Saturday, June 30, 2007

ஐ.தே.க.வின் ஆதரவினை பெற்றுத்தந்தால் 2 மாதங்களுக்குள் அரசியல் தீர்வு.!!

[சனிக்கிழமை, 30 யூன் 2007] சிறிலங்கா பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவைப் பெற்றுத்தந்தால் இரு மாதங்களுக்குள் அரசியல் தீர்வினை முன்வைக்க முடியும் என்று வெளிநாட்டு தூதுவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசின் இந்த அறிவித்தலை கருத்தில் எடுத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் விரைவில் அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்சவின் அரசியல் யோசனை தொடர்பாக அமெரிக்கா அவரிடம் வினவியிருந்த நிலையிலேயே அரசு இந்த அறிவித்தலை தூதரகங்களுக்கு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்துக்கட்சி மாநாட்டின் யோசனைகளுக்கு அமைய இறுதி இணக்கப்பாடு தொடர்பான அறிக்கைகளை தயாரிக்க ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே அது சாத்தியமாகுமென தூதரகங்களுக்கு அரசு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மூலம்: புதினம்

திருமலையில் 1000 கிலோவுக்கு அதிகமான சி-4 வகை வெடிமருந்துடன் பாரவூர்த்தி மீட்பு (படங்கள் உள்ளே)

[சனிக்கிழமை, 30 யூன் 2007]

திருகோணமலை திருக்கடலூரில் ஆயிரம் கிலோ அதிகமான வெடிமருந்துடன் பாரவூர்த்தி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படையினர் அறிவித்துள்ளனர்.

டேலன் ரக பாரவூர்த்தியில் 1000 கிலோவுக்கு அதிகமான சி-4 வகை வெடிமருத்துகளை சிறீலங்கா கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணைத் தள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமகன் ஒருவரின் தகவலையடுத்து திருமலை திருக்கடலூர் 3ம் கட்டையில் மீன் ஏற்றுவதற்காக நின்ற பாரவூர்த்தியை சோதனையிட்ட சிறீலங்கா கடற்படையினர் பாரவூர்த்தியில் வெடிமருந்து இருந்துள்ளதாகத் தெரிவித்து பாரவூர்த்தியைக் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பராவூர்தி சாரதியும் உதவியாளரும் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்ககப்பட்டுள்ளனர். அத்துடன் பாரவூர்த்தி திருமலை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.




"லங்கதீப" வெளியீட்டு நிறுவனத்திடம் 200 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு கோருகிறார் மகிந்த ராஜபக்ச.

[சனிக்கிழமை, 30 யூன் 2007] தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக லங்காதீப நாளிதழின் வெளியீட்டாளராகிய விஜயா வெளியீட்டு நிறுவனத்திடமிருந்து 200 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு கோரி மகிந்த ராஜபக்ச தாக்கீது அனுப்பியுள்ளார். உரிய நட்ட ஈட்டுத் தொகை வழங்காவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மகிந்தவின் சட்டத்தரணி எச்சரித்துள்ளார். "சிறிலங்காவில் பாசிச ஆட்சி" நடப்பதாக லங்காதீபவில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்கீது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கம்பளையில் ஆணின் சடலம் மீட்பு.

[சனிக்கிழமை, 30 யூன் 2007] சிறிலங்காவின் கண்டி மாவட்டம் கம்பளை, கஹட்டப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள மதகு ஒன்றின் கீழ் ஆண் ஒருவரின் சடலத்தினை கம்பளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கஹட்டப்பிட்டிய பாடாலைக்கு அருகில் அமைந்துள்ள மதகு ஒன்றின் கீழ் இச்சடலம் இன்று சனிக்கிழமை அதிகாலை கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அப்பிரதேச வாசிகள் இன்று அதிகாலை சடலம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனையடுத்தே சடலத்தினை காவல்துறையினர் மீட்டனர். சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலத்தையே தாங்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கும் காவல்துறையினர், இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

புலிகள் என சந்தேகித்து 4 சிங்களவர்களை படுகொலை செய்த இராணுவம்.!!

[சனிக்கிழமை, 30 யூன் 2007] திருகோணமலை மாவட்டம் மாவிலாறு, சேருநுவர காட்டுப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற நால்வரை தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகித்து சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். விடுதலைப் புலிகளைத் தேடி அப்பகுதியில் இராணுவத்தினர் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்த போது பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட நால்வரின் சடலங்கள் கந்தளாய் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து கந்தளாய் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.!

[சனிக்கிழமை, 30 யூன் 2007]

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

வடமராட்சி நெல்லியடி முடக்காட்டுப் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தென்மராட்சி சாவகச்சேரி வரணியைச் சேர்ந்த நித்தியானந்தன் (வயது 48 ) என்ற குடும்பஸ்தர் கொல்லப்பட்டார்.
அவரது சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு மந்திகை மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ். மடத்தடிப் பகுதியில் இன்று மாலை நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ். மருத்துவமனையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து யாழ். கொக்குவில் இராமநாதன் வீதியில் ஈருளியில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது மாலை 6 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு நபர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பியோடி விட்டதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: புதினம்

Friday, June 29, 2007

சிறிலங்காவுக்கு தாக்குதல் ஆயுதங்களை இந்தியா வழங்க வேண்டும்: டெக்கான் ஹெரால்ட்

[வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007] இந்தியாவின் "பாதுகாப்பு பொருளாதார" கொள்கையைக் கருத்தில் கொண்டு சிறிலங்காவுக்கு தாக்குதல் ஆயுதங்களை இந்தியா வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநிலத்தில் வெளியாகும் டெக்கான் ஹெரால்டு எனும் ஆங்கில நாளேடு வலியுறுத்தியிருக்கிறது. அந்நாளிதழில் பிதந்த எம். செங்கப்பா எழுதியுள்ள கட்டுரை: சீனாவிடமிருந்து ஆயுதக் கொள்வனவு செய்ய கொழும்பு மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து இந்தியா-சிறிலங்கா உறவு கீழ்நிலைக்குச் சென்றது. "இந்தப் பிராந்தியத்தில் நாங்கள் பெரும் சக்தி. சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் சிறிலங்கா ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதை நாம் விரும்பவில்லை. அவர்களுக்கு என்ன தேவையோ எங்களிடம் வரலாம்" என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் "தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே இந்தியா வழங்கும்" என்றும் நாராயணன் கூறியிருந்தார். சிறிலங்காவுடனான பாகிஸ்தான் நெருக்கத்தின் பின்னரே சிறிலங்காவுடன் இந்தியா ஒத்துழைத்தது என்பது வெளிப்படையானது. இருப்பினும் ஆட்டிலறி, தாங்கிகள் அல்லது வானூர்தி தொடர்பாக இந்தியா எதுவித பதிலும் அளிக்கவிலை. ஆனால் இராஜதந்திர ரீதியாக ஆதரித்தது. ஆகையால் சிறிலங்காவானது ஆயுதக் கொள்வனவுக்காக சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் செல்வதைத் தவிர வேறு வாய்ப்பில்லை. கடற்புலிகளுடன் யுத்தம் நடத்துவதற்காக நவீன சுற்றுக்காவல் கலம் (AOPV)- வை சிறிலங்காவுக்கு வழங்க இந்தியா திட்டமிட்டிருந்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு இதே மாதிரியான AOPV-வை விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலையொட்டி சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிகளுக்கு எதிரான கண்ணிவெடி காப்பு ஊர்தி, வளரத் தொடங்கியிருக்கும் கெரில்லாக்களின் வான் வலிமைக்கு எதிராக அதிநவீன முப்பரிமாண ராடர் ஆகியவற்றையும் இந்தியாவிடமிருந்து சிறிலங்கா பெற்றது. 2005 ஆம் ஆண்டு இந்தியாவின் காசியாபாத்தில் தயாரிக்கப்பட்ட இந்திரா-02 எனப்படும் இரு பரிமாண ராடார்களை சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியது. ஆனால் அந்த ராடாரினால் இராணுவத் தளத்தை தாக்கும் எதிரியின் வானூர்தியை அடையாளம் காட்ட முடியவில்லை. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நம்பிக்கை இழந்த குரலில் இந்தியாவிடம் ஆயுதங்களை வழங்க சிறிலங்கா கோரிக்கை விடுத்தது. விடுதலைப் புலிகள் அல்லாத தமிழ் மக்களுக்கு எதிராக அந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்று இந்தியா உறுதியாகத் தெரிவித்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட சிறிலங்காவுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்க இந்தியா விரும்பாதது மட்டுமின்றி போர் நடவடிக்கைகளைக் குறைக்குமாறும் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்தது. கெரில்லாக்களுடன் அரசியல் பேச்சுக்களை சிறிலங்கா நடத்த வேண்டும் என்று இந்தியா விரும்பியது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் சிறிலங்கா தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையானது இந்தியாவின் தேசிய நலன்களுக்கும் தமிழ்நாட்டு அரசியல் நிலைமைகளுக்கும் இடையேயான முரண்பாடுகளால் பாதிப்புக்குள்ளானது. சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போரை "தமிழர்களை சிங்கள இராணுவம் கொல்கிறது" என்பதாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வெளிப்படுத்தினர். இலங்கைத் தீவில் இந்தியாவின் தலையீட்டை முன்னர் வெளிப்படையாக தமிழக முதல்வர் கருணாநிதி எதிர்த்தார். ஏனெனில் "யுத்தத்தினால் தமிழர்கள் கொல்லப்படுவது இந்தியாவில் விளைவுகளை ஏற்படுத்தும்" என்றார். தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கான பாதுகாவலர்களாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் முகமூடிப் போட்டுக் கொண்டாலும், தமிழர் அரசியல் தலைமைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கொடூரமாக ஒழித்ததை மறைமுகமாக ஆதரித்தனர். இதனால் ஜனநாயக நடைமுறைகளினால் கெரில்லா தலைவைர் உருவாக்கப்படவில்லை. இலங்கைத் தமிழர்களின் உண்மையான பிரதிநிதியாகவும் இல்லை. விடுதலைப் புலிகளை தோற்கடிக்க ராஜபக்ச அரசாங்கத்துக்கு உதவ வேண்டுமாயின் இணைப்பாட்சிக்குள்ளான தன்னாட்சி கோட்பாடுகளை கொழும்பு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று புதுடில்லி விரும்புகிறது. சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விநியோகிக்கக் கூடாது என்ற இந்தியாவின் கொள்கையானது பொருளாதார, இராஜதந்திர விவகாரங்களில் எதிரொலிக்கிறது. தரை, வான் மற்றும் கடற்படைக்குரிய இராணுவ தளபாடங்களை தயாரிக்கும் 39 தொழிற்சாலைகள், பாதுகாப்பு தொடர்பிலான 8 பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவிடம் உள்ளன. சிறிலங்கா கோருகிற குறைந்த எண்ணிக்கையிலான இராணுவ தளபாடங்களை இந்திய இராணுவத் தளபாட உற்பத்தி தொழிற்சாலைகளால் உருவாக்க முடியும். இருப்பினும் தாக்குதல் தளபடாங்களை சிறிலங்காவுக்கு ஏற்றுமதி செய்வதில்லை என்பது குறித்து புதுடில்லி தார்மீக ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பரிசீலனைக்குட்படுத்த வெண்டும். ஆயுத தளபாட தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை ஏற்றுமதி என்பது பிரிக்க முடியாதது. அத்தொழிற்சாலைகளின் முழு அளவிலான தளபாடங்களின் உற்பத்தி இருக்க வேண்டும் என்பது "பாதுகாப்பு பொருளாதார"த்தின் கொள்கையாகும். சீனாவிடமிருந்து சிறிலங்கா ஆயுதக் கொள்வனவை எம்.கே.நாராயணன் விமர்சித்ததால் இராஜதந்திர உறவு கீழ்நிலைக்குச் சென்றுள்ளது. அதான் சிறிலங்கா தலைவர்களிடத்தில் கோபத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. "உளவுத்துறை" தொடர்புடையவராக நாராயணன் இருப்பதால்தான் பிரச்சனை ஏற்பட்டது. இரஜதந்திர சக்தியாக அவர் இல்லை. இதுவே தற்போதைய முரண்பாடுகளுக்கு அடிப்படை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலம்: புதினம்

செட்டிக்குளத்தில் கிளேமோர் தாக்குதலில் ஐவர் காயம்.!

[வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007,]

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கிளேமோர் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இதில் பாடசாலை சிறுவர்கள் மற்றும் இராணுவ வீரர் ஒருவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் பஸ் வண்டியொன்றை இக்கிளேமோர் குண்டு வெடிப்பில் சிக்கியுள்ளதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அரசாங்கமும் புலிகளும் போர்க்களத்தில்தற்காலிக வெற்றிகளை மாத்திரமே பெறமுடியும்.!!

[வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007,]

இலங்கை அரசாங்க படைகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர்முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் போர்க்களத்தில் தற்காலிக வெற்றிகளை மாத்திரமே பெறமுடியும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தின் பின்னர் நோர்வேயின் டக்ஸா விஷன் என்னும் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கருத்து தெரிவித்துள்ள ரிச்சட் பௌச்சர் மேலும் கூறியதாவது: போர் முனைப்பானது நிரந்தரமான சமாதானத்திற்கு வழி ஏற்படுத்தாது. வடக்குகிழக்கில் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இந்நிலையில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. என்பவற்றின் நடவடிக்கைகளை இப்பகுதியில் உறுதி செய்வதன் மூலமே மீளக்குடியமர்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியும்.

அதே நேரம் அம்மக்கள் ஜனநாயக ரீதியில் செயற்பட முடியும் என்பதுடன் நீதி, கல்வி, பாதுகாப்பு மற்றும் சுகாதார நலன்களை பெறக்கூடியதாக இருக்கும். அமெரிக்காவை பொறுத்தவரை இலங்கையில் தமிழர்கள் தமது நிர்வாகத்தை தாமே கட்டுப்படுத்தக்கூடிய தீர்வு ஒன்றே இறுதியானதாக இருக்கும்.

2002ஆம் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும். இதற்கான பாதை திறந்தே உள்ளது. அப்பாதையில் செல்லுமாறு இருதரப்புக்கும் அழுத்தம் கொடுக்கப்படவேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டும். அதுதொடர்பான பதிலை விடுதலைப்புலிகள் வழங்கவேண்டும்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சவப்பெட்டி ஊர்வலம்.!

[வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007,] பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று சவப்பெட்டி ஊர்வல போராட்டமொன்றை கொழும்பில் நடத்தினர். அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப்போராட்டம் நுகேகொடையில் ஆரம்பமாகி கொழும்பு 7 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவரை இடம்பெற்றது.இந்த எதிர்ப்பு ஊர்வலத்திலும் மற்றும் போராட்டத்திலும் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கம் மற்றும் பல்கலைக்கழக ஆணைக்குழுவின் அண்மைக்கால செயற்பாடுகளை கண்டிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். பல்கலைக்கழக மாணவர்களினால் தூக்கிவரப்பட்ட சவப்பெட்டிகளிலும் அரசாங்கம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கட்டிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதையடுத்து மானியங்கள் ஆணைக்குழு கட்டிடத்திற்கு முன்னால் பொலிஸார் முட்கம்பிகளை போட்டு பாதுகாப்பை பலப்படுத்தியிருந்ததுடன் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரினால் வீதிக்கு குறுக்காகப்போடப்பட்டிருந்த முட்கம்பிக்கு பின்னால் நின்று எதிர்ப்பு கோசம் எழுப்பினர். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு பெரியாஸ்பத்திரி சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதிகளில் பெரும் வாகன நெரிசல் காணப்பட்டது.

த.தே.கூ.வின் அம்பாறை பிரதேச சபைத் தலைவர் சுட்டுப் படுகொலை

[வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007,] அம்பாறையில் சிறீலங்கா துணை ஆயுதக்குழுவினரால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபை தலைவர் தில்லைநாதன் உதயகுமார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு 8.50 மணியளவில் விநாயகபுரம் அக்கரைப்பற்றுப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்தே சிறீலங்கா துணை ஆயுதக்குழுவினரால் இவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருபிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபை தலைவர் தில்லைநாதன் சிறீலங்கா துணை ஆயுதக்குழுவினரால் வீட்டிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு அவரது வீட்டில் இருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள கப்புனார் வீதியில் கைக்குண்டை வீசி பின் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர். இப்படுகொலையானது கிழக்கு மாவட்டத்தில் புதிதாக தேர்தல் நடாத்த உள்ளதாக கொழும்பில் பத்திரிகை செய்தி வெளிவந்த பின் நிகழ்ந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு எரிபொருள் விநியோகம் தடை: 8 மாத அவலம் தொடர்ந்தும் நீடிப்பு.!

[வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007] முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு எரிபொருள் விநியோகம் தடை செய்யப்பட்டதால் கடந்த 8 மாத காலமாக பாரிய அவலங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவ பொறுப்பதிகாரி வீரகத்தி சண்முகராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: முல்லைத்தீவு மாவட்டம் என்பது நவீன வசதிகளைப் பெறுவதற்கு முடியாத அளவிற்கு மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. அரசின் வசதிகள் இம் மக்களுக்குக் கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொது மருத்துவமனை அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. ஆனால் நீண்டகால இழுத்தடிப்புக்கு பின்னரே முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பொது மருத்துவமனை கட்டடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எமது மாவட்டத்தில் வசித்து வரும் மக்களில் சுமார் 56 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இம் மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்கின்றனர். இதனை விடவும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வவுனியா, மன்னார், வடமராட்சி கிழக்கு, பூநகரி, நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்களும் இடம்பெயர்ந்து தற்போது எமது மருத்துவமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வசித்து வருகின்றனர். இதனால் இப்போது மருத்துவமனைக்கான தேவைகள் வெகுவாக அதிகரித்துள்ளது. எந்தப் பொருட்களும் எமக்கு நிறைவாகவோ அல்லது ஓரளவிற்கோ போதுமானதாக இல்லை. அனைத்துமே பற்றாக்குறையாகவே இருக்கிறது. நோயாளர்களின் தொகை நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாளாந்தம் வெளிநோயாளர் பிரிவில் மட்டும் 400-க்கும் அதிகமான நோயாளர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மருத்துவம் செய்வதற்கு 4 மருத்துவர்கள் மட்டுமே இருக்கின்றனர். நாளாந்தம் நான்கு மருத்துவர்கள் இந்த கடமையுடன் மருத்துவமனை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் 160-க்கும் அதிகமான நோயாளர்களையும் பார்வையிட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். அதிகளவு நோயாளர்களை பார்வையிடுவது சாதாரண விடயமல்ல. மிகவும் கடினமானது. போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலையிலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம். நாம் பெரும் நெருக்கடிகளின் மத்தியில் பணிபுரிந்து மக்களுக்கு சேவையாற்றினாலும் அவர்களுக்கு வேண்டிய மருந்துப் பொருட்களை எம்மால் வழங்க முடியாதுள்ளது. எமக்கு வேண்டிய முழுமையான மருந்துப் பொருட்களை சமாதான சூழல் இல்லாது போனதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் அனுப்பியதே கிடையாது. முக்கியமாக இரத்த அழுத்தம், நீரிழிவு, ஏற்பு ஊசிகள் உட்பட அனைத்து மருந்துப் பொருட்களுக்குமே தட்டுப்பாடு காணப்படுகிறது. எம்மை நம்பி நீண்ட தொலைவில் இருந்து வருகின்ற நோயாளர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு விட்டு மருந்துப் பொருட்களை வெளியில் பெற்றுக்கொள்ளுமாறு எழுதி வழங்க வேண்டிய நிலையே எமக்கு இருக்கிறது. மருத்துவமனையில் இல்லாது தனியார் மருந்து விற்பனையாளர்களிடம் பெற்றுக்கொள்ளுமாறு நாம் வழங்குகின்ற மருந்துகள் அவர்களிடமும் இல்லை. இதனால் நோயாளர்கள் தமது நோய்க்கான மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் காணப்படுகிறது. இதனால் வன்னியில் நோயாளர்கள் மிகப்பெரும் அவலத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலை தொடருமாக இருந்தால் மிகப்பெரும் அவலம் உருவாகும். எரிபொருள் பற்றாக்குறை முல்லைத்தீவு பொது மருத்துவமனையைப் பெறுத்த வரை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முகமாலையில் நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து வன்னிக்கான பெருளாதாரத் தடை முழுமையாக இராணுவத்தால் அமுல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் எமக்கு கிடைக்க வேண்டிய மருந்து மற்றும் எரிபொருள் உட்பட மருத்துவமனையின் முக்கிய பயன்பாட்டுப் பொருட்கள் தேவையான அளவில்கூட கிடைக்கவில்லை. மிகவும் மட்டுப்படுத்தியும் சிலவற்றை வழங்காமலும் விட்டுள்ளது. எரிபொருள் எங்களுக்கு சிறிய தொகை கூட தரப்படுவதில்லை. மாதம் தோறும் எமக்கு 5,000 லீற்றர் டீசல் தேவைப்படுகிறது. இத்தொகையில் சிறிய அளவுகூட எங்களுக்கு தரப்படுவதில்லை. இதனால் மருத்துவமனை இரவு நேரங்களில் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பகல் நேரங்களிலும் அவசர சிகிச்சைகளுக்கும் சத்திர சிகிச்சைகளுக்கும் மின்சாரம் முக்கியமாக தேவைப்படுகிறது. எட்டு மாதங்களுக்கும் மேலாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டே நோயாளர்களுக்குரிய சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம். நோயாளர் காவு வாகனம் பெருந்தொகையான நோயாளர்கள் நாள்தோறும் சிகிச்சைகளுக்கு வருவதால் மேலதிக சிகிச்சைகளுக்கு வவுனியாவுக்கு பெருமளவிலான நோயாளர்களை அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. ஓமந்தை ஊடான போக்குவரத்து, வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே மக்கள் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனைக்கு வருகின்ற வவுனியா அனுப்பவேண்டிய அனைத்து நோயாளர்களையும் சிகிச்சைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறை நோயாளர்களை பெருமளவில் பாதித்துள்ளது. எம்மிடம் இருக்கின்ற நோயாளர் காவு வாகனங்கள் அனைத்தும் நோயாளர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா மருத்துவமனைக்குச் சென்றால் அங்கிருந்து முல்லைத்தீவுக்குத் திரும்புவதற்கு முன்னர் ஓமந்தை சோதனை நிலையம் மூடப்பட்டு விடுகிறது. இதனால் நோயாளர் காவு வாகனங்கள் மீண்டும் வவுனியாவுக்குத் திரும்பிச் செல்கிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் அனுமதிக்கப்பட்ட நாளில் முல்லைத்தீவிற்கு வருகை தருகின்றன. மருத்துவமனையின் நடைமுறைகளிற்கு இந்த நடைமுறை மிகவும் கடினமானது. பெரும் நெருக்கடி மிக்கது. குறிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே செல்வதால் பெருமளவிலான நோயாளர்களை நோயாளர் காவு வாகனங்களில் ஏற்றி அனுப்புகிறோம். அதிகளவு நெரிசல் நோயாளர்களுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்துகிறது. எரிபொருள் மற்றும் போக்குவரத்து நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்பன மனிதாபிமான சிந்தனையின் அடிப்படையில் நிச்சயம் நீக்கப்பட வேண்டும். இத்தகைய நெருக்கடிகள் பொது மருத்துவமனைக்கு மட்டுமானது அல்ல. மாவட்டத்தின் அனைத்து பிரதேச, கிராமிய மருத்துவமனைகளிலும் மேற்குறித்த நெருக்கடிகள் உள்ளன என்றார் அவர்.

Thursday, June 28, 2007

இலங்கையில் உயரும் கப்பற் கட்டணங்களால் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு.!

[வியாழக்கிழமை, 28 யூன் 2007]

இலங்கையில் கப்பல் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 அடி கொள்கலன் ஒன்றிற்கு 600 டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதால் ஏற்றுமதியாளர்கள் விலை நேரம் என்பவற்றுடன் போட்டியிட வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இதனால் சில கப்பற்கம்பனிகள் தமது வழமையான கடற் போக்கு வரத்து பாதையினை கடந்த 6 மாத காலமாக மாற்றியுள்ளனர் இதனால் ஆடை, தேயிலை ,இறப்பர் மற்றும் தெங்கு உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படுள்ளதாக இலங்கை கப்பல் சங்க தலைவர் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார். ஆடை உற்பத்தி இலங்கை எறக்குறைய 7 மில்லியன் டொலர் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள கப்பல் ஏற்றுமதி பிரச்சினையால் பிரபல வர்த்தக நிறுவனங்கள் விக்டோரியா, சீக்ரட். கப், நைக், மார்க்ஸ் மற்றும் பென்சர் ஆகிய கம்பனிகளிடம் இருந்து இலங்கை ஏற்றுமதியாளர் போதுமான கால அவகாசம் இன்றி நெருக்கடிக்கப்படுகின்றனர்.

கடற்போக்குவரத்து தவிர விமானம் மூலம் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனினும் கடற்போக்குவரத்து மூலமான ஏற்றுமதியை விட 7.5% அதிகளவில் விமான மூலமான ஏற்றுமதிக்கு செலவிட வேண்டியுள்ளதாக கப்பற்துறை ஆலோசகர் ரொகான மாசகோரனள தெரிவித்துள்ளதாக ஏ.எ.பி செய்தி தெரிவித்துள்ளது.

அதேவேளை கொழும்பு துறைமுகம் மலாக்கா அரபிக்க்டல் சுயஸ்கால்வாய் என்பவற்றிக்கு எதிரே இருப்பாதால் ஆசிய ஐரோப்பிய அமெரிக்காவிற்குமான கடற் போக்குவரத்திற்கு சுலபமாக இருந்தது எனினும் பெரிய கம்பனிகளான மேர்க் யுனைட்டர் அரபு கப்பல் கம்பனி,நொராசியா ,கெரெய்ர், கேடலைன் மற்றும் ஹைஜின் என்பன தற்போது கொழும்பு துறைமுகத்தில் தரிக்காது மும்பாய் போன்ற இந்திய துறைமுகங்களிற்கு செல்கின்றன. முதல் இக் கம்பனிகளின் கப்பல்கள் கொழும்பில் தரிக்கப்பட்டு இந்திய பொருட்களை ஐரோப்பியாவிற்கு எடுத்து செல்லும்

தற்பொது இக்கம்பனிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. என பெரேரா தெரிவித்தார்

. தற்போது பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் என்ற அச்சத்தினை கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இரவு வேளைகளில் ஒரு கப்பல் மாத்திரமே குறிப்பிட்ட நேரத்தில் வந்து தாமதம் இன்றி வந்து செல்லலாம் இந்தியா அடுத்த 4 வருடங்களில் ஐரோப்பாவிற்கான கடல்வழி மூலமான ஏற்றுமதி மூலம் 18 சதவீதம் வளச்சியடைந்து விடும் எனினும் இலங்கை வளச்சியை பெருக்க முடியாமல் போகுமோ என்ற அச்சம் எனக்கு எழுந்துள்ளது என கப்பற் சங்க தலைவர் ஜெயானந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய ஊடகவியலாளரை படுகொலை

[வியாழக்கிழமை, 28 யூன் 2007] "பி.பி.சி.' ஊடகவியலாளர் அலன் ஜோன்ஸ்டனைக் கடத்திச் சென்று பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ள "இஸ்லாமிய இராணுவம்' என்றழைக்கப்படும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேற்படி பிரித்தானிய ஊடகவியலாளரை கொன்றுவிடப் போவதாக புதிய அச்சுறுத்தல் ஒன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை தொழுகைக்காக காஸா பள்ளிவாசலுக்கு சென்ற தமது இரு அங்கத்தவர்களை ஹமாஸ் போராளிகள் கடத்திச் சென்றுள்ளதாக இஸ்லாமிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் காஸாவில் வைத்து இஸ்லாமிய இராணுவத்துடன் தொடர்புடைய இருவரை தமது இயக்கத்தினர் கைது செய்துள்ளதை ஹமாஸின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்லாமிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவ் அமைப்பின் அங்கத்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டதற்கும், அலன் ஜோன்ஸ்டன் தொடர்பான கொலை அச்சுறுத்தலுக்கும் சம்பந்தமிருக்கலாம் என கருதப்படுகிறது. மேற்படி அச்சுறுத்தல் அறிக்கையில் தடுத்து வைப்புகளானது போருக்கான பிரகடனமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட அங்கியுடன் அலன் ஜோன்ஸ்டன் தோன்றும் வீடியோ காட்சியொன்றை இஸ்லாமிய இராணுவம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது தன்னை பலவந்தமாக மீட்க முயற்சிப்பின் தன்னைக் கொன்று விடுவதாக போராளிகள் அச்சுறுத்தியுள்ளதாக அலன் ஜோன்ஸ்டன் தெரிவித்தார். இந்த வீடியோ காட்சியில் ஜோர்தானில் பிறந்த பாலஸ்தீன முஸ்லிம் மத தலைவர் தலைவரான அபு கராடாவை பிரித்தானியா விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்லாமிய இராணுவம் முன்வைத்திருந்தது. 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலை பின்னணியிலிருந்து வழிநடத்திய மொஹமட் அத்தா போன்ற பயங்கரவாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமான எடுத்துக்காட்டாக அபு கராடா விளங்கியதாக பிரித்தானிய அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒஸாமா பின்லேடனின் ஐரோப்பாவுக்கான ஆன்மீக தூதுவராக கருதப்படும் அபு கராடா, பல தீவிரவாத அமைப்புகளுடன் சந்தேகத்திற்கிடமான தொடர்புகளைக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் 2005 ஆம் ஆண்டு நவம்பரில் அம்மானில் திருமண விருந்துபசாரம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சம்பந்தமுடையவர் என்ற குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் சஜிதா அல் றிஷாவி என்ற ஈராக்கிய பெண்ணும் விடுதலை செய்யப்பட வேண்டும் என இஸ்லாமிய இராணுவ இயக்கம் கோரியுள்ளது. அம்மானில் 2005 ஆம் ஆண்டில் 60 பேர் பலியாவதற்கு காரணமாக இருந்த மூன்று ஹோட்டல் குண்டுத் தாக்குதல்களில் இந்தத் திருமண விருந்துபசார குண்டுத் தாக்குதலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான அல் றிஷாவி அவரது முயற்சி தோல்வியடைந்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் இலங்கையில் அகதிகளிற்க்காக 500 மிலியன் ஜென் நிதியுதவி.

[வியாழக்கிழமை, 28 யூன் 2007] இலங்கையில் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட அகதிகளிடம் ஜப்பான் 500 மில்லியன் ஜென் நிதியுதவிவழங்குவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ராரோ அசேசா தெரிவித்துள்ளார். இலங்கையின் சமதான முயற்சிகளில் ஜப்பான் முகிய பங்காற்றி வருகிறது. ஜப்பன் விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகொத்த போகொல்லாகமவை சந்தித்த ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் உரிமைகளை பேணுமாறு கேட்டு கொண்டுள்ளார். அதற்கு பதிலளித்த போகொல்லாகம இவற்றுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் வன்முறைகளையும், பயங்கவாதத்தினையும் முடக்க அரசியல் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடாத்தி வருவதாக தெரிவித்தார்.

யாழ்பாணத்தில் கிளேமோர் தாக்குதலில் 2 படையினர் பலி.!!

[வியாழக்கிழமை, 28 யூன் 2007]

இன்று வியாழக்கிழமை யாழ்பாணத்தில் படையினரை இலக்கு வைத்து நடந்த கிளேமோர் தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டனர் என சிறிலங்கா பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தேசிய முன்னனி அமைக்க ஜே.வி.பி முடிவு.!!

[வியாழக்கிழமை, 28 யூன் 2007]

பதவியில் உள்ள அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜே.வி.பி. அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு புதிய தேசிய முன்னணியொன்றை உருவாக்கவுள்ளது. இந்த முன்னணியில் இணைந்துகொள்ளுமாறு நாட்டின் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் தொழில் நிபுணர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள் மற்றும் நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர ஸ்ரீபதி சுரியாராச்சி ஆகியோரையும் இணைந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள நாட்டை நேசிக்கின்றவர்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் எமது புதிய தேசிய முன்னணியின் கொள்கையை ஏற்றுக்கொண்டு இணைந்துகொள்ளலாம். மங்கள சமரவீர எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

மங்கள சமரவீர தலைமையிலான சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவினர் முன்வைத்துள்ள கொள்கைத் திட்டத்தை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம். எந்தவகையிலும் தற்போதைய அரசாங்கத்தை தொடரவிட முடியாது. அதேவேளை இந்த அரசாங்கத்துக்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அரசாங்கம் அமைவதனையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது :

நாட்டில் தற்போது அரசியலில் பாரிய மாற்றம் ஏற்படும் சுழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திலிருந்து மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சுரியாராச்சி ஆகியோர் விலக்கப்பட்டமை முக்கிய அரசியல் மாற்றமாக அமைந்தது. அந்தவகையில் மங்கள சமரவீர அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு புதிய அரசாங்கத்தை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய தேசிய கட்சியினால் இந்த நாடு படு குழியில் தள்ளப்படுமே தவிர நாடு கட்டியெழுப்பப்படமாட்டாது. அந்தவகையில் ஐ.தே.க. வுடன் மங்கள பேச்சுவார்த்தை நடத்துவதானது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும்.

கடந்த 60 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளும் நாட்டை அழிவுப்பாதைக்கே இட்டுச்சென்றுள்ளன. 2485 பில்லியன் ரூபாவை நாம் வெளிநாடுகளுக்கு கடனாக கொடுக்கவேண்டியுள்ளது. இந்நிலையில் எமது கட்சியும் கடந்த 2004 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்த்திரக் கட்சியுடன் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டது ஒரு கட்டத்தில் சுதந்திரக் கட்சி கொள்கையை மீறியமையினால் நாங்கள் கூட்டமைப்பிலிருந்து விலகிக்கொண்டோம். அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் உடன்படிக்கையொன்றை செய்துகொண்டோம். அந்த உடன்படிக்கையும் பாரியளவில் மீறப்பட்டுவிட்டது.

அரசாங்கம் மஹிந்த சிந்தனையை கடுமையாக மீறிவருகின்றது. எனவே இந்த அரசாங்கத்தை பாதுகாக்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. மக்கள் ஆணையை மீறும்வகையில் அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து 17 எம்.பி. க்களை இணைத்துக்கொண்டது.

அரசாங்கம் தன்னை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி இறுதியில் ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் புதிய முன்னணியை உருவாக்க தீர்மானித்துவிட்டோம். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டிய தேவையுள்ளது. ஆனால் இந்த அரசாங்கத்துக்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை பதவியில் அமர்த்த முடியாது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியுடனோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனோ நாங்கள் ஒன்றிணைந்து செயற்படமாட்டோம். இந்நிலையில் புதிய தேசிய முன்னணியை உருவாக்கும் முயற்சியில் அடுத்த மாதத்திலிருந்து ஈடுபடவுள்ளோம். இவ்விடயம் குறித்து நாட்டின் தொழிற் சங்கப் பிரதிநிதிகள்இ தொழில் நிபுணர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள் அரசியல்வாதிகள் மற்றும் நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம். தற்போதைக்கும் சில அமைப்புக்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

நாடு தற்போது தவறான பாதையில் செல்கின்றது. அதனை திருத்தி சரியான பாதையில் அனுப்புவதற்கான முயற்சிகளையே நாம் மேற்கொள்ளவேண்டும். அதற்காக ஜே.வி.பி.யின் தலைமையில் அமைக்கப்படுகின்ற புதிய தேசிய முன்னணி அரசாங்கத்தை உருவாக்கவேண்டும். அந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் சரியான முறையிலான உறவுகளையே பேணும். மாறாக நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கான உறவுகள் சர்வதேச சமூகத்துடன் பேணப்படமாட்டாது. எமது வெற்றியை நோக்கி செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நாம் உருவாக்கும் புதிய தேசிய முன்னணி ஜே.வி.பி. யின் தலைமையிலேயே இயங்கும். அதனால் எதிர்காலத்தில் கொள்கைகள் மீறப்படும் என்று எவரும் சந்தேகப்படவேண்டியதில்லை. தற்போது பதவியில் உள்ள அரசாங்கம் தனது தவறுகளை திருத்திக்கொள்ள நாங்கள் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கினோம். அதாவது 20 அம்ச யோசனை ஒன்றை கடந்த காலத்தில் அரசாங்கத்துக்கு சமர்ப்பித்தோம். ஆனால் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

இந்நிலையில் நாட்டில் மாற்று அரசாங்கத்தை உருவாக்குவதே ஒரேவழியாகும். அதற்கான முயற்சிகளையே நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம். எமது முன்னணியில் மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சுரியாராச்சி ஆகியோரையும் இணைந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். சரியான பாதையை தெரிவுசெய்யுமாறு கேட்கின்றோம். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி உட்பட அரசியல் கட்சிகளில் உள்ள நாட்டை நேசிக்கும் உறுப்பினர்களை இணைந்துகொள்ளுமாறு கோருகின்றோம். எமது முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச அநுர குமார திஸாநாயக்க கே.டி. லால்காந்த மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர் கலந்தகொண்டனர்..

சிறிலங்காவின் சட்டங்கள் அனைத்தும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரானவை. (கருத்தாய்வு)

[வியாழக்கிழமை, 28 யூன் 2007] ராணுவம் மற்றும் ஒட்டுக்குழு என்போர் ஊடக சுதந்திரத்தை மீறிச்செயற்படுகின்றனர் இவர்களால் ஊடகவியளாலர்கள் உயிராபத்தைத் தினம் தினம் சந்திக்கின்றனர். இது சிறிலங்காவில் நிகழும் துரதிஸ்டமான போக்காகும் . இவை அனைத்துலக ஊடக சுதந்திர விதிகளுக்கு எதிரானவையாகும் என அனைத்துலக ஊடகவியளாலர் குழு சிறிலங்கா அரசைச் சாடியுள்ளது. இந்த எல்லைகள் அற்ற ஊடகவியளாலர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதி வின்சன்பரோஸல் அனைத்துல ஊடகக் கூட்டமைப்பின் இயக்குனர் ஜாக்குலின்பார்க் ஆகியோர் கொண்ட குழு கொழும்பிற்கு வருகை தந்து பல்வேறு ஊடக வியளார்களைச் சந்தித்து கலந்துரையாடிவிட்டு நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இக்குழு யாழ்சென்று ஆய்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது. இக்குழு இதற்கு முன்னரும் பல தடவை இலங்கை வந்திருக்கிறது நிலமைகளை மதிப்பீடு செய்து அரசிற்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. அது எதனையும் இக்குழு செயற்படுத்தவில்லை என இக்குழு குற்றம் சாட்டியுள்ளது. தமிழர் வாழும் பகுதிகளில் ஊடகத்துறையும் தமிழர் ஊடகங்களும் பல்வேறுபிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்பதை குழு ஒப்புக்கொண்டுள்ளது. 2005 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பதினொரு ஊடகவியளாலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அரசு ஆக்கப+ர்வமான விசாரனை எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் மிக அண்மையில் நடந்த ரஜிவர்மன் சுபாஸ் சந்திரபோஸ் ஆகிய தமிழ் ஊடகவியளாலர்களின் நிலைபற்றியும் அரசு கவனம் செலுத்தவில்லை என அக்குழு மேலும் தெரிவித்துள்ளது. மகிநை;த ஜனாதிபதியாக பதவியேற்ற பிற்பாடு இன்றுவரை 6000 ற்கு மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக ஒரு கணக்கு தெரிவிக்கப்படுகிறது. ஒரு குறுகிய காலத்திற்குள் இவ்வளவு கொலைகள் நடந்துள்ளது என்றால் அது மகிந்தவின் காலத்தில் தான் நடந்திருக்கிறது மகிந்தவின் அறாஜக ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பியதால் தான் இவ்வளவு ஊடகவியளாலர்களும் படு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படை. ஊடகவியளாலருக்கு மட்டும் அல்ல தமிழர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை மகிந்த ஆட்சியால்தான் ஏற்பட்;டது. போர்ச்சூழ் நிலவுகின்ற சூழலில் ஊடகவியளாலர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது ஒரு நியாயப்பாடான விடயமே ஆனால் சிறிலங்காவில் உள்ள அனைத்துச்சட்டங்களும் ஊடகச்சுதந்திரத்திற்கு எதிரானவையாகவே உள்ளன. என்பதையும் இந்தக்குழு சுட்டிக்காட்டியுளளது. சட்டங்கள் ஒழுங்குமுறைகள் அதிகாரங்கள் குறிப்பாக அவசரகாலச்சட்ட விதிமுறைகள் உத்தியோக ப+ர்வ இரகசிய சட்டம் ஒளிஒலி அமைப்புச்சட்டம் போன்ற அனைத்துமே உலக ஊடகச்சுதந்திரம் மற்றும் கருத்துச்சுதந்திரம் போன்றவற்றுக்கு முகம் கொடுக்கத்தவறிவிட்டன என்றும் அந்தக்குழு அரசைக் குற்றம் சாட்டியுள்ளது. அதேவேளை ஊடகத்துறை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை இலங்கை அரசிடம் முன்வைத்துள்ளன . அரசு பரிசீலிக்காவிட்டால் அனைத்துலக ஊடகஅமைப்பு நடவடிக்கை எடுக்கும் எனக் கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்கானிப்புக்குழு இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் இக்குழு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. -கலி-

வான் படையினரின் பயிற்சி வானூர்தி விபத்தில் சேதம்.!

[வியாழக்கிழமை, 28 யூன் 2007] இரத்மலானைப் பகுதியில் சிறீலங்கா வான் படைகளுக்குச் சொந்தமான பயிற்சி வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்ட வானூர்த்தியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது சிறீலங்கா பயிற்சி வானூர்தி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி சேதமடைந்த வானூர்த்தியை சீர்செய்துவிட முடியும் என கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவ் விபத்தையடுத்து நேற்று மாலைவரை வான்படைக்கு சொந்தமான வானூர்திகள் எதுவும் பறப்பில் ஈடுபடவில்லை எனத் தெரியவருகிறது.

இந்தியப் படையினரால் கைப்பற்றமுடியாத தொப்பிக்கலையை எமது படையினர் இன்னும் சில தினங்களில் விடுவிப்பர் - ஹெகலிய ரப்புக்வெல.!!


இலங்கைக்கு வந்த இந்திய சமாதானப் படையினரால் கூட கைப்பற்ற முடியாமல் போன தொப்பிகலை (குடும்பி மலை) பிரதேசத்தை எமது பாதுகாப்புப் படையினர் இன்னும் சில தினங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடுவர். இப்போது 99 வீதமான பிரதேசத்தை அவர்கள் விடுவித்துள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:

புலிகளின் கொடுமைகளிலிருந்து தொப்பிகலை பிரதேச பொது மக்களைப் பாதுகாத்து அப்பிரதேசத்தை முழுமையாக விடுவிக்க வியூகங்கள் வகுத்து படையினர் நிதானமாக முன்னேறி வருகின்றனர் என்றார்.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

இப்பிரதேசத்தில் உள்ள இரு முக்கிய வீதிகளை படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் நேற்று கொண்டுவந்தனர். நாரகமுல்லையிலிருந்து சித்தாண்டி வரைக்கும் மற்றும் நாரகமுல்லையிலிருந்து பன்குடாவெளி வரைக்கும் செல்லும் வீதிகளையே படையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வீதிகளிலுள்ள பாலங்கள் மற்றும் மதகுகளை சேதப்படுத்திக் கொண்டே புலிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இவற்றை உடனடியாக புனரமைக்கும் பணியில் இராணுவப் பொறியியலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தப்பியோடும் புலிகள் நாரகமுல்லையில் பெருந்தொகையான பொருட்களையும் வாகனங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.

வாகரைப் பிரதேசத்தில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டன. திருகோணமலை தெற்குப் பிரதேசத்தில் இப்போது மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் தாக்கியழிப்பு: 5 இராணுவத்தினர் பலி.!!

தள்ளாடியில் இருந்து மன்னார் நோக்கிய பகுதியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. 27.06.07 அதிகாலை 2.30 மணியளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 5 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தள்ளாடி படைத்தளத்தில் இருந்து மன்னார்ப் பக்கமான இராணுவத்தினரின் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் மீது அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அக்காவலரண்களை அழித்துள்ளனர். இச்சம்பவத்தில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட, இழப்புக்களுடன் இராணுவத்தினர் அப்பகுதியிலிருந்து பின்வாங்கி ஓடினர். இதில் இராணுவத்தினரிடம் இருந்து பி.கே எல்.எம்.ஜி ரக துப்பாக்கி - 01 ரி-56 ரக துப்பாக்கிகள் - 2 தொலைத்தொடர்பு சாதனம் - 01 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகள் தரப்பில் எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

Wednesday, June 27, 2007

வவுனியா அவறந்துல பகுதியில் சிறுமோதல் : மூன்று இராணுவம் : ஒரு ஊர்காவற்படையினர் பலி.

[புதன்கிழமை, 27 யூன் 2007] வவுனியா மாவட்டம் அவறந்துல சிங்கள கிராமப் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா படையினருடன் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவத்தினரும் ஒரு ஊர்காவற்படையினரும் கொல்லப்பட்டு மேலும் இரு இராணுவத்தி காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மங்களவின் கொள்கை அறிக்கை வெளியீடு.

[புதன்கிழமை, 27 யூன் 2007]

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி பிரிவான சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கொள்கை அறிக்கையை வெளியிட்ட அப்பிரிவின் அமைப்பாளர் மங்கள சமரவீர கூறியதாவது:

மகிந்த அரசின் தவறான நிர்வாகத்தினால் நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. நாம் நாளைய நல்வாழ்வுக்கான சிறந்த அபிவிருத்தித் திட்டங்களையும் கொண்டுள்ளோம்.

சிறிலங்காவில் 103 அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்களை என்கிற நிலையை மாற்றி அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்க வேண்டும்.

சிறிலங்காவில் புதிய தேர்தல் முறையை கொண்டு வர விரும்புகின்றோம். புதிய திட்டத்தின் படி அமைச்சரவை 30 ஆக குறைக்கப்படுவதுடன் அதில் 5 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்படும்.

நாட்டின் அபிவிருத்திக்கு தமது அறிவுத்திறனை உபயோகிக்கும் பொது மக்களில் இருந்தும் மூவர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கட்சி தாவுவதை தடுக்கும் பொருட்டு இந்த வல்லுநர்கள் தேசியப்பட்டியல் மூலம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தேர்தல் வாக்குறுதிகளை கண்காணிப்பதற்காக ஒரு நிரந்தர தேர்தல் ஆணையம் நியமிக்கப்படும். தரமான அரச நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டு சுயாதீனமான நீதித்துறை அமைக்கப்படும்.

நாட்டின் பொருளாதாரத்தை உறுதியாக பேண மகிந்த தவறிவிட்டார். காவல்துறை மா அதிபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு தலைவர், குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் ஆகியோர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் தனிப்பட்ட வழிநடத்தலில் இயங்கி வருகின்ற போதும் கடந்த 17 மாதங்களாக மனித உரிமை மீறல்கள் மோசமாக அதிகரித்து சென்றுள்ளன என்றார் மங்கள சமரவீர.

செயலிழந்து போன சிறிலங்காவின் காவல் மற்றும் நீதித்துறை: மனித உரிமைகள் ஆணையம் சாடல்.!!

[புதன்கிழமை, 27 யூன் 2007] சிறிலங்காவின் காவல் மற்றும் நீதித்துறை அமைப்புகள் செயலிழந்து போயிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையம் சாடியிருக்கிறது. துன்புறுத்தல்களுக்கு உள்ளாவோர்களுக்கு ஆதரவளிப்பது என்ற ஐ.நாவின் அனைத்துலக நாளை முன்னிட்டு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை: சிறிலங்காவில் கடத்தலகள், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல், கைது செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்தல், துன்புறுத்தல்கள், ஏனைய மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளமையானது சிறிலங்கா காவல் துறை மற்றும் நீதித்துறை ஆகியனசெயலிழந்துள்ளது என்பதையே காட்டுகின்றது. இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ அல்லது கட்டுப்பாட்டுக்குள் ண்டுவருவதற்கோ எந்த சட்டபூர்வமான நடைமுறைகளும் சிறிலங்காவில் இல்லை. அங்கு உள்ள சட்டத்துறை வன்முறைகளை குறைப்பதற்கான நடைவடிக்கைகளை எடுப்பதில்லை. மாறாக தற்போதைய நிலைமைகளை மேலும் மோசமாக்கவே அது உதவி வருகின்றது. சிறிலங்கா அரசாங்கமும் தற்போதைய வன்முறைகளை கட்டுப்படுத்துவதை விடுத்து அதனை மேலும் மோசமாக்கி வருகின்றது. சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இந்த சட்ட நடைமுறைகளின் சீர்குலைவானது அரசாங்கத்தின் அரசியல் தளத்தின் சீர்குலைவுக்கு வழிவகுத்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, June 26, 2007

புலிகளின் படகில் ஜப்பான் ராடார்கள்- சீன இயந்திரங்கள்: கொழும்பு ஊடகம்.!!

[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் படகில் ஜப்பானிய தயாரிப்பு ராடார் மற்றும் சீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி: விடுதலைப் புலிகள், சீன தயாரிப்பு இராணுவ தளபாடங்களை பயன்படுத்துவது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ராடார்கள் உள்ளிட்ட ஜப்பானிய தளபாடங்களை போராளிகள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த வாரம் நடந்த உக்கிர மோதலின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் கலத்திலிருந்து சக்தி வாய்ந்த ராடார் கைப்பற்றப்பட்டபோது இது தெரியவந்துள்ளது. அது ஜப்பானிய தயாரிப்பு என்று பாதுகாப்பு தரப்பு அதிகாரி தெரிவித்தார். மேலும் 250 குதிரை வலுத்திறன் கொண்ட 4 யமஹா இயந்திரங்கள் அந்தக் கலத்தில் பொருத்தப்பட்டிருந்தது என்றும் அவை ஜப்பானிய தயாரிப்பு என்றும் இத்தகைய இயந்திரங்கள் அரசாங்கத்தின் உரிய அனுமதி இல்லாமல் கொண்டுவர முடியாது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார். விடுதலைப் புலிகளின் கலம் ஒன்றில் முன்னர் 14.5 எம்.எம். டிவின் பரெல் ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை சீனத் தயாரிப்பு என்பதால் சீன அரசாங்கத்தின் கவனத்துக்கு அது கொண்டு செல்லப்பட்டது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலம்: புதினம்

ரணில் -மங்கள இவ்வாரத்திற்குள் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு.!

[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007]

ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து எதிர்க்கட்சிக்கு மாறிய முன்னாள் அமைச்சர்க ளான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இவ்வாரத்திற்குள் இடம்பெறவுள்ளது.

இவர்களுக்கிடையிலான இந்த முக்கிய சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்ககுமாரதுங்க இலங்கைக்கு திரும்பும் முன்னர் இடம்பெறவிருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் இடம்பெறவிருக்கின்ற இந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகத்தின் பார்வை மற்றும் ”கூட்டமைப்பு” நிறுவது தொடர்பாக விரிவாக ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் ரணிலுடனான பேச்சுவார்த்தையில் எட்டப்படுகின்ற இணக்கப்பாடுகள்,முடிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு திரும்ப விருக்கின்ற முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவிற்கு மங்கள சமரவீரவினால் எடுத்துரைக்கப்படவிருப்பதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர்களான் மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் அரசாங்கத்திற்கு எதிரான பலமான அரசியல் அணியொன்றை உருவாக்குவதற்காக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) மற்றும் ஜனநாயக அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பகிரங்கமாக அறிவித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சிய தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி குருணாகலில் கடந்த 23 ஆம் திகதி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரின் செயற்பாடுகளை வரவேற்றதுடன் அரசாங்கத்திற்கு எதிரான கூட்டமைப்பு அமைப்பதற்காக ஜனநாயகத்திற்காக பேராடுகின்ற அனைவரையும் ஓரணியில் திரட்டப்போவதாகவும் கூட்டமைப்பு அமைத்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவிருப்பதாக தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக கூட்டமைப்பு அமைப்பது தொடர்பாக ரணிலும் மங்களவும் பகிரங்கமாக அழைப்பு விடுத்த ஓரிரண்டு வாரத்திற்குள் இந்த சந்திப்பு இடம்பெறவிருப்பதனால் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டமைப்பு அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படாலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது முன்னால் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் இங்கிலாந்தில் தங்கியிருக்கின்ற முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடுதிரும்பவிருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் ஆளும்தரப்பிலிருந்து எதிர்கட்சிக்கு சென்றுள்ள முன்னால் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார்.அந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கூட்டமைப்பு நிறுவுவது, மங்கள சமரவீர விடுத்துள்ள பகிரங்க அழைப்பு தொடர்பாக ரணிலின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேட்டறிந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் ஆளுந் தரப்பிலிருந்து எதிர்தரப்பிற்கு மாறியதன் பின்னர் ஆற்றிய உரையில் நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்கும் வகையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்காக ஜனநாயகவாதிகள் ஒன்றினைய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன். அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டங்களை முன்னெடுக்க முன்னால் ஜனாதிபதி சந்திரிகா ஆதரவு வழங்குவதுடன் நாட்டின் நலன் கருதி உருவாக்கப்படும் அணிக்கு தலைமை தாங்க முன்வரவேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.

முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவுடன் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்க , முன்னால் அமைச்சர்களான மங்கள சமரவீர,ஸ்ரீபதி ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் முடிவில் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டமைப்பு அமைப்பதற்கான இணக்கம் காணப்பட்டால் கூட்டமைப்பு அணிக்கு முன்னால் ஜனாதிபதி தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. திஸ்ஸ அத்தநாயக்க கருத்து இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்து தெரிவிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னால் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சிக்கும் இடையில் இவ்வாராத்திற்குள் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது எனினும் சந்திப்பு நடைபெறும் தினத்தை சரியாக குறிப்பிட்டு சொல்ல முடியாது.

இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருகின்றது. அந்த செயற்பாடுகளுக்கு எதிர்கட்சி தரப்பிலிருந்து கிடைக்கின்ற ஆதரவுகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இந்நிலையில் ஜனநாயகத்திற்கு ஆதரவான கட்சிகள் இணைந்து கூட்டமைப்பு அமைப்பதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன என்றார்.

கடத்தல் குழுவின் தலைவர் உட்பட ஐவர் தெமட்டகொடையில் பொலிஸாரால் கைது.!!

[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007] புலனாய்வு பிரிவினர் விசாரணை வெள்ளவத்தையில் வசித்துவந்த தமிழ் வர்த்தகர் ஒருவரை கடத்தி 54 இலட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொள்ள முயன்ற கடத்தல் குழுவின் தலைவர் உட்பட ஐந்து பேர் கடந்த 23 ஆம் திகதி தெமட்டகொடை சிறிதம்ம மாவத்தையில் வைத்து சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினரும் தெமட்டகொøட பொலிசாரும் மேற்கொண்டுவருகின்றனர். கொழும்பு கொள்ளுப்பிட்டியின் லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் வைத்து கடந்த 19 ஆம் திகதி கடத்திச்செல்லப்பட்ட இந்த தமிழ் வர்த்தகர் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள வீöடான்றினுள் சிறைவைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கடந்த 23 ஆம் திகதி பொலிசாரினால் மீட்கப்பட்டார். குறிப்பிட்ட தமிழ்வர்த்தகர் வியாபார தேவையின் நிமித்தம் கடந்த 19 ஆம் திகதி வெளியில் சென்றுள்ள சந்தர்ப்பத்தில் கைத்தொøலபேசிக்கு கிடைத்த அழைப்பொன்றினையடுத்து கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு சென்றுள்ளார்.இந்த சந்தர்ப்பத்தில் இவர் கடத்தப்பட்டுள்ளார். தமிழ் வர்த்தகரை கடத்திய குழுவினரர் பின்னர் அவரது நண்பர்களுக்கு தொலைபேசியின் மூலம் 54 இலட்சம் ரூபா பணத்துடன் தெமட்டகொடை சிறிதம்ம மாவத்தைக்கு வருமாறு தெரிவித்துள்ளனர். இந்த தொலைபேசி இலக்கம் கிடைத்ததையடுத்து சம்பவம் தொடர்பாக தெமட்டகொடை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் பொலிசாரின் ஆலோசனையின் அடிப்படையில் வியூகம் வகுக்கப்பட்டது.வியூகத்தின் அடிப்படையில் தமிழ்வர்த்தகரின் நண்பர் ஒருவர் பணத்துடன் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றுள்ளனர்.இவர்களை பொலிசார் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். குறிப்பிட்ட பிரதேசத்திற்கு தமிழ்வர்த்தகரின் நண்பர்கள் பணத்துடன் சென்றதை அவதானித்த கடத்தல்காரர்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து பணத்தை பெற்றுக்கொள்ளமுற்பட்டபோது பொலிசார் சந்தேகநபர்களை அதிரடி நடவடிக்கைமூலம் கைதுசெய்தனர். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இதற்கு முன்னர் கொலைசெய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி உறுப்பினரான அம்பிகா என்று அழைக்கப்படுபவரின் சீடர்கள் எனவும் இவர்கள் அம்பிகாவின் நெருங்கியசகா ஒருவரினால் வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தென் தமிழீழத்தில் தான் வைத்த பொறியிலேயே சிக்கப்போகும் சிங்களம்: சு.ப. தமிழ்ச்செல்வன்.!!

[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007]

தென் தமிழீழத்தில் "நாம் வைத்த பொறியிலேயே நாம் சிக்கிக் கொண்டோம்" என்பதனை சிங்கள இராணுவம் விரைவில் புரிந்துகொள்ளும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.

"தமிழ்நெட்" இணையத்தளத்துக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் நேற்று திங்கட்கிழமை அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்:

இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படவும், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணவும் இணைத் தலைமை நாடுகள் கூடி விவாதித்தமையை நாம் வரவேற்கிறோம். இராணுவ வழித் தீர்வில் பயனேதும் இல்லை என்பதால் இருதரப்பும் பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்பதில் அனைத்துலகம் உறுதியாக உள்ளது. இதனை நாம் வரவேற்கும் அதே நேரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர எதுவித உறுதியான நடவடிக்கைகளையும் அனைத்துலகம் மேற்கொள்ளவில்லை என்ற தமிழ் மக்களின் கவலையையும் நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

குறிப்பாக இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை, கொடூரமான மனித உரிமை மீறல்கள். பாரிய மனித அவலங்கள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர எதுவுமே செய்யப்படவில்லை. இணைத் தலைமை நாடுகள் கூட ஏன் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ள முடியவில்லை என்ற சந்தேகம் தமிழ் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது? சில நாடுகள் அரசியல் வழித் தீர்வுக்காக சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்து வரும்போது ஏன் சில நாடுகள் மறைமுகமாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்கிறது? என்பது தமிழ் மக்களுக்கு புரியாத
புதிராக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகால உக்கிரமான ஒரு போரிலிருந்து தற்காலிகமான அமைதியை உருவாக்க யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பின்னர் அனைத்துலக உதவியுடன் உருவாக்கப்பட்ட முதலாவது யுத்த நிறுத்த ஒப்பந்தம். அனைத்துலகமும் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தன.

இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு இந்த ஒப்பந்தம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இருப்பினும் சிங்கள ஆளும் வர்க்கத்தினரது அதிகாரப் போட்டிகளால் அமைதிக்க்காக உருவாக்கப்பட்ட ஏதுவான ஒரு சூழ்நிலை சிதைக்கப்பட்டது. தங்களது நடவடிக்கைகளால் பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தில் குழப்பமான நிலையை உருவாக்கியதுடன் இலங்கைத் தீவை ஒரு கொடூரமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றனர்.

தமிழ் மக்கள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை எனும் முதலாவது முன்மொழிவை அவர்கள் நிராகரித்தனர். அனைத்துலகத்தினரால் முன்மொழியப்பட்ட இருதரப்பினராலும் கைச்சாத்திடப்பட்ட ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பையும் நிராகரித்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நிர்மூலமாக்கின்னர். இத்தகைய சிங்களப் பேரினவாதத் தலைமையின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் எல்லாவித நம்பிக்கையும் அழிக்கப்பட்டது.

சிங்களப் பேரினவாதத்தின் இனப்பாகுபாட்டு செயற்பாடுகளையும் தமிழ் மக்களின் நீண்ட வரலாறு கொண்ட போராட்டத்தையும் அவசியமாக ஆழமாக அனைத்துலகம் ஆராய வேண்டும். அனைத்துலகமானது உறுதியான ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதுடன் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்து, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை 100 விழுக்காடு அமுல்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தென்னிலங்கை அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் தங்களது கட்சியின் கொள்கைகளை அவர்கள் எப்போதும் பின்பற்றுவதில்லை. அதிகாரத்துக்காகவும் பண பலன்களுக்காகவும் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவிக்கொண்டுதான் இருக்கின்றனர். தென்னிலங்கை கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாட்டுக்கான முயற்சிகள் என்பதும் ஒரு நாடகம்தான். இத்தகைய "முயற்சிகள்" மூலம் ஒருபோதும் தீர்வு காணப்பட முடியாது. தற்போதும் கூட அத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் பொதுவான ஒரு நிலைப்பாட்டுக்கு வர இயலவில்லை. ஒரு தீர்மானமெடுத்தாலும் அதன் பின்னர் இந்தக் கட்சிகள் ஒத்துழைக்கப்போவதுமில்லை. ஒப்பந்தங்களும் தீர்மானங்களும் அதிகாரத்தில் இருக்கின்றபோதானவைதான்.

அனைத்துலகத்துக்காக மிகவும் வளைந்து கொடுத்து விட்டதாகவும் சிறிலங்கா எப்போதுமே இராணுவ வழித்தீர்வில்தான் அக்கறையுள்ளதாகவும் புதியதாக பேசுகின்றனர். இது எப்போதுமே உள்ளதுதான். தனது இராணுவத்தை வலுப்படுத்திய பின்னர் சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் அமைதிப் பேச்சுக்களுக்கு ஒப்புக்கொள்ளாது.

மாறாக, அமைதி முயற்சிகளையும் யுத்த நிறுத்த ஒப்பந்தங்களையும் நிராகரித்துவிட்டு இராணுவ வழித் தீர்வு காணப்போவதாகக் கூறி போரில்தான் குதிக்கும். போர்க்களத்தில் பாரிய இழப்புகளைச் சந்தித்த பின்னர் வேறுவழியின்றி பேச்சுகளுக்கு ஒப்புக் கொள்ளும். சிங்கள அரசாங்கங்களின் இத்தகைய போக்குகளை அனைத்துலகம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய யுத்த நிறுத்த ஒபந்தமானது தீர்வைத் தருமெனில் இராணுவம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு சிங்கள அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டும். வரலாற்றில் ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கம் அமைதிப் பேச்சுக்களுக்கோ அமைதி முயற்சிகளுக்கோ எப்போதும் ஒப்புக் கொண்டது இல்லை.

கடந்த 60 ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காகப் போராடி வருகின்றனர். தங்களது விடுதலைப் போராட்டத்துக்காக தமிழ் மக்கள் இராணுவ வழியை தெரிவு செய்யவில்லை. 30 ஆண்டுகாலமாக தமிழர்கள் அமைதி வழியில் போராடினர். சிங்களத் தலைமையானது இந்த 30 ஆண்டுகளிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் திறந்த மனதுடன் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் சிங்களத் தலைமையானது இந்தப் பிரச்சினையை அணுகவில்லை. மாறாக இனப்படுகொலை- இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையையே மேற்கொண்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு தங்களது தாயகப் பூமியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாரிய மனித அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதுவே எமது விடுதலைப் போராட்டம் பிறப்பதற்குமான சூழலை உருவாக்கியது. எப்போது தங்களது அமைதி வழியிலான- ஜனநாயக ரீதியிலான போராட்டம் உடைந்து நொறுங்கியதோ- இராணுவ வன்முறையால் தமிழ் மக்கள் துரத்தியடிக்கப்பட்டனரோ அப்போது தங்களது தற்காப்புக்காக ஆயுதங்களை கைகளில் எடுத்தனர்.

தமிழீழ மக்களால் இந்தச் சூழ்நிலை உருவாக்கப்படவில்லை. சிங்கள வன்முறைகளால்தான் இச்சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அனைத்துலகத்தின் பார்வையை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஈர்த்திருக்கிறது எனில் தமிழ் மக்களின் அர்ப்பணிப்புமிக்க இராணுவ பலத்தினால்தான். ஆகையால் தமிழ் மக்கள் தங்களது இராணுவ பலம் மற்றும் தற்காப்பை பலவீனப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். சிங்களத் தலைமை இதனை புரிந்துகொண்டு அனைத்துலகத்திடம் கால அவகாசத்தைப் பெற்று அதனையே சந்தர்ப்பமாக்கிக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதும் இனப்படுகொலைகளை மேற்கொள்வதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ் மக்களினது இராணுவ பலமானது சிங்கள தேசத்துக்கோ சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல- தங்களது தாயகத்தை பாதுகாப்பதற்கான தற்காப்பு பலம்தான் என்று தமிழ் மக்களின் அபிலாசைகளை சிங்களத் தலைமை எப்போது புரிந்துகொள்கிறதோ அப்போது தமிழ் மக்கள் தாங்களும் பாதுகாப்பாக, சுதந்திரத்தோடும் சுயமரியாதையோடும் வாழ முடியும் என்கிற சூழல் உருவாகும். இந்தத் தீவும் வன்முறைகளிலிருந்து விடுபட்டு அமைதியான பிரதேசமாக மாறும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது தாயகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். இந்தத் தீவில் பாதிக்கப்பட்ட தங்களது உறவுகளுக்காக அவர்கள் உதவுகின்றனர். தங்கள் உறவுகள் பாதிக்கப்படும் போது உதவ வேண்டும் என்று கருதுவது மனிதாபிமானமும் இயற்கையானதுமாகும். இப்படியாக உதவுவதை பயங்கரவாதத்துக்கு உதவுவது என்பது உண்மையிலேயே பாரிய சோகம்தான்.

தமிழ் மக்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளின் சட்டங்களுக்கு அப்பால் ஒருபோதும் மீறிச் சென்றது இல்லை. தாங்கள் வாழுகிற நாடுகளிலிருந்து கொண்டு அரசியல் அல்லது மனிதாபிமானப் பணிகளையே செய்து வருகின்றனர். தாங்கள் வாழுகிற நாடுகளின் அரசாங்கங்கள், மக்கள் தங்களது அபிலாசைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருகின்றனர்.

ஆழிப்பேரலைக்குப் பின்னர், அமைதி முயற்சிகளின் போதும் இனப்படுகொலையால் தங்களது மக்களை இழந்து நின்றபோதும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஓய்வறியாது தாயக உறவுகளுக்காக பாடுபட்டுள்ளனர். இதனை பயங்கரவாதச் செயல் என்பது தமிழ் மக்களை பாதிப்பது என்பது மட்டுமல்ல- தங்களது இன வன்முறைகளை தொடர்ந்து மேற்கொள்ள சிங்களப் பேரிவனவாதிகளுக்கு ஊக்கமளிப்பதுமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. இடம், சூழல், நேரம் என இராணுவ உத்திகளை நாம் கொண்டிருக்கிறோம். குறிப்பாக கிழக்கில் சிங்களப் படைகள் முன்னேறுவதும் எங்களது கடுமையான தாக்குதல்களினால் பாரிய இழப்புகளைச் சந்தித்து பின்வாங்குவதும் சிங்கள இராணுவத்துக்கு வழமையானதுதான். இதுவே கடந்த கால வரலாறு. எந்த ஒரு மக்களும் தங்களது தாயக நிலப்பரப்பை அன்னியப் படை ஆக்கிரமிப்பதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தாங்கள் வைத்த பொறியிலே சிக்கிக் கொண்டோம் என்பதை சிங்கள இராணுவம் விரைவில் புரிந்துகொள்ளும் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.

மூதூர் படுகொலையில் மறைக்கப்பட்ட மிக முக்கிய "சாட்சி ஆவணம்": அம்பலப்படுத்துகிறது அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம்.!

[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007]

மூதூர் படுகொலையில் முக்கியமான "சாட்சி ஆவணம்" ஒன்றை நீதிமன்றில் சிறிலங்க அரசாங்கம் மறைத்ததனை அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது.

பிரித்தானிய சட்ட வல்லுநர் மைக்கேல் பிரின்பௌம் அந்த ஆணையத்திடம் மூதூர் படுகொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை கையளித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் உடல்களை பரிசோதனை செய்த அவுஸ்திரேலியாவின் மல்கொல்ம் டொட் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த ஒக்ரோபர் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டோரின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன.

7 பேரின் உடல்களிலிருந்து மொத்தம் 8 துப்பாக்கிக் குண்டுகள் எடுகப்பட்டன.

சிறிலங்கா அரசாங்க பரிசோதனை நிபுணர் மருத்துவர் வைதரட்ன மற்றும் அவுஸ்திரேலியாவின் டொட் ஆகியோரின் அறிக்கைகளை ஒப்பிடுகையில் 8 துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று 5.56 கலிபர் என்று அவுஸ்திரேலிய வல்லுநர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாறாக அனைத்துமே 7.62 கலிபர் என்று சிறிலங்கா வல்லுநர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 5.56 கலிபர் குண்டை கந்தளாய் நீதிமன்றில் மார்ச் 7 ஆம் நாள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தாக்கல் செய்த சாட்சி ஆவணங்கள் பட்டியலிலிருந்தும் நீக்கிவிட்டு வேறு ஒரு வகை குண்டை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் 5.56 கலிபர் குண்டுகளானது எம்-16 வகை ரைபிள்களுக்குரியன.

இந்த எம்-16 வகை ரைபிள்கள்தான் சிறிலங்கா இராணுவம் மற்றும் கடற்படையில் உள்ள அதிரடிப்படை மற்றும் சிறப்புப் படையணிகளில் பயன்படுத்துவர் என்பது அனைவரும் அறிந்தது. இந்த ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் மற்றவர்களால் திருடப்பட்டோ அல்லது விலைக்கு வாங்கப்பட்டோ இருக்கலாம். 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் தொடக்கத்தில் மூதூரில் எம்-16 ரைபிள்களுடன் தான் கடற்படையின் சிறப்புப் பிரிவினர் இருந்தனர்.

இந்நிலையில் சிறிலங்காவின் அரச தலைவர் விசாரணை ஆணையமானது அரச சார்பற்ற பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட விடயத்தில் முழு அளவிலான விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மகிந்த ராஜபக்ச எனும் ஒரு இனவாத யுத்த விரும்பியை அம்பலப்படுத்திய அல்ஜசீரா"

[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007] சிறிலங்கா அரச தலைவராக உள்ள மகிந்த ராஜபக்சவை நேர்காணல் செய்ததன் மூலம் ஒரு இனவாத யுத்த விரும்பியை அல்ஜசீரா தொலைக்காட்சி அம்லப்படுத்தியுள்ளதாக "நான்காம் உலகத்தின் அனைத்துலகக் குழு" இணையத்தளத்தின் செய்தி ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவின் அல்ஜசீரா தொலைக்காட்சி நேர்காணல் குறித்து எழுதப்பட்ட அந்த ஆய்வு: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கடந்த மாதம் மத்திய கிழக்கிற்கு சென்றிருந்த போது, அல்ஜசீராவிற்கு வழங்கிய ஒரு பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தனது அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்தத்தை பாதுகாத்தார். இந்த பேட்டி, அதன் பண்பற்ற தன்மை, அகந்தை மற்றும் ஒத்திசைவின்மைக்காகவே கவனிக்கத் தக்கதாகும். இலங்கையின் உள்நாட்டு ஊடகங்களில் எதுவும், அரசுக்குச் சொந்தமான பத்திரிகைகளும் கூட, இந்த பேட்டியை மீள்பிரசுரம் செய்யவில்லை அல்லது அதன் உள்ளடக்கத்தைப் பற்றி கருத்துக் கூறவில்லை. நாட்டின் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பொய்கள் அம்பலத்திற்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், இத்தகைய திகைப்பூட்டும் அமைதியானது கொழும்பில் உள்ள அரசியல் மற்றும் ஊடக நிறுவனத்தின் ஆழமான தளர்வற்ற நிலைமையை பிரதிபலிக்கின்றது. படுகொலைகள் மற்றும் காணாமல் போகும் சம்பவங்கள் உட்பட பாதுகாப்புப் படையினரால் ஜனநாயக உரிமைகள் துஷப்பிரயோகம் செய்யப்படுகின்றமை மிகவும் வெளிப்படையானதாகும். இதனால் அனைத்துலக ரீதியிலும் மற்றும் உள்நாட்டிலும் ராஜபக்ச அரசாங்கம் எதிர்கொண்டுள்ள வளர்ச்சிகண்டுவரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அல்ஜசீராவின் "101 ஈஸ்ட்" நிகழ்ச்சியின் டைமூர் நாபில் நிச்சயமாக ஒரு பகைமை உணர்வு கொண்ட ஊடகவியலாளர் அல்ல. அவர் 2005 நவம்பரில் ராஜபக்ச தேர்வு செய்யப்பட்டு சில வாரங்களுக்குள் புலிகள் யுத்தத்தை மீண்டும் தொடங்கியதாக குற்றஞ்சாட்டியவாறே ஆரம்பித்தார். பின்னர் நாபில் ராஜபக்சவிடம் கேள்விகளை தொடுத்தார்: "புலிகள் மீண்டும் தாக்குதலை தொடங்க தீர்மானித்தது ஏன்?" முற்றிலும் சௌகரியமாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதிலளித்தார்: "நான் பலவீனமானவன் என்றும், நான் தோற்றுவிடுவேன் என்றும், அது ஒரு தனியான அரசை நிறுவுவதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இருக்கும் என்றும் அவர்கள் (புலிகள்) நினைத்திருக்கக் கூடும்." ராஜபக்ச தன்னை தொடர்ந்தும் சமாதான விரும்பியாக காட்டிக்கொள்ள முயற்சித்த போதிலும், நாபிலின் குறைபாடுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூட, ஒன்றன் பின் ஒன்றாக முரண்பாடுகளில் தானே சிக்கிக்கொண்டுள்ளதை அவர் உடனடியாக உணர்ந்துகொண்டார். புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பற்றி கேட்ட போது அரச தலைவர் பிரகடனப்படுத்தியதாவது: "நாங்கள் எப்பொழுதும் பேச்சுக்களுக்கு தயார். எப்பொழுதும், இன்றும் கூட. மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும் கூட நான் பேச்சுவார்த்தைக்கு தயார்." இந்த பதில் ஒளிவுமறைவற்ற பொய்யாகும். 2002 யுத்த நிறுத்தம் மற்றும் 2002 - 03 வரை நடந்த கலந்துரையாடல்களில் உடன்பாடு காணப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுக்களை நடத்த தனது விருப்பமின்மையை ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார். அனைத்துலக அழுத்தங்களின் கீழ், 2006 பெப்பிரவரியில் ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த அவர் தயக்கத்துடன் அனுமதியளித்தார். ஆனால் அது அரசாங்க பிரதிநிதிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் அடிப்படை மாற்றங்களை கோரிய காரணத்தால் கவிழ்ந்து போனது. 2006 ஏப்ரலில் ஒஸ்லோவில் நடந்த இரண்டாவது சுற்று நிகழ்ச்சி நிரல் தொடர்பான சச்சரவில் மூழ்கிப்போனதோடு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவே இல்லை. யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக கேட்ட போது ராஜபக்ச தெரிவித்ததாவது: "அவர்கள் (புலிகள்) அதற்கு மதிப்பளிக்கவில்லை. நாங்கள் இன்னமும் அதை மதிக்கின்றோம். நாங்கள் இன்னமும் எமது காவல்துறையையோ, இராணுவத்தையோ அந்தப் பகுதிக்கு அனுப்பவில்லை." வடக்கிலும் கிழக்கிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை கைப்பற்ற நடைபெற்றுக்கொண்டிருக்கும் தற்போதைய சிறிலங்கா இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளின் வெளிச்சத்தில், இந்த கூற்று வெளிப்படையான பொய்யாகும். பேட்டியின் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இராணுவத்தின் செயற்பாடுகள் பற்றி தற்பெருமை பேசிய போது அவர் குறிப்பிட்டதாவது: "நாங்கள் கிழக்கை புலிகளிடமிருந்து மீட்டுள்ளோம். இன்று அவர்கள் (புலிகள்) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்கள். நாங்கள் அவர்களைப் பலவீனப்படுத்தியுள்ளோம்." தனது சொந்தப் பொய்களில் சிக்கிக்கொண்ட ராஜபக்ச மேலும் மேலும் தன்னை முரண்பாடுகளுக்குள் சிக்கவைத்து கொண்டார். "பயங்கரவாதிகள் பலவீனமடையும் வரை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டார்கள். அவர்கள் பலமானவர்கள் என நினைத்துக்கொண்டிருக்கும் வரை அவர்கள் நாட்டை பிளக்க முயற்சிப்பார்கள்," என அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தௌவுபடுத்திக்கொள்ள முயன்ற நாபில், "முதலில் இராணுவ வெற்றி, பின்னரே சமாதானப் பேச்சுக்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்களா?" எனக் கேட்டார். இல்லை, அதுவல்ல விடயம். "இன்றும் கூட நான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளேன் என்றே மிகத் தெளிவாகக் கூறினேன். பயங்கரவாதம் முழுமையாக ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்பதே எனது விவாதம். எங்களால் அதற்கு முன்னால் மண்டியிட முடியாது. நான் அவர்களது ஆயுத பலத்திற்கு முன்னால் மண்டியிடத் தயாரில்லை," என ராஜபக்ச பதிலளித்தார். இந்த கட்டத்தில் தான் குழப்பமடைந்திருப்பதாக நாபில் தெரிவித்தார்: "நான் வருந்துகிறேன், என்னால் நீங்கள் கூறுவதை புரிந்துகொள்ள முடியவில்லை. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் என நீங்கள் கூறுகின்ற போதிலும் நீங்கள் அதை விரும்பவில்லை. இராணுவ வெற்றியன்று அவசியமானது என நீங்கள் கருதுகிறீர்களா? இதற்கு ராஜபக்ச அளித்த பதில்: "நிச்சயமாக, பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியன்று அவசியமானதாகும். அது வேறு கதை. ஆனால், தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்ய வேண்டியிருக்கின்ற காரணத்தால், நான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லத் தயாராக உள்ளேன்." இந்தப் புதிரை தெளிவுபடுத்திக்கொள்ள முடியாதவராக அல்லது விரும்பாதவராக நாபில் இருந்த போதிலும், இத்தகைய பொருத்தமில்லாத பேச்சுக்களுக்கு ஒரு விளக்கம் உள்ளது. "சமாதானத்தை விரும்பும் மனிதன்" என்ற அவரது கூற்றுக்கள் ஒருபுறமிருக்க, 2005 அரச தலைவர் தேர்தலில் ராஜபக்சவின் பிரச்சாரம் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு முடிவு கட்டுவதையும் மற்றும் மீண்டும் விரைவில் யுத்தத்திற்கு திரும்புவதையுதே முன்னிலைப்படுத்தியிருந்தது. அவர் புலிகளுக்கு இறுதி நிபந்தனைகளை விதிப்பதற்கு சமமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்களத் தீவிரவாதக் கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்திருந்தார். யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருத்துவதாகவும், உத்தியோகபூர்வ அனுசரணையாளர் என்ற நிலையில் இருந்து நோர்வேயை விலக்குவதாகவும் மற்றும் புலிகளை தொடர்ந்தும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் ராஜபக்ச வலியுறுத்தினார். இது சமாதானப் பேச்சுக்களுக்கான முன்னைய அடிப்படைகளை விளைபயனுள்ள வகையில் அழிப்பதாகும். வலிமையுடன் பிரதிச் செயலாற்றுவதற்கு பதிலாக, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2005 தேர்தல் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் ஆற்றிய வருடாந்த "மாவீரர் நாள் உரையில்" பேச்சுவார்த்தைகளை நடந்த அவசரமாக அழைப்பு விடுத்தார். "தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தும் விதத்திலான ஒரு பொருத்தமான அரசியல் செயற்திட்டத்துடன் புதிய அரசாங்கம் விரைவில் முன்வர வேண்டும்" என அவர் தெரிவித்தார். ராஜபக்ச, புலிகளை பலவீனப்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்க தூண்டுவதன் பேரில் இழிந்ந இரகசிய படுகொலை யுத்தம் மற்றும் ஆத்திரமூட்டல்களை முன்னெடுக்க பாதுகாப்புப் படைகளை கட்டவிழ்த்து விட்டதன் மூலம் பதிலளித்தார். ராஜபக்ச வெற்றிபெற்று ஆறே வாரங்களில், புலிகளுக்கு சார்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் தினத்தன்று தேவாலய பூசையில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். அரசாங்கம் இந்தக் கொலைக்கு சிடுமூஞ்சித்தனமாக புலிகள் மீது குற்றஞ்சாட்டிய போதிலும், இந்தப் படுகொலை இராணுவத்தின் அல்லது அதனோடு செயற்படும் தமிழ் துணைப்படையின் நடவடிக்கை என்பது தெளிவானதாகும். ஒரு வாரத்தின் பின்னர், பல்கலைக்கழக தெரிவுப் பரீட்சையில் சித்தியெய்திய ஐந்து மாணவர்கள் திருகோணமலையில் வைத்து மரண தண்டனை பாணியில் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகள் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினரால் செய்யப்பட்டதாகவே கூறப்படுகின்றது. பல மாதங்களாக தொடர்ந்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் புலிகளின் பதிலடிகளின் பின்னர், ஜூலை மாதத்தில், தாக்குதல்களை முன்னெடுக்குமாறு ராஜபக்ச இராணுவத்திற்கு கட்டளையிட்டார். மாவிலாறு தணீணீர் அணைக்கட்டின் மதகை புலிகள் மூடியதால் ஏற்பட்ட "மனிதாபிமான அழிவு" இந்தத் தாக்குதலுக்கு சாக்குப்போக்காகக் கூறப்பட்டது. இந்தப் பிரதேசத்தில் தண்ணீர் சுத்தப்படுத்தல் திட்டத்தை அமைப்பதாக அளித்த வாக்குறுதியை இட்டு நிரப்புமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலான நடவடிக்கையாகவே இந்த மதகு மூடப்பட்டது. இந்த விவகாரத்தை சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை. மாறாக அது 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை வெளிப்படையாக மீறி ஒட்டுமொத்த தாக்குதலுக்கு கட்டளையிட்டது. இந்த விட்டுக்கொடுப்பற்ற நிலைக்கு முடிவு கட்ட இலங்கை கண்காணிப்புக் குழுவினர் முயற்சித்த போதிலும் அவர்களும் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். கடந்த 11 மாதங்களாக ராஜபக்ச வலியத் தாக்கும் யுத்தத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார். இராணுவம் 2002 யுத்த நிறுத்தத்தை மீண்டும் மீண்டும் மீறி புலிகளின் பிராந்தியங்களை கைப்பற்றியது மட்டுமன்றி, தமிழ் சிறுபான்மையினரையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது. அரச அனுசரணையிலான கொலைப் படைகள் இயங்கிக்கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையின் கீழ், நூற்றுக்கணக்கானவர்கள், பிரதானமாக தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர் அல்லது "காணாமல் ஆக்கப்படுகின்றனர்." பெரும்பாலானவர்கள் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சகலதிலும், புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு புலிகள் மீது குற்றஞ்சாட்டும் அல்ஜசீராவின் நாபில் போன்று, பெரும் வல்லரசுகளின் குறிப்பாக புஷ் நிர்வாகத்தின் இரகசியமான ஆதரவும் ராஜபக்சவிற்கு உண்டு. ராஜபக்சவின் பதிலில் தோன்றும் வெளிப்படையான முரண்பாடுகள் பின்வருவனவற்றில் இருந்து ஊற்றெடுக்கின்றது. ஒரு புறம், அவர் திட்டமிட்ட இனவாத யுத்தம் ஒன்றை மீண்டும் தொடங்கியுள்ளதோடு அவர் புலிகளின் இராணுவ இயலுமையை அழிக்க பேரார்வத்துடன் காத்திருக்கின்றார். இராணுவ உயர் மட்டத்தினர், அரச அதிகாரத்துவம் மற்றும் தமது நலன்கள் சிறிலங்கா அரசின் சிங்கள மேலாதிக்க பண்பை பேணுவதுடன் கட்டுண்டுள்ள சில வர்த்தகப் பிரிவினரும் அவரது அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். மறுபுறம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குவிந்துவரும் விமர்சனங்களை திசை திருப்புவதன் பேரில் சமாதானத்தையும், பேச்சுவார்த்தைகளையும் விரும்புவதாகக் காட்டும் பாசாங்கையும் தொடர்ந்தும் ராஜபக்சவால் காக்க வேண்டியுள்ளது. தெளிவாகக் கேட்க வேண்டிய கேள்வியை நாபில் கேட்கவில்லை: எந்த அடிப்படையில் சிறிலங்கா அரச தலைவர் "பயங்கரவாதிகளுடன்" பேசுவார்? 2003 ஆம் ஆண்டு தமது நீண்ட கால கோரிக்கையான தனி நாட்டுக் கோரிக்கையை புலிகள் கைவிட்டதோடு வடக்கு மற்றும் கிழக்கில் சுயாட்சி வடிவிலான அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தது. இந்த சுயாட்சி வடிவம் சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களால் தொழிலாள வர்க்கம் பரஸ்பரம் சுரண்டப்படுவதை அனுமதிக்கும். இந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் ராஜபக்சவிற்கு இல்லை. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தங்களும், 24 ஆண்டுகால யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலமாக முடிவுகட்டுவதற்கான சகல முன்னைய முயற்சிகளுக்கும் அடிப்படையாக இருந்து வந்த மாகாண சபை ஆட்சியையும் நிராகரிப்பதோடு, மாவட்ட மட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை பரவலாக்குவதை மட்டுமே அனுமதிக்கின்றது. புலிகளின் சரணடைவை பற்றியே பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட வேண்டும் என்பதே மகிந்த ராஜபக்சவின் எண்ணம் என்பது தெளிவு. அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக துணிச்சலின்றி நாபில் எழுப்பிய கேள்விகளை சிறிலங்கா அரச தலைவர் துடைத்துத் தள்ளினார். "உண்மையில், குறிப்பிடுமளவிற்கு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள நான் தயார் இல்லை," என அவர் தெரிவித்தார். 700-க்கும் மேற்பட்ட கடத்தல் சம்பவம் தொடர்பான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை விடயத்தில் அழுத்தத்திற்கு உள்ளான ராஜபக்ச, கணாமல் போயுள்ள அனைவரும் வெளிநாடு சென்றுள்ளனர் அல்லது புலிகள் இயக்கத்தில் சேர்ந்துகொண்டுள்ளனர் என ஏளனமாக கூறினார். "கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுபவர்களில் பலர் இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்," என அவர் பிரகடனம் செய்தார். கடத்தப்பட்டவர்கள் ஐரோப்பாவிலோ அல்லது வேறெங்கோ ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான சம்பவங்கள் மேற்கோள் காட்டப்படவோ அல்லது ஆதாரங்கள் முன்வைக்கப்படவோ இல்லை என்பதை சொல்லத் தேவையில்லை. இலங்கையின் மனித உரிமை மீறல் பதிவுகள் தொடர்பாக வளர்ச்சி கண்டுவரும் விமர்சனங்கள் ஒரு அனைத்துலக தலையீட்டுக்கு வழிவகுக்கலாம் என்ற நாபிலின் ஆலோசனையையிட்டு ராஜபக்ச குறிப்பாக தன்னுணர்வு கொண்டார். தனது இறுமாப்பில் நின்று அரச தலைவர் உறுதியாக பிரகடனம் செய்ததாவது: "இலங்கையானது இங்கிலாந்து, அமெரிக்கா அல்லது ஏனைய ஏதாவதொரு நாட்டின் காலனி அல்ல. இலங்கை இறைமையுடைய நாடு. ஆகவே அவர்கள் தலையீடு செய்வார்களானால், அவர்கள் இந்த நாட்டின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யக்கூடாது என்பது முக்கியமானதாகும்." வேறு வார்த்தைகளில் சொன்னால், பெரும் வல்லரசுகள் தனது இனவாத யுத்தத்திற்கு ஆதரவளிப்பதோடு நீண்ட காலமாக அவரது வழிமுறைகளை அவர்கள் எதிர்க்கவோ அல்லது இடையூறு செய்யவோ இல்லை என்பதில் ராஜபக்ச மன நிறைவுடன் உள்ளார். ஆயினும் சமாதானத்திற்கான உயர்ந்த எதிர்பார்ப்பை நீண்டகாலமாகக் கொண்டுள்ள இந்தியாவிற்கு அவர் ஒரு விதிவிலக்களித்தார். "தற்போதைய சூழ்நிலையின்படி, தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக இந்தப் பிரச்சினைக்கு (யுத்தம்) ஒரு தீர்வை வழங்குவதற்கு இந்தியாவின் ஆதரவு தேவை. இந்தியா இந்த அரசாங்கத்துடன் செயற்பட வேண்டும்." புலிகள் மீது மேலும் அழுத்தங்களை திணிக்க இந்திய அரசாங்கத்தை பயன்படுத்துவதை பற்றியே அரச தலைவர் தெளிவாக கணக்கிடுகின்றார். மொத்தத்தில் பார்க்கும் போது, ராஜபக்சவின் பேட்டியானது, சமாதான முகமூடி நழுவி விழுந்து, சிறிலங்கா பாதுகாப்புப் படைகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொடூரமான குற்றங்களுக்கு நேரடி பொறுப்பாளியான ஒரு இனவாத யுத்த விரும்பியை அம்பலப்படுத்தியுள்ளதையே வெளிப்படுத்துகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலம்: புதினம்

Monday, June 25, 2007

இரத்தக்களரியை தணிப்பதற்கு இணை தலைமைகளின் கூட்டம் வழியேற்படுத்தும்.!!

[திங்கட்கிழமை, 25 யூன் 2007] இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் மோதல்களையும் இரத்தக்களரியையும் தணிப்பதற்கு இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் வழியேற்படுத்துமென சமாதான செயற்பாடுகளின் அனுசரணையாளரான நோர்வே தெரிவித்துள்ளது. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படுமென இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். முதல் நாளான இன்று ஆரம்ப நிகழ்வும் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களும் இடம்பெறுவதோடு தமது செயற்பாடுகளை இணைத்தலைமைகள் மதிப்பீடு செய்யவுள்ளன. இரண்டாம் நாளான நாளை செவ்வாய்க்கிழமை நாட்டில் அதிகரித்துச் செல்லும் மோல்கள் மற்றும் படுகொலைகள் கொழும்பிலிருந்து தமிழ்மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை கிழக்கில் படையினர் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்படவுள்ளது. அதேபோன்று விடுதலைப்புலிகளின் வான்தாக்குதல்கள் உள்ளிட்ட அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இணைத்தலைமை நாடுகள் தமது கவனத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் கள நிலைமைகள் தொடர்பாக தமது அவதானிப்புக்கள் பரிந்துரைகளை உள்ளடக்கி கண்காணிப்புக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையும் விவாதத்திற்கு எடுத்தக்கொள்ளப்படவுள்ளது. போர்நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஒப்பந்தத்தை வலுப்படுத்தல் பேச்சு வார்த்தையை மீள ஆரம்பித்தல் அதற்கான சூழலை ஏற்படுத்தல் இதற்கு சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளை இணைத்தலைம நாடுகள் இதன்போது மேற்கொள்ளவுள்ளன.

அனைத்துலக உறவுகளைப் பேணும் திறமை மகிந்தவுக்கு இல்லை: கல்யநந்த கொடகே.!

[திங்கட்கிழமை, 25 யூன் 2007] சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு அனைத்துலக உறவுகளைப் பேணும் திறமை இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கல்யநந்த கொடகே சாடியுள்ளார். சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மறைந்த பிரேமதாசவின் 83 ஆவது சிரார்த்த நாள் கருத்தரங்கில் கல்யநந்த கொடகெ பேசியதாவது: சிறிலங்கா மேற்குலகத்தைச் சார்ந்துதான் உள்ளது. உள்நாட்டு ஆடைத் தயாரிப்புக்கள் அனைத்துமே மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக வங்கி உள்ளிட்டவைகள் அனைத்துலகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்குரிய திட்டத்தை முன்வைக்க வேண்டியது அவசியமானதாகும். ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் பிரேமதாச ஆகியோரிடமிருந்து அனைத்துலக உறவுகளைக் கையாளும் திறமையை தற்போதைய மகிந்த அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டும். மகிந்த அரசாங்கத்துக்கு அனைத்துலக உறவுகளைக் கையாளும் திறமை இல்லை என்றார் அவர். இந்திய ஆக்கிரமிப்புப் படை தமிழீழத்தில் நிலைகொண்டிருந்தபோது இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கல்யநந்த கொடகே என்பது குறிப்பிடத்தக்கது. மூலம்: புதினம்

இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டையொட்டி இன்று கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.!

[திங்கட்கிழமை, 25 யூன் 2007] சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் மாநாடு ஓஸ்லோவில் நடைபெற உள்ளதையொட்டி நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இன்று திங்கட்கிழமை நடைபெற உள்ளது. தமிழ் மக்கள் மீது கொடும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் சிறிலங்கா அரசு தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் கடைப்பிடிக்கும் மென்போக்கு அணுகுமுறை மீதான தமிழ் மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் முகமாக இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் முன்பாக ஐரோப்பிய நேரம் முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரை இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற உள்ளது.

சிறிலங்கா- சீனா கூட்டுச்சதி: விரைவில் வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் முப்பரிமாண ராடார்.!!

[திங்கட்கிழமை, 25 யூன் 2007]

வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் வகையிலான ஜே.வை-11 என்ற முப்பரிமாண ராடாரை சிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ளதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பு சிங்கள ஊடகமான "லக்பிம" வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

சீனாவின் எலெக்ரோனிக் ரெக்னோலொஜி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ஜே.வை-11 (JY-11) ரக தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறியும் முப்பரிமாண ரடார்களையும் அரசு கொள்வனவு செய்துள்ளது.

இந்த ராடார்களை கொள்வனவு செய்வதற்கு அரசு கடந்த ஆண்டு கொள்வனவு பத்திரத்தை சமர்ப்பித்ததுடன் முற்பணத்தையும் செலுத்தியிருந்தது.

எனினும் சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் தொடர்பாக இந்தியா கவலை தெரிவித்ததனால் அது கைவிடப்படடிருந்தது.

ஜே.வை-11 ரடார் தொகுதி எஸ்- அலைவரிசை (S-Band) கொண்டது.

இது தாழ்வாக பறக்கும் வானூர்திகளைக் கண்டறியக்கூடியதுடன் அது தொடர்பான தகவல்களை வான் பாதுகாப்பு தொகுதிக்கும் வழங்கக்கூடியது.

இதனை வவுனியாவில் பொருத்தினால் அது தமிழ்நாட்டில் உள்ள வானூர்திகளின் நடமாட்டத்தையும் கண்டறியக் கூடியது.

ஜே.வை-11 ராடார்கள் மூன்று நகர்த்தக்கூடிய பகுதிகளைக்கொண்டது.

எனவே விரைவாக பொருத்தக்கூடியதும் பிரிக்கக்கூடியதுமாகும்.

5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ராடார் தொகுதி 160 கி.மீ தூரவீச்சு கொண்டது.

இந்த ராடார்கள் விரைவில் சிறிலங்காவை வந்தடைய உள்ளன, அதனை நிறுவுவதற்கான ஆயத்த வேலைகளை சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மே மாதம் அமெரிக்காவின் நிபுணர்கள் சிறிலங்காவிற்கு வந்த போது வான் படையினர் தமது எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளில் வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகளை பொருத்துவது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தியிருந்தனர்.

அமெரிக்க தயாரிப்பான வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஸ்ரிஞ்சர் ஏவுகணைத் தொகுதியே (Hellfire missile system) எம்ஐ-24 உலங்குவானூர்திகளில் பொருத்துவதற்கு மிகவும் செயற்திறன் மிக்கது என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

மேலும் கட்டுநாயக்க வான்படை தளத்தில் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நடைபெற்ற 3 மாதத்தின் பின்னர் வான் பாதுகாப்பு பொறிமுறை இயங்க ஆரம்பித்துள்ளது. ராடாருடன் இணைக்கப்பட்ட வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் முக்கியமான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. முக்கியமான படை நிலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் இலகுரக வானூர்திகள் கட்டுநாயக்கா வான்படை தளத்தின் மீது குண்டுகளை வீசிய போது இந்த துப்பாக்கிகள் எதுவும் இயங்கவில்லை. தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறிய என கொள்வனவு செய்யப்பட்ட இந்திரா-02 ரக ராடார்கள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த பாதுகாப்பு குறைபாடுகள் வான் பாதுகாப்பு தொடர்பான முழுமையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேவையை வான்படைக்கு ஏற்படுத்தியிருந்தது. முன்னறிவிக்கும் பொறிமுறை, சுடுவலு கட்டுப்பாட்டு தொகுதி போன்றன முழுமையான மறு சீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

சிறிலங்கா வான் படையினரின் தேவைகளுக்குரிய பரிந்துரைகளை வழங்குவதற்கென அமெரிக்க மற்றும் இந்திய நிபுணர்கள் குழுவும் சிறிலங்காவிற்கு வந்திருந்தது. இராணுவ முக்கியத்துவமுள்ள பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள ராடாருடன் இணைக்கப்பட்ட வான் எதிர்ப்பு துப்பாக்கிகளின் திருத்த வேலைகளே இங்கு முதன்மையாக கருதப்பட்டது.

தற்போது அவற்றில் பல திருத்தப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் ராடாருடன் இணைக்கப்பட்டுள்ளன, இந்த ராடார்களின் வானூர்திகளை கண்டறியும் தூரவீச்சு 32 கி.மீ ஆகும். இந்த வான் எதிர்ப்பு சாதனமானது சுயமாகவே இலக்கை நோக்கி வான் எதிர்ப்பு சாதனத்தை இயங்கவைக்க கூடியது.

வான் எதிர்ப்பு சாதனங்களை மீண்டும் இயங்க வைத்துள்ளதனால் அனைத்துலக வானூர்தி நிலையத்தை எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாளில் இருந்து இரவில் இயங்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஓஸ்லோவில் அனைத்துலக சமாதான முன்னெடுப்பாளர்கள் கூட்டம்.!!

[திங்கட்கிழமை, 25 யூன் 2007] இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக விவாதிக்க நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகங்களான கோபி அனான், பூட்ரஸ் பூட்ரஸ் ஹாலி உள்ளிட்ட அனைத்துலக சமாதான முன்னெடுப்பாளர்கள் இன்று திங்கட்கிழமை கூடுகின்றனர். தமது முன்னைய அமைதி நடவடிக்கைகளின் அனுபவங்களை அனைத்துலக சமாதான முன்னெடுப்பாளர்கள் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் வட அயர்லாந்து அமைதி முயற்சிகளின் அனுசரணையாளராக பணியாற்றிய அமெரிக்காவின் செனட்டர் ஜோர்ச் மிற்சேல், ஜப்பானின் அமைதிக்கான பிரதிநிதி யசூசி அகாசி மற்றும் உலகில் நடைபெற்ற அமைதி முயற்சிகளில் பங்குபற்றிய முக்கிய அமைதிப் பணி பேச்சாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் தாம் பங்குபற்றிய அமைதி முயற்சிகளில் ஏற்பட்ட வெற்றிகள், தோல்விகள் தொடர்பான தமது அணுகுமுறைகள், நுட்பங்கள் போன்றவற்றை ஒப்பீடு செய்ய உள்ளனர்.

தென்பகுதி கடல் எல்லையை பாரிய அளவில் விரிவுபடுத்த சிறிலங்கா முடிவு.!

[திங்கட்கிழமை, 25 யூன் 2007] சிறிலங்கா அரசாங்கம் தனது கடல் எல்லையை தென்பகுதியில் பாரிய அளவில் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ செய்தித்தளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்: கடல் எல்லையை விரிவுபடுத்துதல் தொடர்பாக ஆய்வு நடத்த இங்கிலாந்து நிறுவனத்துடன் சிறிலங்காவின் மீன்வள அமைச்சு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட உள்ளது. தற்போது சிறிலங்காவுக்கு 200 நொட்டிகல் மைல் சொந்தமாக உள்ளது. மேலும் 800 நொட்டிகல் மைல்லை உரிமை கோர உள்ளது. இதன் மூலம் சிறிலங்காவின் கடல் எல்லை 1,000 நொட்டிகல் மைல் தொலைவுக்கு இருக்கும். இந்தக் கடல் எல்லையை ஆராய்ந்து குறியீடு செய்வதற்காக இங்கிலாந்தின் ஜி.ஈ.எம்.எஸ். நிறுவனத்துடன் சிறிலங்கா மீன்வள அமைச்சு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகிறது. இந்தத் திட்டம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலானது. கடல் எல்லையை விரிவுபடுத்துவதன் மூலம் பொருளியல் மற்றும் அறிவியல் ஆராய்வுப் பணிகளுக்கு வாய்ப்பு ஏற்படும். வடபகுதியில் கடற்கரையிலிருந்து 400 நொட்டிகல் மைல் தொலைவாக உள்ளபோதும் தென்பகுதியில் 1,000 நொட்டிகல் மைல்லாக அது விரிவடையும். இந்தக் கடல் எல்லைக் குறிக்கும் நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் 1982 ஆம் ஆண்டு கடல் சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்படும் தரவுகள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்படும். இக்கடல் எல்லை விரிவானது ஒருமுறை உறுதி செய்யப்பட்டுவிட்டால் தென்பகுதியில் தனித்த பொருளாதார மண்டலத்தை 1,000 நொட்டிகல் மைல் அளவுக்கு விரிவுபடுத்துவதுடன் அக்கடற்பிரதேசத்தை இராணுவ செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தும் உரிமை சிறிலங்காவுக்கு உரியதாகும் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் சம்பவங்களில் மேற்குலக தூதரகப் பணியாளருக்கு தொடர்பு: ஐலண்ட்.!!

[திங்கட்கிழமை, 25 யூன் 2007] இலங்கை கடத்தல் சம்பவங்களில் மேற்குலக நாடு ஒன்றின் தூதரகப் பணியாளருக்கும் தொடர்பிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஐலண்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐலண்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டோரில் ஒருவரான ரோஜித் தர்மரட்ன என்ற ஆனந்தவுக்கு மேற்குலக நாடு ஒன்றின் தூதரகப் பணியாளருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பணியாளருடன் இணைந்து பாரிய விசா மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அந்தத் தூதரகத்திடம் காவல்துறையினர் ஒத்துழைப்பு கோரக்கூடும் எனத் தெரிகிறது. தூதரகப் பணியாளருக்கும் கடத்தல் குழுவினருக்கும் தொடர்பிருப்பதற்கான மறுக்க முடியாத ஆதாரம் உள்ளது என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்தகைய மோசடியில் அதே தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த ஜூன் 6 ஆம் நாள் கெரவலப்பிட்டியவில் மாசிலாமணி நேதராஜா என்ற சுரேன் கடத்தப்பட்ட சம்பவத்தில் தெமட்டகொடவில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 மில்லியன் ரூபாய் பணம் கேட்டு மாசிலாமணி கடத்தப்பட்டார். கணணிப் பொறியாளரான வதுகராஜ செந்தில்ராஜ் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 24, 2007

விளாத்திக்குள சமரில் ஒரு பற்றாலியன் படையினர் இழப்பு: சண்டே ரைம்ஸ்.!

[ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007] வவுனியா - மன்னர் எல்லையில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் கடந்த 02.06.07 இல் இடம்பெற்ற சமரில் படையினர் கொல்லப்பட்டு, காயமடைந்தது, காணாமற் போனோர் என ஏறத்தாழ ஒரு பற்றாலியன் படையினரை இழந்துள்ளதாக சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது. சண்டே ரைம்சில் வெளிவந்த பாதுகாப்பு ஆய்வுப் பத்தியின் முக்கிய பகுதிகள்: ஓமந்தை நுழைவுப் பாதைக்கு மேற்காக முன்னகர்வுகள் மூலம் படையினர் தமது முன்னணி நிலைகளை முன்னகர்த்தியிருந்தனர். இந்த பகுதிகளில் மேலதிக பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொருட்டு ஜூன் 2 ஆம் நாள் காலை இராணுவத்தின் 56 ஆவது படையணியும் (4 பற்றாலியன்கள்) 57 ஆவது படையணியும் (7 பற்றாலியன்கள்) கல்மடுவுக்கு வடக்கு மற்றும் வடக்கு மேற்காக விளாத்திக்குளம் பகுதியில் படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தன. இதன் போது கடும் மோதல்கள் இடம்பெற்றன. அதன் பின்னர் அதே தினம் இரவு 8.00 மணியளவில் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை தொடுத்தனர். விடுதலைப் புலிகளின் சில குழுவினர் படையினருடன் மிக நெருக்கமாக நின்று சமர் புரிந்துள்ளனர். இந்த உக்கிர சமர் சுமார் 7 மணித்தியாலம் வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து படையினர் தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கியிருந்தனர். பின்னர் விடுதலைப் புலிகள் 130 மி.மீ பீரங்கித் தாக்குதலை தொடுத்தனர். அதில் ஒரு எறிகணை படையினரின் பம்பைமடுவுக்கு தென் கிழக்காக உள்ள எறிகணைக்களஞ்சியம் மீது வீழ்ந்ததினால் 800-க்கும் மேற்பட்ட 130 மி.மீ எறிகணைகள் வெடித்துச் சிதறின. அது பெரும் வெடியோசைகளையும், தீப்பிழம்புகளையும் உருவாக்கின. இந்த சமரின் போது விடுதலைப் புலிகள் படையினரின் முன்னரங்கத்திற்குள் ஊடுருவ முற்பட்டனர். சமர் பல நாட்கள் நீடித்தது. அந்த பகுதிக்கு மீண்டும் முன்னகர முயன்ற படையினர் கடும் எதிர்ப்பை சந்தித்தனர். தமது இழப்புக்கள் தொடர்பாக படையினர் மௌனமாக உள்ளனர். உயர் படைத்தரப்பு வட்டார தகவல்களின் படி 5 அதிகாரிகளும் 67 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். இரு அதிகாரிகளும் 24 படையினரும் காணாமல் போயுள்ளனர். 20 அதிகாரிகளும், 298 படையினரும் காயமடைந்துள்ளனர். இந்த சமரில் 800 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 700 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இது மிக அதிகமான தரவு. ஏனெனில் அண்மைய மாதங்களில் கொல்லப்பட்டுள்ள மற்றும் காயமடைந்துள்ள விடுதலைப் புலிகள் தொடர்பாக படைத்தரப்பால் கூறப்படும் புள்ளி விபரங்கள் படை உயரதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும். இந்த சமரின் போது காயப்பட்டவர்களை எற்றச் சென்ற பவள் கவச வாகனம் - 1, ஜீப் - 1, ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பன இழக்கப்பட்டதுடன், 152 மி.மீ பீரங்கி ஒன்றும் சேதமடைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலம்: புதினம்

சிறிலங்காவில் 2 வருடங்களில் 10,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தப்பியோட்டம்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007] கடந்த 2005 ஆண்டு ஐனவரி 1 ஆம் நாளில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து 93 அதிகாரிகளும் 10,060 இராணுவத்தினரும் தப்பியோடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது: படையினர் தமது படைவலுவினை 50,000 பேரினால் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இராணுவத்திற்கு 25,000 பேரும், கடற்படைக்கு 15,000 பேரும், வான்படைக்கு 10,000 பேரும் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். ஒவ்வொரு பிரிவும் தமது படைக்கு ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளை தமது சொந்த இணைப்புக் குழுவினூடாக மேற்பார்வை செய்ய உள்ளது. இராணுவத்தின் தரவுகளின் படி 100,000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த பலம் காகிதத்தில் இருந்தாலும் பிரித்தானியாவின் இராணுவத்தின் தொகையை விட அதிகம். இருந்த போதும் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாளில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் இராணுவத்தில் இருந்து 93 அதிகாரிகளும் 10,060 இராணுவத்தினரும் தப்பியோடியுள்ளதாக இராணுவத்தினரின் பதிவேடுகள் கூறுகின்றன. சிலர் தொடர்ச்சியான பொது மன்னிப்புக்களின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த ஜனவரி 20 ஆம் நாள் முதல் பெப்ரவரி 12 ஆம் நாள் வரை இறுதியான பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதன் போது 3,979 பேர் மீண்டும் சேவைக்கு திரும்பியிருந்தனர். இதனுடன் சமர்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த படையினரின் வெற்றிடங்களும் உள்ளன. படையினரின் பலத்தை அதிகரிப்பதில் அதிகாரிகள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ளன. சாதாரணமாக ஒரு பற்றாலியன் 855 பேரைக்கொண்டதாக இருத்தல் வேண்டும். ஆனால் சிறிலங்காப் படையில் உள்ள சில பற்றாலியன்கள் 400 - 500 துருப்புக்களை கொண்டாகவே உள்ளது. எனவே நலிவடைந்த பற்றாலியன்களை இணைத்து உரிய எண்ணிக்கை கொண்ட பற்றாலியன்களை உருவாக்கினால் தான் முழுமையான பலனை அடைய முடியும் என சிலர் கருதுகின்றனர். எனினும் மற்றவர்களின் கருத்து வேறாக உள்ளது. அதவது நலிவடைந்த பற்றாலியன்களை அவ்வாறே பேணவேண்டும் அப்போது தான் அவர்கள் சரியாக இயங்க முடியும். முக்கியமாக படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு விரைவான பதவி உயர்வுகளுக்கான வாசலை திறந்துவிடும். தற்போது நடைபெறும் படைச்சேர்ப்பு முடிந்ததும் இராணுவத் தளபதியின் பதவி நிலை லெப். ஜெனரல் தரத்தில் இருந்து நான்கு நட்சத்திர ஜெனரல் தரத்திற்கு உயர்ந்து விடும். இதே போன்ற பதவி உயர்வுகள் கடற்படை மற்றும் வான்படையிலும் ஏற்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவ பலம் அதிகரிப்பு: கொழும்பு ஊடகம்.!

[ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007] சிறிலங்கா இராணுவத்தினர் தமது தரைப் படை பலத்தை விரைவாக அதிகரித்து வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக பொது பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த நந்தமித்ரா பிரிக்கேட் எனப்படும் ஊர்காவல் படையினரின் எண்ணிக்கை ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 18 மாதங்களில் ஊர்காவல் படையினருக்கு 18,000 பேரை அரசாங்கம் திரட்டியுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் என்ற போர்வையில் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தற்போது 19,000 பேரைக்கொண்டுள்ள ஊர்காவல் படையினரின் எண்ணிக்கை 37,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த படைப்பிரிவு சிங்கள கிராமங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றது. மேலும் இந்த காலப்பகுதியில் இராணுவத்தினருக்கும், காவல்துறையினருக்கும் மேலதிகமாக 8,000 பேரும் திரட்டப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாளில் இருந்து இராணுவத்தினருக்கும் 50,000 பேரை திரட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த எண்ணிக்கை படையில் இருந்து தப்பியோடுவோர் மற்றும் புதிதாக கைப்பற்றப்படும் இடங்களை தக்கவைத்தல் ஆகியவற்றை ஈடுசெய்ய பயன்படும்.. புதிதாக சேர்க்கப்படும் காவல்துறை உறுப்பினர்களை சிறப்பு அதிரடிப்படையில் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கில் இருந்து வடபகுதிக்கு நகர்த்தப்படும் இராணுவத்தினரின் இடத்தை நிவர்த்தி செய்வதற்கு அவர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். மேலும் இராணுவம் தனது 11 ஆவது படையணியை (58 ஆவது படையணி) உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த தாக்குதல் படையணியானது மணலாற்றை மையமாக கொண்டு நிறுத்தப்பட உள்ளது. அண்மையில் உருவாக்கப்பட்டு வன்னியில் நிறுத்தப்பட்ட 57 ஆவது படையணியின் சிறப்பு படையினரால் பெரியதம்பனைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது கடும் சமர் நடந்தது. மேலும் 3 சிறப்புப் படையினரும் கொல்லப்பட்டிருந்தனர். இதனிடையே மட்டக்களப்பு மாவட்டத்தின் தொப்பிக்கலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கை நான்காவது மாதத்தை எட்டியுள்ளது. இந்த நடவடிக்கைகளில் மேஜர் உடிதா பண்டாரா தலைமையில் இரண்டாவது கொமொண்டோ றெஜிமென்ட், சிறப்பு படையணியின் 7 ஆவது கெமுனுவோச் படைப்பிரிவு லெப். கேணல் சேன வடுகே தலைமையிலும், 6 ஆவது கெமுனு வோச் படைப்பிரிவு லெப். கேணல் ஜயம்பதி திலகரட்ன தலைமையிலும் ஈடுபட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மோதல்களில் படையினருக்கு கடும் இழப்பு: கொழும்பு ஊடகம்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007] கிழக்கு மாகாணத்தில் உள்ள தொப்பிக்கல காட்டுப்பகுதியில் இடம்பெற்று வரும் சமர்களில் படையினருக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொப்பிக்கலப் பகுதியில் உள்ள நரகமுல்ல பகுதி மீதான படை நடவடிக்கை கடந்த 8 ஆம் நாள் ஆரம்பமாகியது. இராணுவத்தின் கொமொண்டோப் பிரிவினர் முதலில் தாக்குதலில் இறங்கிய போதும் விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் தமது ருக்கம் வடக்கு நிலைகளுக்கு பின்வாங்கியிருந்தனர். மறுநாள் பீரங்கித் தாக்குதல்களுடன் சமர் மீண்டும் ஆரம்பித்தது. எனினும் முன்னேறிய படையினருடன் மூண்ட பெரும் மோதல் தொடர்கின்றது. விடுதலைப் புலிகள் தமது நிலைகளில் இருந்து பின்வாங்கி வருவது படையினருக்கு நெருக்கடிகளை அதிகரித்து வருகின்றது. இந்த மோதல்களில் 15 படையினர் கொல்லப்பட்டதுடன், 6 அதிகாரிகளும் 142 படையினரும் காயமடைந்துள்ளதாக உயர் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் 400 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் 100 பேர் காயமடைந்தள்ளதாகவும் படைத்தரப்பு கூறியுள்ளது. இந்த தரவு மிக அதிகமானது. இது படைத்தரப்பால் தெரிவிக்கப்பட்ட கிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, June 22, 2007

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உரிய நேரத்தில் கவிழ்ப்போம்: மங்கள சமரவீர. !!

[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2007]

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உரிய நேரத்தில் கவிழ்ப்போம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி(மக்கள் பிரிவு) தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் நிறுவனர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகிய இருவரும் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:

நாம் உரிய நேரத்தில் மகிந்தவின் அரசாங்கத்தில் உள்ள 15 முதல் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை எமது பக்கம் உள்வாங்குவோம்.

116 உறுப்பினர்களின் பலத்துடன் தான் தற்போது ஆட்சி நடந்து வருகின்றது. எனவே புதிய கட்சியினால் இந்த சமன்பாட்டை மாற்றுவது கடினமாக இருக்காது. நாம் அவசரப்படக்கூடாது.

சுதந்திரக் கட்சியை சரியான பாதையில் செல்ல வைப்பது தான் எமது முதலாவது படி. தேர்தல் காலத்தின் போது மகிந்தவின் சகோதரர்களை நான் கண்டது அரிது. நாம் ஆதரவு தெரிவித்த குதிரை விரைவாக தடம் மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை.

ராஜபக்ச குழுவினது கேவலமான வேலைகளினால் சுதந்திரக்கட்சியின் கொள்கைகள் மாசடைந்துள்ளன. தற்போது சுதந்திரக்கட்சி வற்புறுத்தல்களினால் கட்டுப்படுத்தப்பபட்டு வருகின்றது. அதனை செய்பவர்கள் கட்சி அங்கத்தவர்களோ அல்லது இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களோ அல்ல.

முன்னாள் அரச தலைவர் சந்திரிகா நாட்டை நடுநிலையான வழியில் ஆட்சி செய்திருந்தார். அவரை நாம் எம்முடன் சேருமாறு அழைக்கிறோம். அவருக்கு மீண்டும் அரசியலில் இணைய விருப்பம் இல்லை. எனினும் எமது குறிக்கோளை அடைவதற்காக எம்மை வழிநடத்த அத்தகைய ஒரு தலைவர் எமக்கு தேவை.

சிலருக்கு தற்போது சந்திரிகா போவியா என்ற நோய் பிடித்துள்ளது. அவர்கள் அதிகளவில் அச்சமடைந்துள்ளனர். தமது படுக்கைக்கு கீழே ஆவி இல்லை என உறுதிப்படுத்தும் வரை அவர்கள் உறங்க மாட்டார்கள் என்றனர் அவர்கள்.

"உதயன்" பிரதம ஆசிரியர் வித்தியாதரனுக்கு அச்சுறுத்தல்.!!

[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2007]

உதயன், சுடர் ஒளி பத்திரிகைகளின் ஆசிரியர் என்.வித் தியாதரனின் கொழும்பு வெள்ளவத்தை, ஹம்டன் லேன் இல்லத் திற்கு வெள்ளை வான் குழு சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை குறித்து உயர் மட்ட விசாரணைக்கு அரசு உத்தர விட்டிருக்கின்றது.

கடத்தல், காணாமற்போனோர் போன்ற சர்ச்சைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர்களை உள்ளடக்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ள உயர் மட்டக் குழு இந்த அச் சுறுத்தல் விவகாரத்தை தனது முதல் விசாரணை நடவடிக்கை யாக எடுத்துக்கொண்டு செயற்பாட்டைத் தொடங்கியிருக்கிறது.

இக்குழு நேற்று பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரனின், இல் லத்துக்கு நேரடியாகச் சென்று விடயங்களைக் கேட்டறிந்ததுடன், உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்வது குறித்து பொலிஸ்மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தது.

அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, கே.ஏ.பாயிஸ், பெ. இராதா கிருஷ்ணன் மற்றும் கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கிய குழுவினரே பத்திரிகை ஆசிரியரின் இல்லத்துக்குச் சென்று அங்கு அவருட னும் உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவனுடனும் சுமார் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தியது.

உதயன், சுடர் ஒளி பத்திரிகைகள் அண்மைக்காலத்தில் மோசமாக எதிர்நோக்கிவரும் அச்சுறுத்தல்கள் பற்றிய விளக்க விவரங்கள் அடங்கிய கோவை ஒன்றை நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன் மேற்படி உயர்மட்டக் குழுவிடம் கையளித்தார்.

மேற்படி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்றைய சந்திப்பில் பங்குபற்றவில்லை. வேறு தனிப்பட்ட குடும்ப நிகழ்வு ஒன்றில் பங்குகொள்ள வேண்டியிருப்பதால் இச்சந்திப்புக்குத் தாம் வரமுடியவில்லை என்ற தகவலை அவர் பத்திரிகை ஆசிரியருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
மேற்படி உயர்மட்டக் குழு நேற்று முதல் முழு அளவில் செயற் படத் தொடங்கியுள்ளதாகவும், முதல் நடவடிக்கையாக பத்தி ரிகையாளர் வித்தியாதரன் மிரட்டப்பட்ட சம்பவத்தை அது முழு அளவில் கவனிக்கும் என்றும் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த உயர்மட்டக் குழுவின் அலுவலகம் 24 மணிநேரமும் விரைவில் இயங்கத் தொடங்கும் என்றும் மக்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் செய்யும் முறைப்பாடுகளை உடனுக்குடன் உள்வாங்கவும், விரைந்து பொருத்தமான நடவடிக்கைகளை பாதுகாப்பு மற்றும் பொலிஸ் தரப்பு மேற்கொள்ள வழிகாட்டி கண்காணிக்கவும் இக்குழு நடவடிக்கை எடுக்கும் என நேற்றைய சந்திப்பின்போது குழுவினர் பத்திரிகை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

கடத்தல்கள், காணாமற்போதல் போன்ற விடயங்களைத் தடுத்து நிறுத்தி, ஆக்கபூர்வமான பெறுபேற்றைப் பெற்றுத்தர முடியாவிட்டால் இக்குழு தானாகவே தனது பணியிலிருந்து அறிவித்து விட்டு ஒதுங்கிக்கொள்ளும் என்றும் குழுவினர் தெரிவித்தனர்.

தமது இல்லத்துக்கு புதன் மதியம் 11.30 மணியளவில் வெள்ளை வானில் இனந்தெரியாதோர் வந்தபோது தாம் அலுவலகத்தில் இருந்தார் என்றும் தொடர்மாடி இல்லக் காவலாளியை அச்சுறுத்தி சுடர் ஒளி ஆசிரியரைப் பற்றி விசாரித்தபோது, காவலாளி, சுடர் ஒளி ஆசிரியர் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வீட்டை விற்றுவிட்டு வேறு எங்கோ சென்றுவிட்டார் எனக் கூறிச் சமாளித்தார் என்றும் பத்திரிகை ஆசிரியர் மேற்படி உயர்மட்டக் குழுவினரிடம் தகவல் தெரிவித்தார்.

தமது புதிய இல்லம் எங்கே என்று கேட்டு காவலாளியை விசாரித்தனர் என்றும் அது தமக்குத் தெரியாது எனக் கூறிச் சமாளித்த காவலாளி, சம்பந்தப்பட்ட நபர் ஒருவரின் அடையாள அட்டையைக் கோரியபோது, கேட்டகேள்விக்குப் பதில் கூறினால் போதும் என்று கடுந்தொனியில் அவர் அச்சுறுத்தப்பட்டார் என்றும் குழுவினருக்குப் பத்திரிகை ஆசிரியர் தெரிவித்தார்.

மேல்நடவடிக்கைகள் குறித்து தாங்கள் தொடர்பு கொண்டு கலந்துரையாடுவர் எனக் குழுவினர் பத்திரிகை ஆசிரியருக்கும், நிர்வாக இயக்குநருக்கும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் உதயன், சுடர் ஒளி ஆசிரியரின் இல்லத்துக்கு வெள்ளைவான் சென்ற விவகாரம் குறித்து ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக்கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர் என்று தெரியவருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் உதயன், சுடர் ஒளி நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடன் தொடர்பு கொண்டு விடயங்களைக் கேட்டறிந்ததுடன் தமது கவலையையும் தெரிவித்தார். இவ்விடயத்தைத் தமது கட்சி இன்று நாடாளுமன்றில் எழுப்பும் என்றும் அவர் நேற்று மாலை குறிப்பிட்டார்.