவாக ஆறு வருடங்கள் நீடித்த போர் நிறுத்த உடன்படிக்கையினை முறித்தமை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
எனவே சர்வதேச சமூகம் இதனைப் புரிந்துகொண்டு, சிறிலங்கா அரசுகளின் பொய்ப் பிரசாரத்திற்கு எடுபட்டு விடுதலைப் புலிகள்மீது விதித்திருக்கும் தடைகளை உடனடியாக நீக்கி, தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை ஏற்று, அவர்களின் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழுவதற்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்புக்குழு விடுதலைப் புலிகள் விடைபெற்றுச் செல்லும் இறுதிச் சந்திப்பு
Thursday, January 10, 2008
No comments
[வியாழக்கிழமை, 10 சனவரி 2008]
இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான விடைபெறும் இறுதி ஒன்று இடம்பெற்றுள்ளது.
சந்திப்பானது இன்று காலை 9 மணிக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தின் நடுவப் பணியகத்தில் நடைபெற்றது.

சந்திப்பில் சிறீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகியமை அடிப்படையற்றது.
சிறீலங்கா அரசாங்கம் ஒருதலைப் பட்சமாக யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகியுள்ள நிலையிலும், நோர்வே மற்றும் அனைத்துலக சமூகங்களுடனான உறவுகள் கடைப்பிடிக்கப்படவுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
சமாதான நடவடிக்கைகளை அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் நோர்வே முன்னெடுத்துச் செல்லவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் கையெழுத்திடப்பட்ட அறிக்கை ஒன்று கண்காணிப்புக் குழுவிற்கும், கண்காணிப்புக் குழுழு ஊடாக நோர்வே வெளியுறவு அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்புக் குழுவில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க் உட்பட மேலும் சில கண்காணிப்பு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பபாளர் செ.புலித்தேவன், மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சந்திப்பில் சிறீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகியமை அடிப்படையற்றது.
சிறீலங்கா அரசாங்கம் ஒருதலைப் பட்சமாக யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகியுள்ள நிலையிலும், நோர்வே மற்றும் அனைத்துலக சமூகங்களுடனான உறவுகள் கடைப்பிடிக்கப்படவுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
சமாதான நடவடிக்கைகளை அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் நோர்வே முன்னெடுத்துச் செல்லவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் கையெழுத்திடப்பட்ட அறிக்கை ஒன்று கண்காணிப்புக் குழுவிற்கும், கண்காணிப்புக் குழுழு ஊடாக நோர்வே வெளியுறவு அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tuesday, January 01, 2008
(2ம் இணைப்பு)கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை
Tuesday, January 01, 2008
No comments
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2008]சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுவருட நாளினை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார்.

பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார்.
இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனின் குடும்பத்தினருக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மகேஸ்வரனையும் அவரது மெய்ப்பாதுகாவலர்களையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த பொதுமக்களை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அங்கு அவர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்களையும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனைக்கு மகேஸ்வரன் கொண்டு செல்லப்படும் போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சில நிமிடங்களில் சுமார் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மகேஸ்வரன் உயிரிழந்ததை கொழும்பு மருத்துவமனைப் பேச்சாளர் சொய்சா உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையிலேயே இங்கு கொண்டு வரப்பட்டார். அவரின் நெஞ்சுப்பகுதியில் பல குண்டுகள் துளைத்திருந்தன. அவரது தலைப்பகுதியையும் குண்டுகள் துளைத்திருந்தன. அவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் அது பலனளிக்காது அவர் உயிரிழந்தார் என்றார்.
மகேஸ்வரன் உயிரிழந்த சிறிது நேரத்தில் காயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலரான காவல்துறையைச் சேர்ந்தவரும் உயிரிழந்ததாக மருத்துவமனை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களில் இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாகக் கண்டித்திருக்கின்றது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்,
மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குறைத்துக் கொண்டது அரசாங்கம். அதன் தொடர்ச்சியாகவே மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்.
நாடாளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்ததன் விளைவாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். கொலைச் சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அரசாங்கம்தான் அவரைப் படுகொலை செய்யும் உத்தரவை வழங்கியுள்ளது என்றார்.

சம்பவம் இடம்பெற்ற போது அங்கு வழிபாட்டில் நின்ற பொதுமக்கள் அல்லோலகல்லோலப்பட்டு சிதறி ஓடினர். மகேஸ்வரன் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபரை நோக்கி அவரது மெய்ப்பாதுகாவலர்களும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர் என்று கூறப்படுகின்றது. தற்போது பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை "சக்தி" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "மின்னல்" நிகழ்ச்சயில் கலந்துகொண்ட மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் படுகொலைகளுக்கு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பியே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிற்கான பிரசாரத்தின் போதும் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் பிரபல வரத்தகரான இவர், யாழ்ப்பாணம் காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவர். இவருக்கு வயது 42.
இலங்கையில் பெயர் குறிப்பிடத்தக்க வர்த்தகர்களுள் மகேஸ்வரனும் அடங்குவார். அவருக்குச் சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுட்டு வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார்.
இவரது நெருங்கிய சகாவான பேபியன் எனப்படும் முத்துக்குமார் சிவபாலன் கடந்த வருடம் டிசம்வர் மாதம் 21 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் நவம்பரில் கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மகேஸ்வரன், பாதிக்கப்பட்ட மக்களை திரட்டிக் கொண்டு பூசா தடுப்பு முகாமுக்கு சென்றதுடன் அரச தலைவரின் அலுவலகத்தை நோக்கி பேரணியாகவும் சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மகேஸ்வரனை நோக்கி துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருபக்பதாக தகவல்கள் தெரிவிக்கன்றன. எனினும் இதனை மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதிப்படுத்த மறுக்கின்றனர்.
மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இச்சம்பவத்தின் சூத்திரதாரி படுகாயமடைந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
புதினம்.கொம்

ஆழிப்பேரலை நிதியுதவி சிறிலங்கா அரசாங்கத்தினால் மோசடி: ஊழலுக்கு எதிரான அமைப்பு
Tuesday, January 01, 2008
No comments
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2008]
2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை பேரனர்த்த மீள்கட்டமைப்புப் பணிகளுக்காக அனைத்துலக சமூகம் வழங்கிய நிதித்தொகையில் 535 மில்லியன் டொலர்களுக்குரிய கணக்கினை தெளிவுபடுத்த முடியாத நிலையில் சிறிலங்கா அரசாங்கம் உள்ளதாக ஊழலுக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆழிப்பேரலை அவசர உதவிகளுக்காக வழங்கப்பட்ட மொத்த நிதித்தொகைக்கும் மீள்கட்டமைப்புப் பணிகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட நிதித்தொகைக்கும் இடையில் 535 மில்லியன் டொலர்களுக்கான இடைவெளி உள்ளமை தமது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
ஆழிப்பேரலை மீள்கட்டமைப்பிற்காக வழங்கப்பட்ட நிதியை சிறிலங்கா அரசாங்கம் வேறு நோக்கங்களுக்குச் செலவிட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாக IRIN எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் செய்திச்சேவைப் பிரிவு தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
ஆழிப்பேரலையின் பின்னான மீள்கட்டமைப்புக்காக சிறிலங்கா அரசாங்கத்திற்கு 1,200 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று தெரிவித்து, ஆழிப்பேரலை மீள்கட்டமைப்பிற்கான மிகிந்த ராஜபக்சவின் அலோசகர் சாந்த பெர்னான்டோ சிறிலங்கா மீதான குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். உதவிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கூடாக நேரடியாக வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதினம்.கொம்
28.12.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 15.
Tuesday, January 01, 2008
No comments
கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை
Tuesday, January 01, 2008
2 comments
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2008]முன்னாள் அமைச்சரும் ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தியாகராஜா மகேஸ்வரன் அரச கொலைக் கும்பலால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இன்று காலை கொச்சிக்கடையிலுள்ள சிறி பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் காலை 9.10 மணியளவில் முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த மெய்காவலரும் இறந்துள்ளார்.
மகேஸ்வரன் உட்பட இன்னும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் காயமடைந்தனர். மேலும் 6 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக சூட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரனும் ஒரு மெய்ப்பாதுகாவலரும் சிகிச்சை பலனின்றி காலை 10.00 மணியளவில் உயிரிளந்துள்ளார்.
இதனையடுத்து பொன்னம்பலவானேஸ்வரர் சிவன் கோவில் மூடப்பட்டுள்ளது.
மகேஸ்வரன் 2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சார நேரத்தின் போது கொட்டாஞ்சேனைப்பகுதியில் வைத்து சூட்டுக்கு இலக்காகி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் 4 காவலரண்கள் மீது தாக்குதல்: படைக்கலங்கள் மீட்பு
Tuesday, January 01, 2008
No comments
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2008]
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் காவலரண்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி 4 காவலரண்களை கைப்பற்றியுள்ளதுடன் அதிலிருந்த படைக்கலங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மணலாறு கொக்குத்தொடுவாயில் உள்ள படைக் காவலரண்கள் இரண்டும், சிலோன் தியேட்டர்ப் பகுதியில் உள்ள காவலரண்கள் இரண்டும் விடுதலைப் புலிகளால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:00 மணிக்கு தாக்கப்பட்டன.
இக்காவலரண்களுக்குள் நுழைந்து அதிரடித்தாக்குதலை நடத்திய விடுதலைப் புலிகள் படைத்தரப்பினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தினர்.
இத்தாக்குதலின் போது படையினர் அரண்களிலிருந்து இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர். பின்னர் அந்த அரண்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றி சில மணிநேரம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
அரண்களிலிருந்த படைக்கலங்கள் மற்றும் படைப்பொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி தமது நிலைகளுக்குத் திரும்பினர்.
Subscribe to:
Posts (Atom)