Sunday, March 30, 2008

வன்னிக் களமுனையில் வைரஸ் தாக்கம்: மருத்துவமனையில் 500 படையினர்

[ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2008,] வன்னியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இராணுவத்தினர் வைரஸ் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களமுனைகளில் உள்ள பெருமளவிலான படையினர் சிக்குன்குனியா, டெங்கு போன்ற வைரஸ் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய 500 இராணுவத்தினர் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். இது தொடாபில் கருத்து தெரிவித்த மாகாண மருத்துவப் பணிப்பாளர் மருத்துவர் டபிள்யூ. அத்தபத்து தெரிவித்துள்ளதாவது: இந்த நெருக்கடி ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்திருந்தது. நோய்த் தாக்கங்களுக்கு உள்ளானவர்கள் அனுராதபுரம், பதவியா, சம்பத்நுவெர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் நோய்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நுளம்புகளின் தாக்கங்களை தவிர்ப்பதற்கு கொசு வலைகளும் விநியோகிக்கப்படுன்றன. களமுனைகளில் கைவிடப்படும் எறிகணைகளின் கொள்கலன்களில் அதிகளவான நுளம்புகள் பெருக்கம் அடைகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் புதிய அரசாங்கமும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரும்

[ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2008]

சலசலத்தோடும் ஒரு நதி. அந்த நதியில் கலக்கும் காட்டாற்று வெள்ளம். பிரவகித்துப் பாயும் வெள்ளத்தின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டவை ஏராளம். நதியின் முன்னால் முளைவிடும் பெரும் பர்வதம். காட்டாற்று வெள்ளத்தால் மலையை வெல்ல முடியவில்லை.

தோற்று நிற்கும் நதி இரண்டாகக் கிளைவிடுகிறது. சேற்று நீர் கலந்த காட்டாற்று வெள்ளம் ஒருபுறம். தெளிந்த நீரோட்டம் மறுபுறம். இன்றைய தினத்தில் பாகிஸ்தானின் அரசியல் நிலைவரத்தை விளக்குவதற்கு இதனை விடவும் சிறந்ததொரு உதாரணம் இருக்க முடியாது. 1999ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பாகிஸ்தானின் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தை நதி யாகக் கருதினால், அதில் கலந்த காட்டாற்று வெள்ளமாக இராணுவ அரசியல் சதிப்புரட் சியைக் கருதலாம்.

அமெரிக்கா என்ற இயக்க சக்தி வலு சேர்க்க, காட்டாற்று வெள்ளத்தில் ஜனநாயக அரசியல் கட்சிகளும் அடித்துச் செல்லப்பட்டன. எதிர்நீச்சல் போடும் சக்தி அவற்றுக்கு இருக்கவில்லை.

தேர்தலின் வடிவில் மக்கள் சக்தி என்ற மலை குறுக்கே நின்றபோது அமெரிக்காவின் இயக்க சக்தியுடன் இயங்கிய இராணுவ ஆட்சி என்ற காட்டாற்றின் வேகம் தடைப்பட்டது. அது இரண்டாக கிளைவிட்டது.

அதில் ஒரு கிளையை அமெரிக்காவினதும், ஜனாதிபதி பர்வஸ் முஷாரப்பினதும் கூட்டணியாக வர்ணிக்கலாம். மறு கிளையை பெனாஸிர் பூட்டோ, நவாஸ் ஷெரீப் ஆகியோரது கட்சிகளின் புதிய கூட்டமைப்பாக குறிப்பிடலாம்.

கடந்த வாரம் முழுவதும் இந்தக் கிளை நதிகளின் திசையை மாற்றும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கலங்கல் நதி தூய நீரோட்டத்தை தன்னுள் ஈர்த்துக் கொள்ள முயன்று தோல்வியைத் தழுவியது.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி கூட்டமைப்பின் சார்பில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார், பெனாஸிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூஸூப் ராஸா கிலானி.

முஷாரப்பின் ஆட்சிக்காலத்தில் ஐந்தாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த அரசியல் பகையாளியான கிலானி. அவருக்கு முஷாரப்பே சத்தியப்பிரமாணம் செய்து வைத்த சுவாரஷ்ய சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அரங்கேறியது.

புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடக்கத் தயாரென முஷாரப் தெரிவித்தார். அதற்குப் பதிலடி கொடுத்த கிலானி, ஆட்சியில் மாற்றமொன்று தேவை என்பதற்காகவே மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள் என்றார்.

தொலைபேசி மூலம் கிலானிக்கு வாழ்த்துச் சொல்வதன் மூலம் அவரது தரப்பை தம்பக்கம் ஈர்த்துக் கொள்ள முனைந்தார், அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யு புஷ். அவருக்கும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது அதிபர் புஷ்ஷின் நோக்கமாக இருந்தது. ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடர்பில் பரந்த அணுகுமுறை அவசியமென்றார்

கிலானி. இஸ்லாமாபாத் சென்ற அமெரிக்க இராஜதந்திரிகள் இருவர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார்கள். தமக்கு முஷாரப் செய்த உதவிகளை பாகிஸ்தானின் புதிய அரசாங்கம் தொடர வேண்டுமென வலியுறுத்துவது அவர்களின் நோக்கம்.

ஆனால், முஷாரப்பின் ஒருதலைப்பட்சமான பயங்கரவாத தடுப்புக் கோட்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படுமென்றார் நவாஸ். இனிமேல் அரசாங்கம் பாகிஸ்தானின் தேவைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமென அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானில் தலைதூக்கிய கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையை தாம் உணர்ந்தபோதும், தமது நாடு கொலைக் களமாக மாறுவதை விரும்பவில்லை என்ற ரீதியில் சற்று காரசாரமாகவே பேசினார் நவாஸ்.

ஜனாதிபதி முஷாரப்பின் ஆட்சி முறையில் மாற்றம் தேவையென்ற ரீதியில் பிரதமர் கிலானி பேசியபோது, முஷாரப் பதவியில் இருந்து விலக வேண்டுமென வெளிப்படையாகவே சொன்னார் நவாஸ். இந்த அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தற்போது மக்கள் மத்தியில் நிலவும் பொதுவான எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செப்ரெம்பர்11 தாக்குதலைத் தொடர்ந்து, அல்கொய்தா, தாலிபான் அங்கத்தவர்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கு பாகிஸ்தான் ஜனாதிபதியே உறுதுணையாக திகழ்ந்தார். ஜனாதிபதி முஷாரப் நாட்டு நலன்களை விடவும் பயங்கரவõதத்திற்கு எதிரான போரின் மீது அதிக அக்கறை காட்டினார், இந்தப் போர் தான் பாகிஸ்தானில் தற்போது தலைவிரித்தாடும் கிளர்ச்சிக்குக் காரணமென்ற கருத்து நிலவுகிறது. மறுபுறத்தில், அமெரிக்காவும், பிரிட்டனும் ஆப்கானிஸ்தானில் தவறிழைத்ததால், ஆப்கானின் கிளர்ச்சி பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்திற்குப் பரவியதாக பாகிஸ்தான் மக்களில் ஒருசாரார் கருதுகிறார்கள். பாகிஸ்தானின் வட÷மற்கு எல்லைப்புற மாநிலத்தில் சமீபகாலமாக வன்முறைகள் மிகவும் தீவிரம் பெற்றிருக்கின்றன. இந்த ஆண்டில் மட்டும் இங்கு கிளர்ச்சி சார்ந்த வன்முறைகளால் 600இற்கு மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் அமெரிக்காவின் மூலோபாயத்தை தொடர்ந்து அனுசரிக்கும் பட்சத்தில், வன்முறைகள் மிகவும் தீவிரமடைந்து அவை நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவக் கூடுமென்பதை கிலானி முதலானோர் அறிந்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பரந்த அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்திய கிலானி, அரசியல் தீர்வு முயற்சிகள் பற்றியும் பேசியிருக்கிறார். கிளர்ச்சியாளர்களுடன் பேசும் எண்ணமும் அவருக்கிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அந்நாட்டின் தலைவர்கள் பாகிஸ்தானில் என்ன நடந்தாலும் பரவாயில்லை, சர்வதேச பயங்கரவாதிகள் ஒழிந்தால் போதும்,என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே செயற்படுகின்றனர். பாகிஸ்தானில் நிலைநாட்டப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் கடந்த வியாழக்கிழமை நாட்டின் வடமேற்குப் பகுதியில் ஒருதலைப்பட்சமாக கிளர்ச்சி அமைப்புக்கள் மீது தாக்குதலை நடத்தியிருக்கின்றன. பாகிஸ்தானின் புதிய தலைவர்கள் வடமேற்குப் பிரதேசத்தில் நிலைநாட்டப்பட்டுள்ள துருப்புக்களை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தக் கூடுமென அஞ்சியே அமெரிக்கப் படைகள் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டதாகத் தெரிகிறது. எது எவ்வாறானபோதிலும், கடந்த பொதுத் தேர்தலின் ஊடாக தமது விருப்பத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் மக்களது ஆணையை அமெரிக்கா மதிக்கவில்லை என்பதையே இந்தத் தாக்குதல்கள் காட்டுகின்றன.

இதுவரை காலமும் அமெரிக்காவையே நம்பியிருந்த ஜனாதிபதி புஷ் தற்போதாவது யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனவும், அவர் தாம் சென்ற திசையை மாற்றி பிரதான அரசியல் நீரோட்டத்துடன் இணைந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானின் புதிய தலைவர்கள் மக்கள் தமக்களித்த ஆணையை சரிவர நிறைவேற்றுவது அவசியம். அத்துடன், தம்முள் பிளவுபட்டு அந்தப் பிளவிற்குள் வெளிச்சக்திகள் நுழைந்து விடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கிய தேவை.

நாயாற்றில் நடந்தது என்ன? குழம்பிப்போன கடற்படை

[ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2008]

முல்லைத்தீவுக்குத் தெற்காக சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள நாயாறு கடற்பகுதியில் கடற்படைக்குச் சொந்தமான அல்ரா அதிவேக தாக்குதல் படகு (Ultra Fast Attack Craft- III) எவ்வாறு மூழ்கடிக்கப்பட்டது என்ற மர் மம் இன்னமும் படைத்துறை வட்டார ங்களில் நீடிக்கிறது.

கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னிரவு திருகோணமலையில் உள்ள கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தலைமையகத்தில் இருந்து, அரை டசின் அதிவேகத் தாக்குதல் படகுகள் ரோந்துப் பணிக்காகப் புறப்பட்டுச் சென்றன. 4 ஆவது ஸ்குவாட்ரனைச் சேர்ந்த சிறப்பு கடற்படைப் பிரிவின் (Elite Naval sea unit) இந்தப்படகுகள் சோடி சோடியாகச் சென்று முல்லைத் தீவுக்கு வடக்கே உள்ள சுண்டிக்குளம் வரையான கடற்பகுதியைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தப் படகுத் தொகுதியில் இருந்த இரண்டு படகுகள் மறுநாள் சனிக்கிழமை அதிகாலை வேளையில் கடும்மழை பெய்து கொண்டிருந்த போது, முல்லைத் தீவுக்குத் தெற்காக உள்ள நாயாறு கடற்பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தன. திடீரென அதிகாலை சுமார் 2.10 மணியளவில் கொழும்பு "டொக்யாட்' நிறுவனத் தால் தயாரிக்கப்பட்ட P-438 அதிவேகத்தாக்குதல் படகின் அடியில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது.

அதனையடுத்து படகினுள் வேகமாக நீர் உட்புகத் தொடங்கியது. படகின் கட்டளை அதிகாரி லெப். கொமாண்டர் குணவர்த்தனவும் வேறு நான்கு கடற்படையினரும் ஒருவாறு உயிர் காப்புப் படகில் ஏறிக் கொண்டனர். சிறிது நேரத்துக்குள் க438 படகு நீரில் மூழ்கி விட்டது. இதேவேளை இதனுடன் சென்று கொண்டிருந்த மற்றைய தாக்குதல் படகு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. உடனடியாக கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்கும் இதுபற்றி அறிவிக்கப்பட்டது. அங்கிருந்து மேலதிக கடற்படைப் படகுகள் அனுப்பப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. காலை 6.30 மணிவரை நடத்தப்பட்ட தேடுதலில் உயிர்காப்புப் படகில் இருந்த லெப்.கொமாண்டர் குணவர்த்தன உள்ளிட்ட ஐவரையும், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றொரு கடற்படைச் சிப்பாயையும்தான் உயிருடன் மீட்க முடிந்தது.

மூழ்கிய படகில் இருந்த மேலும் பத்து கடற்படையினர் காணாமற் போய்விட்டதாகவும் இவர்கள் பெரும்பாலும் இறந்திருக்கக் கூடும் என்றும் கடற்படை தரப்பில் லெப்.கொமாண்டர் றொகான் ஜோசப் தெரிவித்தார். ஆனால் வேறு சில தகவல்கள் பதினொரு கடற்படையினர் காணாமற் போயிருப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் கடற்படைக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதற்குக் காரணம், தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பது புரியாத புதிராக இருப் பதனாலேயாகும். க 438 படகு கடற்கண்ணியில் சிக்கியதால் மூழ் கிப்போயிருக்கலாம் என்றே கடற்படைதரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், பாதுகாப்பு அமைச்சோ இது ஒரு சந்தேகத்துக்குரிய மர்ம மான தாக்குதலாக விபரித்திருக்கிறது.

புலிகள் இதுவரையில் இத்தகையதொரு தாக்குதலை நடத்தியிருக்கவில்லை என்றே பாதுகாப்புத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள் ளது. 1991 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்ட பின்னர் கடற்படையின் பல தாக்குதல் படகுகள் (FAC), ரோந்துப்படகுகள்(IPC), பீரங்கிப்படகுகள் (FGB) போன்றன அவர்க ளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

இவை கடற்கண்ணிவெடியால், நீரடி நீச்சல் பிரிவு கரும்புலிகளால் குண்டு வைத்துத்தகர்த்து, கரும்புலிப் படகுகள் மோதி அல்லது டாங்கி,பீரங்கித் தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்டன.

கடற்புலிகள் நேரடியான கடற்சமர்களை நடத்த முன்னர், தீவகக்கடலில் ஒரு "சீகாட்' ரக ரோந்துப் படகையும், கிளாலிக் கடலேரியில் இரண்டு "வோட்டர் ஜெட், ரோந்துப் படகு களையும் கடற்கண்ணி (Sea Mine) மூலம் தகர்த்திருந்தனர். 1995இல் "சீ டான்சர்' என்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்துக்குள் நுழையும்போது புலிகளின் கடல் கண்ணியில் சிக்கி மூழ்கிப் போனது. இதற்குப் பின்னர் புலிகள் பெருமளவில் கடல் கண்ணிகளைப் பயன்படுத்தியதாகத் தகவல் இல்லை. ஆயினும் கடந்தவருடம் ஏப்ரல் மாதம் நாயாறு மற்றும் அதனை அண்டிய கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ரோந்துப்படகு ஒன்று ஒரு தொகுதி கடற்கண் ணிகள் மிதக்க விடப்பட்டிருந்ததை அவதானித்திருந்தது.

இதன்பின்னர் கடற்படையின் விசேட பயிற்சி பெற்ற சுழியோடிகள் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு தேடுதல் நடத் தப்பட்டபோது, 24 கடல்கண்ணிகளை கைப் பற்றியதாக கடற்படை தெரிவித்திருந்தது. முன்னதாக 2006ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் கடற்படைப் படகுகளைத் தாக் கும் நோக்கில் எடுத்து வந்த, கடலுக்கு அடி யில் வெடிக்க வைக்கக் கூடிய ஒரு தொகுதி காந்த கடற்கண்ணிகளை படையினர் பமுனு கம கடற்பகுதியில் கைப்பற்றியிருந்தனர். ஆனால் இவற்றை கடற்கண்ணிகள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சுழியோடிகளே இவற்றை கப்பலுக்கு அடியில் பொருத்தி வெடிக்கச் செய்யும் வகையைச் சார்ந்ததே இதுவாகும்.

இவைதவிர கடற்புலிகள் அண்மைக் காலத்தில் கடல்கண்ணிகளைப் பயன்படுத்தியதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. நாயாறில் p438 படகு கடற் கண்ணியில் சிக்கியிருக்கலாம் என்று கடற்படை கூறினாலும் இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப் படுகின்றன. எத்தகைய வெடிப்பு சாதனம் பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் எந்த வகையினது என்பன தொடர்பாக கடற்படை ஆராய்ந்து வருகிறது. தாக்குதலுக்கு உள்ளான படகு குறுகிய நேரத் துக்குள்ளாக நீரில் மூழ்கிவிட்டதே பெரும் ஆச்சரியமாகும்.

கடற்கரும்புலிகளின் படகு மோதி வெடித்து சேதமடையும் கடற்படைப் படகு கள், நீரில் மூழ்க ஒரு சில மணி நேரம் செல்வது வழமை. இத்தகைய கால அவகாசத்தைப் பயன்படுத்தி சில படகுகளை கடற்படையினர் கட்டி இழுத்துக் கொண்டு சென்றதும் உண்டு. அவ்வாறு இழுத்துச் சென்றபோது இடையில் மூழ்கியதும் உண்டு.

ஆனால், இம்முறை அதற்கு எந்தச் சாத்தியமும் இல்லாமல் சில நிமிடங்களிலேயே படகு கடலின் ஆழத்தில் அமுங்கிப் போய்விட்டது. டொக்யாட் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்தப் படகு இஸ்ரேலிய தயாரிப்பான Shaldag Mk II ரகத்தை ஒத்ததாகத் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்பகுதி அலுமினியத்தாலானதாகும். இலகுவில் மூழ்காத தன்மையுடைய இப்படகின் அடியில் மிகவும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பே நிகழ்த்தப் பட்டதாக கடற் படை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக படைத்தரப்புக்குள் பல்வேறு குழப்பங்களும் இருக்கின்றன. முதலில் தாக்குதல் நடந்த நேரத்திலேயே படைத்தரப்புக்குள் முரண்பாடுகள் உள்ளன. கடற்படை தரப்பில் 2 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இராணுவமோ 2.45 மணியளவில் என்கிறது. பாதுகாப்பு அமைச்சோ 2.30 மணி என்கிறது. அரச தகவல் திணைக்களமோ 2.25மணிக்கு நடந்ததாகக் கூறுகிறது. இதில் எது சரியானது என்பதிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது.


கடலில் இருந்து மீட்கப்பட்ட படகின் கட் டளை அதிகாரியான லெப்.கொமாண்டர் குண வர்த்தன "கடும்மழை பெய்து கொண்டிருந்த போது படகின் அடியில் பாரிய வெடிப்பு நிகழ்ந்தது. கண்மூடித் திறப்பதற் குள் படகினுள் குபு குபுவென நீர் உட்புகத் தொடங்கியது. உடனடியாகப் படகைக் கைவிட்டு உயிர்காப்புப் படகில் தொற்றிக் கொண்டோம். தாக்குதல் நிகழ்ந்த போது சுற்றுப்பகுதியில் கடற்புலிகளின் எந்தப் படகும் காணப்படவில்லை. கடற் புலிகளுடன் சண்டையும் நிகழவில்லை' என்று தெரிவித்திருக்கிறார். அதேவேளை இந்தத் தாக்குதல் குறித்துத்தகவல் வெளியிட்டிருக்கும் புலிகள் கடற்சண் டையின் போது கடற்கரும்புலிகளே கடற் படைப் படகை மூழ் கடித்ததாகத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவுக்கும் நாயாறுக்கும் இடையில் கடந்த 22ஆம் திகதி அதிகாலை 2மணி யளவில் ரோந்து சென்ற கடற்படைப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இதன்போது 2.10 மணியளவில் கடற்கரும்புலி களால் க438 படகு மூழ்கடிக்கப்பட்டு 14 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 2.45 மணிவரையில் மோதல்கள் நீடித்ததாகத் தெரிவித்துள்ள புலிகள், லெப்.கேணல் அன்புமாறன், மேஜர் கனிநிலா, மேஜர் நிரஞ்சனி ஆகியோர் கடற்படைப் படகை மூழ்கடித்து வீரச்சாவடைந்ததாகவும் அறிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தாக்கு தலை நடத்திய லெப்.கேணல் அன்புமாறன் மற்றும் மேஜர் நிரஞ்சனி ஆகியோரின் நேர் காணல் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டிருப்பதோடு கரும்புலிகள் மூவரும் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. அதேவேளை கடற்படையினரோ கடலில் எந்த மோதலும் நிகழவும் இல்லை, தாக்குதல் நடந்த இடத்தில் கடற்புலிகள் இருக்கவும் இல்லை என்று கூறியுள்ள நிலையில், புலிகள் கடற்சண்டை குறித்து வெளியிட்ட தகவல் குழப்பத்தைத் தோற்றுவித்துள்ளது.


கடற்புலிகளுடன் மோதல் நிகழ்ந்திருந்தாலோ அல்லது அவர்கள் அப்பகுதியில் காணப்பட்டிருந்தாலோ உயிர் தப்பிய கடற்படையினரைக் காப் பாற்றியிருக்க முடியாது. அவர்களைப் புலிகளால் இலகுவாகக் கொன்றிருக்க முடியும் என்று கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால் புலிகள் ஏன் இவ்வாறு சொல்ல வேண்டும்? எதையாவது மூடிமறைத்து கடற் படையினரைக் குழப்பத்தில் ஆழ்த்த புலிகள் நினைக்கின்றனரா என்று சந்தேகங்கள் எழுந் துள்ளன. புலிகளின் வழக்கமான பாணியிலான வெடிமருந்துப் படகை மோதி வெடிக்கச்செய்த தாக்குதல் அல்ல இது என்று கடற்படை அடித் துச் சொல்கிறது. அவ்வாறாயின் கடலுக்கு அடியில் புலிகள் புதிய வகையான போர் உபகரணங்களைப் பரீட்சித்துப் பார்த்துள்ளனரா என்ற கேள்வி எழுகிறது. கடலுக்கு அடியில் சுழியோடிச் சென்று குண்டுகளைப் பொருத்தி கடற்படைப் படகுகளைத் தகர்க்கும் உத்தியைப் புலிகள் கையாளத் தொடங்கி சுமார் 14 வருடங்களாகி விட்டது. காங்கேசன்துறைத் துறைமுகத்தில் முதல் முதலாக இத்தகைய உத்தியைப் பயன்படுத்தி அ 520 என்ற கட்டளைக் கப்பலை நீரடி நீச்சல் பிரிவு கரும் புலியான கப்டன் அங்கயற் கண்ணி என்பவர் தகர்த்து அழித்திருந்தார்.


இந்தச்சம்பவம் நிகழ்ந்தது 1994 ஆம் ஆண்டி லாகும். இதன்பின்னர் திருகோணமலைத் துறை முகத்தில் "ரணசுறு', "சூரய' ஆகிய பீரங் கிப்படகு களை 1995இல் நீரடி நீச்சல் பிரிவு கரும்புலிகள் மூழ்கடித்திருந்தனர். ஆனால் நாயாறு கடற்பகுதியில் நீரடி நீச்சல் பிரிவு கரும்புலிகளால் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்றே கடற் படையினர் கருதுகி ன்றனர். வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் கடற்படைப்படகை நீரடி நீச்சல் பிரிவினரால் நெருங்க முடியாது. தரித்து நிற்கும் படகுகளை வேண்டுமானால் இவ்வாறு தாக்கமுடியும். நாயாறில் இவ்வாறு நடந்திருக்க முடியாது என்கிறது கடற்படை. கடற்கண்ணியைப் புலிகள் பயன்படுத்தியி ருப்பின் அவர்கள் கடற்சமர் நடந்ததாகவோ அல்லது கரும் புலித் தாக்குதல் என்றோ, 3 கடற்கரும்புலிகள் வீரச் சாவடைந்ததாகவோ அறிவித்திருக்கமாட்டார்கள். அத்துடன் கடற் கண்ணிகளை கண்டபடி விதைக்க முடியாது. கடற்படைப்படகு அதன் மீது மோதினால் மட்டுமே வெடிக்கும் தன்மை கொண்டது.

திட்டமிட்ட ஒரு நேரத்தில் கடற்கண்ணி யைக்கொண்டு தாக்குதல் நடத்த முடியாது. அதிலிருந்து விலகி ஒரு அடி தூரத்தால் சென்றால் கூட தாக்குதலில் இருந்து தப்பிவிடும். ஆனால் கரும்புலிகளால் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த முடியும். முல்லைத்தீவு முதல் கொக்குளாய் வரையான கடற்பகு தியில் அண் மைக்காலமாக கடற்படையினர் அதிகளவில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த துடன், மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந் தனர். கடந்த 4ஆம் திகதி கிளிநொச்சியில் பூநகரி, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேச மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை புலிகளின் அர சியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் ஆகியோர் சந்தித்துக் கலந்துரை யாடியிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது மீன வர்களின் பிரச்சினைகளை தாம் விரைவில் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுப்பதாக பா.நடேசன் தெரிவித்திருந்தார். சந்திப்பின்போது ஆராயப்பட்ட முக்கிய விடயங்களில் வடமேற்கு மற்றும் வடகிழக்கு கடற்பகுதியில் மீனவர்களின் மீது கடற்படை நடத்திவரும் தாக்குதல் கள், விமானத் தாக்கு தல்கள் ஆகியனவும் அடங்கியிருந்தன. கடற் படையின் தாக்குதல்களை கட்டுப்படுத்துவ தான உத்தரவாதத்தை வழங்கும் விதத்தில் அர சியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேற் கண்டவாறு கருத்து வெளியிட்டிருக்கலாம் என் றும் கருதப் படுகிறது.

எனவே இப்பகுதியில் கடற்படைக்கு ஒரு அடியைக் கொடுக்கப் புலிகள் திட்டமிட்டிருப் பார்கள். ஆனால் மீனவர்களின் படகுகளும் கடற்புலிகளின் பட குகளும் அதிகளவில் நட மாடும் பகுதியில் அவர்கள் கடற்கண்ணிகளை விதைத்திருப்பார்களா என்பது சந் தேகமே. அவ்வாறாயின் மோதலும் நிகழாமல், கடற் கண்ணியும் வெடிக்காமல் எவ்வாறு புலிகள் தாக்குதலை நடத்தியிருப்பர்? சிலவேளைக ளில் நீருக்கடியில் தாக்குதல் நடத்தக்கூடிய புதிய போராயுதங்கள் எதையாவது புலிகள் பயன்படுத்தியிருப்பார்களா என்ற சந்தே கமும் உள்ளது. கப்பல்களைத் தகர்க்கின்ற நீருக்கடியில் செலுத்தப்படும் ஏவுகணைகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை டோபிடோ (Torpedo)என்று அழைப்பர். ஆனால் இவை மிகவும் விலை அதிகமானவை என்பதுடன் புலிகளின் கைக்கு இலகுவில் கிடைத்து விட வாய்ப்புகள் குறைவு. அப்படிக் கிடைத்திருந்தாலும் அதை பாரிய போர்க்கப்பல் மீதோ அல்லது பீரங்கிப் படகு மீதோ பிரயோகித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தவே புலிகள் முனைந்திருப்பர்.

இல்லையேல் நீருக்கடியில் பயன்படுத்தப்படும் ஸ்கூட்டர்களின் (Under Water Scooter) உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்க லாமோ என்ற சந்தேகமும் நிலவுகிறது. ஆழ் கடல் ஆராய்ச்சியாளர்கள், சுழியோடிகளால் பயன்படுத்தப்படும் இந்த ஸ்கூட்டர்கள் வெளி நாடுகளில் தாராளமாகவும் மலிவாகவும் விற்கப்படுகின்றன. டோபிடோ 2000, டோபிடோ 2500, டோபிடோ3500 போன்ற நீருக்கடியில் பய ணிக்கும் ஸ்கூட்டர்கள் போன்ற ரகங்களை 1000 டொலர்களுக்கு குறைவாக வாங்க முடி யும். வேறு சில 2500 முதல் 5000 டொல ருக்கு வாங்கக் கூடியவையும் உள்ளன. ஸ்கூட்டர் என்றவுடன் தரையில் பயணிக்கும் ஸ்கூட்டர் போலக் கருதக் கூடாது. சிறியரகத் தைச் சேர்ந்த இவை சுமார் 30 மீற்றர் ஆழத்தில் 4கி.மீ வேகத்தில் ஆட்களை இழுத்துச் செல்லக் கூடியவையாகும். நீருக்கடியில் பயணிக்கக் கூடிய ஒரு வாகனமாகப் பயன்படுத்தக் கூடிய ரகங்களும் உள் ளன. இவற்றில் ஒருவர் பயணம் செய்ய முடியும். புலிகள் இத்தகைய ஸ்கூட்டர்களை கொள் வனவு செய்ததாக பல ஆண்டு களுக்கு முன் னர் தகவல்கள் வெளியான போதும் அவற்றைக் கடற்படைக்கு எதிராகப் பயன்படுத்திய தற்கான சான்றுகள் எவையும் கிடைக்க வில்லை. நாயாறு தாக்குதலில் புலிகள் நீருக்கடியில் பயன்படுத்தும் ஸ்கூட்டரை பயன்படுத்தியிருந்தால் கூட அவற்றில் 3கரும்புலிகள் பயணித் திருக்க வாய்ப்பில்லை. எனவே நீருக்கடியில் புதிய தாக்குதல் உபகரணங்கள் எதையாவது (நீர்மூழ்கி போன்ற) தயாரிப்பதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்களா என்று தெரிய வில்லை. ஆனால் இந்தத் தாக்குதல் எத்தகையது என்ற விபரத்தைப் புலிகள் வெளியிடவில்லை. எவ் வாறு கடற்படைப்படகு மீது தாக்குதல் நடத்தப் பட்டது என்ற விபரத்தை வெளியிடப் புலிக ளின் இராணுவப் பேச்சா ளர் இராசையா இளந் திரையன் மறுத்து விட்டார். இதிலிருந்து புலி கள் படைத்தரப்பைக் குழப்பத்தில் ஆழ்த்த முனைவது தெரிகிறது.

புலிகள் இந்தத் தாக்குதலை எப்படி நடத்தியி ருந்தாலும் கடற்படைக்கு பெரும் அதிர்ச்சியை யும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் மிகவும் சக்திவாய்ந்த இந்த போருத் தியை அடுத்த தடவை கடற்புலிகள் கடற்படை யின் தாக்குதல் படகுகளில் பயன்படுத்துவதை விட பீரங்கிப்படகுகள், துருப்புக்காவிகள் மீது பயன்படுத்தவே எத்தனிப்பார்கள். ஏனெனில் இவற்றுக்கு ஏற்படுத்தக்கூடிய சேதம் அதிகமாக இருக்கும்.

கடந்த டிசம்பர் 26ஆம் திகதி கடற்படையின் மற்றொரு அல்ரா அதிவேகத் தாக்குதல் படகு நெடுந்தீவுக் கடலில் புலிகளால் மூழ்கடிக்கப் பட்டிருந்தது. அத்துடன் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி கடற்படையின் கரையோர ரோந் துப்படகு (வோட்டர்ஜெட்) ஒன்றும் தலைமன் னாருக்கு வடக்கே மூழ்கடிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடற்படை மற்றொரு தாக்குதல் படகை இழந்திருப்பது கடற்புலிகள் வலு விழந்து போய்விடவில்லை என்பதை மீளவும் நிரூபித்திருக்கிறது.

வீரகேசரி வாரவெளியீடு

Saturday, March 29, 2008

கிழக்கில் மீண்டும் புலிகள் !

[சனிக்கிழமை, 29 மார்ச் 2008,]

கடந்த வாரம் கைவிடப்பட்ட ஐந்து படகுகளை படையினர் வாகரையில் கைப்பற்றியிருந்ததும், அதை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்ததும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கியிருந்தது.

இப்படகுகளில் வந்து இறங்கியது யார்? என்னும் கேள்வி மக்களை விட இராணுவத்தினரின் நிம்மதியை கெடுத்துள்ளதாக வாகரையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

இதில் வந்து இறங்கியது தமிழீழ விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினர்தான் என்றும் மட்டக்களிப்பு மாவட்ட புதிய தளபதி கீர்த்தியின் துணை தளபதிகளில் ஒருவரான சாந்தன் என்பவருடன் இப்படையணி வாகரைக்கு வந்து இறங்கியதாகவும் தெரியவருகிறது.

அதே நாள் மட்டக்களப்பை நோக்கி அப் படையணி நகர்ந்து, அங்கு முன்னதாகவே மதனுடன் நின்றிருந்த சிறிய படையணியுடன் இணைந்துள்ளதாகவும், இவர்கள் இரவு பகல் என்று பாராது காஞ்சிரங்குடா, வாழைக்காலை பகுதிகளில் நடமாடி பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து வருவதாகவும், மக்கள் அவர்களை அரவணைத்து வருவதாகவும் தெரிய வருகிறது.

இதனை உறுதிப்படுத்துவது போன்று, கடந்த 26 இல் இடம்பெற்ற இலங்கை அதிரடிப் படை அதிகாரிகளை நோக்கி அதி நவீன முறையில் இடம் பெற்ற கிளேமோர் தாக்குதல் அமைந்திருந்தது.

இது கிழக்கின் விடியலுக்கான போராட்டத்தின் ஆரம்பமா? என மக்கள் மத்தியில் எண்ணம் தோன்றியுள்ளது.

Orunews ♦ ஒரு செய்தி

Friday, March 28, 2008

ஒப்பந்தத்தை தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்: ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா எச்சரிக்கை

[வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2008]

மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி பொருட்கள் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை ஒக்ரோபருக்குப் பின்னும் தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது:

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருப்பதாகக் காரணம் காட்டி அனைத்துலகத்தில் இருந்து சிறிலங்காவிற்கு கிடைக்கும் பல உதவிகளை தடுத்து நிறுத்துவதற்கு சில அமைப்புக்கள் முயற்சிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் நிறைவடைகிறது

இந்த ஒப்பந்தம் முன்னுரிமை அடிப்படையில் சிறிலங்காவிற்குப் பொருட்களை வழங்குவதற்காக செய்யப்பட்டதாகும். மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி இந்த ஒப்பந்தத்தை சிறிலங்காவுடன் தொடர்ந்தும் நீடிக்க வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் சில அமைப்புக்கள் கோரியுள்ளன.

மனித உரிமைகள் தொடர்பாக அனைத்துலக ரீதியில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பிரசாரங்களால் சிறிலங்காவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள்தான் தமது ஜீவனோபாயத்தை இழந்து பாதிக்கப்படுவர். அதேநேரம் இத்தகைய பிரசாரங்களால் சிறிலங்கா தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தப்பான அபிப்பிராயத்தைக் கொள்ள முனைகின்றன.

அத்துடன் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா மீது சுமத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முனைந்து வருகின்றன.

இதனால் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிறிலங்கா சிக்கலாம். குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் சிறிலங்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை இனிமேல் ஏற்றுமதி செய்யமுடியாமல் போகலாம்.

கடந்த வருடம் 3 ஆயிரத்து 800 மில்லியன் டொலர் வருமானம் இத்தகைய ஏற்றுமதிகளால் கிடைத்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தால் சிறிலங்கா மீது சுமத்தப்படும் மனித உரிமைக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை.

இந்த குற்றச்சாட்டுகளின் பிரகாரம் சலுகை அடிப்படையிலான வர்த்தகத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தினால் அதனால் கிராமப் புறங்களில் வாழும் 30 லட்சம் மக்கள்தான் பாதிக்கப்படுவர்.

ஏனெனில் ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதான ஏற்றுமதியான தைத்த ஆடைகளை வடிவமைப்பதில் கிராமப்புற மக்களே அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுடனான ஒப்பந்தத்தை தொடர மறுத்தால் ஏற்படவிருக்கும் விளைவுகள் பாரதூரமானவையாகும். எனவே அரசாங்கம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த விடயத்தில் தீர்க்கமான முடிவு எடுத்திருக்கிறது.

எதிர்காலத்தில் அனைத்துலக நாடுகள் சிறிலங்காவிடம் இத்தகைய குற்றச்சாட்டுகளை மேற்கொள்ள முடியாத வகையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வந்திருக்கிறது.

எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா மீது அனைத்துலக நாடுகள் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாத வகையில் சில தீர்மானங்களை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எடுத்திருக்கிறார்.

அனைத்துலக கொள்கைகளையும் அந்த நாடுகளின் வற்புறுத்தல்களையும் சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதற்கு அரச தலைவர் ராஜபக்ச தயாராக இல்லை.

அத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்த சிறிலங்கா உயர் நீதிமன்றம் இனிமேல் நடவடிக்கை எடுக்கும். அதில் அனைத்துலக நாடுகள் தலையிட முடியாது என்றார் அவர்.

புதினம்.கொம்.

மன்னாரில் இடம்பெயர்ந்த அவலப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் ஒத்துழைப்பதால் உற்சாகத்தில் போராளிகள்: தளபதி லக்ஸ்மன் பெருமிதம்

[வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2008] மன்னார் மாவட்ட மக்கள் எதிரியின் வல்வளைப்பால் இடம்பெயர்ந்து அவலப்படுகின்றபோதும் களத்தில் போரிடும் போராளிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது என்று தளபதி லக்ஸ்மன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மன்னார் களமுனையில் தளபதிகள் மற்றும் போராளிகளுக்கு தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமும் மன்னார் மாவட்ட மீன்பிடிச்சங்கமும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று உலர் உணவுப் பொருட்களை வழங்கின. மன்னார் மீன்பிடிச் சங்கத் தொழிலாளர்கள் பெருமளவில் இதில் கலந்துகொண்டனர். தளபதி லக்ஸ்மனையும் போராளிகளையும் சந்தித்து உலர் உணவுப் பொருட்களை கையளித்தனர். அவர்கள் மத்தியில் தளபதி லக்ஸ்மன் பேசியதாவது: எழுச்சி கொண்ட மக்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பின்னின்று உழைக்கும் போதுதான் நாம் எமது விடுதலையை வென்றெடுக்க முடியும். மன்னார் மாவட்டத்தில் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் போரில் எமது போராளிகள் எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர். மன்னார் மாவட்ட மக்கள் எதிரியின் வல்வளைப்பால் இடம்பெயர்ந்து அவலப்படுகின்ற போதும் களத்தில் போரிடும் போராளிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் எதிரி பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றான். அந்த இழப்புக்களை சிறிலங்கா அரசு மூடிமறைத்துக் கொண்டு வருகின்றது. எழுச்சி கொண்ட மக்களின் செயற்பாடுகள் தான் தமிழீழத்தை வென்றெடுக்க உதவும் என்றார் தளபதி லக்ஸ்மன். புதினம்.கொம்.

தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் புலிகளின் ஈழப் போரை ஆதரிக்கிறார்கள்: பா.நடேசன் பெருமிதம்

[வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2008]

தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் புலிகளின் ஈழப்போரை ஆதரிக்கிறார்கள் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு ஊடகமான "குங்குமம்" வார இதழுக்கு இணையம் வழி அவர் அளித்த நேர்காணால்:

சமாதான உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு விலகிய பிறகு ஈழத் தமிழர்களின் நிலை எப்படியிருக்கிறது?

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போருக்குள் வாழும் ஒரு வாழ்க்கையைத்தான் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு கண்ணிவெடிகளையும் கண்ணீரையும்தான் இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பரிசளித்து வருகிறது.

சிங்கள அரசு தொடுக்கும் இந்த அவலங்கள்தான் தமிழ் மக்களை விடுதலையின் பாதையில் தொடர்ந்து போராடத் தூண்டுகிறது. சுதந்திரத்துக்கான விலையாகவே இந்த கொடுமைகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீண்டதொரு அமைதி வாழ்க்கைக்குப் பிறகு ஈழ மக்கள் மீது கொடூரமான ஒரு போரை திணித்திருக்கிறது இலங்கை அரசு.

மீண்டும் மீண்டும் அவர்கள் கருப்பு வரலாற்றை கொண்டு வருகிறார்கள். தினம் தோறும் வான்படைகள் மூலம் தமிழ் மக்களை குண்டு வீசி கொல்கிறது சிங்கள அரசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்படுகிறார்கள். இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் வாழும் ஈழ மக்களின் நிலை இதை விட மோசமாக உள்ளது. தாயின் எதிரில் மகளை பாலியல் வன்முறை செய்வது, குழந்தைகளின் முன்னால் பெற்றோரைக் கொல்வது என்ற வழக்கமான தங்களின் சித்திரவதை வடிவத்தை இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது தினம் தினம் செய்கிறது.
இந்த செய்திகள் வெளியுலகுக்கு தெரியாவண்ணம் மூடிமறைத்து பொய்ச் செய்திகளையே பரப்புகிறார்கள். அது மட்டுமல்ல எந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களையும் இலங்கை அரசு ஈழத்துக்குள் அனுமதிப்பதில்லை. ஈழ மக்களின் துனபம் உலகுக்கும் தெரிவதில்லை தமிழ்நாட்டுத் தமிழனுக்கும் தெரிவதில்லை.

சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து நோர்வே விலகிச் சென்றது புலிகளுக்கு பின்னடைவுதானே?

இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான சர்வதேச ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராகச் செயல்படுமாறு இரு தரப்பாலும் அழைக்கப்பட்ட ஒரு நாடுதான் நோர்வே. ஆனால் ஒரு தலைப்பட்சமாக சிங்கள அரசு உடன்பாட்டிலிருந்து விலகியதால் அனுசரணையாளரான நோர்வே அமைதி முயற்சிகளிலிருந்து விலகியிருக்க நிர்பந்திக்கப்பட்டது.எனவே நோர்வேயின் வெளியேற்றமானது சமாதான வழியில் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியும் என இந்த உலகத்தின் முன் நாடகம் ஆடிக்கொண்டிருந்த சிங்கள அரசிற்கு பின்னடைவே ஓழிய புலிகள் இயக்கத்துக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.

ஈழத்தின் நான்கில் ஒரு பங்கு நிலத்தில் முழுமையாக விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாக ஆட்சி நடைபெற்று வந்த சூழலில் இப்போது அந்த இடங்களை கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை இராணுவம் கைப்பற்றி வருவதாக செய்திகள் வருகிறதே?

ஒரு போரில் தனது கட்டுப்பாட்டு நிலங்களை விட்டு பின்னகர்வதை தோல்வியாகவோ பின்னடைவாகவோ பார்க்கக்கூடாது. இது யுத்த தந்திரங்களுடன் கூடிய இராணுவ விவாகாரம்.எமது அமைப்பு விடுதலைப் போராட்டத்தின் நன்மை கருதி எங்கள் கட்டுப்பாட்டு நிலங்களில் இருந்து நாங்கள் பின்னகர்வதும் காலம் கனிந்து வரும் போது எதிரிகளிடம் இருந்து எமது தாய் மண்ணை மீட்பதையும் புலிகளின் போரியல் வரலாற்றை கவனித்தவர்களுக்குப் புரியும்.

தமிழீழத்தின் தென்பகுதியில் இருந்து புலிகள் ஒரு பின்னகர்வைச் செய்தனர் இதைனையே புலிகளின் தோல்வியாக உலகிற்குக் காட்டி வெற்றிப் பிரகடனம் செய்கிறது சிங்கள அரசு. அதே வெற்றிக் கனவுடன் வன்னிக்குள் போரைத் துவங்கிய சிங்கள அரசு இப்போது திணறிக் கொண்டிருக்கிறது அங்குள்ள உண்மையான கள நிலவரங்கள் வெளி உலகுக்கு தெரிவதில்லை.வன்னிப் போரில் புலிகளிடன் தோற்றுப் போவோமே என்று அஞ்சித்தான் இந்தியாவிடம் இருந்து ஆயுதங்கள் பெற்று தமிழருக்கு எதிரான போரை தீவிரமாக்குகிறது இலங்கை அரசு.

எப்போதெல்லாம் ஈழ மக்கள் மீது கொடூரமான போர் திணிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்திய அரசு கொடுக்கிற ஆயுதங்களை வைத்துத்தான் அங்கு தமிழ் மக்களைக் கொல்கிறது சிங்கள அரசு. ஆனாலும் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் போரியல் தந்திரங்களோடு களமாடும் புலிகள் ஈழ மக்களுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுப்பார்கள்.

புலிகளை வன்னிக்காட்டுக்குள் முடக்கி விட்டோம். இனி அவர்களை அழிப்பதில் எங்களுக்கு சிரமம் இருக்காது என இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருக்கிறாரே?

சிங்கள படைத்தளபதி சரத் பொன்சேகா இப்படி கூறியிருப்பது இது முதல் முறையல்ல மூன்றாவது முறை மேலதிகமாக அவர் இன்னொன்றையும் கூறியிருக்கிறார். வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் புலிகளை அழித்து விடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார். இவை எல்லாம் சரத் பொன்சேகாவால் நான்கு மாதங்களுக்கு முன்னால் வெளியிடப்பட்ட வெற்றிப்பிரகடனங்கள். ஆனால் இன்று அவர்கள் வெளியிட்ட பிரகடனங்களை அவர்களே மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் தொடுத்த வன்னிப் போரில் பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த மறுதலிப்புகள்தான் வன்னிக் களநிலமையின் யதார்த்தத்தை உலகத்துக்குச் சொல்கிறது.

இலங்கை அரசின் தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்து பாதாள அறைக்குள் பதுங்கியிருப்பதாகவும் சர்க்கரை நோயால் அவதிப்படும் அவரை வெளிநாடு கொண்டு செல்ல திட்டமிடுவதாகவும் செய்திகள். இன்னொரு பக்கம் புலிகளின் கடற்படைத் தளபதி சூசைக்கும் உளவுப்பிரிவு தலைவர் பொட்டம்மானுக்கும் பூசல் இருப்பதாகவும் அந்த பூசலின் விளைவே சமீபத்திய பின்னடைவுகள் என்று சொல்லப்படுகிறதே?

தமிழக மக்கள் பழைய கதைகளை மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே பல முறை எமது தலைவர் தொடர்பான ஆசைகளை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு முறை அல்ல பல முறை ஆழிப்பேரலை தென் கிழக்காசிய நாடுகளைத் தாக்கிய போதும் எமது தலைவர் மீதான ஆசையை வெளிப்படுத்தினார்கள். அது போலவே இப்போதும் அவர்களின் ஆசைகளை வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு முறை எங்கள் மீதான பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்து விடும் போதும் காலம் அவர்களுக்கு பதில் சொல்லியே வந்திருக்கிறது.

புதிய மொந்தையில் எத்தனை முறை ஊற்றினாலும் அவர்கள் பழைய கள்ளைத்தான் ஊற்றுகிறார்கள். சூசை பற்றியும் பொட்டாம்மான் பற்றியும் கிளப்பிவிடுகிற வதந்திகளும் அப்படித்தான் எமது தேசிய தலைவரின் தலைமையின் கீழ் புலிகள் ஒன்று பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுப்பதும், இராணுவ உதவிகள் செய்வதும், இராணுவப் பயிற்சி கொடுப்பதும் ஒரு நாடு பக்கத்து நாட்டுக்கு செய்யும் உதவியாகத்தானே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்?

பக்கத்து நாடு பாசிச நாடா இல்லையா? என்பதையும் ஈழத்தில் தமிழ் மக்களை நாள்தோறும் சிங்களப்படைகள் கொல்கிறதா?இல்லையா? என்பதையும் பார்க்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கிறதா?இல்லையா? இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். தமிழ் மக்களின் மீதான இந்தப் போரில் சிங்களப்படைகள் பலவீனமடைந்து ஒடிந்து போயிருக்கும் சூழலில் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் இந்திய விஜயமும் அவருக்கு டில்லியில் வழங்கப்பட்ட அரசு மரியாதையும் எங்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு ஈழத்தமிழனையும் கொல்கிற சிங்கள கொலை வெறியில் இந்திய அரசும் கை நனைக்கிறதோ என நாங்கள் சந்தேகப்படுகிறோம். ஏனென்றால் சரத் பொன்சேகா டில்லியிலிருந்த போது இந்திய இராணுவ உயரதிகாரி ஒருவர் "சிங்களப்படைகள் யுத்தத்தில் சோர்வடைவதை தாம் விரும்பவில்லை" என்று கூறியிருக்கிறார்.

அதாவது இலங்கை இராணுவம் பலவீனமாவதை இந்தியா விரும்பவில்லை என்றிருக்கிறார்.இவைகளை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இலங்கையின் அழிப்பு போருக்கு இந்தியாவும் உறுதுணையாக இருப்பதாகவே தோன்றுகிறது.

ராஜீவ் மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு இல்லையே? இது வருத்தமாக இல்லையா? இந்தியாவிடம் உங்கள் கோரிக்கை என்ன?

தமிழக மக்களிடம் எங்களுக்கு ஆதரவான போக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.கொடூரமாக ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படும் போதெல்லாம் அவர்கள் துடித்துப் போவதை இப்போதும் நாங்கள் உணர்கிறோம். தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் புலிகளின் ஈழப் போரை ஆதரிக்கிறார்கள். இந்நிலையில் இந்தியா எமது அமைப்பின் மீதான் தடையை நீக்கி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

சமீபத்தில் ஐரோப்பிய நாடான கொசோவா தன்னிச்சையாக தனது சுதந்திரத்தை பிரகடனப்படுத்திக் கொண்டது போல நீங்களும் உங்களின் தனி ஈழத்தைப் பிரகடனப்படுத்துவீர்களா? அப்படி சுதந்திர அறிவிப்பு செய்தால் அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா?

ஓவ்வொரு சுதந்திரப் போரும் தனது இராணுவ அரசியல் புறச்சூழல்களின் தேவையின் நிமித்தம் சுதந்திரப் பிரகடனத்தை செய்து கொள்கிறது. எமது சுதந்திர ஈழத்தையும் அதற்கான காலம் கனியும் போது நாம் மேற்கொள்வோம். புதிய தேசங்களின் சுதந்திர பிரகடனங்களையும் அதனை உலக நாடுகள் அங்கீகரிப்பதையும் ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.சுதந்திரத்தை மதிக்கும் நாடுகளிடமிருந்து அத்தகைய ஆதரவுக் கரங்கள் எமக்கும் கிடைக்கும் என்பதே எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என்றார் அவர்.

புதினம்.கொம்

வன்னிப் பெருநிலச் சமர்க்கள நிலைமை என்ன?- முல்லை. கடற்சமரில் வெளிப்படுவது என்ன?: இளந்திரையன் விளக்கம்

[வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2008]

வன்னிப் பெருநிலச் சமர்க்கள நிலைமை என்ன? என்பது குறித்தும் முல்லைத்தீவு கடற்சமரில் வெளிப்படுவது என்ன? என்றும் தமிழீழப் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் விளக்கம் அளித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகும் "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (25.03.08) அவர் வழங்கிய முழுமையான நேர்காணலின் எழுத்து வடிவம்:

கேள்வி: வன்னிப் பெருநிலப்பரப்பு மீதான சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முனைப்புக்கள் பல முனைகளில் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போதைய களநிலவரம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் நாள் பாலமோட்டையில் சிறிலங்காப் படைகள் வன்னிப் பெருநிலப்பரப்பு மீதான முதலாவது முன்னேற்ற முனைப்பு தாக்குதலை தொடங்கினர்.

அன்றில் இருந்து இன்றுவரை மன்னாரின் பல பகுதிகளிலும் அதேபோன்று மணலாற்றுப் பகுதிகளிலும் இத்தகைய சண்டைகள் வியாபித்திருக்கின்றன.

அதேநேரம் 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 11 ஆம் நாள் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகளில் சிறிலங்காப் படைகள் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. இந்தப் படை நடவடிக்கைகளும் வன்னிப் பெருநிலபரப்பு மீதான முன்னேற்ற முனைப்புக்களாகவே இருந்தன. அன்றிலிருந்து இன்றுவரை இப்பகுதிகளிலும் அவர்கள் பல முன்னேற்ற முனைவுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மூன்று தளங்களில் அவர்களின் தொடர்ச்சியான முனைவுகள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக மணலாறு, மன்னார் பெருந்தளம், வடபகுதியில் உள்ள கிளாலி, முகமாலை, நாகர்கோவில் தளம் என தொடர்ச்சியான நடவடிக்கைகளை செய்வதற்கான முனைவுகள் அவர்களிடம் இருக்கின்றன.

அவற்றிற்கு தகுந்த முறையிலும், உத்திகளின் அடிப்படையிலும், தரைத்திட்டத்தை நன்கு பயன்படுத்தி இழப்புக்களைக் கொடுக்கக்கூடிய நிலையிலும் ஏதுவான சூழ்நிலைகளைப் பயன்படுத்துகிற ஒரு நிலையிலும் எங்களுடைய தளபதிகள், போராளிகள் அங்கு சமரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவை அனைத்தையும் எங்களுடைய தேசியத் தலைவர் அவர்கள் மிகவும் நுட்பமாகவும், உத்தி முறைகளுடனும் தலைமையேற்று வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.

கேள்வி: சிறிலங்காப் படையினர் மணலாறு மற்றும் வடபோர்முனையில் தாக்குதல்களை மேற்கொண்டாலும் குறிப்பாக மன்னார் பகுதிகளில்தான் அவர்கள் தமது கூடிய கவனத்தைச் செலுத்துகின்றனர். அவர்கள் மன்னார் பகுதியைக் குறிவைப்பதற்கு என்ன காரணம்?

பதில்: அதற்கு பல காரணங்களைக் கூறமுடியும். அவர்களுடைய நிகழ்ச்சித்திட்ட அடிப்படையிலேயே தமது படைக்கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டுவந்து மன்னார் - பூநகரி கரையோரப் பாதையைத் திறப்பது அவர்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. அதேநேரம் மடுத்தலம் போன்ற முக்கியமாக அரசியல் ரீதியிலே அவர்களுக்கு இலாபம் தரக்கூடிய இலக்குகளை அடைவதற்கு அவர்கள் மிகவும் எத்தனப்படுகிறார்கள்.

இவ்வாறானதொரு நிலையில்தான் அவர்களுடைய நடவடிக்கைகள் அங்கே தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கின்றன. ஆயினும் ஒரு நடவடிக்கை என்று சொல்லும்போது அதற்கு பெயரிடப்பட்டு ஒரு எல்லையைக் கூறவேண்டும், இலக்கை குறிப்பிட வேண்டும், கால வரையறையைக் கூற வேண்டும். ஆனால் அவ்வாறானதொரு சூழ்நிலைகளுக்குள் சிக்குப்படாமல் அந்த நடவடிக்கையை செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வம் வைத்து அந்தப் பகுதிகளிலே உக்கிரமான தாக்குதல்களை, தங்களுடைய உச்ச அளவிலான படைவலுவை, தங்களுடைய உத்திகளை, தங்களுடைய படைக்கருவிகளை, வெடிபொருட்களைப் பயன்படுத்தி செய்வதற்கு முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பிடத்தக்க பெறுபேறை அடைந்து அரசியல் ரீதியான இலாபம் பெறலாம் என்பதற்காக மடுத்தலம் போன்ற இடங்களை அவர்கள் கைப்பற்றுவதற்கு முனைந்தாலும்கூட, குறித்த இலக்கை குறித்த காலத்திற்குள் அடையமுடியாது என்ற தன்னம்பிக்கையே இல்லாத காரணத்தால் அவர்கள் இலக்கை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தவிர, மன்னார்ப் பெருந்தளத்திலே அரசியல் ரீதியான இலாபங்களைப் பெறக்கூடிய இடங்களைக் கைப்பற்றுதல் மற்றும் மன்னார் - பூநகரி கரையோரத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் என்பனவே முக்கியமான நோக்கங்களாக இருக்கின்றன.

கேள்வி: மன்னார் களமுனையில் சிறிலங்காப் படைத்தரப்பு எவ்வளவு பலத்தைப் பிரயோகிக்கின்றது என்பதைக் கூறமுடியுமா?

பதில்: சிறிலங்காப் படைத்தரப்பு தனது உச்சநிலைத் தாக்குதல் சக்திகளான அணிகளை அங்கே முன்னணியில் நிறுத்தியிருக்கிறது.

இந்தப் போருக்கு என்றே முக்கியமாக வடிவமைக்கப்பட்ட 57 ஆவது மற்றும் 58 ஆவது டிவிசன்களும் அதனுடைய உபரி அணிகளும், அதுபோன்ற சில சிறப்பு அணிகளும், கவசப்படையைச் சேர்ந்த ஒரு பகுதியினரும் என தங்களுடைய பலத்தின் மிக உச்சமான பாகங்களை அங்கே அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எறிகணைகளையும் மிகவும் செறிவாக பிரயோகிக்கக்கூடிய வகையில் எறிகணை வீரர்களையும், ஆட்லறி வீரர்களையும் அங்கே அவர்கள் நிறுத்தி சண்டை புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

உச்ச நிலையிலே தங்களை ஈடுபடுத்தினாலும் கூட சொல்லிக்கொள்ளும்படியான பெறுபேறுகளை அவர்கள் பெறுவதில் வருடக்கணக்கான இழுபறி நிலவுவது இன்னொரு பக்கமாக இருக்கிறது.

அதுகுறித்து நீங்கள் ஆழமாகப் பார்த்தால், ஓராண்டு தாண்டியும் தொடர் நடவடிக்கையின் பெறுபேறுகள் என்ன? அவர்களுடைய தரப்பிலே ஏற்பட்டிருக்கின்ற இழப்புகள் என்ன? அந்த இழப்புகளின் அடிப்படையிலே அவர்கள் பெற்றுக்கொள்ளுகின்ற எதிர்காலம் பற்றிய அனுமானங்கள் என்ன என்பதை போரியல் ஆய்வாளர்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: தள அமைப்பைப் பொறுத்தவரை தமக்குச் சாதகமற்ற மன்னார் நிலப்பரப்பைக் கைப்பற்றுவதன் மூலம் சிறிலங்காப் படையினர் என்ன செய்தியைக் கூறவிழைகின்றனர்?

பதில்: மன்னார் பெருந்தளம் என்பது சவால்கள் நிறைந்ததுதான். மன்னார் எங்களுடைய தாய்நிலம். எங்களுடைய தாய்மடி. அந்த இடத்திற்காக நாங்கள் மிகவும் உக்கிரமாகப் போரிடுவோம். அந்த இடத்தில் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகம் கொடுத்தவாறு மிகுந்த அர்ப்பணிப்புடன் எங்களுடைய போராளிகள் எதிர்ச் சமராடி வருகின்றனர்.

தமது விடுதலைப் போராட்ட பங்களிப்பை அவர்கள் மிகச் சிறப்புடன் செய்து வருகிறார்கள்.

மன்னார்க் களமுனையில் முக்கியமான தளங்களைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் பாரிய அரசியல் ரீதியான வெற்றிகளைப் பெறுவது என்பது மகிந்த அரசினது நோக்கமாக இருக்கின்றது.

அதேநேரம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மன்னார் - பூநகரி கரையோரைப் பாதையைத் தொடுப்பதன் மூலம் குடாநாட்டில் இருக்கின்ற படையினருக்கான விநியோகத்தை கொண்டு வருவதற்கான நோக்கமும் இருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன.

இப்படியானதொரு சூழ்நிலையிலே காலம் போகப்போக இன்னும் அதிகமதிகமான ஒரு அங்கலாய்ப்புடன் படையினர் அங்கே மோதி வருகிறார்கள்.

களச்சூழ்நிலை என்பது தரைத்தோற்றத்திற்கு ஏற்ற வகையிலே முன்னோக்கிச் செல்லுதல், பின்னோக்கி நகர்தல், பக்கவாட்டாக அவர்களை வருவதற்கு விடுதல், பின்சுற்றி மறித்து அடித்தல் எனப் பலவிதமான உத்திகள் அங்கே பயன்படுத்தப்படுகின்றன.

நாளை படையினர் மடுவிற்கு வரலாம், நாளை மறுநாள் நாங்கள் மதவாச்சியில் நிற்கலாம். அதுவொரு சுழற்சியான, சுற்றுவட்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விடயமாகவே இருக்கின்றது.

இருந்தாலும் படையினர் முன்னேறுகின்ற ஒவ்வொரு அங்குலத்திலும் அவர்கள் எந்தளவு இழப்பை அங்கே சந்திப்பார்கள், அதேநேரம் அவ்வாறான சூழ்நிலைகளுக்குப் படையினர் வரும்போது அவ்வகையான சூழ்நிலைகளை நாங்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதில் எமது போராளிகள் மிக ஆழமாக தங்களை ஈடுபடுத்தி சமரிட்டு வருகின்றனர்.

கேள்வி: சிறிலங்காப் படையினர் தமது விநியோகப் பாதையாக மன்னார் - மதவாச்சி வீதி அல்லது வவுனியா - மன்னார் வீதியைத்தான் பாவிக்கின்றனர். அவர்கள் இப்படியொரு பாரிய தாக்குதலை எத்தகைய பின்வள சக்தியை வைத்துக்கொண்டு மேற்கொள்கின்றனர்?

பதில்: அனுராதபுரத் தளத்தைதான் வடபோரங்கிற்குரிய முக்கியமான பின்னணி ஏற்பாட்டுத்தளமாக பயன்படுத்தி வந்தார்கள். வான்படை, தொலைதூர வேவுக் கண்காணிப்பு, பயிற்சிக்குரிய தளம் மற்றும் ஆயுத வழங்கல் போன்ற தளங்களை உள்ளடக்கிய அந்த அனுராதபுரத்தளத்தின் மீது கடந்த ஒக்ரோபர் மாதம் எங்களுடைய கரும்புலி வீரர்களும், வான்புலிகளும் இணைந்து ஒரு தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.

அன்று அவர்களது பின்தளம் மிகமோசமாக ஆட்டம் கண்டது. அதன்பின்னும் கூட அவர்கள் ஒருவாறு தங்களை நிலைப்படுத்திக்கொண்டு இயன்றளவுக்கு அந்த பின்தளத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கையை அவர்கள் செய்து வருகிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது.

அவர்களுக்கு ஆழமான பின்தளங்கள் இல்லாதபோதும் கூட அரசியல் ரீதியான சில அழுத்தங்கள் அவர்களுக்கு உள்ளன. ஒரு குறிப்பிட்ட வெற்றியை அடையமுடியாத நிலையில், அங்கு தாங்களே தொடக்கிய ஒரு சமரை நிறுத்திவிட முடியாத ஒரு அரசியல் இறுக்குப்பாட்டிற்குள் அவர்கள் இப்போது சிக்கியிருக்கிறார்கள்.

மன்னார் களமுனையிலேயே பெரிய மட்டத்திலான ஒரு அவதானிப்பை செய்யும்போது அதைத்தான் பார்க்கக்கூடியதாகவிருக்கிறது.

கேள்வி: மன்னார் களமுனையைப் பொறுத்தவரை அங்கே பாரிய இழப்புக்கள் சிறிலங்காப் படையினருக்கு ஏற்பட்டு வருகிறது. ஆனால் அது தொடர்பான எந்தச் செய்தியும் வெளிவருவதாக இல்லை. அவர்கள் திட்டமிட்டு அந்தச் செய்திகளை மறைத்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் என்ன?

பதில்: மகிந்த ஆட்சிக்கு வரும்போது போர் என்பதை அவர் ஒரு உபதொழிலாகத்தான் நினைத்தார். இன்று அவரது முக்கிய தொழிலே அதுவாக மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் யுத்தத்தில் அவர் கால்வைத்து விடுதலைப் புலிகளை வெல்வது ஒரு சிறிய விடயம் என்றே நினைத்துக்கொண்டார். முன்னர் இருந்த அரச தலைவர்கள் பலர், படைத்தளபதிகள் பலர் விட்ட இதே வரலாற்றுத் தவறையே மகிந்தரும் விட்டிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தான் நினைத்ததை அடைந்துவிடலாம் என்ற ஒரு எண்ணப்பாட்டுடன் சில கணிப்புகளை வைத்துக்கொண்டு, வெளியே சொல்லாவிட்டாலும் தன்னகத்தே சில காலக்கணிப்புக்களை வைத்துக்கொண்டு அவர் ஒரு நடவடிக்கையைச் செய்தார்.

நடவடிக்கை ஒன்று தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்போது அவர்கள் சில எண்ணிக்கை விளையாட்டுக்களை காட்டினார்கள்.

விடுதலைப் புலிகள் தரப்பிலே பல நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து போவதாகவும் தமது தரப்பிலே ஓரிருவர் சிறு காயங்களுக்கு மட்டும் ஆளானார்கள் என்றும் ஒரு போலிப்பரப்புரையை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

புலிகளுடைய தரப்பிலே அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றது என்பதைக் காட்டினால்தான் தென்னிலங்கையில் ஏற்படுகின்ற விலைவாசி, ராஜபக்ச சகோதரர்கள் மீது தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அதிருப்தி, மற்றும் எப்படி மறைத்தாலும் படையினரின் உயிரிழப்புகள் தொடர்பாக தென்னிலங்கையில் எழுகின்ற பல சிக்கல்கள் மற்றும் பலவிதமான குழப்பங்கள் என்பனவற்றை ஒருபுறம் தள்ளிவிட்டு, இந்த விடயத்தை பெரிதாகக் காட்டுவதன் மூலம் மக்களை திசைதிருப்பலாம் என்ற நப்பாசையில்தான் அவ்வாறானதொரு எண்ணிக்கை விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

கேள்வி: முல்லைத்தீவை அண்மித்திருக்கும் மணலாற்று களமுனையில் இருந்து முன்னேவதற்கு படையினர் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு என்ன காரணம்?

பதில்: மணலாற்றில் மட்டுமல்ல, நாங்கள் இடம்கொடுத்தால் சிங்களப் படைகள் எல்லா வழிகளிலும்தான் முன்னேற முனைவார்கள். அவர்களைத் தடுத்து வைத்திருப்பதும் அவர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்துவதும் எங்களுடைய பதில் தாக்குதல்கள்தான். அங்கே வலுவான கட்டமைப்புக்கள் இருக்கின்றன.

மன்னாரைப் போன்றே மணலாறும் எங்களுடைய இதயபூமி. அங்கே நீண்டகாலமாக எங்களது அணிகள் இரண்டு வகைச் சண்டைகளையும் தொடர்ந்தும் மாறிமாறி செய்துவருகின்றதொரு தரைத்தோற்றமாக அது விளங்குகின்றது.

மரபு ரீதியான சமருக்கான சூழ்நிலைகள் அங்கு நிலவினாலும் அந்த மரபு ரீதியான சமருடன் கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களும் சேர்ந்ததாகவே அந்தப் பகுதியின் வரலாறு உள்ளது.

அவ்வாறானதொரு இடத்தில் பதில் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாததனால்தான் அவர்களுக்கு அந்த தயக்கங்கள் ஏற்படுகின்றன. அங்கே வலிமையான கட்டமைப்புக்களுடன் எங்களுடைய வீரர்கள் அவர்களை மறிப்புச் சமர் செய்து வருகின்றனர்.

கேள்வி: வடபோர்முனையைப் பொறுத்தமட்டில் அவர்கள் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளும் சாத்தியம் ஏதாவது உள்ளதா?

பதில்: வடபோர்முனையில் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகளை உள்ளடக்கிய நீண்ட வேலிப் பிரதேசத்திலேயே அவர்கள் 2006 ஆம் ஆண்டே மோதல்களை ஆரம்பித்து விட்டார்கள். இங்கு தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருந்த மோதல்களிலே அவர்கள் இழப்புகளைச் சந்தித்து பின்வாங்கினார்களே தவிர ஒரு அங்குலம் கூட அங்கே அவர்களால் முன்னேற முடியாமல் போய்விட்டது. இப்போது ஒன்றரை வருடங்களைத் தாண்டி காலம் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த நிலையிலே பாரிய படை பலத்தை அவர்கள் குடாநாட்டில் குவித்திருக்கிறார்கள். எப்போதும் அந்தப் பகுதி தாக்குதலுக்கு உள்ளாகலாம், விடுதலைப் புலிகளின் படைகள் அங்கே வந்து இறங்கலாம் என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதே அதற்கு காரணமாகும். அதனால் அங்கே ஒரு பெரிய படையணியை அவர்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய 53 ஆவது தாக்குதல் பிரிவும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல கவச அணிகளின் முக்கிய அணிகள்கூட அங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான தகுதிகள் அந்த இடத்திற்கு இருந்தும்கூட, மற்ற எல்லா களமுனைகளையும்விட மிக விரைவாக ஒரு உலங்குவானூர்தி அந்த இடத்திற்கு வந்து தாக்குதலை நடத்தக்கூடிய நிலையிலுள்ள வான்தளம் இருந்தும்கூட, மிக வேகமான விநியோகத்தையோ அல்லது காயமடைந்தவர்களை அப்புறப்படுத்துவதற்கான போக்குவரத்து வசதிகளோ இருந்தும்கூட அந்த களமுனைகளில் அவர்களால் ஒரு அங்குலம்கூட முன்னே எடுத்து வைக்க முடியாமல் இருக்கின்றது.

போர் நடவடிக்கை ஒன்றில் அதன் இலக்கின் அடிப்படையிலேயே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறது. வடபோர் முனையைப் பொறுத்தவரையிலே மறித்துச் சமராடுதல் என்பதில் நாங்கள் 2006 ஆம் ஆண்டில் இருந்து வெற்றிபெற்று வருகிறோம். எங்களுடைய பகுதிகள் நோக்கி முன்னேறுவதற்கான முனைப்பு என்ற விடயத்திலே அவர்கள் ஒன்றரை வருடங்களாக தோல்வி கண்டு வருகிறார்கள். இதுதான் அங்குள்ள நிலைமை.

கேள்வி: கிழக்கிலிருந்து புலிகள் தந்திரோபாயமாக பின்நகர்ந்திருந்தனர். ஆனால் அதை தமக்கு கிடைத்த பாரிய வெற்றியாக அவர்கள் பிரசாரப்படுத்தினர். கிழக்கைப் போன்று வன்னிப் பெருநிலப்பரப்பு மீதான யுத்தமும் ஒரு இலகுவாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருப்பார்களா?

பதில்: நிச்சயமாகக் கருதியிருப்பார்கள். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்த கதையாகி விட்டது என்பதுதான் அனைவருடைய கணிப்பாகவும் உள்ளது. நாங்கள் மட்டுமல்ல பன்னாட்டு படைத்துறை ஆய்வாளர்களும் இத்தகைய கருத்துக்களை இப்போது மெல்ல மெல்ல சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

சிறிலங்கா அரசாங்கத்தினுடைய போர் உத்திகளை நம்பி அந்தப் போரில் அவர்கள் வெல்வார்கள் என்று கருதி தங்களுடைய முதலீடுகளைச் செய்தவர்கள் எல்லாம் இப்போது கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதனுடைய அங்கமாகத்தான் சிறிலங்கா அரச தலைவரோ அல்லது அவருடைய படைத்தளபதி சரத் பொன்சேகாவோ இப்போது நினைத்தது போல் புலிகளை வெல்ல முடியாது, இன்னும் காலங்கள் தேவை என்று அறிக்கைகளை மெல்ல மெல்ல விடத்தொடங்கியுள்ளனர். செய்வோம் என்று அறைகூவல் விடுத்து சொன்னதை அவர்களால் செய்யமுடியவில்லை. இதுதான் உண்மையிலேயே வன்னிக் களத்தின் நிலைமை.

கிழக்கைப் பொறுத்தவரை எமது போரிடுதலுக்கான தேவையை, போரிடுதலுக்கான எமது வீச்சை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்து இயன்றளவிலானதொரு போரிடுதலை அங்கே நாங்கள் நிறைவேற்றினோம். அதற்கு ஏற்ற வகையில் அங்கே அவர்களும் தமது படைகளை நிறுத்த வேண்டியதொரு நிர்ப்பந்தத்தை அவர்களுக்கு விதித்தோம். இப்போதும் அங்கே படைகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். படைகளை அங்கிருந்து அகற்றும்போது புதிய படைகளை அங்கு கொண்டுசெல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. ஏனெனில் கிழக்கைத் தாண்டிய இடங்களில்கூட புதிய களங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் கிழக்கில் தாங்கள் செய்தது போன்று வன்னிப் பெருநிலப்பரப்பிலும் செய்வோம் என்று அவர்கள் நினைத்த அந்த கணிப்பில் ஏற்பட்ட தவறுதான் இன்று அவர்களுக்கு பாரிய அரசியல், இராஜதந்திர, படைத்துறை, பொருளாதார அழுத்தத்திற்குரிய முக்கியமான காரணமாகவிருக்கிறது.

அவ்வாறானதொரு இறுக்கமான சூழ்நிலையில், களமுனை எங்களுக்கு சாதகமாக திரும்பி வருகின்ற சூழ்நிலையில்தான் இப்போதைய ஒட்டுமொத்த களமுனையும் சென்றுகொண்டிருக்கின்றது.

கேள்வி: சிறிலங்காப் படையினர் வலிந்த தாக்குதல் முனைவுகளை பல களமுனைகளில் மேற்கொள்கின்றனர். ஆனால் புலிகள் வலிந்த தாக்குதல்களைச் செய்யாது, எதிர்த்தாக்குதல்களையே மேற்கொண்டு வருகின்றனர். அப்படியானால், சிறிலங்காப் படையினர் புலிகளின் முழுப்பலத்தையும் இன்னும் அறிந்து கொள்ளவில்லையா?

பதில்: சில ஆழமான விடயங்களைக் கேட்கின்றீர்கள். எனினும் இயன்றளவுக்கு அதற்கு பதில் சொல்ல முடியும். எங்களுடைய தாக்குதல்களின் வீச்சம் எப்படியிருக்கும் என்பதை சிறிலங்காப் படையினர் முன்னர் பல தடவைகள் அறிந்திருக்கிறார்கள். உதாரணத்திற்காக அனுராதபுரத் தாக்குதலைச் சொல்லலாம், அதேபோல கட்டுநாயக்க வான்படைத் தள தாக்குதலைச் சொல்லலாம். அது ஒரு வகையான தாக்குதல்.

மறுவளத்தில் பார்த்தால் ஓயாத அலைகள் 1, 2, 3 என அனைவருடைய மனங்களிலும் நிற்கக்கூடிய பட்டவர்த்தனமாக பலத்தைச் சொல்லிய தாக்குதல்கள்.

அதேபோல உலக நாடுகளுக்கு எங்களது வலுச்சமநிலையை நிரூபித்த தாக்குதலாக சிறிலங்காப் படையின் "அக்கினி கீல" என்ற நடவடிக்கைக்கான எங்களுடைய எதிர்ச்சமர் அமைந்திருந்தது.

இவ்வாறானதொரு யதார்த்தங்கள் இருக்கும்போது அவ்வாறானதொரு தாக்குதல்களைச் செய்வதற்கான ஆற்றல்களை புலிகள் இழந்து விடவில்லை என்ற அந்த பாரிய யதார்த்த நிலையை பன்னாட்டு ஆய்வாளர்கள் இப்போது சிறிலங்கா அரசாங்கத்திற்கு இடித்துரைக்க தொடங்கியிருக்கிறார்கள்.

கிழக்கிலே தங்களுடைய படைகள் இருப்பது வேறு புலிகளுடைய தாக்குதல் திறனிலே ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறீர்களா என்ற கேள்வியை அவர்கள் இப்போது கேட்கத்தொடங்கியிருக்கிறார்கள். அதுதான் அங்கிருக்கக்கூடிய சூழ்நிலை. அப்படிப் பார்க்கப் போனால் நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மைதான்.

கேள்வி: முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடந்த வாரம் கடற்கரும்புலிகள் சிறிலங்காப் படையின் டோறா ஒன்றை தாக்கி மூழ்கடித்து அதிலிருந்த கடற்படையினரைக் கொன்றிருந்தனர். குடாநாட்டில் உள்ள படையினருக்கான விநியோகத்தில் இந்தத் தாக்குதல் எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் ?

பதில்: நிச்சயமாக தொடர் தாக்குதல்களும் அதற்குரிய பக்க விளைவுகளும் இல்லாமல் போகாது. அந்த தாக்குதல் நடத்தப்பட்ட முறை, உத்தி சம்பந்தமாக என்னால் விலாவாரியாகப் பேச முடியாதிருக்கிறது.

ஆனால், அந்தத் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் விளைவு சிறிலங்காப் படைத்துறை வழங்கலில் மட்டுமன்றி யாழ். குடாநாட்டில் உள்ள படையினருக்கு போகின்ற விநியோகத்திலே மிகப்பெரும் பகுதி விநியோகம் அந்த குறிப்பிட்ட பாதையால்தான் செல்ல வேண்டும், வேறு வழியில்லை.

அங்கே இருக்கின்ற அத்தனை படையினருக்கும் ஒரு மூடை அரிசி போவது என்றாலும் அந்த வழியால்தான் போகவேண்டும். பெரும்பாலும் 80 வீத வழங்கல் பாதையாகவே இந்தப் பகுதி அமைந்திருக்கிறது.

அது மட்டுமல்ல, அந்தப் பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றோம், அதை கண்காணிப்பிற்குள் வைத்திருக்கிறோம் என்ற சிறிலங்கா அரசின் இறைமை என்கிற விடயம் இருக்கிறதல்லவா அந்த விடயம் எங்களுடைய கடற்புலிகளின் தாக்குதல்களினால் மீண்டுமொருமுறை சவாலுக்குள்ளாகி, சிதைந்து போயிருக்கிறது.

இறைமை என்பது அனைத்துலக மட்டத்திலும் கேள்விக்குரிய விடயமாக, முக்கியத்துவம் இழந்து வரும் நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் கடல் இறைமைக்கு விழுந்துள்ள இன்னுமொரு அடியாக, தாக்கமாக, அவர்களே தாங்கள் இத்தனை பேரை இழந்துவிட்டோம், ஒரு கலத்தை இழந்து விட்டோம், இத்தனை பேர் தப்பிவந்துள்ளனர் என்று சொல்லுமளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய விடயமாக, கடல் இறைமையை சந்தேகத்திற்கிடமின்றி ஆட்டம் காணச் செய்த விடயமாக கடற் கரும்புலிகளின் அந்தத் தாக்குதல் அமைந்திருக்கிறது என்பதிலே எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

கேள்வி: சிறிலங்காப் படையினரின் அண்மைக்கால தாக்குதல்கள் சற்றுக் குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனை சிறிலங்காப் படையின் வீழ்ச்சி என்று கருதலாமா?

பதில்: படைத்துறை ரீதியான மதிப்பீடுகளைச் செய்யும்போது சில மதிப்பீடுகளை நாங்கள் குறை மதிப்பீடாகச் செய்துவிட முடியாது. ஆட்பலம், ஆயுதங்களின் பலம் மற்றும் இவை எல்லாவற்றையும் தாண்டி மனோபலம் என்கின்ற உள்ளிருந்து ஊக்குவிக்கின்ற உத்வேகம் என்ற விடயங்களிலுமே படைத்துறைப் பலம் என்பது உண்மையிலேயே தங்கியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினுடைய படைகள் அது தரைப்படையாக இருந்தாலும் சரி, கடற்படையாக இருந்தாலும் சரி, வான் படையாக இருந்தாலும் சரி நிச்சயமாக எண்ணிக்கையில், வளத்தில் பெரியவை. இருந்தாலும் அவர்களுக்கு மந்த நிலை ஏற்படுவதற்கு அவர்களிடம் அடிப்படையான தார்மீகம் இல்லாமல் இருப்பதே காரணமாகும்.

இது எங்களுடைய நாடு, எங்களுடைய மண், எங்களுடைய கடல், எங்களுடைய தாய்மடி. இதுக்காக நாங்கள் போராடும்போது எங்களுக்கு இருக்கின்ற தார்மீகம் சிறிலங்காப் படைகளுக்கு இல்லை. அதனால் அவர்களுக்கு அந்த மந்த நிலை ஏற்பட்டிருக்ககூடும்.

கேள்வி: யுத்தமொன்று நீண்டகாலத்திற்கு இழுபடும்போது (குறிப்பாக மன்னார் களமுனையில்) படையினர் மத்தியில் அவர்களது மனவலிமையை எப்படியாகப் பாதிக்கும்?

பதில்: நிச்சயமாக அங்கே பாதிப்பு இருக்கும். ஏனென்று சொன்னால் அது இலட்சியமில்லாத வேலை. அந்த இலக்கு அவர்களுக்கே தெரியாது. எப்போது முடியும், எங்கே போய் முடியும் என்பது அவர்களுக்கே தெரியாது. களமுனையில் நிற்கின்ற சிப்பாய்க்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை. அண்மையில்கூட ஒரு செய்தி வந்தது.

மேஜர் தர அதிகாரியிடம் விடுமுறை கேட்ட சிப்பாய்க்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் அந்த அதிகாரியை சிப்பாய் சுட்டுக்கொன்றிருக்கிறார்.

இவ்வாறான மன அழுத்தங்கள், விரக்தி நிலைகள், தாங்கள் செய்கின்ற பணியிலே நம்பிக்கையில்லா நிலை அங்கே இப்போது பெரியளவிலே மலிந்திருக்கின்றன.

இதுதவிர படையினரின் இழப்புக்களை மறைக்கின்றனர் என்று தென்னிலங்கை ஊடகங்களே இன்று சொல்கின்றன. படையினரின் உடலங்களை எங்குகொண்டுபோய்ப் புதைக்கின்றனர் என்ற தகவல்களும் அங்கிருந்துதான் வரத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் படையினரின் மனஉறுதி ஆட்டங்காணத் தொடங்கியிருக்கிறது என்பது உண்மைதான்.

சரியான தருணங்கள் ஏற்படும்போது ஒரு சமரினுடைய போக்கு மனவுரண் சார்பாக மிக வேகமாகச் செயற்படுகின்றதை நாங்கள் எங்களுடைய போரியல் வரலாற்றிலே பார்த்திருக்கின்றோம்.

தேசியத் தலைவர் அவர்கள் பலமுறை அவ்வாறான கணிப்பீடுகளின் அடிப்படையிலே பல சாதனைகளைச் செய்து காட்டியிருக்கின்றார். ஆகவே நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி: கிழக்கிலே தற்போது ஒரு ஓய்வு நிலைதான் தற்போது காணப்படுகிறது. அங்கு ஏன் இப்படியான நிலை இருக்கிறது என்று கூறமுடியுமா ?

பதில்: கிழக்கின் நிலையைப் பொறுத்தவரை அங்கு சிறிலங்காப் படையினர் ஒரு படை விரிவாக்கத்தைச் செய்துள்ளனர். படைப்பரம்பலைச் செய்திருக்கின்றனர். அதற்கு ஒரு வகையிலே நாங்கள் நிர்ப்பந்தித்துள்ளோம். அந்த நிர்ப்பந்த நிலையில் அவர்கள் தமது படையைச் சுருக்க முடியுமா என்பது நிச்சயமாக அவர்களுடைய கையில் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.

அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே, எங்களுக்குச் சாதகமான நிலைப்பாடு வருகின்ற சூழ்நிலையிலேயே அங்குள்ள படைச்சமநிலை கூட மாற்றமடைவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும் என்று நிச்சயமாகக் கருதவில்லை.

கேள்வி: கிழக்கில் இருந்த சிறப்பு அதிரடிப்படையினரை அகற்றி அவர்களை மணலாற்றுப் பகுதிக்கு கொண்டுசெல்வதற்கான திட்டம் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பு அதிரடிப்படையின் பலம் எந்தவகையில் உள்ளது?

பதில்: சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை என்பது உண்மையில் ஒரு மரபுக் கட்டமைப்பல்ல. இன விரோதச் செயற்பாட்டின் மிகவும் உச்ச வடிவமாகத்தான் அதனை ஜே.ஆர்.ஜெயவர்த்தன வடிவமைத்தார். அந்த நாட்களிலே கிளர்ச்சி முறியடிப்புக்கான பல கட்டமைப்புகள் இருந்தன. இஸ்ரேலில் அத்தகைய படைக்கட்டமைப்பு இருந்தது. இந்தியாவில் கூட அன்று நடந்த கிளர்ச்சிகளை முறியடிக்கும் படைக்கட்டமைப்புகள் இருந்தன. தென்னாபிரிக்க படைக்கட்டமைப்பை உதாரணத்துக்கு தேர்ந்தெடுத்தால் இனரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான படைக்கட்டமைப்பாக அது இருந்ததாகத் தெரியவில்லை.

எனினும் இனப்படுகொலை செய்வதற்காகவே கட்டமைக்கப்பட்ட இந்த படைக்கட்டமைப்பு அங்கே மிக அதிகமான கொலைகளைச் செய்திருக்கிறது. வெளியே தெரியவந்த உடும்பன்குளமோ அல்லது கொக்கட்டிச்சோலைப் படுகொலை போன்றவையெல்லாம் உண்மையில் மிகச்சொற்பமே. அன்றாடம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்காக அழிந்துகொண்டே வந்தார்கள். அப்படி ஒரு எண்ணிக்கையில் அடங்காத தொகையினர் அந்த அநியாயத்தில் அங்கே மாண்டிருக்கின்றனர்.

அந்த அநியாயத்தைச் செய்த அதிரடிப்படையினர் இன்று களமுனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

மரபுசார் யுத்தத்திலே அவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதை நிச்சயமாக எங்களுடைய களங்கள் அவர்களுடைய திறமையை பரிசோதிக்கக் கூடிய விடயமாக இருக்கும்.

நாங்களும் அவர்களை எதிர்பார்த்துத்தான் இருக்கிறோம்.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் அண்மைக்காலமாக தமக்கு ஏற்படும் இழப்புகளை அனைத்துலக ஊடகங்களுக்கு தெரிவிப்பதில் சற்று மௌனம் காக்கப்படுவது ஏன் ?

பதில்: அப்படியானதொரு தோற்றப்பாடு ஏற்பட்டிருப்பது எனக்குப் புதிய விடயமாக உள்ளது. ஏனெனில் வீரச்சாவு அறிவித்தல்கள் மிகத்தெளிவாக மறுநாளில் எங்களுடைய "புலிகளின்குரல்" வானொலியில் ஒலிபரப்பப்படுகின்றன. அதிலே மிகவும் நேர்த்தியான புள்ளிவிபரங்களுடன் வீரச்சாவடைந்தவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதிலே வித்தியாசமிருப்பதாக நான் உணரவில்லை.

கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் ஆற்றவேண்டிய விரைவான பணி குறித்த உங்களது பார்வை என்ன ?

பதில்: இத்தனை நாட்களும் அங்கிருந்துவந்த அவர்களின் உணர்வு ரீதியான அந்த ஒத்துழைப்பு என்பது ஒரு மாபெரும் விடுதலை சக்தியாக களங்களிலே செயலாக மலர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் இங்கே நன்றியுடனும் பணிவுடனும் உறவுடனும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அதேநேரத்தில் எவருடைய உழைப்பும் இங்கு வீணாக்கப்படுவதில்லை என்ற களமுனைப் போராளிகளின் அந்த உத்தரவாதத்தையும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வதிலே உண்மையிலேயே நிறைவடைகிறேன்.

அதேபோல எங்களுடைய தேசியத் தலைவர் மிகவும் நுட்பமான இந்த காலகட்டத்திலே எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். பலவிதமான சூட்சுமப் புயல்கள், இராஜதந்திரச் சுழிகள், படை வல்லாதிக்க சூறாவழிகள் என்பனவற்றிற்கு ஊடாக விடுதலைப் படகை அவர் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கிறார்.

இவ்வளவு காலமும் போல அந்த இறுதிப்பயணம் வரைக்கும் எங்களுடைய வெற்றிக்கொடி இயற்றுகின்ற அந்த நாள்வரைக்கும் அத்தனைபேருடைய உழைப்பும் ஒத்துழைப்பும் உணர்வும் எங்களுடன் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையைத்தான் நான் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

Monday, March 24, 2008

தமது எதிரிகளுடன் இலங்கை உறவு கொண்டாடுவது குறித்து அமெரிக்கா வருத்தம் அடைந்துள்ளது.

[திங்கட்கிழமை, 24 மார்ச் 2008]

இலங்கை அமெரிக்காவின் கடும் நச்செரிப்புக்கு உள்ளாகியுள்ளது. இலங்கை அதன் எதிரி நாடுகளிடமிருந்து உதவிகளை பெற்றதனாலும் தற்போது பெற்றுவருவதனலேயும் அது அமெரிக்காவின் கடிந்து கொள்ளுதலுக்கு உள்ளாகி உள்ளது.

உதாரணமாக சொன்னால் சீனா,ஈரான்,ரஷ்ய போன்ற நாடுகள் அமெரிக்காவின் எதிரி நாடுகள். இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்டித்துவரும் அமெரிக்காவுக்கு இது பெரும் தலைவலியாக உள்ளது.அமெரிக்கா இவ்விடயத்தில் இலங்கையை கண்டிப்பதும் பின்னர் தடவித்தேற்றுவதுமான வேலையில் தொடர்சியாக ஈடுப்படுகின்றமை கண்கூடாக உள்ளது.

இலங்கை இந்த நாடுகளுடன் உறவு வைத்துள்ளமை இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவுக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக இல்லை மாறாக வேதனையகவே உள்ளதாக அமெரிக்கா தனது இராஜதந்திர மட்டத்தின் ஊடாக இலங்கைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோறா எவ்வாறு அழிந்தது?- கடும் குழப்பத்தில் கடற்படை: "சண்டே ரைம்ஸ்"

[திங்கட்கிழமை, 24 மார்ச் 2008]

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் நேற்று முன்நாள் சனிக்கிழமை சிறிலங்கா கடற்படையினரின் டோறா அதிவேக தாக்குதல் படகு திடீரென அழிந்து போனது குறித்து கடற்படை கடும் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் இருப்பதாக கொழும்பு வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:

கடும் மழை காரணமாக வன்னிக்களமுனையில் மோதல்கள் மந்த நிலையை அடைந்துள்ள போதும், கடுமையான மோதல் ஆழ்கடலுக்கு பரவியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆறு டோறா தாக்குதல் படகுகள் இரண்டு, இரண்டாக வட-கிழக்கு கடற்பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் பலம் மிக்க தளப்பகுதியான முல்லைத்தீவுக்கு அண்மையாக உள்ள நாயாறு ஆழ்கடல் பகுதியில் இரு டோறாக்கள் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த போது உள்ளூரில் கட்டப்பட்ட பி-437 இலக்கத்தினையுடைய டோறா திடீரென வெடித்துச் சிதறியது.

எனினும் மற்றைய டோறாப் படகு அந்தப் படகில் இருந்து கடலில் தத்தளித்த 6 கடற்படையினரைக் காப்பாற்றியது. காப்பாற்றப்பட்டவர்களில் டோறாப் படகின் கட்டளை அதிகாரியும் அடங்குவார். அதில் இருந்து ஏனைய 10 கடற்படையினரும் காணாமல் போய்விட்டனர்.

டோறாப் படகு கடல்கண்ணியில் சிக்கி அழிந்ததாக கடற்படையினர் சந்தேகப்படுகின்றனர். எனினும் அது தொடர்பாக உறுதியாக எதுவும் கூறமுடியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அது ஒரு மனித டோப்பிடோ வெடிகுண்டு தாக்குதலாகவும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மனித டோப்பிடோ வெடிகுண்டைப் பொறுத்தவரையில் அது இரு வகையாக இருக்கலாம். ஒன்று தற்கொலைதாரி வெடிகுண்டை கட்டிக்கொண்டு டோறாவுடன் மோதியிருக்கலாம். இரண்டாவது சுழியோடிகள் வெடிகுண்டு சாதனங்களை டோறாவை நோக்கி வழிநடத்தியிருக்கலாம்.

இந்தப் பகுதிகளில் கடந்த ஆண்டு பல கடற்கண்ணிவெடிகளை கடற்படையினர் மீட்டிருந்தனர். எனினும் டோறா எதனால் அழிந்து போனது என்பது தொடர்பாக தம்மால் இன்னமும் ஒரு இறுதி முடிவுக்கு வரமுடியவில்லை என்று கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

டோறா எவ்வாறு அழிந்து போனது என்பது குறித்து அழிந்து போன டோறாவில் இருந்து காப்பாற்றப்பட்ட படையினராலோ அல்லது மற்றைய டோறாப் படகில் இருந்தவர்களாலோ எதுவும் கூற முடியிவில்லை. அந்தப் பகுதியில் மோதல்கள் நடைபெறவில்லை எனவும், தம்மிடம் இலத்திரனியல் சான்றுகள் எவையும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்நாள் அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது கண்ணாடி இழைகளால் உருவாக்கப்பட்ட கொள்கலன் ஒன்றையும், சிறிய பிளாஸ்ரிக் துண்டையும், எரிந்து போன பொலித்தீன் பகுதியையும் படையினர் மீட்டுள்ளனர்.

இந்த கொள்கலனுக்குள் வெடிமருந்துகள் மறைத்து வைத்திருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் டோறா எப்படி அழிந்து போனது என்பது தொடர்பாக அறிந்து கொள்ளமுடியும் என்று கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் டோறாப்படகு கடற் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்திருந்தது. எனினும் அங்கு மோதல்கள் நடைபெறவில்லை எனவும் கடற்கலம் கடற்கண்ணிவெடித் தாக்குதலில் அழிந்து போயுள்ளதாகவும், காணாமல் போன கடற்படையினரை தேடி வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்கண்ணிவெடி மூலம் தற்போது டோறாப் படகு அழிக்கப்பட்டது நான்காம் கட்ட ஈழப்போரில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக அதிகளவில் கடற்கண்ணிகள் பயன்படுத்தப்பட்டால் அது ஆழ்கடல் பகுதிகளில் கடற்படையினரின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தலாம். இது கடற்படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைளை மட்டும் பாதிக்காது, யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ள 40,000-க்கும் அதிகமான படையினருக்கான வழங்கல்களிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அவர்களுக்கான வழங்கல்கள் திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறைக்கு நகர்த்தப்படுவது வழக்கம்.

மேலும் பெருமளவான படையினரும் கடல்வழி மூலமே நகர்த்தப்படுவதுண்டு. கடந்த காலங்களில் கடற்கண்ணிவெடிகள் பயன்படுத்தப்படதனால் அது சாத்தியமற்றதாகவே இருந்தது. இதனிடையே முல்லைத்தீவு கடற்பகுதிகளில் கடல் கண்ணிவெடிகளை புதைப்பதன் மூலம் கடல்வழி மூலமான படையினரின் தரையிறக்கத்தை தடுக்க விடுதலைப் புலிகள் முயற்சிப்பதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக படை நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன. மன்னாரின் கட்டுக்கரைக்குளம் பகுதிக்கு கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளால் நகர்ந்த படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

மன்னார் பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை ஊடுருவிய விடுதலைப் புலிகள், சவுத்பார் பகுதியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மன்னார்ப் பகுதி இராணுவத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர், பௌர்ணமி பூசை ஒன்றிற்காக மூன்று பேருந்துகளில் பௌத்த துறவிகளை மன்னார் பகுதிக்கு வரவழைத்த போது இத்தாக்குதல் இடம்பெற்றது. முதலாவது பேருந்தில் பௌத்த துறவிகள் இருந்த போதும் கிளைமோர் குண்டு இலக்கு தவறியதால் இரண்டாவது பேருந்து தாக்குதலில் சிக்கிக்கொண்டது.

இதன் போது கப்டன் தர அதிகாரி ஒருவரும், இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணலாற்றுப் பகுதியிலும் கடும் மழை காரணமாக நிலங்கள் கடும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. கடந்த வாரம் அங்கும் கடுமையான எறிகணை வீச்சுக்களே இடம்பெற்றுள்ளன. சில பகுதிகளில் முழங்கால் அளவிற்கு வெள்ளம் நிறைந்துள்ளதாகவும் அதனால் பெருமளவிலான படையினர் டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களுக்கு இலக்காகி உள்ளதாகவும் தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாதுகாப்பு அமைச்சு வடக்கு-கிழக்குப் பகுதியில் பெருமளவான படைத்துறை மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. சிறப்பு அதிரடிப்படையினர் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வவுனியா பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். திருகோணமலையில் இருந்தும் இவ்வாறான மாற்றங்கள் நடைபெறலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சிறிலங்காவின் முப்படையில் இருந்து ஓய்வுபெற்ற படை அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பு கொள்கைகளை வகுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை இராணுவத்தின் பொறியியல் மற்றும் மின்னியல் துறை வளாகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஓய்வுபெற்ற பல மேஜர் ஜெனரல்கள் பலதரப்பட்ட உத்திகள் தொடர்பாக உரையாற்றியிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 23, 2008

மன்னார் முன்நகர்வு முறியடிப்பு: 55-க்கும் அதிகமான படையினர் பலி; 120-க்கும் அதிகமானோர் படுகாயம்

[ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2008] மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரியளவிலான முன்னகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 55-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 120-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். பாலைக்குழி, இத்திக்கண்டல் ஆகிய பகுதிகளில் இருந்து இரு முனைகளில் சனிக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு படையினர் பெருமெடுப்பிலான தாக்குதலை மேற்கொண்டனர். பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலெறித்தாக்குதல், மோட்டார்த் தாக்குதல் ஆகியவற்றின் மிகச்செறிவான சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர். படையினரால் மிகச்செறிவாக மிக அதிகளவில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் செறிவான எறிகணைத் தாக்குதலுடன் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இன்று பிற்பகல் 5:00 மணிவரை நடத்தப்பட்ட தாக்குதலில் படையினரின் முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினர் 55-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 120-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். படையினர் பின்தளங்களிலிருந்து ஊர்திகள் மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் மன்னார் - வவுனியா சாலைப் போக்குவரத்து படையினரால் தடுக்கப்பட்டது. கடும் சேதங்களுடன் படையினர் பின்வாங்கி ஓடிவிட்டனர்.

புதிய வகை கடலடித் தாக்குதல்?: முல்லை. கடற்பரப்பில் சிறிலங்காவின் டோறாப் படகு மூழ்கடிப்பு- 14 படையினர் பலி

[ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2008] முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப்படகு ஒன்று கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இம் மோதலில் கடற்படையினர் தரப்பில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடற் கரும்புலிகள் மூவர் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். நாயாறு கடற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 2:00 மணிக்கு கடற்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் இடையில் மோதல் தொடங்கியது. இம் மோதல் அதிகாலை 2:45 மணிவரை நீடித்தது. மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை அதிகாலை 2:10 மணியளவில் கடற்படையின் அதிவேக டோறா பீரங்கிப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இதில் சென்ற கடற்படையினரில் 14 பேர் கொல்லப்பட்டனர். டோறா மூழ்கடிக்கப்பட்ட இத்தாக்குதலில் 3 கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். கடற்கரும்புலிகளான லெப். கேணல் அன்புமாறன் மேஜர் நிரஞ்சனி மேஜர் கனிநிலா ஆகியோர் வீரவரலாறாகினர். வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கத்தை செலுத்தியுள்ளனர். கடற்புலிகளால் இன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்ட டோறா பீரங்கிப்படகு சிறிலங்காவில் கட்டப்பட்ட பி-438 என்ற தொடர் இலக்கத்தை கொண்டதாகும். மூழ்கடிக்கப்பட்ட படகில் இருந்த அதிகாரி உட்பட 6 படையினர் நீந்தித்தப்பியதாகவும், 10 படையினர் காணாமல் போய் உள்ளதாகவும், படகின் கீழ்ப்பகுதியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அதன் கீழ்ப்பகுதி பிரிந்து மூழ்கியதாகவும் தப்பிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற குறுகிய நேரத்திலேயே படகு மூழ்கி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடலில் மோதல் எதுவும் நடக்காமல் திடீரென இந்த வெடிப்புத்தாக்குதல் நடைபெற்றதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட புதிய வகை கடலடித்தாக்குதல் வெடிகருவியாக அது இருக்கலாம் என்ற தாம் ஐயப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Thursday, March 20, 2008

பேச்சுவார்த்தைதான் தீர்வு என்று கூறிக்கொணடே போர்ப் பயிற்சியா?: இந்திய அரசுக்கு திராவிடர் கழகம் கண்டனம்.

[வியாழக்கிழமை, 20 மார்ச் 2008]

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைதான் தீர்வு என்று கூறிக்கொண்டே சிறிலங்கா இராணுவத்துக்கு இந்திய அரசாங்கம் போர்ப் பயிற்சி அளிப்பதற்கு தமிழ்நாட்டின் திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நோர்வே நாட்டின் சமாதான முயற்சியால் 6 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள், தற்போதைய அதிபர் ராஜபக்சவின் சிங்கள இனவெறிப் போக்கால் ஒரு தரப்பாக முறித்துக்கொள்ளப்பட்டது.

ராஜபக்சவின் இனவாதப் போக்கினை இன்று உலகம் முழுவதும் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது. பேச்சுவார்த்தைக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்திலேயே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

போரின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை என்று மற்ற நாடுகளைப் போல் இந்திய அரசும் கூறியுள்ளது. இது சரியான நிலைப்பாடு தான். அதே நேரத்தில், இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கு உதவுவது போல் இந்திய அரசு நடந்து கொள்ளலாமா? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

இந்திய இராணுவம் இலங்கை அரசுக்கு எந்த வகையில் உதவுகிறது என்பதைப் பட்டியல் போட்டே சொல்லுகிறார் சிங்களக் கடற்படைத் தளபதி. பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அதனை அவர் விவரித்துள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த இலங்கையின் இராணுவத் தளபதிக்கு, இந்திய அரசின் சார்பில் சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பேச்சுவார்த்தை தான் என்று இந்திய அரசு ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டே, இன்னொரு பக்கத்தில் இலங்கைக்கு போர்ப் பயிற்சி அளிப்பது என்பது முரண்பாடு அல்லவா?

விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில், அவர்களின் நிலைப்பாடு தெளிவாகவும், நியாயமானதாகவும் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை முதலில் முறித்துக்கொண்டது இலங்கை இராணுவம் தான். எனவே, அவர்கள் தான் போரை நிறுத்த வேண்டும். அதற்கு ஒத்துழைப்பு தருவதாக போராளிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, இந்திய அரசு தலையீட்டு, சுமூகமான, நிரந்தரமான, அமைதிக்கு பங்கம் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்த, ஆக்கபூர்வமாக முயல வேண்டும் என்று இந்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்கு நிலவும் உணர்வு, தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை ஆதரிக்கும் உணர்வு என்று நினைப்பதனை விட, ஈழத்தில் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் மீதான மனிதாபிமான இன உணர்வு என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வை சட்டம் போட்டோ, ஊடகங்கள் மூலமாகவோ நசுக்கி விடலாம் என்று நினைப்பது வீண் வேலை என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

போர் நீடித்தால் சிறிலங்காப் படையினரின் உளவுரண் பாதிக்கப்படும்: முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதி ஜனக பெரேரா

[வியாழக்கிழமை, 20 மார்ச் 2008]

போர் நீடித்தால் சிறிலங்காப் படையினரின் உளவுரண் பாதிக்கப்படும் என்று முன்னாள் சிறிலங்கா இராணுவத்தின் ஆளணிகளின் பொறுப்பு அதிகாரியும், தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா கூறியுள்ளார்.

இது தொடர்பில் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடரர்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

கேள்வி: கிழக்கை மீட்டெடுத்த போது காணப்பட்ட அதே உத்வேகம் வடக்கை மீட்டெடுக்கும் போர் முன்நகர்வுகளில் காணப்படவில்லை. இதற்கான பிரதான காரணமாக நீங்கள் எதனைக் கருதுகின்றீர்கள்?

பதில்: கிழக்கு எப்போதும் விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய கோட்டையாக காணப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த 1992 ஏப்ரல் 22 முதல் 1993 செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில் நாங்கள் கிழக்கை மீட்டெடுத்தோம்.

ஏனெனில் அந்த இராணுவ நடவடிக்கைகளின் போது சிறப்பு நடவடிக்கை தளபதியாக பணியாற்றினேன்.

நாங்கள் முக்கியமான கிழக்குத் தலைவர்களை வெளியேற்றினோம்.

கருணா, பதுமன் மற்றும் பிள்ளையான் போன்றோர் வன்னிக்கு தப்பியோடினர்.

ஒக்ரோபர் மாதம் எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி தேர்தல்களை நடத்தினோம். படையினரையும், சிறிலங்கா காவல்துறையினரையும் தவிர வேறு எவரும் ஆயுதம் தரித்திருக்கவில்லை.

அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலையும், அதே ஆண்டின் நவம்பர் மாதம் அரச தலைவர் தேர்தலையும் வெற்றிகரமாக நடாத்தினோம்.

இதனை உற்று நோக்கினால் வன்னியில் புலிகளுக்கு இருக்கும் செல்வாக்கு எப்போதும் கிழக்கில் காணப்படவில்லை என்பது புலனாகும்.

வன்னியில் போர் முன்நகர்வுகளை மேற்கொள்வதில் ஏற்படும் தாமத்திற்கு காரணம் அங்கு புலிகள் மிக வலுவாக தம்மை நிலைப்படுத்திக் கொண்டுள்ளனர். அநேகமான முக்கிய படையணிகள் வன்னியை மையமாகக் கொண்டுள்ளது.

இம்ரான் - பாண்டியன், சார்ள்ஸ் அன்ரனி, அகிலா போன்றப் படையணிகளைக் குறிப்பிடலாம்.

மேலும், அநேகமான தன்னார்வப் படையணிகளும் வன்னியில் காணப்படுகின்றன. உதாரணமாக இளைய படை, மக்கள் படை மற்றும் வீட்டுக் காவல் படையணிகளைக் குறிப்பிடலாம். இந்த வலுவான அமைப்பு கிழக்கில் புலிகளுக்கு இல்லை. வன்னியைப் பொறுத்த மட்டில் அவர்கள் மிகவும் வலுவான பலம்பொருந்திய நிலையில் காணப்படுகின்றனர்.

இதனால், சற்றுக் கால தாமதம் ஏற்படும். அது நீண்ட காலமாக இருக்கலாம். பத்திரிகைகளின் மூலம் நான் அறிந்த விடயங்களின்படி நாங்கள் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வன்னியில் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.

கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் முடிவடைந்துள்ளன. இதுவொரு நீண்டகாலமாகும். இதன் மூலம் வன்னிப் போராட்டம் அவ்வளவு இலகுவானதல்ல என்பது புலனாகிறது.

மேலும், ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கைகளை நினைவுபடுத்தினால் 1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த இராணுவ நடவடிக்கைள் தொடங்கின. 1999 ஆண்டுவரை தொடர்ந்து.

கேள்வி: தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், சுமார் 3,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்படுவார்கள் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அடுத்த தலைமுறைக்கு இந்தப் போரை கொண்டு செல்ல மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். இதுவரையில் 2,000 விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்வரும் மே மாதமளவில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியுமா?

பதில்: பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின் அடிப்படையில் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் வரையில் 7,152 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜனவரி முதலாம் நாள் முதல் பெப்ரவரி 18 ஆம் நாள் 1,609 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

MCNS இன் தகவல்களுக்கு அமைய 1,663 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் புள்ளி விபரங்களுக்கு இடையில் முரண்பாடு காணப்படுகிறது. இந்தப் புள்ளி விபரங்கள் நம்பத்தகுந்தவை என்றால் போர் வெகுவிரைவில் முடிவடையும்.

இந்தப் புள்ளி விபரத் தரவுகளில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. நாங்கள் போர்க்களத்தில் இருக்கும் போது அமைச்சர்களும், முக்கிய அதிகாரிகளும் போலியான தகவல்களை வெளியிடுவதனை பார்த்திருக்கிறோம். இம்முறை அவ்வாறானதொரு நிலைமை இருக்காது என நான் வேண்டிக்கொள்கிறேன்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதனைப் போன்று சில தகவல்கள் 7,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. அது உண்மையானால் மிக இலகுவாக போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும். 1,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரமே இன்னமும் எஞ்சியிருக்க வேண்டும்.

எனினும், என்னுடைய கருத்துப்படி, வலிமை மிக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள் இதுவரையில் போர்க்களத்தில் குதிக்கவில்லை. என்னுடைய அனுமானம் சரியாயின் இந்தப் போர் இன்னும் சில காலத்திற்கு நீடிக்கும். முன்னாள் ஜெனரல், நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் பற்றுடைய ஒரு நபர் என்ற ரீதியில் நான் உண்மையாக எமது படைத்தரப்புக்கு மே மாதமளவில் போரை முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பு கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

அவ்வாறு இல்லாது இந்த போர் நீடித்தால் அது அனைவருக்கும் பாதிப்பாக அமையும். குறிப்பாக படை வீரர்களை அது வெகுவாக பாதிக்கும்.

கேள்வி: அரசாங்கத்தரப்பின் தந்திரோபாயங்களில் ஏதாவது குறைபாடுகளை நீங்கள் நோக்குகின்றீர்களா? தற்போது இன்னும் ஒன்றரை வருட காலம் போரை முடிக்கத் தேவை என்று குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறு போரை முடிவுக்குக் கொண்டுவரும் காலக்கெடு மாற்றியமைக்கப்படுவது எவ்வாறு போர்க்களத்தில் போராடும் சாதாரண படைவீரனை எந்தளவிற்கு பாதிக்கும்?

பதில்: நீண்டகாலம் போர்க்களத்தில் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு உயர் அதிகாரி என்ற வகையில் நான் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். போர் இழுத்தடிக்கப்பட்டால் இரண்டு விடயங்கள் நிகழும். தற்போது இலங்கையில் இரண்டு நெருப்புகள் கொழுந்து விட்டு எரிகின்றன. ஒன்று போர் முனையின் போர் நெருப்பு மற்றையது வயிற்றுப் பசியால் ஏற்படும் நெருப்பு. போர்க்களத்தில் காட்டப்படும் அதீத சிரத்தை வயிற்றுப் பசிக்கு வழிகோலும். இந்த நிலைமை யுத்த நெருப்பை பாதிக்கும். இந்த இரண்டு நிலைமைகளையும் சமமான முறையில் பேணப்பட வேண்டும்.

போர் நீடித்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2008 பெப்ரவரி வரை போர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போர் நீடிக்க, நீடிக்க படைவீரர்கள் உடல் மற்றும் உள ரீதியாக பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவர். இந்த இரண்டு பிரச்சினைகளுடன் வீட்டுப் பிரச்சினைகளும் சேர்ந்து படைவீரர்களை மிக அழுத்தமாக பாதிக்கும்.

இந்த நிலைமைகளின் கீழ் போர்க்கள நடவடிக்கைகளை முன்னெடுத்தால் படைவீரர்கள் பூரண கவனத்தை போரின் மீது செலுத்த முடியாத நிலை தோன்றும். இதன் மூலம் படைவீரர்கள் அழுத்தங்களும், சுமைகளும் நிறைந்த நபராக மாறக்கூடும்.

வன்னிப் போர்கள முன்நகர்வுகளை வன்னிப் பிரதேசத்திற்கு மட்டும் வரையறுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. கொழும்பிலும் தெற்கிலும் குண்டுவெடிப்புக்கள் உள்ளிட்ட பல சம்பவங்கள் நிகழ்கின்றன. இது பரவக்கூடிய சாத்தியம் உள்ளது. இந்த நிலைமை மிக நிதானமாக நோக்கப்பட வேண்டிய நிலையாகும்.

இராணுவத் தளபதி மே மாதமளவில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என உறுதியாக சூளுரைத்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன். இந்தக் காலக்கெடு எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது. குறிப்பாக போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட படை வீரர்களுக்கு இது அதிக நன்மை பயக்கும்.

எனினும், இப்போது எவரேனும் இன்னும் ஒன்றரை வருடம் போரை முடிவுறுத்த கால அவகாசம் தேவை எனக் குறிப்பிட்டால் அது படை வீரர்களின் உடல் உள நிலைமைகளை அபரிமிதமாக பாதிப்பதுடன், பொருளாதார சுமையும் வெகுவாக அதிகரிக்கும்.

கேள்வி: இராணுவத்தினர் விதித்த காலக்கெடு எந்தளவுக்கு யதார்த்தமானது? உங்கள் காலத்தில் இராணுவ அதிகாரிகளா அல்லது அரசியல் தலைமைத்துவங்களா இவற்றைத் தீர்மானித்தன?

பதில்: ஈராக் மீது அனைத்துலகப் படைகள் தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழித் தாக்குதல்களை மேற்கொண்ட போது காலக்கெடு விதித்ததாக எனக்கு நினைவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றே அவை தெரிவித்தன. எந்தவித காலக்கெடுவையும் விதிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த போதும் அவை காலக்கெடு எதனையும் விதிக்கவில்லை.

காலக்கெடு விதிப்பது யதார்த்தத்திற்கு ஒவ்வாத நிலையாகும். உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் காலஞ் சென்ற முன்னாள் அரச தலைவர் ரணசிங்க பிரமேதாச நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தேசித்த போது, படைத்தரப்பு அதிகாரிகள் மற்றும் அரச தலைவரின் ஆலோசகரும் இணைந்து இரண்டு மாதக் காலக்கெடுவை விதித்தனர். அந்த சந்தர்ப்பத்தின் போது நான் தனித்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.

நாங்கள் ஒரு இரண்டு வருட காலத்தில் இதனை மேற்கொள்ள முயற்சிக்கலாம் என தெரிவித்தேன். உண்மையில் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கைகள் 1993 ஆம் ஆண்டு செரெம்பர் மாதமே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. எங்கள் நிலைகளைத் தக்க வைத்துக்கொள்ள போதியளவு கால அவகாசம் காணப்பட்டது.

எமது தரப்பு இலப்புக்களை குறைத்து, எதிரிகளின் இழப்புக்களை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.

இதேபோன்று, போர் முன்நகர்வுகள் நீடிக்கப்பட்டால் உயிர்ச் சேதங்களும் அதிகரிக்கும்.

கடந்த மாதம் 104 படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன், 882 பேர் காயமடைந்துள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாக நான் பத்திரிகைகள் வழியாக அறிந்து கொண்டேன். இது ஒரு மாதத்திற்கான புள்ளி விபரம். அப்படியானால் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கும், உண்மையில் இது நோக்கப்பட வேண்டிய ஒன்று.

எங்களது பிரதான இராணுவச் சொத்து முப்படைகளும், காவல்துறையினரும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வெறும் ஆயுதங்களை நம்பி நாம் போர் செய்ய முடியாது. படைத்தரப்பிற்கு பாரதூரமான இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அமைச்சரின் அறிக்கை மூலம் தெரியவருகிறது. எனவே இந்தப் போர் நீடிக்கப்பட்டால் அது பாதாகமான சூழ்நிலையை தோற்றுவிக்கும். இந்தப் போர் முடிவுக் காலம் யதார்த்தத்திற்கு புறம்பானதொன்று.

செப்ரெம்பர் மாதமளவில் காலநிலை மாற்றங்கள் ஏற்படும். காலநிலைக் காரணிகளும் துருப்பினரை பாதிப்படையச் செய்யும். குறிப்பாக மலேரியா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். போர் நீடிக்கப்பட்டால் இந்த நிலைமைகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

போரை முன்னெடுப்போம் என்று கூறுவது மிக இலகுவான காரியம். எனினும், போர்க்களத்தில் போராடிய ஒருவன் என்ற வகையில் அது எவ்வளவு கடினமான காரியம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

உண்மையில் விடுதலைப் புலிகள் இந்தப் போரை நீடிப்பது ஒரு போர் தந்திரோபாயமாகும். இந்த நிலைமை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக அமையும்.

கேள்வி: கடந்த பெப்ரவரி மாதத்தில் நீங்கள் குறிப்பிட்டதனைப் போன்று அரசாங்கத் தரப்பு புள்ளி விபரங்களிலிருந்து 900-க்கும் அதிகமான படையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இராணுவ வெற்றிகள் குறித்து எதிர்வுகூறல்கள் அவ்வளவு மெய்பாடுடையதாக அமையவில்லையா?

பதில்: இராணுவ உத்திகள் பற்றியோ தந்திரோபாயங்கள் பற்றியோ எனக்குத் தெரியாது. நான் நினைக்கின்றேன் அவர்கள் அதனை மிக இரகசியமாக பாதுகாப்பார்கள். எனினும், யுத்த முடிவுக்கான காலக்கெடு அடிக்கடி மாற்றப்பட்டால் அது சாதகமான நிலையாக அமையாது.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து விட்டோம் என்று வைத்துக்கொள்வோம். அடுத்தது என்ன? நாட்டிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொடுக்காத போர் வெற்றியின் பயன் என்ன? இராணுவ வெற்றியின் மூலம் சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால் மாத்திரமே போர் முன்நகர்வின் பூரணப்படுத்தப்பட்டதொன்றாக அமையும்.

உதாரணமாக அமெரிக்கத் துருப்பினர்கள் ஈராக்கிற்குச் சென்றனர் எனினும் தற்போது அங்கு பல்வேறு குழப்ப நிலைமைகளே எஞ்சியுள்ளன. ஆயுதம் ஏந்ததோருக்கு எம்மிடம் தீர்வுகள் இல்லையென்றால் மாவீரர் குடும்பங்கள் உயர்வாக போற்றப்படும். இந்த நிலைமை வேறு சில பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக்கூடும்.

1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி முற்றாக அழிக்கப்பட்டதாக கருதப்பட்டது. எனினும், 1989 ஆம் ஆண்டு ஒரு புதிய சக்தியுடன் மக்கள் விடுதலை முன்னணியினர் களமிறங்கினர்.

கேள்வி: நீங்கள் தற்போது போரினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறிப்பிட்டீர்கள். அரசாங்கம் தற்போது 13 ஆவது திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த தீர்வுத் திட்டம் பொருத்தமானதாக அமையும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: பத்திரிகைகளின் மூலம் நான் வாசித்த தகவல்களின் படி, மகிந்தவின் 13 ஆவது திருத்த யோசனை முதல் கட்ட நடவடிக்கையாகும். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்வுத் திட்டம் இப்போது உசிதமானதாக அமையாது.

நாங்கள் பயங்கரவாத கிளர்ச்சியாளர்களுடன் போராட்டம் நடாத்துகின்றோம் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பலமான மக்கள் ஆதரவு காணப்படுகிறது. மக்கள் எமது தீர்வுத்திட்டங்கள் தொடர்பாக நம்பிக்கை கொண்டால் பயங்கரவாதிகளுடனான போராட்டம் இலகுவானதாக அமையும்.

எனினும், மக்கள் ஆதரவு இருக்கும் வரை இந்தப் போர் கடினமான போக்கையே காட்டி நிற்கும்.

13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எனினும், சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தத் தீர்வுத் திட்டங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியமான ஏதுவாக அமைய வேண்டும்.

கேள்வி: காணாமல் போனோர் தொடர்பான புள்ளி விபரங்கள் அரசாங்கத்தின் தரவுகளில் உள்ளடக்கப்படாமை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இதுவொரு முக்கியமான பிரச்சினை. யாராவது ஒருவர் காணாமல் போனால் அவரது குடும்பத்தினருக்கு அது ஒரு பாரிய துயரமாகும். இதன் மூலம் காயமடைந்த அல்லது கொல்லப்பட்டவர்களின் துயரம் குறைவானது என்று அர்த்தப்படாது.

எனது மைத்துனர்கள் இருவர் மற்றும் மைத்துனியின் கணவர் ஆகியோர் போர்க்களத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் சோகங்களுக்கு ஒரு முடிவு காணப்பட்டது. அவர்கள் ஆறுதலடையக்கூடிய வகையில் உடல்கள் கிடைக்கப்பெற்றன. எனினும் காணாமல் போனோரின் குடும்ப நிலைமைகள் மிகவும் வேதனைக்குரியதாக அமையும் அவர்களின் ஒவ்வொரு விடியலும் வேதனையுடனேயே தொடங்கும்.

ஒருவர் கொலை செய்யப்பட்டு பூதவுடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அந்த துயரத்திற்கு ஒரு முடிவு இருக்கும். உண்மையில் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத துயரம் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், காணாமல் போனோரின் குடும்ப நிலைமைகள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு கலந்த வேதனையுடன் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதனையே நான் இங்கு குறிப்பிட முயற்சிக்கின்றேன்.

கேள்வி: சில காணாமல் போதல் சம்பவங்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடியதாக கருதப்படுகின்றது என குறிப்பிடப்படுகின்றது?

பதில்: நான் அவ்வாறு நினைக்கவில்லை. காணாமல் போன ஒருவரை தப்பியோடியதாக கருதினால் அவரது சம்பளங்கள் ஏனைய கொடுப்பனவுகள் நிறுத்தப்படும். அதாவது படைவீரர் ஒருவர் தப்பியோடியதாக காட்டப்பட்டால் அவரது முழுக் குடும்பமுமே பாதிக்கப்படும.

கேள்வி: உங்களிடம் இது தொடர்பான தரவுகள் ஏதும் உள்ளனவா? படையிலிருந்த தப்பியோடுபவர்களினால் போர் முன்நகர்வுகளுக்க எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படக்கூடும்?

பதில்: என்னிடம் தரவுகள் எதுவுமில்லை. எனினும், போர் நீண்டுகொண்டு சென்றால் இந்த நிலைமை அதிகரிக்கக்கூடிய அபாயம் நிலவுகிறது. 1999 ஆம் ஆண்டில் போர் நீடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தப்பியோடும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றன.

நீங்கள் ஒரு படைவீரர் என்று வைத்துக்கொள்வோம். போர் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டால் உங்களுக்குள் இருக்கும் உத்வேகமும், ஆற்றலும் வெகுவாக குன்றக்கூடிய நிலைமையை தவிர்க்க முடியாது.

கேள்வி: போர் முன்நகர்வுகளின் காரணமாக இராணுவத் தரப்பிற்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக விளங்குகிறது. பல இழப்புக்களைத் தாண்டி கைப்பற்றப்படும் நில எல்லைகள் எவ்வளவு முக்கியத்துவமாக காணப்படும்?

பதில்: முதலாவதாக நீண்டகாலப் போர் எங்களுக்கு பாதகமான நிலைமையை தோற்றுவிக்கும். குறிப்பாக எப்போதும் நாம் குறைந்தளவு இழப்புக்களுடன் எதிரிகளை அழித்தொழிக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் போர் முன்நகர்வுகளில் பாதகமான விளைவுகளே எஞ்சி நிற்கும்.

கேள்வி: இரண்டு விதமான விடயங்களை போரின் போது கைப்பற்ற முடியும். முதலாவது வெறும் நிலப்பரப்புக்களை கைப்பற்றல் மற்றையது சிவில் மக்களை பாதுகாத்தல். உண்மையில் வெற்று நிலங்களை கைப்பற்றுவதனுடாக எவ்வித பயனும் கிட்டப் போவதில்லை.

கேள்வி: யாழ்ப்பாண தீபகற்பத்தின் தற்போதைய நிலையை எவ்வாறு நீங்கள் உணர்கின்றீர்கள்?

பதில்: முகமாலையிலிருந்து தென்மராட்சி வரை எமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வடமராட்சியிலிருந்து நாகர்கோவில் வரையிலும் எமது காட்டுப்பாடு நிலவுகிறது. வலிகாமம், கைதடி, மண்டைதீவு என்பவற்றின் கட்டுப்பாட்டை முழுமையாக எமது இராணுவத்தினர் கொண்டுள்ளனர்.

அங்குள்ள மக்கள் சந்தோசமாக வாழ்கிறார்களா என்பது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. ஏனெனில் நான் இராணுவத்திலிருந்து விலகியதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யவில்லை.

கேள்வி: கிழக்கு இராணுவப்படைத் தளபதி மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலைமை இராணுவத்தில் முரண்பாடுகளை தோற்றுவிக்குமா?

பதில்: இராணுவ அதிகாரியாக இருந்தாலும், படைவீரராக இருந்தாலும் இராணுவச் சட்டங்கள் ஒரே மாதிரி நடைமுறைப்படுத்தப்படும். மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலேயே நீதிமன்றததை நாடுகின்றனர்.

உயர் அதிகாரியொருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பல பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். படையதிகாரி என்பவர் சீருடையணிந்த படையினரின் தந்தை நிலையில் வைத்துப் போற்றப்படக்கூடியவர். எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கக்கூடும்.

கேள்வி: மேஜர் பராக்கிரம பன்னிப்பிட்டியவின் உடனடியாக கொழும்பு தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார். பல்லாயிரக்கணக்கானோரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கருணாவிற்கு பிரபுக்கள் சலுகை வழங்கப்பட்டிருப்பதனையும் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: இவை இரண்டும் இருவேறு நிலைமைகள். கருணாவின் நிலைமை ஒரு அரசியல் இராஜதந்திரம். சிலர் அவர் வெளிநாடு செல்ல உதவி செய்துள்ளனர்.

எனினும், பராக்கிரம பன்னிப்பிட்டியவின் நிலை தனிப்பட்டதொன்று இவை இரண்டையும் இரு வேறு சம்பவங்களாக நோக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

Wednesday, March 19, 2008

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை அகதியாக வந்த மாணவி

[புதன்கிழமை, 19 மார்ச் 2008]

இராணுவக் கட்டுப்பாட்டில் வசித்து வந்தாலும் பாதுகாப்பு இல்லாததால் பாடசாலைக்குச் செல்ல முடியவில்லை. நடமாடித் திரியும் இளம் பெண்கள் கடத்தப்படுகின்றனர். பின்னர் அவர்கள் உயிருடன் திரும்புவதும் இல்லை. இவ்வாறு தலைமன்னார் மற்றும் வவுனியா பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் தனுஷ்கோடி வந்தடைந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 23 அகதிகளில் ஒருவரான விஜயதர்சினி (வயது 17) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இராணுவத்தினரால் கடத்தப்படும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பாடசாலைக்குக் கூட செல்ல முடிவதில்லை. கடத்திச் செல்லப்படுவோர் உயிருடன் திரும்புவதும் இல்லை. வீட்டில் இருந்தாலும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்படுகிறோம். தற்போது பரீட்சை முடிவடைந்த நிலையில் உயிருக்கு பயந்து பெற்றோருடன் அகதியாக வந்துள்ளோம் என்றார். மேலும் இவரது தாயாரான ஞானசுந்தரி (வயது 38) கூறுகையில் :

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ அரிசி 80 ரூபாவிற்கும், காய்கறிகள் 60 ரூபாவிற்கும் ஒரு தேங்காய் 50 ரூபாவிற்கும் விற்கப்படுகின்றன. குழந்தைகளுக்குத் தேவையான பால்மா பொருட்கள் கிடைப்பதேயில்லை என்றார். மீனவர் ராஜசேகர் (வயது 28) கூறியதாவது:

இலங்கைநெடுந்தீவு பகுதியில் கண்ணிவெடிகளை மிதக்கவிட்டிருப்பதாக கடற்படையினர் எச்சரித்துவருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் மீன்பிடிக்க செல்லமுடியாது. ஒரு லீற்றர் 93 ரூபா என்ற விலையில் ஒரு படகுக்கு 15 லீற்றர் மண்ணெண்ணெய் மட்டுமே கொடுக்க அரசு அனுமதிக்கிறது. அது கடலுக்கு சென்று திரும்புவதற்கே போதுமானதாக இருப்பதில்லை. இந்நிலையில், இரவு நேரத்தில் மீன் பிடிக்கக் கூடாது என்று எமக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கடும் கண்டனம்: அந்தரங்கத்தை அம்பலப்படுத்தியதால் விசனம்

[புதன்கிழமை, 19 மார்ச் 2008,]

சிறிலங்காவில் நீதிக்குப் புறம்பான கொலைகளும் காணமல் போதலும் பயங்கரமான நிகழ்வுகளாகி விட்ட போதும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு மாத்திரம் தாம் சமர்ப்பித்த அந்தரங்க அறிக்கையை பகிரங்கப்படுத்தி பகிர்ந்து கொண்டமைக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
.
இந்த அறிக்கையின் மூலம் சிறிலங்கா அரசாங்கமும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் அந்தரங்கமான தொடர்புகளைப் பேணி வருவதும், மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைக்குப் புறம்பான தகவலை அரசுக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியமையும் அம்பலமாகியிருக்கிறது.

இது குறித்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காணாமல் போதல் தொடர்பான தமது அந்தரங்க தகவல்களை தவறாக வழிநடத்தும் நோக்குடன் பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தனது கடுமையான கண்டனத்தை சிறிலங்காவிற்கு தெரிவித்துக் கொள்கிறது.

மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்க இராஜாங்க அமைச்சு வெளியிட்ட 2007 ஆம் ஆண்டுக்கான நாட்டறிக்கைக்கு பதிலளிக்கும் விதத்தில் 2008 மார்ச் 15 ஆம் நாள் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் "2007 ஆம் ஆண்டின் இரண்டாம் மூன்றாம் காலப்பகுதியில் காணாமல் போதல் மற்றும் காரணமற்ற கொலைகள் குறிப்பிடக்கூடிய விதத்தில் குறைவடைந்து செல்கின்றது" என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அவதானிப்புக்களின்படி நிலமை திருந்தியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு அதில் கூறியிருந்தது. அத்துடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அந்தரங்க அறிக்கைகளை ஐக்கிய அமெரிக்க தூதரகம் பெற்றுக்கொண்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு மாத்திரம் தாம் சமர்ப்பித்த அந்தரங்க அறிக்கையினை இவ்விதம் பகிரங்கப்படுத்தி பகிர்ந்து கொண்டமையையும் தனது முழுக் கண்டறிதல்கள் தொடர்பில் தான் அரசுடன் நடாத்தும் கருத்தாடல்கள் மட்டில் வெளிவிவகார அமைச்சின் தவறான தகவலினையும் அனைத்துலகம் செஞ்சிலுவைச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

நீதிக்குப் புறம்பான கொலைகளும் காணமல் போதலும் இலங்கையில் இடம்பெறும் பயங்கரமான தகாத நிகழ்வுகளின் ஒரு பகுதிகளாகிவிட்டன. இவை நிறுத்தப்பட வேண்டும் என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசிய நாடுகளின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஐக் டி மய்யோ குறிப்பிட்டுள்ளார்.

இவை தொடர்பில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அந்தரங்கமாகவும் நேரடியாகவும் உரையாட முற்படுகின்றது. இதன் காரணமாகவே இலங்கையில் நடைபெறும் பல காணமற் போதல் சம்பவங்கள் மட்டில் நாம் கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதிலும் ஆயுத மோதல்கள் மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்படுவோரை பாதுகாத்து உதவியளிக்கும் அனைத்துலக ஆணை அதிகாரத்தை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கொண்டுள்ளது. பிரத்தியேகமானதொரு மனிதாபிமான நிறுவனம் என்ற அடிப்படையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இக்கடமையினை நடுநிலைமை, பக்கசார்பின்மை என்னும் கொள்கைகளை கண்டிப்புடன் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகின்றது.

சிறிலங்காவில், அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட மோதல்களில் சம்பந்தப்படும் சகல தரப்பினருடனும், பலவந்தமாக காணாமல் ஆக்குதல் போன்ற அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில், தொடர்ச்சியான கலந்துரையாடல்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நடத்தி வருகின்றது.

மீறல்களை நிறுத்தவும் அவை மீண்டும் இடம்பெறாதவாறு தடுக்கவும் வேண்டிய சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுவருகின்றது. அனைத்துலக மனிதாபிமான சட்டமீறல்களால் பாதிக்கப்பட்ட ஆட்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்க்கு உதவி செய்வதற்கான தனக்கிருக்கும் மிகச் சிறந்த வழி இது என்னும் வகையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அரசாங்கத்துடன் அந்தரங்க தொடர்புகளைப் அர்ப்பணிப்புடன் பேணி வருகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.