Monday, October 29, 2007

அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 6 பேர் தப்பிச் சென்றுள்ளனர்: இக்பால் அத்தாஸ்

[திங்கட்கிழமை, 29 ஒக்ரோபர் 2007]

அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் 27 பேர் கொண்ட அணி தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களில் 6 பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

கட்டடையாக தலைமுடி வெட்டிய ஆண்களும், பெண்களுமான கரும்புலிகள், இராணுவ உடையை அணிந்திருந்தனர். அவர்கள் தற்கொலை குண்டு அங்கிகளையும் அணிந்திருந்தனர்.

கனரக ஆயுதம் தரித்த அந்த அணியினர் இராணுவ அதிகாரி ஒருவருக்கு சொந்தமான கைவிடப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்தனர். இது அனுராதபுரம் தளத்திற்கு அண்மையாக இருந்தது.

முகாமின் வேலிகளை நோக்கி திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் அதிகாலை 3:00 மணிக்கு ஊர்ந்து சென்றனர். பின்னர் அவர்கள் வேலிகளை வெட்டி ஒவ்வொருவராக உள்ளே புகுந்தனர். வானூர்தி ஓடுபாதை வடகிழக்காகவும், தென்மேற்காகவும் அமைந்திருந்தது. அதனை விரிவாக்கும் வேலைகளும் நடைபெற்று வந்தன. விடுதலைப் புலிகள் 300 மீற்றர் தூரம் ஓடுபாதைக்கு குறுக்காக நடந்து வானூர்தித் தரிப்பிடத்தை அடைந்தனர். அது திறந்த பகுதி அங்கு எதிர்ப்புக்கள் இருக்கவில்லை.

அங்கு பாவனையில் உள்ள மற்றும் பாவனையில் அல்லாத வானூர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது ஆர்பிஜி உந்துகணை செலுத்திகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு உந்துகணை செலுத்திகள் ஆகியவற்றின் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடங்கினர்.

அது முகாமின் அமைதியை குலைத்தது. எனினும் தம்மை தயார்படுத்திக்கொண்டு தமது நிலைகளுக்கு செல்ல ஆரம்பித்த வான் படையினரை அங்கு நிலை எடுத்திருந்த விடுதலைப் புலிகள் தாக்கினர்.

பல வான் படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி வீழ்ந்தனர். தளத்தில் பெரும் வெடியோசைகளும், தீப்பிழம்புகளும் எழுந்தன. அனுராதபுரத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான தொலைபேசி இணைப்புக்கள் மிகவும் வேகமாக இயங்கின. தாக்குதல் செய்தி எல்லா இடமும் பரவியது. செய்தி உலகெங்கும் பரவியது. அனைத்துச் செய்தியாளர்களும் கெரில்லாக்கள் முதற் தடவையாக வான், தரைத் தாக்குதல்களை இணைத்து மேற்கொள்வதாக பேசிக்கொண்டனர். விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டதாக அரசு தெரிவித்து வந்த சூழலில் இது நடைபெற்றுள்ளதாக சில ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள வான் படையினரின் நடவடிக்கை தலைமையகம் வேகமாக செயற்பட்டது. அனுராதபுரம் தளத்தில் உள்ள சில வானூர்திகளையாவது பாதுகாப்பாக நகர்த்துவது தொடர்பான நடவடிக்கைகளில் உயரதிகாரிகள் இறங்கினர். இது இரு நோக்கங்களைக்கொண்டது. ஒன்று வானில் எழும் வானூர்திகள் மூலம் விடுதலைப் புலிகளை தாக்குவது. இரண்டாவது தரையில் உள்ள வானூர்திகளைப் பாதுகாப்பது. ஆர்பிஜி மற்றும் ஏனைய ஆயுதங்களின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்தன. வவுனியா வான் படைத்தளத்தில் இருந்து உதவிகளை பெறுவதற்கும் அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.

எனினும் அரை மணிநேரத்திற்குப் பின்னர் வவுனியாவில் இருந்து பெல்-212 ரக உலங்குவானூர்தி புறப்பட்டுச் சென்றது. இரு வானோடிகளையும் இரு துப்பாக்கிதாரிகளையும் கொண்ட இந்த உலங்குவானூர்தி மிகிந்தலைப் பகுதியில் உள்ள டொரமடலாவா பகுதியில் சூட்டுக்கு இலக்காகி வீழ்ந்து நொறுங்கியுள்ளது. அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

வான் படைத்தளத்தின் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட மற்றும் தரிப்பிடங்களில் நிறுத்தப்பட்ட வானூர்திகள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தன. தாக்குதல் அணியானது வன்னியில் உள்ள கட்டளை மையத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வந்திருந்தது. தாக்குதல் தொடர்பான தகவல்களையும் வழங்கிக்கொண்டிருந்தனர். தாக்குதல் தொடங்கிய 45 நிமிடங்களில் விடுதலைப் புலிகளின் இரு சிலின்-143 வானூர்திகள் வந்து மூன்று குண்டுகளை வீசின.

விடுதலைப் புலிகளின் வானூர்தி வந்து குண்டு வீசிவிட்டுச் சென்றதனை வவுனியாவில் இருந்த படையினரும், காவல்துறையினரும் கண்டனர். எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளைத் தாக்கச் சென்ற உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கி விட்டது. ஆனால் எவ்வாறு இது நிகழ்ந்தது என்பது தொடர்பாக குழப்பங்கள் தோன்றியுள்ளன. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அது வீழந்ததா? அப்படியானால் மற்றைய உலங்குவானூர்தியை அனுப்புவது பாதுகாப்பானதா என்ற கேள்வியும் எழுகின்றது.

இராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற படையினர், வான் படையினருடன் இணைந்து விடுதலைப் புலிகளை முறியடிக்கும் தாக்குதலில் ஈடுபட்டனர். சில விடுதலைப் புலிகள் தமது தற்கொலை அங்கிகளை வெடிக்க வைத்து இறந்தனர். சிலர் படையினருடனான மோதல்களில் இறந்தனர். தளத்தை முற்றாகக் கைப்பற்றி தமிழீழக் கொடியை ஏற்றும் விடுதலைப் புலிகளின் திட்டத்தை முறியடிப்பதற்காக படையினர் கடும் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர்.

முற்பகல் 9:00 மணியளவில் எஞ்சியிருந்த ஒன்று அல்லது இரண்டு விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் வேப்ப மரத்தில் ஏறி அதன் மூலம் வானூர்தி தரிப்பிடத்தின் கூரையில் ஏறி படையினர் மீது தாக்குதலை நடத்தினர். இச்சமரின் போது ஒரு சமயத்தில் கவச வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கவச வாகனத்தின் சக்கரம் சேதமடைந்ததால் அது செயலிழந்தது. எனினும் பின்னர் கூரையில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் 20 சடலங்களை கைப்பற்றியதாக படைத்துறைப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். ஆனால் 21 விடுதலைப் புலிகள் பங்குபற்றியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். எனவே கொல்லப்பட்ட எண்ணிக்கையில் ஒருவர் வேறுபடுகின்றார். விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் தாக்குதலாளிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அமர்ந்திருப்பது வெளியிடப்பட்டிருந்தது. இது தாக்குதலில் பங்குபற்றிய சில உறுப்பினர்கள் பாதுகாப்பாக திரும்பும் பொருட்டு புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. குறைந்தது ஒன்று அல்லது இரண்டு விடுதலைப் புலிகளாவது தளம் திரும்பும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இத்தாக்குதலில் 27 விடுதலைப் புலிகள் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 5:00 மணியளவில் இரு குழுக்களாக தாக்குதலாளிகள் வெவ்வேறு இடைவெளிகளில் தளத்தை விட்டுச்சென்றதை கண்டதாக தளத்திற்கு அருகில் வசிக்கும் சில கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருந்தனர். அது சரி எனில் தாக்குதலில் பங்குபற்றியதாக கூறப்படும் ஒரு விடுதலைப்புலி உறுப்பினரின் நிலை தொடர்பான விளக்கமே தரப்படவில்லை.

மூன்று வானூர்திகள் சேதமடைந்ததாக வான் படைப் பேச்சாளர் அஜந்தா சில்வா ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். ஆனால் 7 வானூர்திகள் அழிக்கப்பட்டதாகவும், பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியதாகவும் பிரதமர் ரட்ணசிறீ விகிரமநாயக்க கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும்பில் உள்ள வான்படை தலமையகத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள், அனுராதபுரம் படைத்தளத்தில் உள்ள அதிகாரிகள் ஆகியோருடன் நான் மேற்கொண்ட உரையாடல்களில் இருந்து தாக்குதல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டேன்.

தாக்குதல் நடைபெற்ற போது தளத்தில் 27 வானூர்திகள் தரித்து நின்றன. அவற்றில் சில சேவையில் ஈடுபட முடியாதவை. எனவே சேதமடைந்த வானூர்திகளின் விபரம் வருமாறு:

வான் படைத் தரிப்பிடத்தில் வைத்து அழிக்கப்பட்ட வானூர்திகள்:

ஆளில்லாத உளவு வானூர்திகள் - 02 இவை மிகவும் புதியன, வான் படையினரின் ஆவணங்களில் கூட இன்னும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. இஸ்ரேலின் புளு ஹரிசோன் நிறுவனத்திடம் இருந்து பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக கொண்டுவரப்பட்டிருந்தன.

எம்ஐ-17 துருப்புக்காவி உலங்குவானூர்தி - 01 இது எரிந்து சாம்பலாகி விட்டது.

சீனத் தயாரிப்பு பிரி-6 பயிற்சி வானூர்திகள் - 04

வானூர்தி ஓடுபாதைக்கு அருகில் வைத்து அழிக்கப்பட்ட வானூர்திகள்
அமெரிக்க தயாரிப்பான பீச்கிராஃப் 200 வானூர்தி - 01 இது முக்கிய பிரமுகர்களின் பயணத்திற்கு என 1985 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டது. பின்னர் 1995 ஆம் ஆண்டு கண்காணிப்பு வானூர்தியாக மாற்றப்பட்டதுடன், அதிக பெறுமதியுள்ள ஒளிப்படக்கருவி உட்பட பல சாதனங்களும் பொருத்தப்பட்டன. இதன் இழப்பு ஆழ்கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

சீனத் தயாரிப்பு கே-8 பயிற்சி வானூர்தி - 01

எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி - 01

இவை முற்றாக அழிந்து போனவை. இவை தவிர சேவையில் ஈடுபடும் மற்றும் சேவையில் ஈடுபடாத பல வானூர்திகளும் சேதமடைந்துள்ளன. அவற்றில் சிலவற்றையே மீண்டும் பயன்படுத்த முடியும் என வான் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சேதமடைந்த வானூர்திகளை வான் படை பதிவு புத்தகத்தில் இருந்து அகற்றுவதற்கான அனுமதிக்காக வான் படைத்தளபதி பாதுகாப்பு அமைச்சிற்கு கடிதம் எழுதும் வரையிலும் இழக்கப்பட்ட வானூர்திகளின் எண்ணிக்கை யாருக்கும் தெரியவில்லை.

அதன் தகவல் வருமாறு:

வான் படைத் தரிப்பிடத்தில் சேதமடைந்த வானூர்திகள்:

வான் படைக்குச் சொந்தமான ஆளில்லாத உளவு வானூர்தி - 01

பிரி-6 பயிற்சி வானூர்திகள் - 03

கே-8 பயிற்சி வானூர்திகள் - 05 இந்த வானூர்திகள் சிலவற்றின் கண்ணாடி கூரைகள் உருகிப் போனதுடன், உலோகப்பகுதிகளும் சிதைந்து போயுள்ளன. அவற்றில் சில கைவிடப்பட்டுள்ளதுடன், அதன் பாகங்கள் தான் பயன்படுத்த முடியும்.

சியாமாசெற்றி வானூர்திகள் - 04 (சேவையில் ஈடுபடுவதில்லை)

ஓடுபாதையில் சேதமடைந்த வானூர்திகள்:

எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி - 01

சேதமடையாத வானூர்திகள்:

எம்ஐ-17 உலங்குவானூர்திகள் - 03 இவை தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

வான் படைத்தளத்திற்கு ஏற்பட்ட சேதம் 30 மில்லியன் டொலர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை ஒரு வருடத்திற்கு முன்னர் கணிக்கப்பட்ட விலைகள். ஆனால் மீளக் கொள்வனவு செய்யும் விலைகள் மிகவும் அதிகமானவை. வான் கலங்களின் விலைகள் உயர்ந்து செல்வதுடன், டொலரின் பெறுமதியும் அதிகரித்து செல்கின்றது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக இரு காரணிகள் நோக்கத்தக்கது. முகாமின் ஒவ்வொரு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர்கள் தகவல்களை உடனுக்குடன் பெற்று வந்திருக்கின்றனர். அது உள்வீட்டுத் தகவல்களாகும். அவற்றின் உதவியுடன் அவர்கள் வன்னியில் மாதிரி வடிவங்களை அமைத்து கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். விடுதலைப் புலிகள் எவ்வாறு இத்தகவல்களை பெற்றார்கள் என்பது தான் முக்கிய கேள்வி.

தளத்தின் வானூர்தி ஓடுபாதையின் விரிவாக்கம் காரணமாக அதன் பாதுகாப்புக்களில் சில மாதங்களாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை தனியார் ஒப்பந்தகாரருக்கு வழங்கப்பட்டிருந்தது. தினமும் கட்டப் பொருட்களுடன் பெருமளவான பாரஊர்திகள் அங்கு செல்வதுண்டு.

முகாம் தாக்குதல் தொடர்பாகவும், பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரு குழுக்கள் அமைக்கப்பட்டள்ளன. இவற்றில் ஒன்று குற்றப்புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்படுவது முக்கியமானது.

காவலரண்களில் இருந்து எந்தவித எதிர்ப்புக்களும் இன்றி விடுதலைப் புலிகள் கம்பி வேலியை வெட்டி உட்புகுந்தது வெட்கக்கேடானது. கடந்த கால அனுபவங்களில் இருந்து கூட படையினர் பாடங்களை கற்கவில்லை. இதே போன்றே விடுதலைப் புலிகள் 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கட்டுநாயக்க வான் படைத்தளம் மீதான தாக்குதலின் போதும் உள்நுழைந்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் சப்புகஸ்கந்தவில் உள்ள எரிபொருள் சேமிப்பு களஞ்சியத்தின் கம்பி வேலியை வெட்டி விடுதலைப் புலி உறுப்பினர் உட்புக முயற்சித்திருந்தார். அதற்கு அண்மையில் ஒரு சடலம் காணப்பட்டது. புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவரை பாம்பு கடித்திருந்ததாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. காவல்துறையினர் சில ஆவணங்களையும் கைப்பற்றியிருந்தனர். அவர் எரிபொருள் சேமிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலுக்கான ஆரம்பகட்ட புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பின்னர் அறியப்பட்டது.

கட்டுநாயக்க தாக்குதலில் வான்படையினர் 8 வானூர்திகளை இழந்திருந்தனர். ஆனால் அனுராதபுரம் தாக்குதலில் அதிக வானூர்திகள் இழக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலில் வானூர்தி தரிப்பிடங்களில் இருந்த வானூர்திகள் தாக்கப்படவில்லை. ஓடுபாதையில் நின்ற வானூர்திகளே தாக்கப்பட்டன. ஆனால் அனுராதபுரத்தில் தாக்குதலாளிகள் தரிப்பிடங்களுக்குள் சென்று தாக்கியுள்ளனர்.

யால வனவிலங்கு சரணாலயத்தில் தாக்குதல் நடைபெற்ற ஒரு வாரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்க றெஜிமென்டை சேர்ந்த 12 ஆவது பற்றாலியன் துருப்புக்களின் உதவியுடன் தற்போதும் அங்கு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் நாள் உரைக்கு 30 நாட்கள் இருக்கையில் இந்த இரு தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, October 28, 2007

புலிகளின் நகர்வுகளைத் தடுக்க கஞ்சிகுடிசாறு பகுதியில் 3000 படையினர் மேலதிகமாகக் குவிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2007] அம்பாறை கச்சிகுடிச்சாறு பகுதியில் சிறீலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் மூவாயிரம் துருப்புக்கள் சென்றடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அம்பாறையை பின்தளமாகக்கொண்டு விடுதலைப் புலிகள் தென்னிலங்கையில் தாக்குதல்களை நடத்திவருவதால் தென்னிலங்கை அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் நகர்வுகளைக் கட்டுப்படுத்த மேலதிகமாக மூவாயிரம் துருப்புக்கள் களமிறக்கியதோடு அங்கு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள சிறீலங்கா படைகள் திட்டமிட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

சிறிலங்காவுக்கு தொடர்ந்து இராணுவ பயிற்சி மற்றும் உதவி வழங்குகிறோம்: இந்திய தலைமை தளபதி தீபக் கபூர்

[ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2007] சிறிலங்காவுக்கு தொடர்ந்து இராணுவப் பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குகிறோம் என்று இந்திய இராணுவத் தலைமை தளபதி தீபக் கபூர் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் நேற்று சனிக்கிழமை அவர் கூறியதாவது: சிறிலங்கா அரசுடன் இந்தியா நல்லுறவு கொண்டு உள்ளது. அங்கு நீடித்து வரும் இனப் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு எடுத்து வருகிறது. சிறிலங்காவுடன் இந்தியா கொண்டுள்ள நல்லுறவின் அடிப்படையில், அந்த நாட்டு இராணுவத்துக்கு இந்தியா முந்தைய காலங்களில் அளித்து வந்த இராணுவப் பயிற்சியை இப்போதும் தொடர்ந்து அளித்து வருகிறது. அந்த நாடு ஆயுத உதவி அளிக்கும்படி பலமுறை வேண்டுகோள் விடுத்தது. அதன் அடிப்படையில் சிறிலங்காவுக்கு வான்வெளி தாக்குதலை எதிர்த்து போரிடும் நவீன துப்பாக்கிகள் பீரங்கிகள் வழங்கப்பட்டு உள்ளன என்றார் அவர்.

எல்லாளன் நடவடிக்கையில் சிறப்புக் கரும்புலிகளால் 25 வானூர்திகள் துவம்சம்

[ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2007]

எல்லாளன் நடவடிக்கையில், இருபத்தைந்து வானூர்திகளை தமிழீழ விடுதலைப் புலிகள் துவம்சம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது.

இறுதியாக வெளியாகிய தகவல்களின் படி, எல்லாளன் நடவடிக்கையின் பொழுது, சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான பதினொரு வானூர்திகள், அடையாளம் இன்றி முற்றாக துடைத்தழிக்கப்பட்டிருப்பதோடு, மேலும் பதினான்கு வானூர்திகள், திருத்த முடியாத அளவிற்கு முற்றாக சிதைவடைந்துள்ளன.

இதில், இருபத்தெட்டு மில்லியன் டொலர்கள் பெறுமதியான, அமெரிக்க தயாரிப்பான (Beech Craft - 200) பீச்கிராவ்ட் - 200 ரக வேவு வானூர்தி ஒன்றும், சீனத் தயாரிப்பான K-8 ரக அதிவேக யுத்த விமானம் ஒன்றும், MI-24 ரக யுத்த உலங்குவானூர்தி ஒன்றும், அனுராதபுரம் சிறீலங்கா வான்படை தளத்தின் விமான ஓடுபாதைககு அருகில் தரித்து நின்ற பொழுது, துடைத்தழிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, MI-17 துருப்புக்காவி உலங்குவானூர்தி ஒன்றும், இரண்டு ஆளில்லா வேவு விமானங்களும், நான்கு PT-6 ரக சண்டைப் பயிற்சி விமானங்களும், அனுராதபுரம் சிறீலங்கா வான்படை தளத்தின் வானூர்தி தரிப்பிடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்புக் கரும்புலிகளால் துடைத்தழிக்கப்பட்டுள்ளன.

இதனை விட, உதவிக்கு விரைந்த (Bell - 212) பெல் 212 ரக கள உலங்குவானூர்தி, வவுனியாவில் இருந்து உதவிக்கு விரைந்த பொழுது, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அழிந்து நாசமாகியுள்ளது.

இவற்றை விட, சீனத் தயாரிப்பான ஐந்து K-8 ரக அதிவேக யுத்த விமானங்களும், MI-24 ரக யுத்த உலங்குவானூர்தி ஒன்றும், ஒரு ஆளில்லா வேவு விமானமும், இத்தாலிய தயாரிப்பான நான்கு சியா மாசெட்டி ரக குண்டு வீச்சு விமானங்களும், மூன்று PT-6 ரக பயிற்சி விமானங்களும், திருத்த முடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய எல்லாளன் நடவடிக்கையில், மொத்தம் 25 வானூர்திகளை சிறீலங்கா அரசாங்கம் முற்றாக இழந்துள்ளது.

(ஐ.பி.சி)

இராணுவத் தீர்வுக்கனவை கலைத்த அதிரடித்தாக்குதல்-அருஸ் (வேல்ஸ்)-

[ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2007] இந்த மிலேனியத்தில் இலங்கை விமானப் படை பெருமளவான படைகல அதிகரிப்புக்களையும், நவீனமயப்படுத்தல்களையும் கண்டிருந்தது. எனினும் அதே காலப்பகுதியில் தான் அவை பேரழிவையும் சந்தித்திருந்தன. அதாவது இந்தக் காலப்பகுதியில் இலங்கை விமானப்படையின் இரு பிரதான தளங்கள் பேரழிவை சந்தித்ததுடன், பெருமளவான வான்கலங்களும் அழிக்கப்பட்டுள்ளன. பிரகடனப்படுத்தாத நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கையின் விமானப் படையினர் வன்னிப் பகுதியிலும், கிழக்குப் பகுதி மீதும் தொன் கணக்கில் குண்டுகளை வீசியிருந்ததுடன், வன்னிப்பகுதியில் தற்போதும் வீசி வருகின்றனர். நவீன உலகின் போர் தத்துவங்களில் வான் ஆதிக்கம் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து. இதற்கு அண்மையில் நடைபெற்ற பல்க்கன் போர், ஈராக் போர், ஆப்கான் போர் என்பவற்றை உதாரணமாக கொள்ளலாம். இந்த உத்திகளைத்தான் இலங்கை அரசும் பின்பற்றி வருகின்றது. அதாவது எதிர்கால போரில் விமானப்படையின் முக்கியத்துவத்தை அறிந்த அரசு இந்த மிலேனியத்தின் முதல் 3 வருட காலப்பகுதியில் 07 உலங்குவானூர்திகளையும் (எம்.ஐ 35P) 36 விமானங்களையும் (03 யுn 32, 02 130 மு ர்நஉரடநள ஊ-1, 06 மிக்-27 ஆ, 01 மிக் 23 ருடீஇ 06 மு-8ளஇ 10 Pவு-6ளு, 04 கிபீர் ஊ-2, 04 கிபீர் ஊ-7) கொள்வனவு செய்து விமானப்படையின் பலத்தை 30 விகிதத்தால் அதிகரித்திருந்தது. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் 03 கே-8 ரக நவீன பயிற்சி வானூர்திகள் அழிந்த போதும், உடனடியாகவே மேலதிகமாக 03 விமானங்களை அரசு கொள்வனவு செய்திருந்தது. கடந்த வருடம் மேலதிகமாக 04 மிக்-27 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள், 02 எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டதுடன், இந்தியாவும் 02 எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகளை இலங்கை விமானப்படைக்கு வழங்கியிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியை விமானப்படை தனக்கு மூச்சுவிடும் காலப்பகுதியாக பயன்படுத்தியிருந்தது. இந்த அவகாசத்தில் தனது படையை மீள ஒழுங்குபடுத்தியிருந்ததுடன், புதிய விமானிகளுக்கு பயிற்சி அளித்ததுடன், பயிற்சி நடவடிக்கைகளையும் புதிய கொள்வனவுகளையும் முடுக்கி விட்டிருந்தது. பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளுக்கு பயிற்சிக்காக விமானிகள் அனுப்பப்பட்டதுடன், அமெரிக்காவின் வான்படை அதிகாரிகளுடன் இணைந்து பல கூட்டு பயிற்சிகளையும் அது மேற்கொண்டிருந்தது. விமானப்படையின் கட்டளை மையங்களும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டன. வடபகுதி கட்டளை மையம் இந்த கட்டளை மையத்தின் கீழ் வவுனியா, அனுராதபுரம், பலாலி விமானப் படைத்தளங்கள் உள்ளடக்கப்பட்டன. எனினும் பலாலி மீது 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் ஊடுருவி நடத்திய தாக்குதலில் பெல்-212 ரக உலங்கு வானூர்தி ஒன்று அழிக்கப்பட்டதனாலும், அதனை அண்டிய பகுதிகளில் அவ்ரோ விமானங்கள் 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டதனாலும் அங்கு விமானங்கள் தரித்து நிற்பதில்லை. வவுனியா தளத்தை பொறுத்தவரை அங்கு ஸ்குவாட்றன்-06 (6 ர்நடiஉழிவநசளுஙரயனசழn: ஆi-17இ ஆi-171) உலங்குவானூர்தி பிரிவும், ஸ்குவாட்றன் (11 ருயுஏ குடiபாவ: ஐயுஐ ளுஉழரவ) உளவு விமான பிரிவும் நிறுத்தப்பட்டிருந்தன. எனினும் கடந்த ஆண்டு வவுனியாவை அண்டிய பகுதிகளில் மோதல்கள் உக்கிரமடைந்ததை தொடர்ந்து ஸ்குவாட்றன்-11 பிரிவு அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு நகர்த்தப்பட்டது. எனவே அனுராதபுரமே வடபகுதி போர்முனையின் பிரதான விமானப்படைத்தளமாக மாற்றம் பெற்றது. இது பயிற்சி விமானங்கள் ஸ்குவாட்றன்-1 (குடலiபெ வுசயiniபெ றுiபெ: Pவு-6ஃஊது-6இ ஊநளளயெ 150இ ளுகு.260வுP) விமானங்களின் தளமாக இருந்ததுடன், வட போர்முனையின் முக்கியத்துவம் கருதி தாக்குதல் உலங்குவானூர்திகளும், போக்குவரத்து வானூர்திகளும், விடுதலைப் புலிகளின் விமானங்களை தாக்குவதற்கு என கே-8 பயிற்சி விமானமும் அங்கு நிறுத்தி வைக்கப்படுவதுண்டு. மேலும் கனரக போக்குவரத்து விமானங்களான அன்ரனோவ்-32பி, அன்ரனோவ்-24பி என்பனவும் அங்கு தங்கிச் செல்வதுண்டு. மேற்குப் பிராந்திய கட்டளை மையத்தில் கட்டுநாயக்கா விமானப்படைத்தளமே பிரதான தளம். இது முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் உலங்குவானூர்திகளை கொண்ட ஸ்குவாட்றன்-04 (டீநடட 412இ டீநடட 212), அதிவேக தாக்குதல் விமானங்களை கொண்ட ஸ்குவாட்றன்-05 (துநவ ளுஙரயனசழn: கு-7டீளுஇ குவு-7இ குவு-5இ ஆiபு-23ருடீஇ ஆiபு-27) குவாட்றன்-10 (குiபாவநச ளுஙரயனசழn: முகசை வுஊ.2இ முகசை ஊ.7) ஜெற் பயிற்சி விமானங்களை கொண்ட ஸ்குவாட்றன்-14 (மு-8) என்பவற்றின் தளமாகும். இவை தவிர ஏக்கல விமானப்படைத் தளமும் மேற்குப் பகுதி கட்டளை மையத்தின் கீழ் அமைந்துள்ள போதும் அங்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்படுவதில்லை. தென்பிராந்திய கட்டளை மையத்தின் கீழ் இரத்மலானை, கட்டுக்குருந்த, கேகாலை, வீரவில, தியத்தலாவை ஆகிய விமானப் படைத்தளங்கள் உள்ள போதும் இரத்மலானை பகுதியில்தான் விமானங்கள் தரித்து நிற்பதுண்டு. இது இலகுரக போக்குவரத்து விமானப்பிரிவான ஸ்குவாட்றன்-8 (டுiபாவ வுசயnளிழசவ ளுஙரயனசழn: டீநநஉh 200இ லு-12) கனரக போக்குவரத்து விமானப்பிரிவான ஸ்குவாட்றன்-2 (ர்நயஎல வுசயnளிழசவ ளுஙரயனசழn: யுn-32இ ஊ-130முஇ டீயுந ர்ளு.748இ ஊநளளயெ 421) என்பவற்றின் தளமாகும். கிழக்குப் பிராந்திய கட்டளை மையத்தின் கீழ் ஹிங்குராங்கொட முக்கிய தளமாகும். அங்கு தாக்குதல் உலங்குவானூர்திகளின் ஸ்குவாட்றன் - 09 (யுவவயஉம ர்நடiஉழிவநச ளுஙரயனசழn: ஆi-24ஏஇ ஆi-35P) உலங்குவானூர்தி பிரிவான ஸ்குவாட்றன்-7 (டீநடட 206இ டீநடட 212) என்பன நிலைகொண்டுள்ளன. மேலும் மட்டக்களப்பு, அம்பாறை, சீனன்குடா விமானப்படைத்தளங்கள் இந்த பிரிவின் கீழ் உள்ளடக்கப்பட்ட போதும் அங்கு விமானங்கள் தரித்து நிற்பதில்லை. 1997 ஆம் ஆண்டு சீனன்குடாவில் குறுகிய நேரம் தரித்து நின்ற வை-12 இலகுரக போக்குவரத்து விமானத்தை விடுதலைப் புலிகளின் கொமோண்டோ அணி தாக்கி அழித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். மேற்கூறப்பட்ட நான்கு கட்டளைப்பீடங்களிலும் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளின் பிரதான கட்டளைப் பீடங்களான கட்டுநாயக்கா, அனுராதபுரம் விமானப்படை தளங்கள் மிகவும் முக்கியமானவை என்பதுடன், இலங்கையிலேயே மிகவும் பாதுகாப்பான தளங்களும் இவையே. நான்கு பிராந்தியங்களிலும் இந்த இரு பிராந்தியங்களின் முக்கியத்துவம் அதிகமானது. எனினும் இந்த மிலேனியத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் கொமாண்டோ கரும்புலிகள் அணி மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியிருந்தனர். அந்த தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேரையே பிடுங்கி எறிந்திருந்தது. இந்த வாரம் வான்படையின் வடபிராந்திய பிரதான கட்டளை மையம் மீது விடுதலைப் புலிகளின் அதிரடி இடியாக வீழ்ந்துள்ளது. அதிகாலை வேளை அநுராதபுரத்தின் காடு களினூடாக நகர்ந்த விடுதலைப் புலிகளின் 21 கரும்புலிகளின் கொமாண்டோ பிரிவு மிகவும் நுட்பமாக முகாமின் முக்கிய பகுதிகளுக்குள் அதன் வடமுனையினூடாக ஊடுருவியுள்ளது. அநுராதபுரத்தின் வான் படைத்தளத்தைப் பொறுத்தவரையில் அதற்கு அண்மையாக நுவரவெள குளம் உள்ளதுடன், அதனைச்சூழ மேலும் இரு சிறிய குளங்களும், இரண்டு அல்லது மூன்று இராணுவ முகாம்களும் உள்ளன. சாலியபுர மற்றும் கல்குளம படைமுகாம்கள் அவற்றில் அடங்கும். எனினும் விடுதலைப்புலிகளின் அணி நுவரவௌ காட்டுப்பகுதியின் ஊடாக விமானப்படைத்தளத்தை அடைந்ததுடன், படையினரின் கண்களில் படாமல் தளத்திற்குள் நகர்ந்து முக்கிய இடங்களில் நிலையெடுத்தும் இருந்துள்ளனர். தமது நிலையிடங்களை உறுதி செய்த அணி, முதலாவது தாக்குதலை இலகு ரக டாங்கி எதிர்ப்பு உந்துகணை தாக்குதலுடன் (டுiபாவ யுவெவையமெ றுநயிழn-டுயுறு) 3.15 மணியளவில் ஆரம்பித்தது. படைத்தரப்பின் தகவல்களின் படி தாக்குதலுக்கு 45 நிமிடங்களுக்கு முன்னராகவே விடுதலைப் புலிகள் முகாமின் உட்பகுதிக்குள் ஊடுருவி நிலையெடுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது தாக்குதல் விமானங்கள் தரித்து நிற்கும் பகுதிக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியின் மீது நடத்தப்பட்டதுடன் மோதல் உக்கிரமடைந்தது. உந்துகணையின் வெடிப்பதிர்வு, தொடர்ச்சியான துப்பாக்கி வேட்டுக்களால் படையினர் அதிர்ச்சியடைந்த போது விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினர் தளத்தின் விமானங்கள் தரித்து நிற்கும் பகுதி, விமான எதிர்ப்பு துப்பாக்கி மையங்கள், ராடர் மையம் போன்றவற்றை கைப்பற்றிக்கொண்டனர். 12.7 மி.மீ கனரக துப்பாக்கி நிலை ஒன்று மற்றும் இரண்டு 23 மி.மீ (ணுரு-23 யுவெயைசைஉசயகவ புரn) விமான எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அதனை கொண்டும் படையினரை தாக்கியதுடன், விமானங்களின் தரிப்பிடங்களை நோக்கியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். விமான ஓடுபாதையில் நின்ற விமானங்கள் விடுதலைப் புலிகளின் நேரடியான தாக்குதலுக்கு இலக்காகியதுடன், விமானங்களின் தரிப்பிடத்தில் நின்ற விமானங்கள் விமான எதிர்ப்புத் தூப்பாக்கியின் எறிகணைகளினால் வெடித்து சிதறியுள்ளன. விமானப் படைத்தளத்தின் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், ராடர் மையம் என்பவற்றை கைப்பற்றிய அணியினர் தமது கட்டளைப் பீடத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் வான்புலிகளின் இரண்டு விமானங்கள் வவுனியா வான்பரப்பினூடாக உள்நுழைந்து 50 கிலோ நிறையுடைய மூன்று குண்டுகளை வீசிவீட்டு சென்றுள்ளன. இவற்றில் ஒரு குண்டு விமான ஓடுபாதையில் வீழ்ந்து அதனை சேதமாக்கியதுடன், மற்றையது எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளின் மீது வீழ்ந்த போது இரண்டு வானூர்திகள் அழிந்து போயின. இந்த குண்டு வீச்சில் இரண்டு அதிகாரிகள் உட்பட 4 விமானப்படையினர் கொல்லப்பட்டதுடன், 7 பேர் பாடுகாயமடைந்தனர். மூன்றாவது குண்டு முகாமிற்கு வெளியில் வீழ்ந்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான் படையின் தாக்குதலை அடுத்து வவுனியா விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட பெல்-212 ரக உலங்குவானூர்தி அனுராதபுரம் தளத்தை நோக்கி தென்பகுதியினால் வந்துள்ளது. போக்குவரத்து வானூர்தியான இந்த உலங்குவானூர்தியை, 7.62 மி.மீ, 12.7 மி.மீ துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட தாக்குதல் உலங்குவானூர்தியாக இலங்கை விமானப் படை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அநுராதபுர விமானத்தளத்தை தென்பகுதியினால் அண்மித்த இந்த வானூர்தி தரையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட விமான எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தளத்தின் தென்திசையில் 12 கி.மீ தொலைவில் உள்ள மிகிந்தலைப் பகுதியில் வீழ்ந்து நொருங்கியுள்ளது. உலங்குவானூர்தி மீதான இந்த தாக்குதல் அநுராதபுரம் படைத்தளத்தின் சுற்றாடலில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் தளத்தை அண்மித்த உலங்குவானூர்தி மீது விடுதலைப் புலிகளே படையினரின் விமான எதிர்ப்பு துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு வெளியே உள்ள காட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் மற்றுமொரு கொமாண்டோ அணியினர் உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது. பலாலியில் இருந்து 36 படையினரை ஏற்றிச் சென்ற அன்ரனோவ்-24 ரக விமானம் 2000 ஆம் ஆண்டு மாசி மாதம் சாம்-16 ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி அநுராதபுரத்தில் வீழ்ந்து நொருங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அநுராதபுரம் காட்டுப்பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர். அநுராதபுரம் தளத்தில் ஏற்பட்ட சேதம் மிகவும் பாரியது. ஏறத்தாழ அங்கிருந்த பெரும்பாலான விமானங்களும், உலங்குவானூர்திகளும் அழிக்கப்பட்டு விட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 விமானங்கள் முற்றாக அழிக்கப் பட்டுள்ளதுடன், 7 விமானங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் பிரி-6 ரக பயிற்சி விமானம்-01 (யேnஉhயபெ Pவு-6), கே-8 ரக நவீன பயிற்சி விமானம்-01, எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி-02, எம்ஐ-17 கனரக போக்குவரத்து உலங்கு வானுர்தி-01, பெல்-212 ரக தாக்குதல் உலங்குவானூர்தி-01, பீச்கிராப்-01, ஆளில்லாத உளவு விமானங்கள்-03, செஸ்னா ரக கண்காணிப்பு விமானம்-01 என்பன அடங்கும். அழிவடைந்த மற்றும் சேதமடைந்த விமானங்களின் மொத்த பெறுமதி 439 மில்லியன் டொலர்களாகும். இது அதிக எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அரசினால் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் 500 மில்லியன் கடன் தொகைக்கு சமனானது. இவற்றில் முக்கியமானது அமெரிக்க அரசினால் வழங்கப்பட்ட 40 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பீச்கிராப் கண்காணிப்பு விமானமாகும் (டீநநஉhஉசயகவ 200 ர்ஐளுயுசு). இலங்கை அரசிடம் உள்ள கண்காணிப்பு மற்றும் உளவு விமானங்களில் இதுவே நவீனமானது. இரு விமானங்களை இலங்கை அரசு கொள்வனவு செய்திருந்த போதும் அவற்றில் ஒன்றே தற்போது பாவனையில் இருந்து வந்தது. அதுவும் தற்போது அழிந்து போயுள்ளது. இந்த விமானம் பாதகமான கால நிலையிலும், இரவிலும் பகலிலும் தொழிற்படும் ராடார்களையும் (ர்ரபாநள ளுலவொநவiஉ யுpநசவரசந சயனயச ளலளவநஅ) வெப்ப உணர்திறன் உள்ள கண்காணிப்பு மற்றும் ஒளிப்பட கருவிகளையும் கொண்டிருந்ததுடன், தாழ்வாக பறக்கும் விமானங்களை கண்டறியும் திறனும் கொண்டது. ஏறத்தாழ 8-9 மணிநேரம் தொடர்ச்சியாக பறப்பில் ஈடுபடக்கூடியதனால் இது ஆழ்கடல் கண்காணிப்பு பணிகளிலும் முக்கிய பங்காற்றி வந்தது. மேலும் இந்த விமானத்துடன் உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த இஸ்ரேலிய தயாரிப்பான ஆளில்லாத உளவு விமானங்களும், செஸ்னா விமானங்களும் அழிந்து போனது அரசின் புலனாய்வு மற்றும் உளவு நடவடிக்கைக்கு பலத்த பின்னடைவாகும். தற்போது இலங்கை விமானப்படையிடம் ஒன்று அல்லது இரண்டு ஆளில்லாத உளவு விமானங்களே உள்ளன. தாக்குதல் உலங்குவானூர்திகளை பொறுத்த வரையில் வான்படையிடம் இயங்கு நிலையில் உள்ள 11 எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 ரக வானூர்திகளில் இரண்டு இழக்கப்பட்டதும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது டன், கே-8, பிரி-6 பயிற்சி விமானங்களின் இழப்பும் விமானப்படையின் பலத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். இழக்கப்பட்ட விமானங்களை ஈடு செய்வது என்பது ஏற்கனவே 164.4 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ள பாதுகாப்பு செலவினத்தை 200 பில்லியனை விட அதிகமாக உயர்த்தலாம். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையிலும் தாக்குதல் அணியானது மிகவும் சிறந்த பயிற்சி பெற்ற கொமாண்டோக்களை உள்ளடக்கியது என்பது தெளிவானது. பொதுநோக்கு கனரக இயந்திர துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், ஜிபிஎஸ் சாதனங்கள், செய்மதி தொலைத் தொடர்பு சாதனங்கள், டாங்கி எதிர்ப்பு உந்துகணை செலுத்திகள், வெடிமருந்துகள் என அதிக ஆயுதங்களை சுமந்து சென்ற இந்த அணி காட்டுப்புறச் சமருக்கும், நகர்ப்புறச் சமருக்கும் என சிறப்பாக பயிற்றப்பட்ட அணியாகும். விமானப் படைத்தளத்தின் முக்கிய பகுதிகளை அதிகாலை 3.20 இற்கு கைப்பற்றிய இந்த அணி அதனை காலை 11.00 மணி வரையிலும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், காலை 9.30 மணிவரையிலும் தமது கட்டளை பீடத்துடன் தொடர்புகளை பேணிவந்தது மிகப் பெரும் ஆச்சரியங்களை உலகின் போரியல் ஆய்வாளர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தரைப்படை கொமாண்டோக்களையும், விமானப்படையையும் இணைத்து விடுதலைப் புலிகள் நடத்திய இணைந்த நடைவடிக்கையானது போரியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒப்பிரேசன் தவளை, 2000 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு தளம் மீதான தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் தமது தரைப்படை மற்றும் கடற்படைகளை ஒருங்கிணைத்ததுடன் அந்த தாக்குதல்களில் பெரும் வெற்றியும் ஈட்டியிருந்தனர். சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஜேவை-11 ரக முப்பரிமாண ராடர்கள் வவுனியாவில் இருந்து தென்னிந்தியா வரையிலும் விமானங்களை கண்காணிக்கும் எனவும், அரசினால் அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட பெருமளவான விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என்பவற்றின் தாக்குதல்களில் இருந்து விடுதலைப் புலிகளின் விமானங்கள் எதிர்காலத்தில் தப்ப முடியாது எனவும் படைத் தரப்பு தெரிவித்து வந்திருந்தது. மேலும் விடுதலைப் புலிகளின் கடல் விநியோக மார்க்கங்கள் மூடப்பட்டதனால் விமானங்களுக்குரிய எரிபொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களுக்கு பலத்த பற்றக்குறை நிலவுவதாகவும் தென்னிலங்கையில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன. ஆனால் மற்றுமொரு வான் தாக்குதலை விடுதலைப்புலிகள் வெற்றிகரமாக நடத்தினால் அரசின் பிரச்சாரங்கள் அதற்கு எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கும் என பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தத௼br />. தற்போது அதுவே நிகழ்ந்துள்ளது. இன்றைய போரியல் உத்திகளில் வான்படையும், சிறப்புப் படையணிகளும் முக்கியமானவை. உலகின் முன்னணி நாடுகள் இந்த இரு படையினரின் உருவாக்கம் மற்றும் பயிற்சிகளில் முக்கிய கவனம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடாப் போரின் போது தரைப்படையினரை களத்தில் இறக்கும் முன்னர் வான்படையின் பலம் ஈராக்கிய நிலைகளின் வலிமையை குறைக்க போதும் என அமெரிக்கப் படைகளின் பிரதம தளபதி ஜெனரல் நோர்மன் ஸ்வார்ஸ்கோவ் தெரிவித்திருந்தார். ஆனால் வான்படையினரினதும், சிறப்பு படையினரினதும் இணைந்த நடவடிக்கையே மிகவும் சிறந்தது என பிரித்தானியாவின் தளபதி ஜெனரல் பீற்றர் டி ல பில்லியர் தெரிவித்திருந்தார். பின்னர் பிரித்தானியா தளபதியின் கருத்தே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் போரும் இலகுவில் வெற்றி கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் தற்போதைய பரிணாமமும் அதுவே. அதாவது 'எல்லாளன் நடைவடிக்கை" ஈழப்போரில் ஒரு புதிய பரிணாமத்தின் ஆரம்பம். ஆனால் அதன் தாக்கம் என்ன என்பது தான் இன்று எழுந்திருக்கும் முக்கிய கேள்வி. படைபலத்தில், பொருளாதாரத்தில், அரசியலில் என அதன் தாக்கம் பல காலம் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் அதன் உடனடியான தாக்கமாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சினைக்கு இராணுவத்தீர்வை கண்டுவிடலாம் என்ற கனவை அது கலைத்திருக்கும் என்பதுடன் தமிழ்மக்களின் உளவுரனில் மிகப்பெரும் எழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (28.10.07)

அனுராதபுரம் வான் படைத்தள தாக்குதல் படையினரின் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தோல்வி: "த ஐலன்ட்"

[ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2007] [அ.அருணாசலம்] அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தாக்குதல் படையினரின் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தோல்வி என்று கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள இனவாத ஏடான "த ஐலன்ட்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த "த ஐலன்ட்" வார ஏட்டில் வெளிவந்த முக்கிய விபரங்கள்: கடந்த வாரம் அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் வான் படையினர் சந்தித்த மிகப் பெரும் இழப்பாகும். 8 வானூர்திகள் அழிந்து போனதாக அரசாங்கம் கூறியுள்ள போதும் அது உண்மையானது அல்ல. அழிக்கப்பட்ட வானூர்திகளின் எண்ணிக்கை 17 எனவும், ஒன்று சேதமடைந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்க வான் படைத்தளம் மீதான தாக்குதலில் அழிக்கப்பட்டதனை விட அனுராதபுரத்தில் அழிக்கப்பட்டவை அதிகம். அன்று இரவு விடுதலைப் புலிகள் ஹிங்குரான்கொட வான் படைத்தளத்தை தாக்கபோவதாகவே சந்தேகிக்கப்பட்டது. எனவே வான் படையினர் அத்தளத்தில் இருந்த எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகளை ஏனைய தளங்களுக்கு மாற்றியிருந்தனர். பல எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகள் அனுராதபுரம் தளத்திற்கும் அனுப்பப்பட்டன. அதனால் அனுராதபுரம் தளத்தில் உள்ள வானூர்திகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஹிங்குரான்கொட தளத்தில் இருந்து உலங்குவானூர்திகளை இடம்மாற்றியது நல்லதொரு நடவடிக்கை. ஏனெனில் தளம் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருந்தது. எனவே அவற்றை அங்கு வைத்திருப்பது ஆபத்தானது. ஆனால் அவற்றை அனுராதபுரம் தளத்திற்கு மாற்றியதும், அத்தளம் தாக்குதலுக்கு உள்ளாகியது படையினரின் புலனாய்வுத்துறைக்கும், அனுராதபுரம் தளத்தின் அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட தோல்விகளாகும். உலங்குவானூர்திகளை வடக்கு-கிழக்குப் பகுதிகளில் இருந்து தூர வைத்திருப்பதே நல்லது. ஆனால் கட்டுநாயக்க, இரத்மலானை, சிகிரியா, வவுனியா, கற்பிட்டி ஆகிய தளங்களுடன் ஒப்பிடும் போது அனுராதபுரம் தளம் மிகவும் பாதுகாப்பானது. புராதன நகரமான இது மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நகரமும் ஆகும். இங்கு படையினரினதும், காவல்துறையினரினதும் பிரசன்னம் அதிகம். அது பாதுகாப்பான பிரதேசமாக இருத்தல் வேண்டும் ஆனால் அது அப்படி இருக்கவில்லை. இத்தாக்குதலில் பிரி-6 ரக 5 பயிற்சி வானூர்திகளும், கே-8 ரக ஜெற் - 01 பயிற்சி வானூர்தியும் அழிக்கப்பட்டது வான் படையினரின் பயிற்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வான் படையினரின் எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி தொகுதி கடுமையான சேதத்தை சந்தித்ததும் படையினருக்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும். எம்ஐ-24 ரக - 03 உலங்குவானூர்திகள் அழிக்கப்பட்டதுடன், ஒன்று சேதமடைந்துள்ளது. தாக்குதல்களின் போது தரைப் படையினருக்கு மிகவும் அருகாமையில் இருந்து தாக்குதல் உதவிகளை இது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இவற்றின் இழப்பு எதிர்காலத்தில் தரைப் படையினருக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தலாம். எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளின் அச்சத்தினால் தற்போது நடைபெற்று வரும் 4 ஆம் ஈழப்போரில் இவற்றின் பயன்பாடுகள் குறைவானது. தற்போதைய தரைத்தாக்குதல்களுக்கு அதிவேக தாக்குதல் வானூர்திகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை ஏவுகணைகளை விட வேகமானவை. ஆளில்லாத உளவு வானூர்திகள் மூன்று இழக்கப்பட்டதும் படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பாதுகாப்பு அமைச்சும் வான் படையினரும் இழந்த வானூர்திகளை மீள கொள்வனவு செய்ய முயற்சித்து வருகின்றனர். ஆனால் அதற்கு பல மாதங்கள் செல்லலாம். இதனிடையே பீச்கிராஃப் எனப்படும் கண்காணிப்பு வானூர்தியின் இழப்பு வன்னியில் படையினரின் நடவடிக்கையில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும். இந்த வானூர்தி 4 ஆம் கட்ட ஈழப்போரில் காத்திரமான பங்களிப்பை ஆற்றி வந்தது. அதிக உயரத்தில் பறக்கும் இந்த வானூர்தி வான் படையினரின் குண்டு வீச்சுக்களை நெறிப்படுத்தி வந்தது. அமெரிக்காவின் மிக நவீன உளவு வானூர்தியான அவக்ஸ் (AWACS) வானுர்தியில் பயன்படுத்தப்படும் கண்காணிப்புக் கருவிகளை ஒத்த கருவிகளே இந்த வானூர்தியில் பொருத்தப்பட்டிருந்தன. இதன் மூலம் துல்லியமான குண்டு வீச்சுக்களை மேற்கொள்ள முடியும். குண்டுவீச்சு வானூர்திகளின் பாதுகாப்பிலும் இந்த வானூர்தி முக்கிய பங்காற்றி வந்தது. பீச்கிராஃப் வானூர்தியில் இருந்து வழங்கப்படும் வானொலி கட்டளைகள் மூலமே அதிவேக தாக்குதல் வானூர்திகள் குண்டுவீச்சை நடத்தி வந்தன. முன்னர் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் தரைப்படையினரால் வழங்கப்படும் தகவல்களை கொண்டு வானோடிகளே தமக்குரிய இலக்குகளை கண்டறிந்து தாக்கி வந்தனர். பீச்கிராஃப் வானூர்தி மிகவும் உயரத்தில் பறப்பதனால் அதனை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்துவது கடினமானது. அது மிகவும் நவீன கண்காணிப்பு சாதனங்களையும் உடையது. இதன் இழப்பு வான் படையினரின் நடவடிக்கைகளில் பல வாரங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனினும் மேலதிக பீச்கிராஃப் வானூர்திகளை கொள்வனவு செய்யும் வரை வான் படைத் தலைமை அதற்கான மாற்றீட்டு வழிகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. படைத்தளத்தின் அதிகாரிகளின் கவனக்குறைவே விடுதலைப் புலிகள் இலகுவாக தளத்திற்குள் செல்ல அனுகூலமாக அமைந்திருந்தது. அனுராதபுரம் வான் படைத்தளமானது 100 வீத இராணுவத் தளமாக இருந்தது. அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வதற்கு படையினருக்கு எந்தவித தடைகளும் இருக்கவில்லை. விடுதலைப் புலிகள் தளத்தின் மையத்தில் இருந்த வானூர்திகளின் தரிப்பிடங்களை இலகுவாக அடைந்ததும் வான்படை அதிகாரிகளின் செயற்திறன் அற்ற தன்மையையே காட்டுகின்றது. தாக்குதலாளிகள் உள்ளிருந்தும் தகவல்களை பெற்றிருக்கலாம். அது தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. வான் புலிகளின் தாக்குதல்களை விட கரும்புலிகளின் தாக்குதலே கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதும் ராடார்களினால் முன்னர் அவதானிக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வெற்றிகரமாக தளம் திரும்பியுள்ளன. அவற்றை அனுராதபுரம் தளத்தில் உள்ள வானூர்திகள் வழிமறித்து தாக்கவில்லை என்பது தொடர்பாக கேள்விகளை எழுப்ப முடியாது. ஆனால் வவுனியா, கற்பிட்டி, ஹிங்குரான்கொட, சிகிரியா வான் படைத்தளங்கள் இரணைமடுவுக்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் சில நிமிட வான் பயணத்தூரத்திலேயே இருந்தன. வவுனியாவில் இருந்து சென்ற பெல்-212 ரக உலங்குவானூர்தியை சுட்டு வீழ்தியது, வான் படை வானோடிகளுக்கும், வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்களைக் கொண்ட தரைப் படையினருக்கும் இடையிலான இணைந்த நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை காட்டுகின்றது. இதே போன்றதொரு சம்பவம் உலகக்கோப்பைக்கான துடுப்பாட்ட போட்டி நடைபெற்ற போது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கொழும்பை தாக்கிய போதும் ஏற்பட்டிருந்தது. அன்று தரைப் படையினர் வானை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதனால் வான் படையின் தாக்குதல் உலங்குவானூர்திகளால் அந்த வான் பிரதேசத்திற்குள் நுழைய முடியவில்லை. விடுதலைப் புலிகளின் உடல்களை உடைகளை களைந்து காட்சிக்கு வைக்கவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்த ராஜபக்ச விசாரணைக்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எனவே பேச்சாளரின் பொய் அம்பலமாகியுள்ளது. எனவே இராணுவப் பேச்சாளரை நீக்கிவிட்டு புதியவரை நியமிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் சிந்திப்பது புத்திசாலித்தனமானது. ஊடகத்துறையினருடனான அவரின் மோசமான நடவடிக்கைகள் படையினரினதும், நாட்டினதும் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் மீதான அவரின் குற்றச்சாட்டுக்கள் வெட்கக்கேடானவை. இதன் மூலம் படையினரின் பெயரை உதய நாணயக்கார களங்கப்படுத்தி உள்ளார். படைத்துறை பேச்சாளர்களுக்கு ஊடகவியலாளர்களைக் கையாள்வதில் திறமை வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் தமிழர் என்பதால் பிணையில் விடக்கூடாது: நீதிமன்றத்தில் சிறிலங்கா அரசாங்கம்

[ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2007] "சண்டே லீடர்" வார ஏட்டின் ஊடகவியலாளர் ஆர்தர் வாமணனை பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்த குற்றப் புலனாய்வுத்துறையினர் அதற்கான ஒரு காரணமாக அந்த ஊடகவியலாளர் தமிழர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆர்தர் வாமணின் பிணை மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் கல்கிசை பிரதம நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது அவரைப் பிணையில் விடுதலை செய்வதற்கு ஆட்சேபம் தெரிவித்த குற்றப் புலனாய்வுத்துறையினர் காவல்துறையினர் இச்சம்பவத்தில் உள்ளூர் மற்றும் அனைத்துலக தொடர்புகள் இருக்கிறதா என்பதனை விசாரிப்பதற்காக மேலதிக விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது எனத் தெரிவித்தனர். மேலும் ஆர்தர் வாமணன் ஒரு தமிழர் என்பதனையும் சுட்டிக்காட்டியதுடன் அவரை விடுதலை செய்தால் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆர்தர் வாமணன் சார்பாக சட்டத்தரணி ஜி.ஜி.அருட்பிரகாசத்தின் வழிகாட்டலில் முன்னிலையான சட்டத்தரணி நளின் லுடுவாஹெட்டி மேற்படி இன ரீதியான இக்கூற்றை கடுமையாக ஆட்சேபித்தார். "தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை பிணையில் விடுதலை செய்வதை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆட்சேபித்தால் ஒரு சிங்களவரனான நான் சிங்களவர் என அழைக்கப்படுவதனையிட்டு வெட்கமடைகிறேன்" என்றார் அவர். இம் மனுவை விசாரித்த கல்கிசை நீதிபதி அயேசனி ஜயசிங்க, தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் ஆர்தர் வாமணனை விடுவித்ததுடன் வழக்கை நவம்பர் 30 ஆம் நாளுக்கு ஒத்திவைத்தார். ஆர்தர் வாணமன் தன்னிடம் 50 லட்ச ரூபா லஞ்சம் கோரியதாக அமைச்சர் மனோ விஜரட்ன தெரிவித்த புகாரையடுத்தே வாமணன் கைது செய்யப்பட்டார். அமைச்சர் மனோ விஜரட்னவின் மனைவியின் தொலைபேசிக் கட்டணத்தை இரத்தினக்கல் ஆபரணக் கூட்டுத்தாபனம் செலுத்தியதாக கிடைத்த தகவல் குறித்து அமைச்சரின் கருத்தை அறிவதற்காகவே அமைச்சரிடம் தொலைபேசி மூலம் பேசியதாகவும் செய்தியை வெளியிடாதிருப்பதற்காக அவரிடம் பணம் எதுவும் கோரவில்லை என்றும் ஆர்தர் வாமணன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு நோர்வேயில் வீரவணக்கம்

[ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2007] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்]

அனுராதபுரம் சிங்கள வான் படைத்தளம் மீது 22.10.2007 அன்று அதிரடித் தாக்குதல் நிகழ்த்தி வீரச்சாவினை அணைத்துக்கொண்ட 21 கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது.
நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் 21 கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு சுடர் வணக்கமும் மலர்வணக்கமும் செலுத்தப்பட்டது.

சிங்களத்தின் வான்படைத் தளத்தினைத் தமது வியத்தகு போரியல் சாகசம் மூலம் தகர்த்தெறிந்த கரும்புலிகளின் உன்னத உயிர்க்கொடையை ஆழ்மன உணர்வில் நிறுத்தி, விடுதலைக்கு உறுதியெடுக்கும் உணர்வுடன் செயற்பாட்டாளர்களும் மக்களும் கரும்புலி மாவீரர்களுக்கு தமது வீரவணக்கத்தினைச் செலுத்தினர்.

நன்றி:புதினம்

Saturday, October 27, 2007

22 ஆண்டுகளுக்குப் பின்னர் மரண பீதியை ஒக். 22 ஆம் நாள் எதிர்கொண்ட அனுராதபுரம்: "லக்ம்பிம"

[சனிக்கிழமை, 27 ஒக்ரோபர் 2007] அனுராதபுரம் மக்கள், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் மரண பீதியை கடந்த ஒக்ரோபர் 22 ஆம் நாள் எதிர்கொள்ள நேரிட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்ம்பிம" சிங்கள வார ஏட்டில் "அனுராதபுரம் தாக்குதல்" செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சிங்கள பௌத்த கலாச்சாரத்தின் முக்கிய இடமாக விளங்கும் அனுராதபுரத்தில் கடந்த 22 ஆம் நாள் பயங்கரமும் பீதியுமே ஆட்சி செய்தன. சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள அந்த நகரத்தின் மக்களுக்கு கடந்த 22 ஆம் நாள் ஒவ்வொரு வினாடியும் மரண பயத்தையே கொடுத்தது. அனுராதபுர மக்கள் இத்தகைய ஒரு நிலைக்கு கடைசியாக 22 வருடங்களுக்கு முன்னரே முகம் கொடுத்திருந்தனர். அது 1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் நாளாகும். கடத்தப்பட்ட சிறிலங்கா போக்குவரத்துச் சபை பேரூந்தில் வந்த கெரில்லாக்கள் ஆயுதங்களுடன் அநுராதபுரத்திற்கு வந்தனர். அவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். 285 பேர் காயமடைந்தனர். சிறிமகா போதியை வணங்க வந்தவர்களுக்கே இந்நிலை ஏற்பட்டது. அனுராதபுரத்தின் பாதுகாப்பு அதிகரிப்புகள் இச்சம்பவத்தின் பின்னர் அனுராதபுர நகரத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். வணக்க ஸ்தலத்திற்கு உள்ளிட்ட பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், முட்கம்பிகள் அதிகரிக்கப்பட்டன. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈழப் போர் வேகமாக பரவி வந்த காலப்பகுதியில் அனுராதபுரத்தில் நாளுக்கு நாள் இராணுவ முகாம்கள் அதிகரித்தன. இதற்குக் காரணம் வடக்கிற்கும் கிழக்கிற்கும் நடுவில் இருந்த பாதுகாப்புப் பிரதேசமான அனுராதபுரம் இராணுவத்தினரின் மாற்றீட்டு இடமாக இருந்தமையாகும். யாழ். - கண்டி வீதியான ஏ-9 பாதையைப் பிடிப்பதற்காக 1997ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஜெயசிகுறு இராணுவ நடவடிக்கைகளின் தொடக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெற்றன. இதனால் அனுராதபுர நகரை அண்டியிருக்கும் வான் படைத்தளத்திற்கும் பணிகள் அதிகரித்தன. வவுனியாவில் இருக்கும் வான் படைத்தளத்திற்கும் கெரில்லாக்களின் அச்சுறுத்தல் அதிகரித்தமையினால் அநேக பணிகள் அனுராதபுரம் வான் படைத்தளத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. 600 ஏக்கர் பிரதேசத்தில் அமைந்துள்ள வான் படைத்தளத்தின் ஒரு பக்கத்தில் இருப்பது நுவர வாவியாகும். இதனால் வான் படைத்தளத்திற்கு வரும் வானூர்திகளும் முகாமிலிருந்து புறப்படும் வானூர்திகளும் நுவர வாவிக்கு மேலாகவே தமது பயணங்களை மேற்கொள்கின்றன. அத்துடன் சிறிலங்கா வான் படையின் வானோடிகளுக்குப் பயிற்சியளிக்கும் பிரதான நிலையமும் அனுராதபுரம் வான் படைத்தளத்திலேயே உள்ளது. இந்த மார்ச் முதலாம் நாள் அனுராதபுரத்தில் உடைந்து விழுந்ததும் பயிற்சியளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பீரி-6 ரக வானூர்தியாகும். அதன்போது பயிற்சி ஆலோசகரும் கடெட் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர். இராணுவத்தினரின் விக்டரி மருத்துவமனை அனுராதபுரத்தில் இருப்பதாலும் அனுராதபுரம் மருத்துவமனையின் வசதிகள் நல்ல நிலையில் இருப்பதாலும் காயமடையும் அநேகமான படையினர் வானூர்தி மூலம் அனுராதபுரத்திற்கே கொண்டு வரப்படுகின்றனர். கடந்த மாதத்தில் இருமுறை அநுராதபுரம் நகரத்தின் பாதுகாப்பை இரண்டு, மூன்று மடங்காக அதிகரிக்க உயர்பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இராணுவத்தின் 58 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கடந்த 6 ஆம் நாள் அனுராதபுரத்திற்கு வந்தபோது முதல் முறையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரண்டாவது முறையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது, அனுராதபுரம் சாலியபுரத்தில் அமைந்துள்ள கஜபா ரெஜிமென்டின் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற கஜபா சுப்பர் கோஸ் மோட்டார் வாகன மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டி நடைபெற்ற கடந்த 21ஆம் நாளாகும். இந்த போட்டியைக் கண்டுகளிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் அநுராதபுரத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் அனுராதபுரம் வான்படை முகாமின் நடவடிக்கைகள் வழமை போல இடம்பெற்று வந்தன. வான் படைத்தளத்தின் பாதுகாப்பிற்காக நாற்புறமும் கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அந்த கம்பி வேலிகளுக்கு பின்புறம் பதுங்கு குழிகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆயுதம் தாங்கிய வான் படையினர் அந்த பதுங்குகுழிகளில் காவல் புரிந்தனர். எனினும் வான் படையினரின் கண்களுக்குத் தெரியாமல் கெரில்லாக்கள் முகாமிற்குள் புகும் நடவடிக்கைகளை 22 ஆம் நாள் அதிகாலை தொடங்கினர். கரும்புலிகள் யார்? அவர்கள் சாதாரண விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்ல. அவர்கள் கரும்புலிகள். கரும்புலி என்பது தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் விடுதலைப் புலிகளிடம் இருக்கும் மரண ஆயுதமாகும். சிறப்பு இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கே கரும்புலிகளைப் பிரபாகரன் பயன்படுத்துவார். முக்கிய பிரமுகர்கள், பொருளாதார மையங்கள், முக்கிய இடத்தை வகிக்கும் இராணுவ முகாம்களின் மீது தாக்குதல் நடத்தவும் இராணுவத் தாக்குதல்களை முறியடிக்கவுமே கரும்புலிகளைப் பிரபாகரன் பயன்படுத்துவார். வழமையாக சிறப்பு இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் கரும்புலிகளுக்கு அதற்காக சுமார் 4 மாதகால சிறப்புப் பயிற்சியளிக்கப்படும். அத்துடன் ஏனைய போராளிகளைப் போலன்றி அவர்களுக்கு 3 வேளையும் நல்ல உணவுப் பொருட்கள் கிடைப்பதுடன் விடுதலைப் புலிகளின் வீர செயற்பாடுகளைக் கொண்ட படங்களைப் பார்ப்பதற்கும் மத சடங்குகளில் கலந்துகொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கும். தற்கொலைத் தாக்குதலுக்கு என வன்னியிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் கரும்புலிகளுக்கு சிறப்பு வரப்பிரசாதம் கிடைக்கும். தமது தலைவரான பிரபாகரனுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும். சில நேரங்களில் பிரபாகரனுடன் இறுதியாக புகைப்படம் எடுக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. கட்டுநாயக்க தாக்குதல் சுதந்திரத்திற்குப் பின்னர் சிறிலங்காவின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவினை ஏற்படுத்திய கட்டுநாயக்க தாக்குதல் கரும்புலிகளின் தாக்குதலுக்கு ஒரு உதாரணமாகும். 2001 ஜூலை 24 ஆம் நாள் அதிகாலை 3:30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த தாக்குதலில் கிபீர் தாக்குதல் ஜெட்கள் 2, எம்ஐ-17 ரக உலங்கு வானூர்தி - 02, மிக்-27 தாக்குதல் ஜெட் - 01, கே-8 ரக வானூர்திகள் - 03, எயார்லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான 03 எயார் பேரூந்துகள் தாக்கியழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்காக வந்த 13 கரும்புலிகளும் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். புலிகளின் தாக்குதலில் 5 படையினர் கொல்லப்பட்டனர். காட்டில் ஊடுருவிய புலிகள் இம்முறை கரும்புலிகளின் இலக்காக இருந்தது குறைந்த பாதுகாப்பின் கீழ் இருந்ததாகக் கூறப்படும் அனுராதபுரம் தளமாகும். நுவர வாவி பக்கத்திலிருக்கும் கம்பி வேலிகளை வெட்டி, விடுதலைப் புலிகள் வான் படைத்தளத்திற்குள் நுழைந்திருப்பதாக இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த இடத்திற்கும் நுவரவாவிக்கும் இடையிலிருப்பது காடாகும். இந்த காட்டுப் பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் பிரதேசவாசிகள் தோட்டச் செய்கைகளை மேற்கொள்கின்றனர். அனுராதபுரம், அசோகபுரம் கன்னட்டியில் வசிக்கும் ஹங்வெல்லகே டேனியல் அப்பு என்பவர் தோட்டச் செய்கையில் ஈடுபடும் ஒருவராவார். கடந்த 20 ஆம் நாள் தோட்டத்திற்குச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தலையில்லாத அவரது சடலம் மறுநாள் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தைச் சோதனையிட்ட படையினர் டேனியல் அப்புவின் தலை அனுபவமுள்ள கொலைக்காரனாலேயே வெட்டப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். கூரிய ஆயுதமொன்றாலேயே அவரின் தலை வெட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிறப்பு நடவடிக்கைகளுக்குச் செல்லும் கெரில்லாக்கள், கொமாண்டோக்கள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ரம்போ எனப்படும் கத்தியைப் பயன்படுத்துகின்றனர். அது ஏனையவர்களுக்குத் தெரியாமல் விரோதியின் சத்தத்தை மூடுவதற்காகும். "அந்த நபரின் கழுத்தை வெட்டியது வான் படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு வந்த விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்று எங்களுக்குச் சந்தேகம் நிலவுகிறது. சிலவேளை அந்த நபர் காட்டிற்குச் சென்றபோது அவர் விடுதலைப் புலிகளைக் கண்டிருக்கலாம். அதனால் இரகசியத்தைக் காக்க விடுதலைப் புலிகள் அவரைக் கொன்றிருக்கலாம்." என்று பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவி;த்துள்ளார். சினைப்பர் தாக்குதல் வான் படைத்தளத்தின் மீதான தாக்குதலின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின் போது டேனியல் அப்புவின் தலை 23 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது. எவ்வாறாயினும் கம்பி வேலிகளை வெட்டி முகாமிற்குள் வந்த கரும்புலிகள் முதலில் பதுங்குழிகளில் இருந்த வான் படையினரை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் சினைப்பர்களைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. சுடும் போது சத்தம் எழுப்பாத ஆயுதத்தையே சினைப்பர் என்பர். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரை கொலை செய்வதற்கும் சினைப்பர் துப்பாக்கியையே பயன்படுத்தினர். மிகத் தொலைவில் இருக்கும் இலக்கையும் எட்டக்கூடியதாயிருப்பது இதன் சிறப்பம்சமாகும். சுடும்போது சத்தம் வெளியேறாமையினால் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதனை ஏனைய வான் ப்படையினர் அறியாது இருந்திருக்கலாம். இதனால் விடுதலைப் புலிகள் சினைப்பரைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி 6 பதுங்குழிகளை கைப்பற்றியுள்ளனர். பின்னர் எஞ்சிய விடுதலைப் புலிகள் 3 பிரிவுகளாக பிரிந்துள்ளனர். வான் படையினரின் சீருடையை ஒத்த உடையையே அவர்களும் அணிந்திருந்தனர். சிலர் தளத்திலிருந்து ஆயுதக் களஞ்சியசாலைக்குச் செல்ல முயற்சித்துள்ளனர். எனினும் அந்த முயற்சியை முறியடித்துள்ளனர். வானூர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் ஒரு பிரிவினரின் இலக்காகியது. அந்த கரும்புலிகளுக்கு முன்னால் செல்ல இடமளித்து மற்றைய பிரிவு இடத்திற்கு இடமிருந்து வான் படையினரை நோக்கி ஆர்.பி.ஜி. தாக்குதலை நடத்தினர். அப்போது கரும்புலிகள் சிலர் வான் படைத்தளத்திலிருந்த வானூர்தி எதிர்ப்புக் கருவிகளை கைப்பற்றினர். பின்னர் அந்த ஆயுதங்களைக் கொண்டு வானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்தினர். இந்த வெடிச் சத்தங்களால் அனுராதபுரம் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். அவர்களுக்கு காணக் கிடைத்தது ஒன்றேயொன்றுதான். வான் படைத்தளத்திற்குள் நிகழ்ந்த வாண வேடிக்கை மட்டுமே அது. சில வேளைகளில் நெருப்புப் பந்தைப் போன்ற ஒன்று முகாமை நோக்கிச் சென்றதை நகரவாசிகள் கண்டுள்ளனர். அது கரும்புலிகள் மேற்கொண்ட ஆர்.பி.ஜி. தாக்குதல் ஆகும். தமது சகாக்கள் வழங்கிய ஆர்.பி.ஜி. தாக்குதல் துணையுடன் வானூர்தி தளத்திற்குள் நுழைந்த கரும்புலிகள் ஆர்.பி.ஜி. தாக்குதல் நடத்தி எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் இரண்டை அழித்தனர். இத்தாக்குதல்களால் அச்சமடைந்த நுவரவாவிக்கு அண்மையிலிருந்த மக்கள் நுவரவாவிக்கு மேலாக அதிகாலை 3:20 மணியளவில் உழவு இயந்திரத்தின் ஓசையைப் போன்ற சத்தமொன்றைக் கேட்டுள்ளனர். விடுதலைப் புலிகளிடமிருக்கும் இரு ஸ்லின் இசெட்-143 வானூர்திகளிலிருந்தே அந்த சத்தம் எழுந்துள்ளது. விளக்குகளை அணைத்துவிட்டு தென்னை மரத்தின் உயரத்தில் பறந்த அந்த வானூர்திகள் வான் படைத்தளத்தை நோக்கிப் பறந்ததை நகரவாசிகள் கண்டுள்ளனர். வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டிருந்தமையினால் வான் படையினரால் அவற்றின் மீது தாக்குதல் நடத்த முடியாது போய்விட்டது. ஒரு விநாடியில் இடி விழுந்ததைப் போன்றதொரு சத்தம் வான் படைத்தளத்திலிருந்து கேட்டது. அதனையடுத்து வான் படைத்தளத்தின் வான்வெளியில் தீப்பிழம்பினால் பாரிய வெளிச்சம் ஏற்பட்டது. இத்தாக்குதலின் பின்னரான விசாரணைகளில் விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் மூலம் 4 குண்டுகள் போடப்பட்டமை தெரியவந்துள்ளது. கரும்புலிகள் வானூர்தி எதிர்ப்பு கருவிகளைக் கைப்பற்றிய பின்னரே இந்த வானூர்திகள் வந்துள்ளன. கரும்புலிகள் செய்மதி தொலைபேசியினூடாக அறிவித்ததையடுத்தே அவர்களின் வானூர்திகள் வந்துள்ளன என நம்பப்படுகிறது. இதேவேளை விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகளும் பறந்ததை வவுனியாவில் உள்ள வான் படைத்தளத்தின் ராடார் கருவிகள் அவதானித்துள்ளன. இவற்றைத் துரத்திச் சென்று தாக்குதல் நடத்த வவுனியா வான் படைத்தளத்தில் தரித்து நின்ற பெல்-212 ரக உலங்குவானூர்தி சென்றுள்ளது. 2 வானோடிகளும், 2 படையினரும் அதில் இருந்தனர். அந்த உலங்குவானூர்தி விபத்திற்கு இலக்காகி தொரமடலாவ பிரதேசத்தில் உள்ள கல்குழியில் விழுந்துள்ளது. வானூர்தியை சோதனையிடச் சென்ற படையினருக்கு சிதைந்து போன வானோடிகளினதும், படையினரது சடலங்களுமே கிடைத்தன. 22 ஆம் நாள் காலை வரை விடுதலைப் புலிகள் வான் படைத்தளத்திற்குள் நிலை பெற்று படையினரை எதிர்த்துத் தாக்குதல் நடத்தி வந்தனர். வான் படையினரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமையினால் சிறப்புப் படைப்பிரிவைத் தாக்குதலுக்காக அழைக்க தீர்மானித்தனர். சிறப்புப் படையினர் விடுதலைப் புலிகள் இருந்த பதுங்கு குழிகளுக்குள் தாக்குதல் நடத்தி அதனைக் கைப்பற்றினர். எனினும் 2 பதுங்குகுழிகள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இறுதியில் இராணுவத்தினரின் போர் தாங்கிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அந்த பதுங்குழிகளும் அழிக்கப்பட்டன. அதிலிருந்த கரும்புலிகளும் அழிக்கப்பட்டனர். இத்தாக்குதலுக்காக வந்த 21 கரும்புலிகளும் தாக்குதலில் மரணமடைந்ததாக வான்படையினர் தெரிவிக்கின்றனர். புலிகளின் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அழிந்தது நான்கா? எட்டா? இத்தாக்குதலின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல 4 வானூர்திகள் அழிக்கப்பட்டதாக கூறினார். எம்ஐ-24 ரக உலங்கு வானூர்திகள் - 02, கே-08 ரக வானூர்தியொன்று தாக்குதலில் அழிந்ததாகவும் மற்றுமொரு வானூர்தி உடைந்து விழுந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க கடந்த 24 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதற்கமைய எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி - 01, பீச் க்ராப்ட் வானூர்தி - 01, பிரி-6 ரக வானூர்திகள் - 03, கே-8 ரக வானூர்தி - 01, எம்ஐ-17 ரக வானூர்தி - 01 அழிக்கப்பட்டதாகவும், எம்ஐ-24 ரக வானூர்தி - 01 சேதமடைந்திருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். அழிக்கப்பட்ட வானூர்திகளில் அதிக விலை மதிப்பைக் கொண்டது பீச் கிராப்ட் வானூர்தியாகும். அவ்வாறான இரு வானூர்திகளே சிறிலங்காவிடம் இருப்பதாக வான் படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வானூர்தியில் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதால் கடந்த காலங்களில் தற்போது தாக்குதலுக்கு இலக்கான வானூர்தியே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதிநுட்பமான கமரா கருவிகளைக் கொண்ட நவீன தொழில்நுட்பத்துடனான இந்த வானூர்தி உளவு பார்ப்பதற்கே பயன்படுத்தப்பட்டது. இத்தாக்குதலில் அழிந்த எம்ஐ-24 ரக உலங்குவானூர்தியானது வான் படையினரிடம் இருந்த சிறந்த வானூர்தியாகும். கடற்புலிகளின் மீதான தாக்குதலுக்கு இந்த வானூர்தியே பயன்படுத்தப்பட்டுள்ளது. எம்ஐ-17 ரக உலங்குவானூர்தி படையினரையும் பொருட்களையும் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட ஏனைய வானூர்திகள் வானோடிகளுக்குப் பயிற்சியளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் அநேக சந்தர்ப்பங்களில் தோல்வியை மறைத்து பிழையை சரியாக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகிறது என்பது தெளிவாகிறது. அதற்கு சிறந்த உதாரணம் பீச்கிராப்ட் அழிக்கப்பட்டதை அறிந்தும் அதனை மூடி மறைத்ததாகும். அதனை வெளியிட்டாலும் பிரதமரால் உண்மையைத் தொடர்ந்தும் மறைக்க முடியாது போய்விட்டது. இத்தாக்குதலை நோக்கினால் முகாமைச் சுற்றியிருந்த பாதுகாப்பு போதுமானதாக இன்மையாலேயே விடுதலைப் புலிகள் இலகுவாக முகாமிற்குள் நுழைந்தார்கள் எனத் தெரிகிறது. அத்துடன் அவர்கள் வான் எதிர்ப்புக் கருவிகளைக் கைப்பற்றியமை மற்றும் ஆயுதக்கிடங்கை நோக்கிச் சென்றமையானது அவர்கள் அந்த இடத்தைப்பற்றி தெளிவாக அறிந்து வைத்துள்ளனர் என்பதையே காட்டுகின்றது. இதனால் விடுதலைப் புலிகள் பெரும் திட்டத்துடனேயே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது. அது வெறுமனே நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. குடும்பிமலையில் தோல்வியடைந்த விடுதலைப் புலிகள் தமது தோல்வியை மறைக்க இத்தாக்குதலை நடத்தியதாக அரசாங்கம் கூறுகிறது. எனினும் இதுவரை தெரியவந்திருக்கும் விடயங்களுக்கு அமைய வான் படைத்தளம் பற்றிய தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னரே விடுதலைப் புலிகளின் வசம் கிடைத்துள்ளது. அவர்கள் அந்த தாக்குதலை நடத்தும் முன்னர் வன்னியில் அதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். இத்தாக்குதலின் பின்னர் அனுராதபுரத்தில் கூட்டு கட்டளைத்தளபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பனாகொடை 11 ஆவது படையணித்தலைவரான மேஜர் ஜெனரல் சனத் கருணாரத்னவே அவர். வடக்கு - கிழக்கு, கொழும்பு, வன்னி தவிர இலங்கையின் ஏனைய அனைத்து பகுதிகளும் அவரின் நிர்வாகத்தின் கீழேயே உள்ளது. எனினும் அனைத்தும் முடிந்த பின்னரே இவை அனைத்தும் நிகழ்கின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்

மக்களின் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறது மகிந்த அரசாங்கம்?: ஜே.வி.பி.

[சனிக்கிழமை, 27 ஒக்ரோபர் 2007] மக்களின் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது. பதுளையில் நடைபெற்ற நிகழ்வில் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பேசியதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு திடீரென ஜே.வி.பி. நினைவுக்கு வந்துள்ளது. அதனால் அரசாங்கத்தைப் பாதுகாக்க தற்போது முற்போக்கு சக்திகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அரசாங்கத்தைப் பார்த்தால் யாராலும் அதனையிட்டு மகிழ்ச்சியடைய முடியாது. யாராலும் இதனைக் காக்கவும் முடியாது. இந்த அரசாங்கத்தை அமைக்க பங்களிப்புச் செய்த யாருக்கும் மகிழ்ச்சியில்லை. இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் எமது இந்த அரசாங்கத்தை அமைக்க பங்களிப்புச் செய்த மக்கள் சமூகத்தின் ஏதேனுமொரு பிரச்சினையைத் தீர்த்திருக்க வேண்டும். இந்த அரசாங்கம் எமது நாட்டின் எந்த மக்கள் சமூகத்தின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறது என்று நீங்கள் அனைவரும் சிந்தித்துப் பாருங்கள். இந்த அரசாங்கத்தை அமைக்க உழைக்கும் மக்கள் பெரும் பங்களிப்பினைச் செய்தார்கள். தற்போது அந்த மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா? அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனரா? எந்த நாளும் அந்த மக்கள் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அவர்கள் ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம், வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. சரி வேலை செய்யும் மக்களின் பிரச்சினைகளைத் தான் தீர்க்கவில்லை. வர்த்தகர்களின் பிரச்சினையையாவது தீர்த்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. எமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியின்றியே இருக்கிறார்கள். வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இந்த அரசாங்கத்திடமிருந்து எந்தவித மானியங்களும் இல்லை. கொள்கைகளும் இல்லை என்றார் அவர்.

"உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்".... திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளிடம் தேசியத் தலைவர்

[சனிக்கிழமை, 27 ஒக்ரோபர் 2007]

அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளை அழைத்த தமிழீழத் தேசியத் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று அறிமுகப்படுத்தியதாக தூயவன் அரசறிவியல் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான கலைக்கோன் தெரிவித்துள்ளார்.

21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

தாக்குதல் தொடங்குவதற்கு முதல் நாள் தலைவர் அனைத்துப் பொறுப்பாளர்களுடனுமான தனது வழமையான சந்திப்புக்களை நிறுத்தி அந்தப் போராளிகளைப் பற்றிய நினைவுகளில் முழுமையாக மூழ்கியிருந்தார். அன்று நள்ளிரவில் தளபதிகளை அழைத்திருந்தார். அவர்களிடம் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று கூறினார். தலைவர் அவ்வாறு கூறிய ஒரு சிலமணி நேரத்தில் இளங்கோவிடமிருந்து "நாங்கள் இறுதி நகர்வை ஆரம்பிக்கப் போகின்றோம்" என்ற செய்தி வந்தது.

தலைவர் பெரும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் அந்தப் பெரும் வெற்றிச் செய்திக்காகக் காத்திருந்தார். சென்றிருந்த ஒவ்வொரு போராளிகளிடத்திலும் தலைவர் அதிக நம்பிக்கையுடனும் பற்றுடனும் இருந்தார்.

அந்த அணிக்குத் தளபதியாகச் சென்றவர் இளங்கோ, 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலை அமைப்பில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் பல்வேறுபட்ட சிறப்புப் பயிற்சிகளையும் பெற்றதோடு கைத்துப்பாக்கிப் பயிற்சி ஆசிரியராகவும் அடிப்படைப் பயிற்சி முகாம் பொறுப்பாளராகவும் இருந்தார். இவற்றுக்கு அப்பால் சிறப்புப் புலனாய்வுப் பணிகள், சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு போராளி. 14-க்கும் மேற்பட்ட களங்களைக்கண்ட ஒரு வீரன். இவரின் போரிடும் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்ட களமாக இத்தாவில் சமர்க்களம் அமைந்திருந்தது. அவர் விக்டர் கவச எதிர்புப்படையணியின் அணியொன்றுக்குத் தலைமை தாங்கிச் சென்றிருந்தார். அங்கு எமது அணிகளின் காப்பரண்களுக்குள் எதிரியின் கவசப்படையணி உள்நுழைந்த போது அவரது அணியைச் சேர்ந்த போராளிகள் இரு டாங்கிகளைத் தகர்த்து அழிக்க இளங்கோ தனது கையிலிருந்த ஆர்.பி.ஜி. மூலம் ஒரு பவள் கவச வாகனத்தை நோக்கி மிக வேகமாக ஓடிச்சென்று அதன் மீது ஏறித் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த எதிரியைச் சுட்டுவீழ்த்தி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை எடுத்து அதனைப் பயன்படுத்தித் தாக்குதலை மேற்கொண்டார். இதன் மூலம் எமக்குப் பெரும் நெருக்கடியாகவிருந்த இத்தாவில் களமுனையை முற்றுமுழுதாக எமது பக்கம் திருப்பித்தந்த ஒரு பெரும் வீரன். அதற்குப்பின்னரும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின் குறித்த சில காலம் எமது தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு அணியில் மிக முக்கியமான ஒரு பணியைப் பொறுப்பேற்று மிக நேர்த்தியாகச் செய்து முடித்திருந்தார்.

இளங்கோ தான் கரும்புலியாகச் செயற்படவேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தலைவருக்குத் தொடர்ச்சியாகக் கடிதம் வரைந்து கொண்டே இருந்தார். ஆனாலும் அவரது கடமைகளின் முக்கியத்துவம் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தை வழங்குவதில் சற்றும் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் 10 ஆண்டுகளாக இளங்கோ சுமந்து வந்த அந்த உணர்வைப் புரிந்து கொண்ட தலைவர் 2006 ஆம் ஆண்டு அவருக்குக் கரும்புலிகள் அணியில் இணைவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கினார்.

இளங்கோவின் தலைமையில் புறப்படுகின்ற அணியில் இரண்டாவது பொறுப்பாளராக வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

அவரின் செயற்பாடுகள் தொடர்பான பல விடயங்களை தற்போது வெளியிட முடியாதுள்ளது. திரியாயைப் பிறப்பிடமாகக்கொண்ட வீமன் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்து புதுக்குடியிருப்பில் வசித்து வந்த காலத்தில் விடுதலை புலிப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். மிகச்சிறிய வயதில் அன்று அவர் அமைப்பில் இணைந்ததனால் படையணிகளுக்கு இணைக்கப்படாமல் படைத்துறைப் பள்ளியில் சில காலம் கற்று வந்தார். அதன்பின் குறித்த வயதை எட்டியதும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றார். பின் அவரும் தலைவரின் மெய்பாதுகாப்பு அணிக்கு உள்வாங்கப்பட்டார். அதில் அதியுச்ச நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். அப்பணியில் மிக இரகசியமான பல்வேறுபட்ட கடமைகளை மிக நேர்த்தியாகச் செய்தார். அதேவேளை "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தாயகத்திற்குப் பயணிக்கும் போது அவருடைய பாதுகாப்புக்கான முழுப்பொறுப்பையும் தலைவர் வீமனிடமே ஒப்படைத்திருந்தார்.

ஈழப்பிரியா மிகுந்த ஆளுமை மிக்க ஒரு போராளி. அவர் பயிற்சியின் போது மிக உற்சாகமாகச் செயற்பட்டார். அவர்கள் பெற்ற பயிற்சி என்பது சாதாரணமான பயிற்சி அல்ல. அவர்கள் தாக்குதலுக்குச் செல்லும் போது உதவி அணிகள் செல்லப்போவதில்லை. எனவே தாக்குதலுக்குத் தேவையான முழு வெடிபொருட்களையும் சுமந்து கொண்டு நீண்டதூரம் பயணிக்க வேண்டும். அந்தளவு மிகக்கடினமான பயிற்சியைப் பெற்றவர்தான் ஈழப்பிரியா.
இளம்புலி மிக உற்சாகமான போராளி எல்லோரையும் நகைச்சுவையாக வைத்திருக்கக்கூடிய ஒரு போராளி. அவர் இறுதியாகச் செல்லும் நேரத்தில் தலைவரிடம் எமது தேசியக்கொடியைக் கொண்டு செல்ல அனுமதி கேட்டிருந்தார். ஏனெனில் இத்தாக்குதல் ஒரு இரகசியமான தாக்குதலாக இருக்காது என்பதை உணர்ந்த அவர் முகாமை அழித்து விட்டுத் தொடர்புக் கோபுரத்தில் ஏறி எமது கொடியைப் பறக்கவிட வேண்டும் என்று அவர் அந்த அனுமதியைக் கேட்டிருந்தார். அதற்கு அமைவாக அவர் தேசியக் கொடியினையும் கொண்டு சென்றிருந்தார்.

பஞ்சீலன் மட்டக்களப்பிலிருந்து மிகச் சிரமங்களுக்கு மத்தியில் கால்நடையாக இங்கு வந்து மிகக் கடுமையாகப் பயிற்சிகளைப் பெற்றவர். சமாதான காலத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பிற்குள் எதிரியின் ஊடுருவலைத் தடுப்பதற்காகத் தீவிரமாகச் செயற்பட்ட வீரன். அதற்கான பெரும் அணியொன்றினைப் பொறுப்பெடுத்து செய்து வந்த வீரன்.

இவ்வாறு தான் ஒவ்வொரு வீரர்களும் ஒரு அணியாக நின்று மிகக்கடுமையான பயிற்சிகளைப் பெற்ற பெரும் வீரர்கள். ஒவ்வொரு போராளிகளும் தங்களது உணர்வுகளைத் தலைவரிடம் பல ஆண்டுகளாகத் தெரியப்படுத்தி வந்தனர். தலைவரும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அப்போராளிகளைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தார். அன்று தொடக்கம் அவர்கள் உச்ச இலக்கொன்றைத் தாக்கி அழிப்பதற்கான முறையில் மிகக்கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். அந்த அணிதான் அன்று அனுராதபுரம் வான் படைத்தளத்திற்குள் நுழைவதற்கான இறுதி நகர்வை தொடங்கிக் கொண்டிருந்தது.

அன்று தலைவர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தார். அதிகாலை 3:20 மணிக்கு இளங்கோ அறிவிக்கின்றார். "நான் சண்டையைத் தொடக்கப் போகின்றேன். சண்டை தொடங்கியதும் மிகுதி விடயங்களை அறிவிக்கின்றேன்" என்று கூறிச் சமரை ஆரம்பித்தார்.

அனுராதபுரம் வான் படைத்தளம் என்பது ஒரு சாதாரண வான் படைத்தளம் அல்ல. வடபகுதியில் இருக்கின்ற அனைத்து இராணுவத் தளங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதும் வடபகுதியில் ஒரு இராணுவ நடவடிக்கையைச் செய்வதானால் அதற்கு இதயமாகச் செயற்பட வேண்டிய தளமாகவும் இருந்தது.

அது மட்டுமல்ல, வடபகுதியில் அனைத்து இராணுவச் செயற்பாடுகளுக்குமான ஒரு மையத்தளமாக அனுராதபுரம் வான் படைத்தளம் இருந்தது. இலங்கையில் உள்ள அனைத்து தளங்களிலும் இத்தளம் மிக வித்தியாசமானது. ஏனெனில் ஏனைய தளங்களில் மக்களின் போக்குவரத்திற்கும் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் முற்றுமுழுதாக இராணுவத் தேவைகளுக்காகவே ஒதுக்கப்பட்ட தளம் அனுராதபுரம் தளம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு பொதுமகனும், ஊடகவியலாளரும் கூட உள்நுழைய முடியாதளவுக்கு மிக இறுக்கமான பாதுகாப்பைப் பேணிவந்த தளம் தான் அத்தளம்.

3 கிலோ மீற்றருக்கு மேலான நீளமும் 2 கிலோ மீற்றருக்கு மேலான அகலமும் கொண்ட ஒரு பெரும் தளம். அதற்குள் தான் இந்த வீரர்கள் உள்நுழைந்தார்கள். 3:20 மணிக்குத் தாக்குதல் தொடங்குகின்றது. மிக வேகமாகத் தாக்குதலை நடத்தி தமக்கு வழங்கப்பட்ட இலக்குகளை அழித்து அங்கிருந்த வானூர்திகளைத் தகர்த்து முடித்தார்கள்.

சிங்களம், அனுராதபுர வான் படைத்தளத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது. அத்தளம் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்ருக்கின்றது. மிகையொலி வானூர்திகளை நிறுத்துவதற்காகவும் எதிர்காலத்தில் பல தாக்குதல் வானூர்திகளையும் நிறுத்தி வைக்கப் பாதுகாப்பான தளம் எனவும் கருதி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதேவேளை முற்று முழுதாக சிங்களக் கிராமங்களால் சூழப்பட்ட பகுதி. அதற்குள் ஊடுருவுவது என்பது மிகக் கடினமான விடயம். சிங்களம் பெரும் மமதையுடன் இருந்த அக்கோட்டைக்குள் நுழைந்த விடுதலைப் புலிகள் 20 நிமிடத் தாக்குதலுக்குள் அத்தளத்தை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள்.

அந்த நிலையில் இளங்கோ மீண்டும் தொடர்பு கொண்டு கதைத்தார். நான் காலில் காயமடைந்து விட்டேன் தொடை எலும்பு முறிந்துவிட்டது. எனவே இந்த இடத்தில் அமர்ந்து கொண்டே கட்டளைகளை வழங்குகின்றேன் எனக்கூறி அவர் கட்டளைகளை வழங்கினார். இதேவேளை வீமனின் கட்டளையும் கட்டளைப்பீடத்துடன் தொடர்புபட்டிருந்தது. வீமன் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். எம்ஐ-24 ரக உலங்குவானூர்தியையும், எம்ஐ-17 ரக உலங்குவானூர்தியையும் அழித்துவிட்டு கட்டளைப்பீடத்திற்கு அறிவித்தார். எனக்கு கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் நான் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றேன் என்றார்.

பல நூற்றுக்கணக்கான படையினரால் பாதுகாக்கப்பட்டிருந்த அம் முகாம் எதிரியால் கிட்ட நெருங்க முடியாத அளவுக்கு அதி உக்கிரமாகவும், வேகமாகவும் அந்த வீரர்கள் தாக்குதலை நடத்தி வந்தார்கள். தாக்குலில் உக்கிரமாக ஈழப்பிரியா செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் எதிரியின் பிரதானமான வானூர்திகளுக்கு அப்பால் வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்தன. அதனை எடுத்து இயக்கித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார். தளத்திற்குள் நூறு மீற்றர் நீளமான ஒரு கட்டடத்திற்ள் பல வானூர்திகள் நின்றிருந்தன. அறிவுமலரும் இன்னுமொரு போராளியும் அதற்குள் நுழைந்து தாக்குதலை நடத்திக் கொண்டு அறிவித்தார்கள். இங்கு நிறைய வானூர்திகள் நிற்கின்றன. பல வானூர்திகள் எரிந்து கொண்டிருக்கின்றன. உள்ளே சென்று பார்க்க முடியாமல் உள்ளது. ஆனாலும் எல்லாவற்றையும் அடித்து அழித்துக் கொண்டிருக்கின்றோம் என்று எரிந்து கொண்டிருக்கும் வானூர்திகளின் இலக்கத்தைக் கூடக் கூறிக் கொண்டு வானூர்திகள் எரியும் போது அவர்கள் மகிழ்ச்சியில் சிரித்து ஆரவாரித்தவாறு தாக்குதலில் ஈடுபட்டார்கள். தாக்குதல் தொடங்கி சில மணிநேரத்தில் தளத்தைக் கைப்பற்றுவதற்காகத் தளத்தின் வாசலில் படையினர் குவிக்கப்படுகின்றனர். அப்போது பல போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். பலர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ஒருவர் இடுப்பிற்கு கீழே இயங்க முடியாத நிலையிலும் தனது ஆயுதத்தால் வந்த படையினர் மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எமது வானூர்திகள், படையினர் மீது தாக்குதல் நடத்தின. அதனால் படையினர் சிதறி ஓட அதனையும் அவர் அங்கிருந்து கொண்டு அறிவித்துக்கொண்டிருந்தார்.

பின்னர், தீயணைப்புக் கருவிகளுடன் இராணுவத்தினர் வர அவர்கள் மீதும் அப்போராளிகள் தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் அங்கிருந்த எல்லா வானூர்திகளும் அழித்து முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் வேவு வானூர்திகள் மட்டும் அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். பின் மறைவான இடமொன்றில் அவை நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டு விட்டார்கள். அப்போது வீமனுக்கு இளங்கோ கட்டளையிட வீமன் படுகாயமடைந்த நிலையிலும் தனது டொங்கானால் அவற்றைத் தாக்கினார். தாக்கிவிட்டு அவை வெடித்துக் சிதறுகின்ற ஒலியை அனுப்பிவிட்டு மகிழ்ச்சியில் சிரித்தார். அவ்வாறு அத்தளத்தில் ஒரு பொருளையும் மிஞ்சவிடாது தளத்தையே துவம்சம் செய்துவிட்டுத்தான் அந்த வீரர்கள் வீரச்சாவடைந்தார்கள்.

இன்று நாங்கள் பெரிய வெற்றியொன்றின் மிதப்பில் நிற்கின்றோம். மாபெரும் மனக்கோட்டை கட்டிவந்த சிங்களம் இந்த 21 வீரர்களின் வீரத்திலும் அர்ப்பணிப்பிலும் அனைத்தையும் போட்டு உடைத்துள்ளது. இருந்த போதும் எங்களுக்கு நிமிர்வைத் தந்த வீரர்களின் நினைவுகள் எம் ஒவ்வொருவரது இதயத்தையும் பாறாங்கல்லாக அழுத்தத்தான் செய்கிறது. அந்த வீரர்களைப் பொறுத்தவரை அவர்கள் 21 பேரும் எம்மிடம் ஒன்றைத்தான் எதிர்பார்த்தார்கள். தலைவர் கவனம், அவரது கரத்தைப் பலப்படுத்துங்கள். அதன்மூலம் எமது மக்களை அவலத்தில் இருந்து மீட்டு எடுங்கள். நீங்கள் அனைவரும் ஒன்றாக எழுந்தால் அது முடியும் என்றார் அவர்.

நன்றி:புதினம்

புதிய இராணுவத் தளபாடங்கள் கொள்வனவு செய்ய இந்தியா உதவி?: பசில் மறைமுக தகவல்

[சனிக்கிழமை, 27 ஒக்ரோபர் 2007]

அனுராதபுரம் வான் படைத்தளத்தில் புலிகளால் சிறிலங்காவின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய வானூர்திகள், உலங்குவானூர்திகள் உள்ளிட்ட தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்கு பசில் ராஜபக்ச அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது:

அனுராதபுரம் வான் படைத்தளத்தில் திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அனைத்து வானூர்திகளும் உலங்குவானூர்திகளும் அகற்றப்பட்டு "நட்பு நாடுகளின்" உதவியுடன் விரைவில் சீரமைக்கப்படும்.

இது விடயத்தில் உதவுவதற்காக பல நாடுகள் எம்மைத் தொடர்பு கொண்டுள்ளன. "வெளிப்படையான சில காரணங்களால்" அந்த நாடுகளின் பெயர்களை நாம் வெளியிட இயலாது.

அரசாங்கத்தின் அனைத்து அலுவல்களையும் விட விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விடுதலைப் புலிகள் தங்களது இலக்கை அடைவதற்காக உணர்வுபூர்வமான இடங்களில் மேலதிக தாக்குதல்களை நடத்தக்கூடும். விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடிக்கும் வரை இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க முடியாது.

பொதுமக்கள் இதனை உணர்ந்து அனைத்து நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அனுராதபுரம் தாக்குதலுக்கு பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் உதவியிருக்கிறார்களா என்பது குறித்த உள்ளக விசாரணைகள் முன்னேற்றமடைந்துள்ளன. காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் பசில் ராஜபக்ச.

சிறிலங்காவுக்கு அனைத்துலக நாடுகள் பலவும் வெளிப்படையாக உதவி வருகின்றன. ஆனால் 7 கோடித் தமிழர்கள் வாழும் இந்தியாவின் தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளால் இந்திய அரசாங்கத்தால் வெளிப்படையாக சிறிலங்காவுக்கு இராணுவ உதவி செய்யாமல் மறைமுகமாக செய்து வருகிறது.

இந்நிலையில் பசில் ராஜபக்சவும், "வெளிப்படையான சில காரணங்களால்" உதவ முன்வந்துள்ள நாடுகளின் விவரங்களைத் தர முடியாது என்று கூறியுள்ளதானது "இந்தியாவை"த்தான் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்கு இரகசிய ஆயுத உதவியை இந்தியா செய்து வருவதாக அண்மையில் இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான "ரைம்ஸ் ஓஃப் இந்தியா" அம்பலப்படுத்தியமையையும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனிடையே கொழும்பில் கடந்த புதன்கிழமை கூடிய சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபையானது சிறிலங்கா வான் படைக்கான புதிய போர் வானூர்திகளைக் கொள்வனவு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வான் படைத்தளபதி றொசான் குணதிலக்க, உயர் இராணுவ அதிகாரி டொனால்ட் பெரேரா, காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் ஏற்படுத்தப்பட்ட இழப்புக்கள் குறித்த விரிவான அறிக்கையை வான் படைத்தளபதி அக்கூட்டத்தில் தாக்கல் செய்தார்.

கண்காணிப்பு வானூர்திகளின அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வான் படைத்தளங்களில் மேலதிக பாதுகாப்புக்கள் தொடர்பாகவும் அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்"

[சனிக்கிழமை, 27 ஒக்ரோபர் 2007] அனுராதபுரம் வான் படைத்தளத்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தாக்கி அழித்தனர் என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: கிழக்கு மாகாணத்தை விடுவித்து விட்டோம், விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழித்து விட்டோம், விடுதலைப் புலிகளை வன்னிக்குள் முடக்கி விட்டோம், வடக்கு - கிழக்கிற்கு வெளியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நிறுத்தி விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களை 21 கரும்புலிகளும், இரட்டை இயந்திரங்களை கொண்ட இரு வானூர்திகளும் ஒரு இரவினில் மாற்றி விட்டன. மிகவும் பாதுகாப்பான அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலை மிகவும் அதிர்ச்சிகரமான தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர். கொமோண்டோத் தாக்குதல் பாணியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. வான் படைத்தளத்தை 7 மணிநேரம் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன், தளத்தில் இருந்த 80 விழுக்காடு வான் கலங்களையும் அழித்துள்ளனர். இதில் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான பீச்கிராஃப் கண்காணிப்பு வானூர்தியும் அடங்கும். வட களமுனையில் அனுராதபுர தளமே பிரதான பங்கை ஆற்றி வந்தது. அனுராதபுரம் நகரில் இருந்து 4 கி.மீ தொலைவில் நுவரேவேவா குளத்திற்கு அருகில் வான்தளம் அமைந்துள்ளது. வட போர்முனையின் வழங்கல்களில் இத்தளம் பிரதான பங்கை வகித்து வருகின்றது. சிறிலங்காவில் உள்ள மிகவும் பலப்படுத்தப்பட்ட தளங்களில் இதுவும் ஒன்று. சிறிலங்கா வான் படையின் பிரதான பயிற்சி கல்லூரி அங்கு அமைந்துள்ளது. 9 ஆவது தாக்குதல் உலங்குவானூர்தி பிரிவு (ஸ்குவாட்றன்), 6 ஆவது உலங்குவானூர்தி பிரிவு, 1 ஆவது பயிற்சி வானூர்திப் பிரிவு, 7 ஆவது உலங்குவானூர்திப் பிரிவு, 11 ஆவது ஆளில்லாத உளவு வானூர்திப்பிரிவு என்பவற்றின் தளமும் அதுவாகும். ஆளில்லாத உளவு வானூர்தி, பீச்கிராஃப் எனப்படும் கண்காணிப்பு வானூர்தி போன்றவற்றில் உள்ள நவீன புகைப்பட மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் உதவியுடன் புலனாய்வுத் தகவல்கள் சேகரிக்கப்படுவதனால் இத்தளம் வான் படை மற்றும் கடற்படையினருக்கான புலனாய்வுத் தகவல்களை வழங்கும் மையமாக செயற்பட்டு வந்தது. புதிய உத்திகளை உடைய பயிற்சிகளை வழங்கும் பொருட்டு இத்தளத்திற்கு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் வந்து செல்வது வழக்கம். "கஜபா சுப்பர் குறஸ் - 2007" எனப்படும் விழா தாக்குதலுக்கு முன்னைய இரவு நடைபெற்றது. சாலியபுர விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த விழாவில் படைத்துறையில் உள்ள பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். சாலியபுர இராணுவ முகாம் அனுராதபுரம் வான் படைத்தளத்திற்கு அண்மையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தளத்தில் இருந்த பெரும்பாலான படையினர் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். ஏனையோர் அதனை கேட்டுக்கொண்டிருந்தனர். இக் கவனக்குறைவுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டு அம்மானினால் அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் முகாமிற்கு அருகில் உள்ள தென்னந்தோப்பில் தங்கியிருந்தனர். அவர்கள் கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் உத்தரவுக்காக காத்திருந்தனர். ஆனால் முகாமின் செயற்பாடுகள் அமைதியாகவே இருந்தன. இந்த அணியினர் ரி-56 ரக துப்பாக்கிகள், கைக்குண்டுகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், 7 செய்மதி தொலைபேசிகள், கத்திகள் என்பவற்றை வைத்திருந்தனர். இந்த அணியில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததுடன், 3 பெண் புலிகளும் இருந்தனர். விடுதலைப் புலிகளின் அணி அனுராதபுரம் - நெலுங்குளம் வீதியைக் கடந்த பின்னர் தளத்தின் வடக்குப் பகுதியினூடாக உள்நுழைந்துள்ளது. அதிகாலை 2:30 மணியளவில் விடுதலைப் புலிகள் தளத்திற்கு வெளியில் இருந்த முதலாவது முட்கம்பி வேலியை வெட்டி தளத்தின் வெளிப்பகுதிக்குள் நுழைந்தனர். இதற்கு அடுத்த நிலையில் சில அடி தூரத்தில் மற்றுமொரு கம்பி வேலி சமாந்தரமாக போடப்பட்டிருந்தது. இந்த இரு வேலிகளுக்கும் இடையில் மின்சார வேலி ஒன்று சிறிதாக அமைக்கப்பட்டிருந்த போதும் அதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே விடுதலைப் புலிகள் இலகுவாக உள்நுளைய அது அனுகூலமாக இருந்தது. தற்போதைய முக்கிய கேள்விகள் என்ன எனில், இந்த பாதுகாப்பு குறைபாடுகள் எவ்வாறு ஏற்பட்டன? யார் இதற்கு பொறுப்பு? இது சில நோக்கங்களோடு செய்யப்பட்டதா? என்பவை தான். விடுதலைப் புலிகளின் அணி உள்நுழைந்ததும், வானூர்தி ஓடுபாதைக்கும் வேலிக்கும் இடையில் புதைக்கப்பட்டிருந்த ஒலிகளை எழுப்பும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். அருகில் இருந்த பதுங்குகுழிகளுக்கு குறுக்காக இக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆனால் பாதையின் இருபுறமும் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் மிகவும் நேர்த்தியாக சத்த வெடிகளை அகற்றியதுடன், முதலாவது பதுங்குகுழிகளின் பின்புறம் உள்ள அணைகளை அடைந்திருந்தனர். அந்தப் பதுங்குகுழிகளில் வான்படையினர் பணியில் இருந்தனர். பதுங்குகுழிகளை அடைந்ததும் அவர்களில் ஒரு பிரிவினர் பதுங்குகுழியின் ஒரு முனையை அடைந்து வானூர்தி ஓடுபாதையை நோக்கி சத்தமின்றி ஊர்ந்து செல்ல தொடங்கினர். இரண்டாவது குழுவினர் பதுங்குகுழியின் மற்றய முனையை அடைந்து இரு பதுங்குகுழிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியினூடாக நகரத் தொடங்கினர். எனினும் 3 விடுதலைப் புலிகள் பதுங்குகுழியின் பின்புறம் நிலையெடுத்து இருந்தனர். நகர்ந்து செல்லும் விடுதலைப் புலிகளை வான் படையினர் கண்டு தாக்கினால் வான் படையினரைத் தாக்குவதே அவர்களின் திட்டம். இதில் ஆச்சரியம் என்னவெனில் பதுங்குகுழியில் இருந்த வான் படையினர் எவரும் நகர்ந்து சென்ற விடுதலைப் புலிகளை அவதானிக்கவில்லை. தற்போதைய விசாரணைகளில் அவர்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது. முதலாவது அணியில் 14 விடுதலைப் புலிகள் இருந்தனர். அவர்களின் பணி உலங்குவானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்ததும் பதுங்குகுழிகளை அழிப்பதுவே. இரண்டாவது அணி வானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்து அவற்றை அழிப்பதற்கு காத்திருந்தது. முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி "வீ பகுதி" யை நோக்கி நகரத்தொடங்கியது. அங்கு தான் எம்ஐ-24, எம்ஐ-17 உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன. இரு அணிகளும் ஓடுபாதையை அடைந்ததும் பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்து 3 விடுதலைப் புலிகளும் பதுங்குகுழியை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினர். பதுங்குகுழிக்குள் இருந்த படையினரை கொன்ற பின்னர் அவர்களும் தமது அணிகளுடன் இணைந்து கொண்டனர். அப்போது நேரம் அதிகாலை 3:20 மணி. துப்பாக்கிச் சத்தங்களைத் தொடர்ந்து தளம் தாக்குதலுக்கு உட்படுவதை அறிந்த படையினர் முகாமை முழுமையான உசார் நிலைக்கு கொண்டுவந்தனர். தாக்குதல் தொடங்கியதும் வானூர்தி ஓடுபாதையில் இருந்த முதல் நிலை பதுங்குகுழிகளை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து விட்டனர். எனவே வானூர்தி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அண்மையாக இருந்து வானூர்தி மற்றும் உலங்குவானூர்திகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை. கோபுரத்திற்கு அருகில் 12.7 மி.மீ வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலை இருந்தது. சில நிமிடம் நடைபெற்ற கடும் தாக்குதலுக்கு பின்னர் அதனைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் தளத்தின் தொலைத்தொடர்பு, ராடார், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதற்கு முன்னர் அவர்கள் வான் பாதுகாப்பு பொறுப்பதிகாரியான பிளைட் லெப். றுவான் விஜரட்ன உள்ளிட்ட பல வான் படையினரை சுட்டுக்கொன்றனர். விஜயரட்ன கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அருகில் வீழ்ந்து கிடந்தார். அவர் தனது துப்பாக்கி நிலையை அடைய முற்பட்ட போது வயிற்றில் சுடப்பட்டார். பின்னர் அதிக இரத்தப் போக்கினால் அவர் மரணமடைந்தார். இதனிடையே வவுனியா மற்றும் கட்டுநாயக்க வான் படைத்தளங்களில் உள்ள ராடாரில் வவுனியாவை நோக்கி இரு பொருட்கள் செல்வது அவதானிக்கப்பட்டது. அது விடுதலைப் புலிகளின் வானூர்திகள்தான் என உறுதிப்படுத்தப்பட்டதும் வவுனியா, அனுராதபுரம், கொழும்பு பகுதிகளின் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதிகாலை 4:10 மணியளவில் அந்த இரு வானூர்திகளும் வவுனியாவுக்கு மேலாக அனுராதபுரம் நோக்கிச் சென்றன. வவுனியாவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் இயங்கிய போதும் வானூர்தி அனுராதபுரம் தளத்தை அடைந்து 3 குண்டுகளை வீசின. அவற்றில் ஒரு குண்டு உலங்குவானூர்திகளின் தரிப்பிடத்திற்கு அருகிலும், இரண்டாவது குண்டு சாலியபுர இராணுவ முகாமிற்கு அருகிலும், மற்றைய குண்டு விவசாயப் பண்ணையிலும் வீழ்ந்தன. பண்ணையில் வீழ்ந்த குண்டினால் அங்கு நின்ற 12 எருமை மாடுகள் உயிரிழந்தன. கொழும்பில் வான் படைத்தளபதி றொசான் குணதிலக்கவும், நடவடிக்கை பணியகப் பணிப்பாளர் ஏயர் கொமோடோர் கர்சா அபயவிக்கிரமாவும் வான் படைத் தலைமையகத்தின் நடவடிக்கை அறையில் இருந்தனர். விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டதும் அவற்றைத் தாக்கும் படி வவுனியா வான் படைத்தளத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. ஸ்குவாட்றன் லீடர் அமிலா மொகொரி, பைலட் அதிகாரி ஏ.பி.எம் டி சில்வா ஆகியோர் இரு துப்பாக்கிதாரிகளுடன் பெல்-212 ரக உலங்குவானூர்தியில் புறப்பட்டனர். விடுதலைப் புலிகளின் வானூர்திகளைத் தாக்குவதே அவர்களின் பிரதான நோக்கம். பெல்-212 ரக உலங்குவானூர்தி அனுராதபுரம் நோக்கிச் சென்ற போது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அனுராதபுரம் வான் பிதேசத்தில் பிரவேசித்து விட்டன. அப்போது வவுனியா மற்றும் அனுராதபுரம் படைத்தளங்களின் படையினருக்கும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை சுட்டு வீழ்த்துமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால் அதிகாலை 4:30 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள டொரமடலாவப் பகுதியில் பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது. பெல்-212 ரக உலங்குவானூர்தி தரையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தான் சிக்கியுள்ளதாக பின்னர் அறியப்பட்டுள்ளது. படையினர் அதனை விடுதலைப் புலிகளின் வானூர்தி என தவறாக எண்ணியுள்ளனர். உலங்குவானூர்தி தாக்கப்பட்டதும் வவுனியா வான் படைத்தளத்திற்கு அது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் இரண்டும் வவுனியாவினூடாக சென்று ராடார் திரையில் இருந்து மறைந்து விட்டன. தரையில் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை கைப்பற்றிய விடுதலைப் புலிகள் வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கி தாக்குதலை நடத்தினர். அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் 6 பேர் இரு பதுங்குகுழிகளை கைப்பற்றி படையினர் மீது தாக்குதல்களை நடத்த, ஏனையவர்கள் வானூர்திகளை ஒவ்வொன்றாக அழித்தனர். இதன் போது தளத்தின் இரண்டாவது பெரிய தீயணைப்பு நிலையத்தையும் அவர்கள் தாக்கியழித்தனர். கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அனுராதபுரம் தளத்தின் தளபதி குறூப் கப்டன் பிரியந்த குணசிங்க வவுனியாவில் நிலைகொண்டிருந்த சிறப்புப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் உபால் எதிரிசிங்காவை தொடர்புகொண்டு உடனடியாக சிறப்புப் படையினரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார். இதனிடையே அருகில் இருந்த கஜபா படைப்பிரிவின் படையினரும் உதவிக்கு விரைந்திருந்தனர். அப்போது சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். எனினும் சமர் தொடர்ந்தது. பீச்கிராஃப், சில உலங்குவானூர்திகள் ஆகியவற்றை அழிப்பதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டுவிட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. காலை 7:00 மணியளவில் மேஜர் சந்திமால் பீரீஸ், கப்டன் கோசலா முனசிங்க தலமையில் விரைந்த சிறப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் 11:00 மணியளவில் மோதல்கள் முடிவுக்கு வந்தன. 21 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் 6 பேர் குண்டை வெடிக்க வைத்திருந்தனர். செய்மதி தொலைபேசி ஊடாக முற்பல் 10:30 மணிவரையிலும் விடுதலைப் புலிகள் கிளிநொச்சி தலைமையுடன் தொடர்புகளை பேணி வந்திருந்தனர். அவர்கள் இரண்டு தமிழீழக் கொடிகளையும் கொண்டு வந்திருந்தனர். இத்தாக்குதலில் 4 அதிகாரிகள் உட்பட 13 வான் படையினரும், இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார். எம்ஐ-24 - 02 எம்ஐ-17 - 01 கே-8 - 01 பிரி-6 - 01 செஸ்னா-150 - 01 பீச்கிராஃப் - 01 பெல்-212 - 01 ஆளில்லாத வானூர்திகள் - 02 என 8 வான்கலங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன. பிரி-6 - 03 கே-8 - 01 செஸ்னா வானூர்திகள் - 01 உள்ளிட்ட மேலும் 10 வானூர்திகள் சேதமடைந்தன. தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில் விடுதலைப் புலிகள் அதற்கு உரிமை கோரியிருந்தனர். அவர்கள் தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் பெயர்களையும் பதவிகளையும் வெளியிட்டிருந்தனர். தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீதான வான் தாக்குதல்கள் மற்றும் விநியோக கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாகவே அவர்கள் இத்தாக்குதலை நடத்தியிருந்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபையை மகிந்த கூட்டியிருந்தார். அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். எனினும் இராணுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் நாட்டில் இருக்கவில்லை. வான் படைத்தளபதியையும் அவரது படையினரையும் கடுமையாக சாடிய மகிந்த, கோத்தபாயாவை உடனடியாக அனுராதபுரம் செல்லுமாறும் பணித்திருந்தார். அன்று மாலை காவல்துறை மா அதிபர், வான் படைத்தளபதி ஆகியோருடன் அனுராதபுரம் சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச தளத்தின் அழிவுகளை பார்வையிட்டதுடன் தளத்தின் பொறுப்பையும் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் இது தொடர்பாக இராணுவத் தளபதிக்கு தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. அனுராதபுரம் பகுதிக்கான கட்டளைத் தளபதியாக பனாங்கொடவில் அமைந்துள்ள 11 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ன மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டார். தளமானது அவசரமான நிலைமைகளை எதிர்கொள்ளும் தன்மையில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. முகாமை பாதுகாப்பதற்கான எந்தப் பயிற்சிகளும், ஒத்திகைகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை. தாக்குதல் நடைபெற்ற சமயம் காவலில் இருந்த வான் படையினருக்கு அவசர நிலைமைகளை எதிர்கொள்ளும் பயிற்சிகளும் வழங்கப்படிருக்கவில்லை. முகாம் வெளிப்பகுதியில் வேலிகளை கொண்டிருக்கவில்லை என்பதும் முக்கியமானது. அங்கு பொதுமக்களின் நடமாட்டம் சுதந்திரமாக இருந்தது. தளத்தின் புலனாய்வு பிரிவும் தரம் வாய்ந்தது அல்ல. இராணுவத்தின் அண்மைய தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் பலத்தை சிதைத்து விடவில்லை. இத்தாக்குதல் தமிழ் மக்களினதும் விடுதலைப் புலிகளினதும் உளவுரனை அதிகரிக்கும் என்பது உண்மை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, October 26, 2007

புலிகள் தாக்குதல்களுக்கு இராணுவம், காவல்துறை, பொதுமக்கள்தான் காரணம்: மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு

[வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு சிறிலங்கா இராணுவம், சிறிலங்கா காவல்துறை, சிறிலங்கா நாட்டு பொதுமக்கள்தான் காரணம் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
மன்னம்பிட்டிய பாலம் திறப்பு விழா நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது:

விடுதலைப் புலிகளின் தோல்வியைப் பொறுத்து மக்களின் விடுதலை உள்ளது. நாம் அதனைச் செய்வோம். எவராலும் அதனைத் தடுத்துவிட முடியாது. இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதில் நாம் ஈடுபாட்டுடன் உள்ளோம்.

சில புலிகளாலேயே அனுராதபுரம் வான் தளத்துக்கு சேதம் ஏற்படுத்த முடிகிறது.

இராணுவம் மற்றும் காவல்துறையினர் இதுவிடயத்தில் போதுமான எச்சரிக்கையாக இருக்கவில்லை.

அவர்களுக்கு மக்களின் ஆதரவு தேவை. பொதுமக்கள் தங்களது கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.

சிலர் இதனை விரும்பவில்லை. அவர்கள் (புலிகள்) வந்து தாக்குதல் நடத்தினால் இந்த அரசாங்கம் கவிழும் என்று சிலர் நினைக்கின்றனர். அது தவறானது.

பொதுமக்கள் தங்களது கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.

அரசியலை மறந்துவிடுங்கள். நாட்டை நினையுங்கள். தாக்குதல் நடந்த நாளில் சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர். சிலர் மகிழ்ச்சியாகப் பேசினர். சிலர் அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். மக்களுக்கு எதிரான இந்தத் தாக்குதல்களை நாம் மேற்கொள்ள மாட்டோம்.

நாங்கள் சிலாவத்துறையை விடுவித்தோம். வன்னியில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். நாம் தாக்குதல் நடத்தினால் அவர்களும் தாக்குதல் நடத்துவார்கள். நீண்டகால பொறுமைக்குப் பின்னர்தான் நாம் தாக்குதல் நடத்தச் சென்றோம். பேச்சுக்களின் மூலம் தீர்வு காணப்படாத நிலையில்தான் தாக்குதல் நடத்தினோம். அவர்கள் அனைத்துப் பேச்சுக்களையும் சீர்குலைத்தனர்.

திஸ்ஸமாகாரமவில் புலிகள் தாக்கியமை குறித்து வானொலி ஒன்று செய்தி ஒலிபரப்புகையில் இறந்த படையினர் எண்ணிக்கை 7,8,10 என்று 20 வரைக்கும் கூறினார்கள். சில நேரங்களில் ஊடகங்கள் பொறுப்புணர்வின்றி செயற்படுகின்றனர். அவர்கள் இந்த நாட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை. சிலர் தங்களது அரசியல் செயற்திட்டங்களுக்காக ஊடகங்களில் உள்ள உறவினர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆகையால் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

நாங்கள் இன்னமும் பொறுமையாக இருக்கிறோம் என்பது தெளிவான ஒன்று. இந்தத் தாக்குதல்கள் எல்லாம் பிரச்சினை இல்லை. நாங்கள் அச்சப்படவில்லை. நாங்கள் பீதியடையவில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் பொறுமை உண்டு. அந்த எல்லையைக் கடக்கக் கூடாது. பொய்ப் பரப்புரைகள் மேற்கொள்வதை நாம் ஊக்கப்படுத்த முடியாது. அதனை அனுமதிக்கவும் முடியாது. மக்களிடம் தவறான தகவல்களை கூறுவோர் முன்ன சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஒரு சிலர் ஊடக சுதந்திரம் இல்லை என்கின்றனர். ஆனால் என்ன நடக்கிறது? அரசாங்க விவகாரங்கள் தொடர்பில் இப்படியான செயற்பாடுகளை நாம் அனுமதிக்க முடியாது. தயவு செய்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். இந்தத் தாய்நாட்டைப் பற்றி நினையுங்கள் என்றார் மகிந்த ராஜபக்ச

நன்றி:புதினம்

அம்பாந்தோட்டையில் புலிகள் அதிரடித் தாக்குதல்: 6 கடற்படையினர் பலி- 12 பேர் படுகாயம்

[வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007]

சிறிலங்காவின் மற்றொரு கோட்டையான அம்பாந்தோட்டையின் திஸ்ஸமகாராமவில் சிறிலங்கா கடற்படைப் பேரூந்து மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 6 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எமது "புதினம்" நிருபரிடம் இராசையா இளந்திரையன் கூறியதாவது:

மகிந்த ராஜபக்சவின் சொந்தத் தொகுதியான அம்பாந்தோட்டையின் முதன்மை நகரமான திஸ்ஸமகாராமவில் 25 சிறிலங்கா கடற்படையினர் பயணித்த பேரூந்து மீது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினர் தாக்குதல் நடத்தினர்.

கடற்படையின் பேரூந்துக்கு மிக அண்மையாக நெருங்கிச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் கடற்படைத் தரப்பில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடற்படையினரின் பேருந்தும் கடும் சேதங்களுக்குள்ளாகியுள்ளது என்றார் இளந்திரையன்.

திஸ்ஸமகாராம சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் மாவட்டமும் ஜே.வி.பி.யினது கோட்டையும் ஆகும்.

ஏற்கனவே அம்பாந்தோட்டையின் தலமன்கஸ்கடவில் சிறிலங்கா இராணுவ முகாம், தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டு தொடர்ச்சியாக அங்கு படைத்தரப்பு மீது கண்ணிவெடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இன்று அதே அம்பாந்தோட்டையின் முதன்மை மையத்துக்குள் நகர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று சிறிலங்கா படைத் தரப்புக்கு மற்றொரு பலமான அடியைக் கொடுத்துள்ளனர்.

அம்பாறையிலிருந்து 118 கிலோ மீற்றர் தொலைவு தெற்கிலும், கொழும்பிலிருந்து 174 கிலோ கிலோ மீற்றர் தென்கிழக்கிலும் திஸ்ஸமகாராம அமைந்துள்ளது.

நன்றி:புதினம்

Wednesday, October 24, 2007

20 கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை புதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அறிவிப்பு

[புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007]

அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கரும்புலிகளில் 20 மாவீரர்களின் வித்துடல்களை புதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.
கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை புதைத்ததுடன் மட்டுமின்றி அதனை நியாயப்படுத்தும் வகையில் சிறிலங்கா இராணுவ இணையதளத்தில் சடலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றின் உத்தரவின் பேரிலே தாங்கள் புதைத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்புலி மாவீரர்களின் வித்துடல்கள் சிதைந்த நிலையில் இருந்தமையால்தான் தாங்கள் புதைத்ததாகவும் சிறிலங்கா இராணுவம் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக சிதிலமடைந்த வித்துடல்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்திருந்ததாகவும் அதே இணையதளத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்புலி மாவீரர்களினது வித்துடல்களை நிர்வாணப்படுத்தி அனுராதபுரம் தெருக்களில் சிங்களவர்களின் பார்வைக்காக கிடத்திய வன்கொடூரச் செயல் குறித்து தமீழிழ விடுதலைப் புலிகள் இன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு முறைப்பாடு செய்திருந்த நிலையில் வித்துடல்களை புதைத்து விட்டதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

18 வானூர்திகள் அழிப்பு- ரூ 6.6 பில்லியன் இழப்பு: ஐ.தே.க.வின் லக்ஸ்மன் செனிவிரட்ன

[புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007]

அனுராதபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா வான் படையின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ 6.6 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன விவரித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை அவர் கூறியதாவது:

புலிகளின் தாக்குதலினால் வான் படையின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ 6.6 பில்லியன் அளவுக்கு சிறிலங்காவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

பீச்கிராப்ட் வானூர்தி மற்றும் தளபாடங்கள் மட்டுமே 28 மில்லியன் டொலர் (ரூ 119.3 மில்லியன்). இத்தகைய ரக வாமானங்கள் 2 சிறிலங்காவிடம் இருந்தன. இப்போது ஒன்று அழிக்கப்பட்டுள்ளது.

பிரி-6 பயிற்சி வானூர்திகளில் 3 அழிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வானூர்தியின் விலையும் 350,000 டொலராகும். மொத்தம் 1,050,000 டொலராகும். சிறிலங்காவின் மதிப்பில் மொத்தம் ரூ 11,97,00,000.

கே-8 ஜெட் பயிற்சி வானூர்தி ஒன்று அழிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 3,500,000 டொலராகும். சிறிலங்காவின் மதிப்பில் ரூ 39,90,00,000

மிக்-24 தாக்குதல் உலங்குவானூர்திகளில் 2 அழிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் விலையும் தலா 5,000,000 டொலராகும். மொத்தம் 10,000,000 டொலராகும். சிறிலங்காவின் மதிப்பில் ரூ 114,00,00,000.

எம்ஐ-17 துருப்புக்காவி உலங்குவானூர்தி 1 அழிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 5,000,000 டொலராகும். சிறிலங்காவின் மதிப்பில் ரூ 62,70,00,000.

பீச்கிராப்ட் வானூர்தி 1 அழிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 13,000,000 டொலராகும். சிறிலங்காவின் மதிப்பில் ரூ 148,20,00,000. இந்த வானூர்தியில் பொருத்தப்பட்ட வெப்ப உணர்திறனுள்ள ஒளிப்பட சாதனம் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 15,000,000 டொலராகும். சிறிலங்காவின் மதிப்பில் ரூ 171,00,00,000.

வேவு வானூர்திகள் 3 அழிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியின் விலையும் 1,000,000 டொலராகும். அதில் பொருத்தப்பட நிழற்படக் கருவி ஒவ்வொன்றின் மதிப்பும் 500,000 டொலராகும். மொத்த மதிப்பு 4,500,000 டொலராகும். சிறிலங்காவின் மதிப்பில் ரூ 171,00,00,000.

செஸ்னா வானூர்திகள் 6 அழிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வானூர்தியின் விலையும் 1,50,000 டொலராகும். மொத்த மதிப்பு 900,000 டொலராகும். சிறிலங்காவின் மதிப்பில் ரூ 10,26,00,000. மேலும் 3 வானூர்திகள் தொடர்பான விபரங்கள் பெறப்பட வேண்டியுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினரது வாழ்க்கையோடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய விளையாடக் கூடாது. உண்மை விபரங்களை மறைத்து மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. உண்மைகளை அறிய மக்களுக்கு உரிமை உண்டு.

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்கிற வகையில் நாம் இந்த உண்மைகளை தெரியப்படுத்தியுள்ளோம். மேலும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவும், வான்படை தளபதியும் பதவிகளிலிருந்து விலக வேண்டும்.

ராஜபக்ச குடும்பத்தினால் ஏற்பட்ட சேதம் போதும் ஒட்டுமொத்த குடும்பமே இப்போது அரசாங்கத்தை விட்டு வீட்டுக்குப் போக வேண்டும் என்றார் அவர்.

கோத்தபாய அநுராதபுரத்திற்குச் சென்ற பின்னரே புனித உடல்கள் களங்கப்படுத்தப்பட்டன

[புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007]

சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அநுராதபுரத்திற்குச் சென்ற பின்னரே விடுதலைப் புலிகளின் தற்கொடைப் போராளிகளின் உடல்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, மக்களிற்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இதன்மூலம் சிறீலங்கா அரசின் இந்தக் கொரூரத்தனமான செயல் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் நிகழ்த்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளது.


போரில் இறப்பவர்களின் உடலங்கள் உரிய இராணுவ மரியாதையும் கையளிக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையினரால் நிறுவப்பட்ட போரியல் மரபாக இருக்கும்போது, சிறீலங்கா அரசு அப்பட்டமான போரியல்க் குற்றத்தினைப் புரிந்துள்ளது.

கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் வன்குரூரம்: ஐ.நா.விடம் புலிகள் முறைப்பாடு

[புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007]

அனுராதபுரம் வான் படைத்தளத்தை தாக்கியழித்த கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் குரூரமான செயலானது போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனீவா மாநாட்டு முடிவுகளுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி அனுப்பியுள்ள மின்னஞ்சல் முறைப்பாடு:

அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது ஒக்ரோபர் 22 ஆம் நாள் கரும்புலிகள் தாக்குதல் நடத்திய பின்னர் மோதல் நடைபெற்ற பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 சடலங்களை அடையாளம் கண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்தது.

உரிய மரபுகளைப் பின்பற்றி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள், எமது போராளிகளின் உடல்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம். நாங்கள் போராளிகளின் உடல்களுக்காக காத்திருந்த போது சிறங்கா இராணுவத்தின் செயற்பாடு எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தாக்குதலில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி அதனை பொதுமக்களின் பார்வைக்கு சிறிலங்கா இராணுவம் வைத்துள்ளது. அந்தப் படங்களை இந்த மின்னஞ்சலுடன் இணைத்துள்ளோம். இது போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனீவா மாநாட்டின் முடிவுகளுக்கு எதிரானது என்பதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நாம் உறுதியாக கருதுகிறோம்.

போரில் உயிரிழந்தோருக்கு பல்வேறு சமூகத்தினரும் உயரிய மதிப்பளித்து வருகின்றனர்.

போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனீவா மாநாட்டின் முடிவு சரத்து 130ஐ நாம் சுட்டிக்காட்டுகிறோம்.

உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி போராளிகளினது உடல்களை சிறிலங்கா இராணுவமானது நிர்வாணப்படுத்தியமையானது அவர்களை நேசித்த குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எமது இயக்க வரலாறு முழுமைக்குமே சிறிலங்கா இராணுவ போர்க் கைதிகளையும் உயிரிழந்த சிறிலங்கா இராணுவத்தினரையும் நாம் கௌரவத்துடனே நடத்தி மரியாதை செலுத்தியிருக்கிறோம் என்பதனையும் தங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறோம் என்று அந்த மின்னஞ்சலில் செல்வி குறிப்பிட்டுள்ளார்.